பம்பாய் 'பயங்கரவாதம்" ஆளும் வர்க்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது

பம்பாய் தாக்குதல் செப் 11 இல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலைப் போன்று, மீண்டும் உலகளாவில் பரப்பரப்புக்குள்ளாகியுள்ளது. ஒரு ஈராக்காக, ஆப்கானிஸ்தானாக, பாகிஸ்தானாக இந்தியாவை மாற்றப் போகின்றீர்களா இல்லையா என்பதை, இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

 

'பயங்கரவாதம்" என்று எதை நீங்கள் கருதுகின்றீர்களோ, அது எதனால் எப்படி ஏன் உருவாகின்றது என்பதை இனம் காணவும், அதற்கு காரணமானவர்களை எதிர்த்து சமூகம் போராடதவரை இது போன்ற 'பயங்கரவாதத்தை" யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. மாறாக 'பயங்கரவாதம்" செய்யும் நபர்களை, சமூக விழிப்புணர்வற்ற நீங்கள் தான் உற்பத்தி செய்கின்றீர்கள் என்ற உண்மை, உங்களையே அழிக்கும்.

   

இந்த 'பயங்கரவாதம்" போட்டி போட்டு நேரடி ஓளிபரப்பு ஊடாக பரபரப்பாக்கப்பட்டு, ஊடகவியல் வியாபாரம,; விளம்பரம் ஊடாக அரங்கேறுகின்றது. பெண்ணின் சதை முதல் 'பயங்கரவாத" அவலம் வரை, பணம் பண்ணுவதற்குத் தான் ஊடகவியல் சுதந்திரம்  உதவுகின்றது. சமூக விழப்புணர்வுக்காக அல்ல.

 

கொள்ளையடித்த நாகரீக கனவான்களால் நிதிச் சந்தையைக் குப்புறக் கவிழ்த்த போது, இதே ஊடகவியல் பீதியை விளம்பரம் செய்தது போன்று, 'பயங்கரவாதமும்" மலிவான பிரச்சாரமாக்கப்படுகின்றது.

 

'பயங்கரவாதம்" என்பது சாதியைப் போல் மனித பிறப்புடன் வருவதில்லை. மாறாக அவை மனித விரோதத்தால் உற்பத்தி செய்யப்படுகின்றது. அப்பாவிகள் 'பயங்கரவாதிகள்" ஆக்கப்படுகின்றனர்.

 

அரச பயங்கரவாதமும், மனித விரோதக் கூட்டத்தின் குறுகிய நலன்களும், தான் 'பயங்கரவாதத்தை"  உற்பத்தி செய்கின்றது. இந்தப் ப+மியில் சக மனிதனாக வாழமுடியாத நிலைமைதான் 'பயங்கரவாதத்தின்" வெளிப்பாடு. எப்படி மனிதன் இந்த உலகில் வாழமுடியாது அதிருப்தியுற்று தற்கொலை செய்கின்றானா, அப்படித்தான் 'பயங்கரவாதம்"  எதிர் தாக்குதலாகின்றது. 

 

சட்டம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் என்பது அனைவருக்கும் மறுக்கப்பட்டு, அது சில சமூகங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் சிறப்பாக அடைபடும் போது, அதன் எதிர்வினை தான் 'பயங்கரவாதம்". மனித அவலத்தை உருவாக்கும் காரணத்தை ஒன்று சேர்ந்து தடுக்க தயாரற்ற உங்கள் சமூகப்போக்குத் தான், தனிமனித பயங்கரவாதமாக வெடிக்கின்றது. உண்மையில் 'பயங்கரவாத" நடவடிக்கையில் ஈடுபடுபவனை விட, இதற்கான சமூகக் காரணத்தை தடுக்கத் தவறுகின்ற நீங்கள் தான் முதல் குற்றவாளிகள். 

 

தனக்கு இழைக்கும் கொடூமைக்கு தீர்வின்றியும், சமூகத்தின் செயலற்ற தன்மையாலும், 'பயங்கரவாதம்" சக மனிதனையே கொல்லத் தூண்டுகின்றது. மக்கள் சமூக கண்ணோட்டமின்றி, சக மனிதனை எதிரியாக பார்க்கின்ற உணர்வு, சமூகப் புறக்கணிப்புகள் மீதான பழிவாங்கும் வெறியாக மாறுகின்றது.

 

சமூகவிரோதமாக செயல்படும் அரசு, சமூக விரோத சித்தாந்தங்கள், அது உருவாக்கும் சமூக வடிவங்கள் 'பயங்கரவாத"த்தைத் தூண்டுகின்றது. இதை தடுத்து நிறுத்த, சமூகம் தயாராக இல்லாத நிலையில் தான், தனிநபர் பயங்கரவாதம் சமூகத்துக்கு எதிரானதாக மாறுகின்றது.

 

பம்பாய் தாக்குதல் கடந்த காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, இந்து பயங்கரவாதம் நடத்திய கொடூரத்தின் மொத்த விளைவாகும். இதை நீங்கள் உணர்வுப+ர்வமாக உணராத வரை, அதைத் தடுத்து நிறுத்தாதவரை 'பயங்கரவாத"த்தை நீங்கள் தான் உற்பத்தி செய்கின்றீர்கள். இந்துப் பயங்கரவாதத்தினை பாதுகாக்கும் அரசும், நீதிமன்றங்களும், முஸ்லீம் மக்களுக்கு அநீதியாகவே நடந்து வருகின்றது. இந்த சமூக அதிருப்தி பழிவாங்கும் உணர்வாக மாறுகின்றது.

 

ஏகாதிபத்திய அமெரிக்கா - ஜரோப்பா முதல் இந்து பயங்கரவாதம் வரை, முஸ்லீம் விரோத உணர்வுடன் அவர்களை ஒடுக்குகின்றது. இதன் பதிலடி தான் 'பயங்கரவாத" மாக உலகளவில் மாறுகின்றது. 

 

இப்படி ஆளும் வர்க்கங்களால் தான் 'பயங்கரவாதம்" உற்பத்தி செய்யப்படுகின்றது. அரசுகள், நீதி மன்றங்கள், சமூக சிந்தனை முறைகள், இழிவான மனித விரோதப் போக்கின் எதிர்வினைகள் 'பயங்கரவாத"  தாக்குதலாகின்றது.

 

மக்கள் விரோதப் போக்குகளை மக்கள் தடுத்து நிறுத்தாத வரை, 'பயங்கரவாதத்" தாக்குதல்கள் வேறு வழியின்றி ஆயிரம் ஆயிரமாகவே தொடரும். வேறு வழியில் அவர்கள் தம் நீதியைப் பெறமுடியாது என்று நம்புகின்ற தனிநபர்களின் அராஜக சிந்தனை முறையின்; எதிர்வினை, 'பயங்கரவாதத்தைத்"தான் தன் சொந்த தீர்வாக காண்கின்றது.

 

இதைத் தடுத்து தீர்வு வழங்கவேண்டியது நாங்கள் தான். மௌனமாக அவர்களை ஒடுக்க உதவுகின்றோம் என்ற குற்றவுணர்வுடன், இதை பொறுப்பேற்க வேண்டும். சக மனிதன் ஒடுக்கப்படமால் இருக்க, நாம் போராடுவதன் மூலம் தான் 'பயங்கரவாதத்தை" நிறுத்தமுடியும்.    

 

பி.இரயாகரன்
27.11.2008

 

Last Updated on Thursday, 27 November 2008 10:38