சமையல்கலை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Active Image

 

தேவையான பொருட்கள்

 

Image

சிக்கன் - 3துண்டு

இஞ்சி பூண்டு விழுது- -1 தேக்கரண்டி

சில்லிசிக்கன் பொடி-தேவையான அளவு 

தயிர்- 1 தேக்கரண்டி

எலுமிச்சை ஜீஸ்- -1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

 Image

தோசை மாவுகப் 

வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 3

கொத்தமல்லி தழை-2 கொத்து

எண்ணை தேவைக்கேற்ப்ப

வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிவைக்கவும்

அதனை மிளகுதூள் உடன் கலக்கி வைக்கவும்

Image

ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் இஞ்சி பூண்டு ,தயிர்,சில்லிசிக்கன் பொடிபோட்டு நன்கு கலக்கி எலுமிச்சை ஜீஸ் போட்டு 5 மணிநேரம் ஊறவைத்து கிரில் அல்லது தோசைகல்லில் வைத்து வேக வைத்து எடுக்கவும்

அதனை பொடியாக நறுக்கிவைக்கவும்

Image

,பின்பு தோசைக்கல் சூடானதும் மெல்லிய தோசையாக தேய்க்கவும்

Image

உடனே அதன் மேல் சிக்கனை மேலே தூவவும்

Image.

அதர்க்கு மேல் வெங்காய கலவையை போடவும்[இந்த தோசை என் குழந்தைக்கு சுட்டதால்வெங்காயம் சேர்க்கவில்லை]

Image

நன்கு அமுக்கி விடவும்

Image 

தோசை சுற்றிலும் சிறிது எண்ணை விடவும்

Image

தோசை கிரிஸ்பாக வந்ததும் திருப்பி போடாமல் எடுக்கவும்

Image

சூடாக காரச்சட்னியுடன் பரிமாறவும்