பத்து வருடங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட விமேலேஸ்வரனின் நினைவுகளின் மேல் ............

1988ம் ஆண்டு இலங்கைப் புரட்சிகர போராட்ட பாதையில் விமேலேஸ்வரன் என்ற மனிதனை இழந்த நிகழ்வு, வரலாற்றுப் பாதையில் மறக்க முடியாதவையாக நீடிக்கும். ஆம் மக்களுக்காக இறுதிவரை சமரசமின்றி போரடிய மாமனிதனை புலிகள் நடுவீதியில் வைத்து படுகொலை செய்தனர். அவன் கோரியது எல்லாம் மக்கள் எழுத, பேச, கூட்டம் கூடும் உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்குகள் என்பதுதான். தன் மாரணத்தை முன் கூட்டியே போராட்டப் பாதையில் தெளிவாக உணர்ந்து கொண்டதுடன், மாரணத்தைக் கண்டு அஞ்சாது தலைமறைவாக இருந்தபடி மக்களுக்காக போராடுவதில் தலைமை தாங்க என்றுமே பின் நிற்கவில்லை. அவன் மிகவும் பின்தங்கிய தாழ்தப்பட்ட கிராமங்களில் நீண்டநாள் தங்கி நின்று, அவர்களின் உடல் உழைப்பான விவசாயக் கூலிக்கு அவர்கள் உடன் சென்று, நடைமுறைப் புரட்சிக்காரனாக எந்தவிதமான பகட்டுமின்றி புகழுக்கும் ஆசைப்படாத போராட்ட மனிதனாக இருந்தான். இன்று புரட்சி சாவாடல் அடிப்பதும், தம்மைத் தாம் புகழ்ந்து கொள்ளும் இன்றைய சகதிகளில் இருந்து வேறுபட்ட இவனின் வரலாறு மக்களுக்காக எப்படி போராடவேண்டும் என்பதை நடைமுறையில் விட்டுச்சென்றுள்ளது.  இவன் ஒரு நாடகம் மற்றும்    பல்துறை எழுத்தாளனாக பலதுறைகளில் வளர்ந்த கலையனாக  மக்களின் தலைவனாக வளரும் வழியில் வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டான். இலங்கைப் புரட்சிகர போராட்டப் பாதையில் நினைவுக்கு உள்ளாக்க கூடிய புரட்சிகரப்போராட்ட பாரம்பரியங்களை மரணத்தினூடே  எமக்கு தந்து விட்டுச் சென்றுயுள்ளன்.