கங்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுத்தியலும் அரிவாழும் இலட்சினை
சோமவன்ச வார்த்தையெல்லாம் இனவெறி
கழனியாற்ரில் மிதந்ததெல்லாம் மறந்தாய்
பதவிக்கதிரைக்காய் பறந்தின்று அலைந்தாய்
பச்சைத்துரோகி நீ
கத்திக்குளறாதே ராஜபக்ச தமிழருக்கு ஒன்றும்
கொட்டிக்கொடுக்கான்
வெட்டிப்புடுங்கான் தெரியுமுனக்கு
வேசத்தைக்கலைத்திறங்கு தேசத்தில் மக்களிடம்
இல்லையெனில் விமல் வீரவன்ச வளியில்
போயுறங்கு ராஜபக்ச மடியில்

வேலை இல்லாமல் இளைஞரெலாம் வீதியிலே
நாளை சோற்றுக்காய் அல்லாடித் தவிக்கிறது
நாட்டைக்கொள்ளையிட கம்பனிகள் நோட்டமிடுகிறது
ஏழைச்சிங்களத்து கிராமத்தான் நாளை அடுப்பெரிய தவிக்கின்றான்
கருத்துச்சுதந்திரத்தை கோத்தபாய குரல்வளையில் நெரிக்கின்றான்
குரலெழுப்பிப்பார்
அடுத்த தேர்தலுக்கு அடித்தளமிடவேண்டுமென்றால்
ஆனந்தசங்கரி ஜயாவிடம் கற்றுக்கொள்
ஆட்சியில் அமர்த்தியது புலி
கலையாமல் காத்தது நீங்கள்
மடிந்தது எல்லாம் மக்கள் தான்
இடிந்தது தமி;ழன் வாழ்வும் வழமும் மட்டுமல்ல
இழந்தது சிங்கள இளைஞரின் உயிரும்தான்
 
பெற்ரதாயின் இதயம் சொல்லும்
பிள்ளை நாட்டுக்காய் மடிந்ததென்று
இழப்பின் துயரிலெழும் தாயின் இயல்பு இயற்கை
உழைப்புக்காய் இராணுவத்தில் இணைந்தாலும்
மடிந்தபின் தன்மகனை உயர்த்திப்பார்க்கின்ற
ஆறுதல் அறியாமை
இனவெறிக்கான எந்த துரும்புமில்லை
பிழைப்பு அரசியல்வாதி சோமவன்சவே
ஏழைச்சிங்கள மக்களிற்கும் உனக்கும் வெகுதூரம்
இனங்களை பிளந்துபோடடு ஏறிமிதித்தது போதும்
நிறுத்துன் வேடம்
அறுத்தெறிகொடியை ஆயிரமாயிரமாய் மடிந்த இளைஞரின்
மண்டையோட்டை கிண்டியெடுத்து மாலையாய்;கொழுவு
;
அரும்புகின்ற ஜக்கியத்தின் ஆணிவேர்
பரந்து கிளையெறியும்
பாசிசமும் இனவெறியும் பாடையேறும்
காலம் விரைய கைகோர்ப்போம்