எதிர்பாராமல் வெளியூர் போகும்போது எகலப்பையோ எழுதுகருவியோ இல்லாத கணினியில் தமிழ் எழுத முடியாமல் போய்விடுவது பலருக்கும் பல நேரங்களில் வரும் சங்கடம். ஆன்லைன் எழுதுகருவிகள் அப்போது நினைவுக்கு வருவது இல்லை...இப்போது உங்கள் பதிவிலேயே ஒரு ஆன்லைன் எழுதுகருவியை தயா

எதிர்பாராமல் வெளியூர் போகும்போது எகலப்பையோ எழுதுகருவியோ இல்லாத கணினியில் தமிழ் எழுத முடியாமல் போய்விடுவது பலருக்கும் பல நேரங்களில் வரும் சங்கடம். ஆன்லைன் எழுதுகருவிகள் அப்போது நினைவுக்கு வருவது இல்லை...இப்போது உங்கள் பதிவிலேயே ஒரு ஆன்லைன் எழுதுகருவியை தயாராக வைத்திருந்தால் என்ன? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது...இதுதான்

(பிளாக்கர் பதிவர்கள் மட்டும்) இந்த விட்ஜட்டை தங்கள் பதிவில் நிறுவி விட்டால் கையருகில் எப்போதும் ஆன்லைன் எழுதுகருவி இருந்து கொண்டிருக்கும்.

















பிளாக்கர் அல்லாத பதிவுகளுக்கும் அல்லது பிளாக்கரில் பக்கப் பட்டையில் நிரலை எடுத்து இணைக்கவும்



பக்கப் பட்டையில் சுட்டி வைத்திருப்பதை விட உங்கள் பதிவுக்குள்ளேயே நேரடியாக இந்த எழுதுகருவியை இணைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அதற்கான வழி



இந்த நிரலை உங்கள் பதிவில் Layout- Template-Page Elements பகுதியின் footer ல் (கீழ்ப்பகுதி)
-Add a Page Element -HTML/JavaScript வழியாக சேர்க்கலாம்...
ஆனால் இதை பக்கப் பட்டை (side bar)பகுதியில் இணைக்க இயலாது...footer பகுதியில் மட்டுமே இணைக்க வேண்டும். footer (கீழ்ப்பகுதி) அகலம் குறைவாக இருந்தால் நேரடியாக Edit Html - Edit Template பகுதியில் </body> க்கு முன் இணைக்கலாம்.

 

http://tamilblogging.blogspot.com/2008/01/blog-post.html