Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஊமைகளாக அடிபணிவோமா? ஒன்று சேர்ந்து எதிர்ப்போமா?

ஊமைகளாக அடிபணிவோமா? ஒன்று சேர்ந்து எதிர்ப்போமா?

  • PDF

விவசாயத் தாய்மாரே! தந்தையரே! தோழரே! தோழியரே!

நாட்டு மக்களின் பட்டினியை போக்குவது நாங்கள். சேற்றை கழுவிக் கொண்டால் அரசாள்வதற்கும் தகுதியானவர்கள் என்று கூறப்படுகிறது. அது கூட ஒருவகையில் ஏமாற்றுதான். எது எப்படியிருந்தாலும், விவசாயிக்கு இன்று என்ன நடந்திருக்கிறது? விவசாயத்திற்கு என்ன நடந்திருக்கிறது? விவசாயி அரசுகட்டில் ஏறியிருக்கிறாரா? கேவலமாகிவிட்டாரா?


விவசாயியை பொறுத்தவரை இன்றுள்ள பிரச்சினை தண்ணீர் வழங்காமைதான். குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றது. ஆனால் வயலில் பாதியை விதைப்பதற்காக மட்டுமே நீர் வழங்கப்படுகிறது. அது ஏன்?

 

அரசாங்கத்திற்குள்ள பிரச்சினை உர மானியம். வயலில் பாதிக்கு மாத்திரம் நீர் வழங்குவதனால் உரமானியத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் பாதியை மிச்சப்படுத்திக் கொள்ளலாம். வேறு சிலர் கூறுகிறார்கள் சுற்றுலா பிரயாணிகளின் C-PLANE விமானங்களை தரையிறக்குவதற்காக குளங்களில் நீரை வைத்துக்கொள்ளத்தான் நீர் வழங்குவதில்லையென. எப்படியிருந்தாலும், ஏதோவொரு காரணத்தினால்தான் எங்களுக்கு நீர் தருவதில்லை என்பது தெளிவு.


இவற்றைவிட சிறுநீரக நோய் சம்பந்தமான பிரச்சிணையும் பாரதூரமாக உள்ளது. 1991லிருந்து இதுவரை 22500 பேர் இந்நோயால் இறந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் 300பேர் வீதம் மரணிக்கின்றனர். இப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைத்திருக்கிறதா?


பரிச்சோதனைகளுக்கும், மருந்துகளுக்கும் ஏற்படும் செலவை கேட்டால் சாக வேண்டும் போல் இருக்கிறது. நச்சு கிருமிநாசிகளுக்கும், இரசாயண உரத்திற்கும் எம்மை பழக்கப்படுத்தியது இந்த இந்த ஆட்சியாளர்களும், கம்பனிகளும்தான். இப்போது அவற்றிலிருந்து விடுபட்டு எம்மால் விவசாயம் செய்ய முடியாது. அக் கிருமிநாசிகளினால் ஓடையிலும் வாய்க்காலிலும், குளத்திலும் தண்ணீரில் நச்சு கலக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.


இந்த கலேபரங்களுக்கு மத்தியில்தான் "விதைகள்" சட்டமூலத்தை கொண்டுவரப் பார்க்கிறார்கள். அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் விதை நெல்லை தயாரித்துக் கொள்ள, இன்னொரு விவசாயிக்கு விதை நெல்லை கொடுக்க முடியாது. அப்படி செய்தால் தண்டப்பணம் செலுத்த வேண்டும் அல்லது சிறையில் போடுவார்கள். முதல் முறை அகப்பட்டால் தண்டப்பணம் 50,000 ரூபா செலுத்த வேண்டும். ஒரு மாதம் சிறைத் தண்டனையை அநுபவிக்க வேண்டும். இரண்டாது முறை அகப்பட்டால் தண்டப்பணம் 100,000 ரூபா, ஒரு வருடம் சிறைத் தண்டனை. மூன்றாவது முறை அகப்பட்டால் முதல் தடவையைப் போன்று மூன்று மடங்கு. இந்தக் கதையைக் கேட்டால் இது எப்படி சாத்தியப்படும் என எண்ணத் தோன்றும். என்றாலும் உண்மை அதுதான். விவசாய அதிகாரிகளுக்கு பொலிசாரின் அதிகாரம் வழங்கப்படும். எந்த நேரத்திலும் கைது செய்ய முடியும்.


விதைகளின் உரிமையை மட்டுமல்ல, விதைகளையும், நில உரிமையையும், தண்ணீர் கட்டுப்பாட்டையும் விவசாயிடமிருந்து பறித்து கம்பனிகளுக்கு தாரைவார்க்கவே ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள். இப்போதே பாதி முடிந்து விட்டது. எஞ்சியதையும் முடித்து விவசாயியை உயிரோடு புதைப்பதற்கே இச்சட்டமூலம் கொண்டு வரப்படுகிறது. நீர், விதை, உரம் அனைத்து கம்பனிகளின் கையில். அதன் பிறகு, கம்பனிகள் சொல்வதைத்தான் விவசாயிகள் கேட்க வேண்டும். எமது நாட்டில் மாத்திரமல்ல, உலகம் முழுக்க முதலாளித்துவ ஆட்சியாளர்களும், கம்பனிப் பெருச்சாளிகளும் கையாலும் முறை இதுதான்.


இனி சும்மா பார்த்துக் கொணடிருப்பதில் பயனில்லை. இந்த அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும். அதற்காக நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும். எதற்காக போராடுகிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இதைப்பற்றி பேச, விவாசாயிகளோடு போராட்டத்தில் இறங்க விவசாய போராட்ட இயக்கம் தயாராகவே இருக்கிறது. நாதியற்றுக் கிடக்கும் விவசாயியை உயிருடன் புதைக்கும் இந்த திட்டத்தை தோற்கடிக்க வேண்டும். அதற்காக ஒன்று சேருவோம் வாருங்கள்!


(வாசித்துவிட்டு மற்றவருக்கும் கொடுக்கவும்)


விவசாய போராட்ட இயக்கம்


இது குறித்து பேச எம்மை அழையுங்கள்
தொலைபேசி:  0756539555க / 0713407287
விலாசம்:  41/32 கந்தஹேனவத்தை பாதை,
1வது ஒழுங்கை, பன்னிபிட்டிய

Last Updated on Monday, 09 June 2014 16:58