மீண்டும் எழுந்திருக்கையில் என்ற கவிதையில் வரும் சில வரிகள் - சண்முகம் சிவலிங்கத்தின்

எனது மயிர் பொசுங்கி விட்டது
எனது தோல் கருகிவிட்டது
எனது காதுச்சோணைகள் எரிந்துவிட்டன
இந்த ரணங்களோடுதான்
மீண்டும் எழுந்திருக்கிறேன்

இந்த ஊனங்களின்
தழும்புகளுடன்தான் நான் இனி வாழவேண்டும்
எனது மனவெளியோ
வெந்த மனம்போல் உள்ளது.
தீப்பிடித்துக் கருகிய புற்கற்றைகள்
இங்கொன்று அங்கொன்றாய் தெரிகிறது
இடையே சாம்பல் கலந்தமண்
அடி கருகிய புற்கற்றைகளிலிருந்து
இரண்டொரு பசும் முளைகள்
சின்னச் சின்ன பச்சைப் படர்கள்
தெரிகிறதா?