உயிரிழந்த உறவு​களை நினைவு கூருவதற்கு தடைவிதித்தமையை வன்மையாக கண்டிக்கிறோம்! - முன்னிலை சோசலிச கட்சி

இம் மாதம் 12ம் திகதி முதல் ஒரு கிழமைக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் வடக்கில் யுத்தத்தால் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு அரசாங்கம் தடைவிதித்து பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் வடக்கில் யுத்தத்தால் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளமையை வன்மையாக கண்டித்து முன்னிலை சோசலிசக் கட்சி  வௌியிட்ட அறிக்கையில்,தெரிவிக்கப்படுள்ளதாவது,

 

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை  நினைவு கூருவதை தடுப்பதன் மூலம் மீண்டும் ஒரு பிரிவினைவாதம் தோன்றுவதற்கும் மற்றும் விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாவதை தடுக்க முடியாது ஆகிவிடும் என்று கூறி வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை இப்படியான அச்சுறுத்தல்கள் மூலம் இந்த அரசாங்கம் மீறிவருகின்றது.

 

altயுத்தத்தில் இலட்சக்கணக்கான சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களை நினைகூருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.சமுகத்தை வாழவைக்கும் நோக்கத்தோடு உயிரிழந்தவர்களை நினைவு கூருவது அவர்களின் ஜனநாயக உரிமை.

இந்த அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் அரசியல் வாதிகளுக்கும் இது விடயமாக தீர்மானம் எடுக்கும் உரிமை வழங்கப்கப்பட்டுள்ளது.30 வருட யுத்தத்தில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து அழிவுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு இதுவரையில் சாதகமான  எந்தவொரு முடிவும் இந்த அரசால் எடுக்கப்படவில்லை.

இப்படியான வேலைகளை அரசு செய்யாது நாளுக்கு நாள் சிங்கள.தமிழ்,முஸ்லிம் மக்களை பிரித்தாள் வதோடு மக்கள் விரோத அரசியலையும் அந்த மக்கள் மீது திணிக்கிறது.சிங்கள இனவாதத்தை இந்த அரசு ஊக்குவிப்பதுடன் தமிழ் இனவாத குழு அரசியலையும் முஸ்லிம் இனவாத குழு அரசியலையும் வளர்த்து வருகின்றது.

இதை தடுப்பது என்றால் சமாதானமான வேலைத்திட்டம் ஒன்று அவசியமாகவுள்ளது இதற்காக அனைத்து மக்களும் பேதங்களை மறந்து சமாதானத்துடன் வாழவேண்டும் என்று இலங்கை வாழ் அனைதத்து மக்களையும் கேட்டுக்   கொள்கின்றோம்.

அரசியல் குழு

முன்னிலை சோசலிச கட்சி

2014 மே 11

Last Updated on Sunday, 11 May 2014 17:39