Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

2003 யாழ் நூலகத்தை ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒர...

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

2003 இல் யாழ் நூலக திறப்புவிழாவை புலிகள் எதற்காக த...

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், ...

முதலாளித்துவ

முதலாளித்துவ "சொர்க்கத்தில்" மனிதர்கள் வாழ முடியுமா!?

அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போர...

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற...

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, ம...

Back முன்பக்கம்

முஸ்லீம் சகோதரர்களுக்கு நீதிகோரி சமவுரிமை இயக்கம் நடாத்திய மாபெரும் ஆர்பாட்டம்

  • PDF

இலங்கை அரச அதிகாரத்தை வைத்திருக்கும் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பொதுபல சேனா மற்றும் மதவாத - இனவாத சக்திகள் முஸ்லீம் சகோதரகளுக்கு எதிராக நட்த்தும் பயங்கரவாத வன்முறையினைக் கண்டித்தும், நீதி கோரியும் இன்று 18.08.2014 கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது . அனைத்துச் சமூகத்தினரும், கட்சிகளும், மத தலைவர்களும்   இந்த ஆற்பாடத்தில் கலந்து கொண்டனர். அதிக அளவில் சிங்கள மொழிபேசும் மக்களுடன் பிக்குகள் பலரும், கொழும்பு வாழ் முஸ்லீம் சகோதர்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர் . இப்போராட்டத்தில் வடக்கின் பிரபல அரசியல்வாதியும் வடமாகாண சபை உறுப்பினருமான  சிவாஜி லிங்கம், முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்கள், நவ சமாசக் கட்சித்தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன போன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

 

போராட்டத்தில் பங்கு கொண்டோர் ஒரு கட்டத்தில் பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டம் செய்தனர் . இதனால் போக்குவரத்து இஸ்தம்பிதமானது.  மேலும், பொதுபல சேன, கோத்தபாய ராஜபக்ஷ , மற்றும் இலங்கை அரசுக்கு எதிரான கோசங்கள் பங்கு கொண்டோரால் முழங்கப்பட்டது.

இவ்வார்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கோசங்கள் சில : -

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்!-

சிங்கள, தமிழ், முஸ்லிம் நாம் எல்லோரும்மனிதர்கள்!

இனவாத மதவாத பொறியில் மீண்டும் சிக்க வேண்டாம்

இனவாதத்தையும் மதவாதத்தையும் ஊக்குவிக்கும் ஆட்சியாளரின் தேவையை தோற்கடிப்போம்! -

இனவாத தாக்குதலை உடனே நிறுத்து

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வளி  செய் !

இதேவேளை அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் முஸ்லீம் சகோதரர்கள் மீதனான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது .நாட்டில் நடக்கும் சகல அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் 4 அமைச்சர்கள் மற்றும் ஒரு அமைச்சின் செயலாளர் இருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான நஜீத் இந்திக இதனை கூறியுள்ளார்.


அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க, றிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் வழிநடத்தி வரும் அமைப்புகள் நாட்டில் அவ்வப்போது மோதல்களை ஏற்படுத்தி வருகின்றன. ஆட்சியாளர்களின் மூழ்கி வரும் அரசியல் அதிகாரத்தை தற்காத்து கொள்ளும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


மாணவர்கள் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தும் போது அதற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவுகளை பெறும் ஆட்சியாளர்கள்,மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படும் என்பதை அறிந்தும் அடிப்படைவாத கருத்துக்களை தெரிவிக்கும் கூட்டங்களை நடத்த இடமளிப்பதாகவும் நஜீத் இந்திக குறிப்பிட்டுள்ளார்.

Last Updated on Wednesday, 18 June 2014 17:02

சமூகவியலாளர்கள்

< June 2014 >
Mo Tu We Th Fr Sa Su
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 19 20 21 22
23 24 25 26 27 28 29
30            

AllVideos Reloaded

புதிய ஜனநாயகம் :- புதியவை