அரசியல் லும்பன்கள் நடத்தும் ஹர்த்தால்
1970 களில் தேர்தல் அரசியலில் எதிர்த்துப் போட்டியிட்டவர்களைச் சுட்டு கொன்றவர்களே, குண்டு வீசி கர்த்தால்களையும் நடத்தினர். இந்த தனிநபர் பயங்கரவாதத்துக்கு அஞ்சி ஒடுங்கிய மக்களை முன்னிறுத்தி ஹர்த்தால்களே, புலிக்கு பின்பாக தொடருகின்றது. தொடரும் அச்சமே, இன்றைய ஹர்த்தால்கள். ஹர்த்தாலை அறிவிப்பவர்கள், முந்தைய பயங்கரவாதத்தை சார்ந்து முன்னிறுத்துகின்றனர்.
புலியை துதிபாடும் இந்த அரசியல் லும்பன்களின் கோமாளித்தனங்களுக்கு, மக்கள் உணர்ச்சியற்ற ஜடங்களாகி அடங்கிப் போகின்றனார். ஏன் எதற்கு சோலி என்று, ஒடுங்கி ஒதுங்கி விடுகின்றனர். பகுத்தறியும் சமூக நோக்கோ - அரசியல் உணர்வோ இன்றி, ஹர்த்தால்கள் வெற்றுச்சடங்காக, சம்பிரதாயமாகிவிடுகின்றது.
இதுதான் தமிழ்மக்களின் இன்றைய அவலநிலை. அரசியல் ஒரு பிழைப்பாக, மக்களை ஏமாற்றி விடுவதே, அரசியல் வியாபாரமாகி விடுகின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தை பெற்று சொகுசாக வாழ, நிகழ்ச்சிநிரல் தேவைப்படுகின்றது.