பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின்  எதிர்காலமும்"  என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய உரையாற்றினார்.

 

இவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவரும்,  15 வருட சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அத்துடன் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.

 

பேரினவாதப் பாசிசம் புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஒடுக்கியதுடன், சிங்கள புத்திஜீவிகளையும் ஒடுக்கியது. தம்மை விமர்சிக்கும் சிங்கள ஊடகவியலாளர்களை குறிவைத்து தாக்கியதுடன், அவர்களை  படுகொலை செய்தது. இந்த வகையில் சுனந்த தேசப்பிரிய நாட்டில் உயிர்வாழ முடியாத நிலையில், கடந்த 6 மாதமாக நாட்டுக்கு வெளியில் வாழ்கின்றார்.

 

புகலிடச் சிந்தனை மையம் சுவிஸ்சில் நடத்திய முதலாவது கூட்டத்தில், அவர் உரையாற்றினார். சிங்கள புத்திஜீவிகள் எப்படி இன்றைய இலங்கை நிலைமையை அணுகுகின்றனர் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள, இந்த உரை உதவுகின்றது.

 

ஆங்கிலம் மூலமான அவரின் உரையை, உடனுக்குடன் தமிழுக்கு இலங்கையில் இருந்து வந்திருந்த சிவகுருநாதன் மொழி பெயர்த்தார். அந்த உரையை இங்கு நீங்கள் கேட்ட முடியும். அவருடனான கேள்வி பதில்களை இரண்டாம் பகுதியாக வெளியிட உள்ளோம்.

 

அவரின் உரை இலங்கை பற்றிய புகலிடச் சிந்தனை மையத்தின் அரசியல் நிலையுடன் மிக இணக்கமாக இருப்பதை, இங்கு அவரின் உரையின் ஊடாக நீங்கள் காணமுடியும்.

 

அரச பாசிசம் சிங்கள மக்களையும் தன் சொந்த எதிரியாக்கி நிற்பதையும், தமிழ்மக்களை மட்டும் அது ஓடுக்கவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றது. காலகாலமாக சிங்கள மக்களை எதிரியாக காட்டிய புலித்தேசிய அரசியல், சுனந்த தேசப்பிரிய போன்றவர்களின் நிலைப்பாடுகள் மூலம் தகர்ந்து போகின்றது. தமிழ் சிங்கள மக்களின் பொது எதிரி இந்த அரசு தான் என்பதையும், சுனந்த தேசப்பிரிய உரை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. ஒரு சிங்கள ஊடகவியலாளராகவும், புத்திஜீவியாகவும் நின்று இதைக் கூறுவது, எமது அரசியல் கடமையை மேலும் தெளிவுபடுத்துகின்றது. மக்களின் எதிரிக்கு எதிராக, அனைவரும் ஒன்றிணைவதன் அவசியத்தை இந்த உரை தெளிவுபடுத்துவதுடன், அதை செய்யுமாறு உங்களை அழைக்கின்றது.

 

{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}SunanthaSwiss.xml{/auto}

 

பி.இரயாகரன்
14.10.2009