பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும், வன்முறையும் யாருக்கு எதிராக கையாளப்படுகின்றது? இந்த உலகை ஆளும் ஜனநாயகவாதிகளுக்கு எதிராகவும், அதை பதுகாக்கும் புத்திஐPவிகளுக்கும் எதிராகவே

இந்த உலகத்தில் ஜனநாயகம் என்பது மூலதனத்தின் சுதந்திரம்தான். இதற்கு இசைவாகத் தான் கருத்துகள் முதல் அனைத்தும் உருவாகக்கப்படுகின்றன. இந்த ஜனநாயக உலகத்;தின் வௌ;வேறு காலகட்ட சுதந்திரத்தின் உரிமைபற்றி, மூலதனம் முதல் பாகத்தில் மார்க்ஸ் அம்பலப்படுத்துவதைப் பார்ப்போம்.

 

 

"அமெரிக்காவில் தங்கத்தையும் வெள்ளியையும் கண்டு பிடித்தது, பழங்குடி மக்கள் ஏழ்மைப் படுத்தப்பட்டு சிறைப் படுத்தப்பட்டு, அச்சுரங்கங்களிலே புதைக்கப்பட்டது.  கிழக்கு இந்தியப் பகுதிகளை அடிமைப்படுத்திக் கொள்ளை அடித்து, கருப்பர்களை வேட்டையாடும் கானகமாக ஆப்ரிக்கா மாற்றப்பட்டது.... 17வது நூற்றாண்டின் தலையாய காலனி ஆதிக்க  நாடாக இருந்தது: துரோகம், லஞ்சம், படுகொலை, அற்பத்தனம் இவற்றின் அசாதாரணமான கதையாகும்;, ஜாவாவிற்கு அடிமைகளைப் பெறுவதற்காக, மனிதர்களை அவர்கள் திருடிய முறை குறிப்பிடத்தக்கது. மனிதத் திரடர்களுக்கு இதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்டது. திருடன், தரகன், விற்பனையாளன் ஆகியோர்., இந்த வியாபாரத்தில் முதன்மையான வியாபாரிகளாக இருந்தார்கள். திருடப்பட்ட இளைஞர்கள் அடிமைக் கப்பல்களுக்கு அனுப்பப்பட தயாராகும் வரை அவர்கள் செலிபெஸ் தீவில் இரகசியப் பாதாளச் சிறைகளில் தள்ளப்பட்டனர்... ஜாவாவின் பாஞ்ஜீவாக்கி மாநிலத்தில் 1750 இல் 80000 மக்கள் இருந்தனர். 1811 இல் 8000 மக்களே இருந்தனர். எவ்வளவு இனிய வாணிபம்?

... புராட்டெஸ்டென்ட் மதத்தின் கண்ணியமிக்க காவலர்களான நிய+ இங்கிலாந்தின் புனிதர்கள், 1703 ல் தங்கள் சபையில் நிறைவேற்றிய சட்டங்களின்படி ஒரு சிவப்பு இந்தியனுக்கு 40 பவுன் விலை நிர்ணயித்தனர். 1720 ல் ஒவ்வொரு மண்டைத் தோலின் விலையும் 100 பவுன்னாக உயர்ந்தது. 1744 ல் மாசாசூசெட்ஸ்பே ஒரு குறிப்பிட்ட சிவப்பு இந்திய இனத்தை கலக்காரர்கள் என்று பிரகடனம் செய்த பின்பு விலைவாசி பின்வருமாறு இருந்தது. 12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆணிண் மண்டைத்தோல் 100 பவுன். ஆண்கைதி: 105 பவுன். பெண்கள் மற்றும் குழந்தை கைதிகள் 55 பவுன். பெண்கள் மற்றும் குழந்தைகளின் மண்டைத்தோல் 50 பவுன். .... வேட்டை நாய்களையும், மண்டைத்தோல் உரித்தலையும், |கடவுளாலும் இயற்கையாலும் தனக்கு அளிக்கப்பட்ட சாதனங்கள்| என்று பிரிட்டிஷ் பார்லிமென்ட் பிரகடணம் செய்தது. இந்திய கஜானவை நிரப்ப 1866 ல் ஒரிஸ்ஸா மாநிலத்தில் மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் பட்டினியால் கொல்லப்பட்டனர்." இவை உலக வராலாற்றின் ஜனநாயக சுதந்திரத்தின் சில பக்கங்கள். இவைதான் இன்று பொதுவான வாழ்வு முறையாகும்;. மனித அடிமைத்தனம் வடிவங்களில் மாறியதற்கு அப்பால், அதன் விளைவுகள் மாறிவிடவில்லை. அதாவது முன்பு அடிமைத்தனமும் ஈவு இரக்கமற்ற படுகொலைகளும் ஆதிக்க நாட்டில் மட்டும் ஜனநாயகமாக சுதந்திரமாக இருந்தது, இன்று மனித அடிமைத்தனமும், ஈவு இரக்கமும் இன்றி ஏழ்மையாக்கி கொன்று போடும் நகரிகமும் உலக ஜனநாயகமாகியுள்ளது. அடிமைத்தனமும், மரணமும் மேலும் மேலும் எண்ணிக்கையால் அதிகரித்து கோரமாகி கொடூரமாகியுள்ளது. மூலதனத்தின் குவிப்பு மிகவும் நசுக்காக, மறைமுகமாக மக்களைச் சுரண்டி, நகரிகரிகப்படுத்தியுள்ளது. இதன் விளைவால் நாள்; தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் மடிகின்றனர். ஆணால் இதன் குற்றவாளிகள் ஜனநாயகமான நகாரித்தால் அடையாளம் காணப்படுவதில்லை. அதை செய்பவனே மற்றவன் மேல் அதை சுமத்துவதுடன், அவனையே குற்றவாளியாக்கின்றான்.

உலகமயமாதல் ஜனநாயகத்தில் 1970களில் உலகில் செல்வந்தருக்கும் பரம ஏழைகளுக்கும் இடையிலான வித்தியாசம் 30க்கு ஒன்று என்று இருந்தது, 1990 இல் 60க்கு ஒன்றாகவும், 2000 இல் 74 க்கு ஒன்றாக அதிகரித்துள்ளது. 1993 இல் ஒரு நாளைக்கு ஒரு டொலர் வீதம் பெற்று வறுமையில் வாடியோர் 130 கோடியாக இருந்தது 1998 இல் 150 கோடியாக அதிகரித்துள்ளது 1960 இல் இந்த அடிமட்ட பிரிவைச் சேர்ந்த 20 சதவீத மக்கள் உலக வருமானத்தில் பெற்றது 2.3 சதவீதமட்டுமே. இது 1996 இல் 1.1ஆக குறைந்து போனது. 120 கோடி வறிய மக்கள் 1990 இல் 130 கோடி டொலரை கொண்ட ஏழ்மை, 1998 இல் 120 கோடி டொலராக குறைந்து வறுமை சமூகமயமாகி அதிகரித்துள்ளது. இந்த வறுமையில் சிக்கியுள்ளோரில் பெரும் பகுதி பெண்களும் ஆவர். இவர்கள் நாள் ஒன்றுக்கு 70 டொலரை உற்பத்தி செய்வதுடன், உலக உற்பத்தியில் 78 சதவீதத்தை ப+ர்த்தி செய்கின்றனர். ஆனால் உலக வருமானத்தில் 6 சதவீதத்தையே பெறுகின்றனர். இதிலும் நேரடியாக பெறுவதோ 3 சதவீதத்தையே. 55 கோடி மக்கள் இரவு பட்டினியுடன் படுக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி இன்று வருடம் 76 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் கிழமைக்குள் இறக்கின்றனர். இதில் 40 வீதம் உணவு இன்மையால் இறக்கின்றனர். அதாவது பிறக்கும் 1000 குழந்தையில் 57 இறக்கின்றது. பிறக்கும் போதும் பின்புமாக ஒரு கோடி குழந்தைகள் இறக்கின்றனர். 50 லட்சம் குழந்தைகள் வலது குறைந்து வாழத் தொடங்குகின்றனர். 15 லட்சம் குழந்தைகள் தாய்பால் இன்மையால் வருடா வருடம் இறக்கின்றனர்.

யுனிசேவ் அறிக்கையின் படி ஒவ்வொரு நாளும் 1600 பெண்கள் குழந்தையை பெறும் போது இறக்கின்றனர். இது வருடம் 5,85,000 பேராக உள்ளது. இன்று குழந்தை பிறக்கும் போது 10 லட்சம் பெண்கள் இந்த ஏகாதிபத்திய அமைப்பால் வருடாவருடம் கொல்லப்படுகின்றனர். உலகில் 20 முதல் 50 சதவீதமான பெண்கள் பாலியல் வதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். உலகில் 22 லட்சம் பெண்கள் மாசு அசுத்தத்தால் வருடாவருடம் இறக்கின்றனர். ஆரம்பக் கல்வியை உலகில் ஆண்கள் 90 சதவீதம் பெற பெண்கள் 75 சதவீதமே பெறுகின்றனர். மேற்கு நாட்டில் உள்ள வாழ்நிலையை பெற்று வாழ முடியாது இறந்து போகும் ஒவ்வொரு மனிதனின் இறப்பும் ஜனநாயகப் படுகொலையாகும். இது ஆயுள் முதல் அனைத்துக்கும் பொருந்தும். இது எத்தனை கோடி!

இதற்கு காரணம் என்ன? வருட வருடம் கோடிக் கணக்கில் கொல்லப்படும் ஏழை மக்களின் ஜனநாயகம் பற்றி யார் பேசுகின்றார்கள். ஸ்ராலின் இவர்க்களைப் பற்றி பேசினர், போராடினர். இவர்களுக்கு எதிரான சுதந்திர ஜனநாயக சுரண்டல் அமைப்பை நிறுவ விரும்பியவர்களின் பரமவிரோதியாக இருந்தார், வாழ்ந்தார். இன்று கோடி கோடியாக மறைமுகமாக மூலதனக் குவிப்பில் கொன்று போடும், ஜனநாயகத்தின் கடும் எதிரிகள் நாம்;. இதை வேர் அறுப்பதில் தொடங்கி, இதை பாதுகாக்க விரும்புபவர்கள் மேல் சர்வாதிகாரத்தை ஏவுவது, வன்முறையைக் கையாள்வது, மரணதண்டனையை விதிப்பது வரை எந்தவிதமான பின் வாங்கலும், பாட்டாளி வர்க்க போராட்ட வரலாற்றில் வர்க்கப் போராட்டத்தை மூலதனத்திடம் தரைவார்ப்பதாகும்.