Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 17 March 2010
"பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்"!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 17 March 2010 22:34
பி.இரயாகரன் - சமர் / 2010

அரசு காட்டியது பிரபாகரனையல்ல. அது போலியான சிங்களப் பிரபாகரன். முகமூடி போட்ட பிரபாகரன். பிரபாகரனோ நலமாக உள்ளார் உயிருடன் உள்ளார் என்று கூறி கட்டமைக்கும் பொய்கள், புனைவுகள், பித்தலாட்டங்கள் மூலம், தமிழினத்தை காயடிக்கின்றனர். எம்மைச் சுற்றி மானசீகமான நம்பிக்கையாக, பிரமையாக இது மாறி, மனநோயாகிவிடுகின்றது.

Read more...

Last Updated ( Wednesday, 17 March 2010 20:27 )

புதிய ஜனநாயகக் கட்சியின் பொம்மலாட்டத்துடன் கூடிய பித்தலாட்டம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 17 March 2010 12:29
பி.இரயாகரன் - சமர் / 2010

வர்க்கப் போராட்டம் என்பது நிகழ்ச்சி நிரலாக இருக்க, அதுவல்லாத ஒன்றை முன்வைத்து பித்தலாட்டம் செய்கின்றனர். "சுயநிர்ணயம் - பேரினவாதஅரசு : புதிய ஜனநாயகக்கட்சி நிலைப்பாடு" என்ற அறிக்கை விடும் அளவுக்கு, தங்கள் அரசியல் மோசடிகளை நியாயப்படுத்துகின்றனர். வேடிக்கை என்னவென்றால் "சுயநிர்ணயம் - பேரினவாதஅரசு" பற்றி புலிக்கும் ஒரு தெளிவான நிலைப்பாடு இருந்தது என்பது தான். அவர்கள் அதை எப்படி தவறாக கையாண்டார்கள் என்பது எம்கண் முன் இருக்கின்றது. புதிய ஜனநாயகக்கட்சி இதை தேர்தல் வழிமுறைக்குள் வைத்து, மக்களுக்கு மொம்மலாட்டம் காட்டுகின்றனர்.

  Read more...

Last Updated ( Wednesday, 17 March 2010 13:12 )

தோழர் கண்ணனின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 17 March 2010 12:14
புதிய ஜனநாயகம் / 2010

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்டக்கிளை உறுப்பினராகச் செயல்பட்டு வந்த தோழர் கண்ணன், கடந்த 16.2.2010 அன்று காலை திடீர் மாரடைப்பினால் மரணமடைந்து விட்டார். படிப்பறிவு குறைந்தவராக இருந்தபோதிலும், வர்க்க உணர்வும் போர்க்குணமும் நிறைந்த தோழர் கண்ணன், தன்னைப் புரட்சிகர அரசியலின் பிரச்சாரகனாகக் கருதி உணர்வோடு செயல்பட்டவர். உதிரித் தொழிலாளியான அவர், நாள் முழுவதும் உடலுழைப்பில் ஈடுபட்டுவிட்டு, இரவு நேரங்களில் அமைப்பின் பிரச்சாரப் பணிகளில் சோர்வின்றிப் பணியாற்றினார். கொள்கையின் மீது பற்றுறுதியும், அது வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பும் அவரது பேச்சிலும் செயலிலும் எப்போதும் வெளிப்படும். புரட்சிகர அமைப்பையும் தோழர்களையும் இழிவாக அவதூறு செய்த காலிகளை தன் பாதச் செருப்பால் பதம்பார்த்தவர்தான் இந்த உணர்வுமிக்கத் தோழர். எளிய வாழ்வும் கடினஉழைப்பும் புரட்சியின் மீது மாளாக்காதலும் கொண்ட 45 வயதான அத்தோழரின் திடீர் மரணம், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

 

தோழரின் மரணச் செய்தி அறிந்து திருச்சி மாவட்டம் முழுவதிலுமிருந்து திரண்ட அமைப்புத்தோழர்களும் நண்பர்களும் உறவினர்களும், ம.க.இ.க. அலுவலகத்தில் செங்கொடி போர்த்தப்பட்டிருந்த அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, அன்று மாலை நடந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, இடுகாட்டில் இரங்கல் கூட்டம் நடத்தினர். கண்ணீர் மல்க உரையாற்றிய அனைவரும் தோழரின் உயரிய கம்யூனிசப் பண்புகளை வழுவாமல் பின்பற்றவும், அவரது புரட்சிகர கனவை நிறைவேற்றப் பாடுபடவும் உறுதியேற்று அஞ்சலி செலுத்தினர்.

 

தோழர் கண்ணனின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!


மக்கள் கலை இலக்கியக் கழகம்,திருச்சி.
18 புதிய ஜனநாயகம் மார்ச் 2010

Read more...

நெருப்பைப் பஞ்சால் அணைக்க முடியுமா? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 17 March 2010 12:12
புதிய ஜனநாயகம் / 2010

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுகுணா பவுல்ட்ரி ஃபார்ம் என்ற நிறுவனம் கால்நடைத் தீவனம் மற்றும் கறிக்கோழிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், தமிழகமெங்கும் கறிக் கோழிகளையும் தீவனங்களையும் உரிய காலத்திற்குள் கொண்டு சென்று இரவு பகலாகப் பாடுபட்டு வந்தபோதிலும், எவ்விதச் சட்டபூர்வ உரிமைகளுமின்றிக் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுவந்தனர்.

Read more...


ஹெய்தி நிலநடுக்கம்: பிணந்தின்னி அமெரிக்கா! ""எங்களுக்கு இராணுவ வீரர்கள் தேவையில்லை!'' PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 17 March 2010 12:08
புதிய ஜனநாயகம் / 2010

மத்திய அமெரிக்காவில் கியூபாவிற்கு அருகில் அமைந்துள்ள ஹெய்தி தீவைச் சேர்ந்த சாதாரண குடிமகன் தொடங்கி அத்தீவின் முன்னாள் இராணுவஅமைச்சர் உள்ளிட்டுப் பலரும் இவ்வார்த்தைகளைத்தான் இப்பொழுது கூறிக் கொண்டிருக்கிறார்கள். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டிற்கு நிவாரணம் வழங்குவது என்ற போர்வையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திவரும் அரசியல் சதிராட்டத்தைத் தோலுரித்துக் காட்டும் வார்த்தைகள் இவை.

Read more...


மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா:மீனவர் மீதான இந்திய அரசின் போர்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 17 March 2010 12:05
புதிய ஜனநாயகம் / 2010

தினந்தோறும் உயிரைப் பணயம் வைத்து, ஆழ்கடலில் நெடுந்தொலைவு சென்று நம் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களால்தான், இந்தியாவின் புரதத்தேவையில் பாதியளவு நிறைவு செய்யப்படுகிறது. இம்மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள ""மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா''முடக்கிப் போடப் போகின்றது.

Read more...


மராத்திய இனசெறி சிவசேனா உருவாக்கும் வில்லன்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 17 March 2010 12:02
புதிய ஜனநாயகம் / 2010

""ஒரு ஹீரோவாக நீங்கள் மாறவேண்டுமானால் முதலில் தேவை ஒரு வில்லன். அல்லது, சில வில்லன்கள். ராமருக்கு ராவணன், எம்.ஜி.ஆருக்கு நம்பியார். இதிகாசத்திலும், திரைப்படத்திலும் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் வில்லன்களும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். குறிப்பாக மார்க்கெட்டிங்கில்'' என்கிறார், நிர்வாகம் மற்றும் விற்பனைத் துறைகளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்தும் எஸ்.எல்.வி.மூர்த்தி.

Read more...


சி.பி.எம்மின் பரிதாப வளர்ச்சி முதலாளிகளே ஊழியர்களாக PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 17 March 2010 11:52
புதிய ஜனநாயகம் / 2010

போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் சிங்கூரில் பாலாய் சாபுய், திவாகர் கோலே ஆகியோர் அண்டை வீட்டுக்காரர்கள். 1970களில் பீடி சுற்றும் தொழிலாளிகளாக இவர்கள் வறுமையில் வாடினர். பாலாய் சாபுய், சி.பி.எம். கட்சியில் சேர்ந்து ஹ_க்ளி மாவட்ட விவசாய சங்கத் தலைவராக உயர்ந்தார். அவர் அரசு போக்குவரத்துத் துறையின் மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தார். இம்மாவட்டத்தின் அனைத்து வாகனங்களுக்கும் உரிமம்  பர்மிட் வழங்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிங்கூரில் அரசின் நிலக் கையகப்படுத்தல் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். இன்று அவருக்கு சிங்கூரில் இரண்டு அடுக்கு மாடி வீடு உள்ளது. போலேரோ ஜீப்பில் வலம்வரும் அவர் இன்று இப்பகுதியில் முக்கியத் தலைவராவார்.

Read more...

Last Updated ( Wednesday, 17 March 2010 11:56 )

கொலைகார சிதம்பரத்தின் கொடும்பாவி எரிப்பு மே.வங்கத்தை உலுக்கிய பேரணி- ஆர்ப்பாட்டம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 17 March 2010 11:39
புதிய ஜனநாயகம் / 2010

மே.வங்கம், ஒரிசா, ஜார்கந்து, சட்டிஸ்கர், பீகார் மாநில முதல்வர்களுடன் சேர்ந்து காட்டுவேட்டை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது பற்றி கலந்தாலோசனை செய்ய, கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று கொலைகார உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தா வந்தபோது, ""வேதாந்தாவின் கொலைகார அடியாள் ப.சிதம்பரமே திரும்பிப்போ!, டாடாவின் எடுபிடி புத்ததேவ் பட்டாச்சார்யாவே வெளியேறு!'', ""காட்டுவேட்டை என்ற பெயரில் தொடரும் நாட்டு மக்கள் மீதான போரை முறியடிப்போம்!'' என்ற முழக்கங்கள் கொல்கத்தா நகரெங்கும் எதிரொலித்தன.

Read more...


நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்! மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில் அணிவகுப்போம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 17 March 2010 11:36
புதிய ஜனநாயகம் / 2010

இந்திய ஆட்சியாளர்கள் பழங்குடி மக்கள் மீது நடத்திவரும் கொலைவெறியாட்டப் போரை திட்டமிட்டு மூடிமறைத்து, நக்சல்பாரி புரட்சியாளர்களைப் பயங்கரவாதிகளாகவும் கொலைகாரர்களாகவும் இழிவுபடுத்தி தமிழக செய்தி ஊடகங்கள் அவதூறு செய்துவரும் நிலையில், ஆளும் கும்பல் நடத்திவரும் நக்சல் வேட்டையின் உள்நோக்கத்தையும், மறுகாலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை விளக்கியும், ""பழங்குடியினர் மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான், அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!'' என்ற முழக்கத்துடன், பல்வேறு வடிவங்களில் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் கடந்த இரு மாதங்களாகத் தொடர்ந்து சூறாவளிப் பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன.

Read more...


Page 1 of 2