புதிய ஜனநாயகம் 2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மே.வங்கம், ஒரிசா, ஜார்கந்து, சட்டிஸ்கர், பீகார் மாநில முதல்வர்களுடன் சேர்ந்து காட்டுவேட்டை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது பற்றி கலந்தாலோசனை செய்ய, கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று கொலைகார உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தா வந்தபோது, ""வேதாந்தாவின் கொலைகார அடியாள் ப.சிதம்பரமே திரும்பிப்போ!, டாடாவின் எடுபிடி புத்ததேவ் பட்டாச்சார்யாவே வெளியேறு!'', ""காட்டுவேட்டை என்ற பெயரில் தொடரும் நாட்டு மக்கள் மீதான போரை முறியடிப்போம்!'' என்ற முழக்கங்கள் கொல்கத்தா நகரெங்கும் எதிரொலித்தன.

இக்கொலைகார சதிகாரர்களை எதிர்த்துப் பல்வேறு அமைப்புகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடத்தின. பிரபலஎழுத்தாளர் மகாஸ்வேதாதேவி உள்ளிட்டு, பல்வேறு அறிவுத்துறையினரும் மாணவர்களும் உழைக்கும் மக்களும் ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்டோர் திரண்டு, கொல்கத்தாவின் கல்லூரி சதுக்கத்திலிருந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை போலீசு முற்றுகையிட்டுத் தடுத்தது. தடையைமீறி, போலீசின் அச்சுறுத்தல்களைத் துச்சமாக மதித்து புறப்பட்ட பேரணி எஸ்பிளனேடு மெட்ரோ ரயில் பாதை சந்திப்பில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கொலைகார ப.சிதம்பரம் மற்றும் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

 

கொலைகார சிதம்பரத்தின் வருகையை எதிர்த்தும், உழைக்கும் மக்களைக் கொன்றொழிக்கும் நோக்கத்துடன் நடக்கும் சதியாலோசனைக் கூட்டத்தை எதிர்த்தும் மே.வங்க அரசுஊழியர் சங்கம் (நபாபார்ஜே) தலைமைச்செயலகம் அருகே மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தலைமைச் செயலகவாயிலை முற்றுகையிட்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தைக் கண்டு பீதியடைந்த கொலைகார ப.சிதம்பரம், பூனைப்படை பாதுகாப்புடன் பின்வாயில் வழியாக வெளியேறினார்.

 

நாட்டு மக்கள் மீது போர் நடத்தும் கொலைகார ஆட்சியாளர்களுக்கு எவ்வாறு "வரவேற்பு'அளிக்க வேண்டும் என்பதை மே.வங்கம் வழிகாட்டியுள்ளது. அந்த வழியில் உழைக்கும் மக்கள் போராட்டத்தைத் தொடர வேண்டியதுதான் இன்றைய தேவையாக உள்ளது.