நம்மை மனிதநாக்குவது எது?

மனிதனுக்கும் சிம்பன்ஸி குரங்குக்கும் இடையே 96 விழுக்காடு டிஎன்ஏ வரிசையில் கச்சிதமான ஒற்றுமை இருப்பதா சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆண்மையில் அறிக்கை அளித்துள்ளது. ஒரு சிம்பன்ஸி குரங்கின் முழுமையான மரபணு வரிசை தொகுக்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்ட்டாவின் ஆராய்ச்சி மையத்தில் கடந்த ஆண்டு மாரடைப்பால் இறந்து போன கினின்ட் என்ற 24 வயது சிம்பன்ஸி குரங்கு தற்போது தனது டிஎன்ஏ மரபணு வகைப்படுத்தப்பட்டதன் மூலம் அறிவியல் ஆய்வுக்கான தகவல் களஞ்சியமாக உயிர் வாழ்கின்றது. உலகில் மனிதர்கள் சுண்டெலி எலி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இப்போது முழுமையான மரபணு வரைபடம் தந்த நான்காவது பாலூட்டியாக சிம்பன்ஸி மனிதக் குரங்கு ஆகியுள்ளது.

மானுட் உயயிரியலைப் புரிந்து கொள்ள புதுவழிகாட்டும் இந்த ஆராய்ச்சி மனிதனை வித்தியாசமான பரிணாமவளர்ச்சியில் திருப்பிவிட்ட சின்னஞ்சிறு மரபணுவித்தியாசங்கள் பற்றிய புதிய கதவல்களைத் தருகின்றது. பரிணாம வளர்ச்சியில் நமக்கு நெருங்கிய சொந்தக் காரராக உன்ன திருவாளர் சிம்பன்ஸியிடம் இருந்தே நம்மைப் பற்றிக் கற்றுக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சிக் குழுவில் இடம் பெற்ற சியாட்டல் நகரின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ராபர்ட் வாட்டர்சன் கூறுகிறார். இந்த மரபணு ஒப்பீட்டு மூலம் உயிரினங்களுக்கு இடையிலான முக்கியமான உயிரியல் வேறுபாடுகளை ஆராய்வதில் உள்ள இடைவெளி பெரிதும் குறைந்துள்ளது. மனிதனுடைய டிஎன்ஏ மரபணுவையும் சிம்பன்ஸியின் டிஎன்ஏ வையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒலியைப் புரிந்து கொள்ளதல் நாம்பு மண்டலம் சமிக்னஞகளைக் கடத்துதல் விந்துணு உற்பத்தி போன்ற உயியி நடவடிக்கை தொடர்பாக மனிதனிடைய மரபணுக்களும் மனிதக் குரங்கின் மரபணுக்களும் மிக விரைவாக உருவெடுத்தது தெரியவந்துள்ளது.

 

ஆனால் நம்மை மனிதனாக ஆக்குவது எது?என்ற அடிப்படைக் கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.

 

இதற்கிடையில் முதன்முறையாக சிம்பன்ஸி குரங்கின் புதைபடிவுகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்படிருப்பதாய் செய்தி கிடைத்துள்ளது. சீன்யாவில் உன்னரிபஃட் பள்ளத்தாக்கில் கிடைத்த மூன்று பற்களின் புதைபடிவுகள் அவை சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வசித்த ஒரு சிம்பன்ஸி குரங்கினுடையது என்று கலிபோர்னியா அறிவியல் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நீனா ஜப்லோன்ஸ்கி தமது ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார். மனிதனும் சிம்பன்ஸியும் 50 லட்சம் முதல் 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பொதுவான மூதாதையரிடம் இருந்து தோன்றிய பிறகு சேர்ந்து வாழவில்லை என்ற கருத்து இந்தக் கண்டிபிடிப்பால் அடிப்பட்டுப் போனது.

 

http://tamil.cri.cn/1/2005/12/05/ This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it