குழப்பு குழப்பு நாட்டைக் குழப்பு! -'தம்பி" யை நாட்டிலிருந்து விரட்டு! இறைச்சிக் கடையை மூடு!


மாடுகளை கொலை செய்வதை  நிறுத்துமாறு கோரி தனது மேனியில் தானே பெற்றோலை ஊற்றிக் கொண்டு இறந்த போவத்தே இந்திர ரத்ன தேரரின் உடலை பெற்றுத் தருமாறு கோரி அலரி மாளிகையின் முன்பாக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய , இறைச்சிக் கடைகளை உடைத்ததாகக் கூறும் சிங்கள ராவய ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திலேயே மேற்கூறப்பட்ட கோஷங்கள் ஒலித்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கருத்து தெரிவித்த அக்மீமன தயாரத்ன தேரர், நாடு பூராவுமுள்ள மாற்று மத பள்ளிகள், கோயில்கள, பிரார்த்தனை நிலையங்கள், சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் வணக்கஸ்தலங்கள் போன்றவற்றை அகற்றப் போவதாகவும், இறைச்சிக் கடைகளை வைக்கப் போவதில்லையெனவும் சபதம் செய்தார். அதோடு கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரை திட்டித் தீர்த்து அவருக்கு புதிய பட்டமொன்றையூம் வழங்கினார். (அந்தப் பட்டம் என்னவென்பதை சொல்வது நாகரிமாக இருக்காது)

இறந்த இந்திர ரத்ன தேரரின் பிணத்தின் மீது உருவாக்கப்படும் ' மத எழுச்சிக்கு" இலக்கு கிடையாதெனக் கூறிய அவர், மாடறுப்பு, இறைச்சிக் கடை, ஹலால், முஸ்லிம் மக்கள், இவெஞ்சிலினா கிருஸ்தவப் பிரிவு போன்றவற்றிற்கு மட்டுமல்ல, பொலிஸ், புலனாய்வுப் பிரிவு போன்றவற்றிற்கு எதிராகவும் உளரிக் கொட்டினார். ஆனால், அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வார்த்தை கூட மொழிந்தருளவில்லை. பொலிஸாருக்கு எதிராக சில வார்த்தைப் பிரயோகங்களை செய்தாலும், பின்னர் அவற்றுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

சோம தேரரை 'பரலோகம்" அனுப்பிய  சமயத்தில் அதனை கண்டிக்க அரசாங்கமொன்று இருந்தது. அப்போதிருந்த அரசாங்கம் புலிகளோடு போர் நிறுத்தம் செய்துக் கொண்ட தேசத் துரோக அரசாங்கமாகும். இப்போது இருப்பது புலிகளை தோற்கடித்த அரசாங்கம். பேரினவாத, மதவாத அமைப்புகளுக்கு கை கொடுக்கும் அரசாங்கம்.

இந்த அரசாங்கம் உடனடியாக செயற்படும் விதத்தில் இறைச்சிக் கடைகளை மாத்திரமல்ல, தேசத்தின் இறைச்சி உணவான புரொய்லர்' கோழி இறைச்சியைக் கூட தடை செய்ய இடமிருக்கிறது. மீன்களை கொல்வது கூட பாவம் என்பதால், மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாநாயகவின் தொழில் இல்லாமல் போவதற்கும் இடமிருக்கிறது. 'தம்பிகளை" நாட்டை விட்டு விரட்டுங்கள் என்ற கோஷம் செயற்படப்போகும் விதம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீமோடு பேச்சு வார்த்தை நடத்தவும் இடமிருக்கின்றது. ( நாட்டை விட்டு விரட்டினாலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு ஓடப்போவதில்லை என்பது உறுதி)

ஆகவேஇ இந்த மரணத்தின ஊடாக இந்த அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமெதுவும் நடைபெறப் போவதில்லை என்பதும் உறுதியாகிறது. ஒரு அடி முன்னே வைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதைப் பற்றி இனவாத சக்திகள் நினைக்க இடமிருந்தாலும்,  போவத்தை இந்திர ரத்ன தேரரின் செயலை விட வேதனை தரக்கூடிய அனுவங்களை சந்திக்க நேரிடும் என்பதை அறிந்துள்ளதால், அதற்காக இப்படியான வீரர்கள் யாரும் முன்வருவார்கள் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது. இந்த சக்திகளின் மூக்கனாங் கயிற்றை ராஜபக்ஷாக்கள் ஏற்கனவே தமது கையில் பிடித்து வைத்துள்ளார்கள்.

இப்படியான சந்தர்ப்பத்தில் போட வேண்டிய முடிச்சு குறித்து சிங்கள பௌத்த அரசியல் இயக்கத்தின் ஆலோசகரான மேதகு சம்பிக ரணவக அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.  என்றாலும் அந்த மேதகு ஆலோசகரும் அந்த முடிச்சிலேயே சிக்கிக் கொண்டுள்ளார். அவருக்குள்ள பெரிய பிரச்சினை இந்த முடிச்சை அவிழ்த்துக் கொண்டு வெளியே வருவது எப்படி என்பதுதான்.

ஆகவே பலமான எதிரி இல்லாமல் எழும் இந்த ' மத ரீதியான எழுச்சி" கீழ் மட்டத்திலிருந்து வெடிக்கப் போவது நிச்சயம். கீழ் மட்டத்தில் மட்டும் தான்.

அரசாங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக மின் கட்டணத்திற்கு, பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மூடி மறைத்து விடும். அதற்காக இந்த அடிப்படைவாதிகளுக்கு நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் மாத்திரமல்ல, சிங்கள இனத்தின் நிலைத்தலுக்கும் பாதிப்பை தரக்கூடிய செயல்களுக்காக சட்டத்தின் பாதுகாப்பு கிடைக்கவும் கூடும்.

நன்றி - லங்கா விக்ஸ்

Last Updated on Tuesday, 11 June 2013 12:53