தீங்கானவை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

lankasri.com"மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்' என, அபர்டீன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கள் தெரிவித்துள்ளனர்.பிரிட்டனில் உள்ள ஐந்து பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று அபர்டீன் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாவது:

மனித உடலில் உள்ள "ஏடிஎச்' ஜீன்களே, வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் உருவாக காரணம் என, முன்னர் கண்டறியப் பட்டுள்ளது. ஆனால், இந்த "ஏடிஎச்' ஜீன்களில் உள்ள இரண்டு பிரிவுகள், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிப்ப தாக தற்போது கண்டறியப் பட்டுள்ளது.இந்த வகை ஜீன்களை கொண்டிருப்பவர் களுக்கு மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.வாய் சார்ந்த புற்றுநோய்கள் ஏற்பட, மரபு கோளாறுகளும், வாழ்க்கை முறையுமே காரணம்.

குறிப்பாக, நீங்கள் குடிக்கும் மதுவை உங்களின் உடல் எப்படி கிரகித்துக் கொள்கிறது என்பதைப் பொறுத்தது. நீங்கள் அருந்தும் மதுவை உங்களின் உடல் வேகமாக கிரகித்துக் கொண்டால், உங்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. அதற்கு மாறான நிலைமை உருவானால், வாய் புற்றுநோய் ஏற்படலாம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு ஜீன்களும் உங்கள் உடலில் சேரும் மதுவின் தீமைகளை குறைத்து அதை வேகமாக கிரகித்துக் கொண்டால், வாய் மற்றும் தொண்டையில் உள்ள செல்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். அதற்கு மாறாக நிகழ்ந்தால், வாய் மற்றும் தொண்டையில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படலாம்.இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1212518002&archive=&start_from=&ucat=2&