Wed04242024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலை வன்மையாக கண்டிப்போம்!

  • PDF

'இன்போம்" நிறுவனத்தைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்களான திரு ருகி பர்ணாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டமைப்பு சம்பந்தமான நிலையத்தின் முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கடந்த 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முன்னிலை சோஷலிஸக் கட்சியின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு

 

 

'ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களுக்கு எதிராக குரலெழுப்பும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் குரல்வளையை நசுக்குவதற்காக எடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மார்ச் 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் முதல்நிலை மனித உரிமை செயற்பாட்டாளர்களான 'இன்போம்" நிறுவனத்தின் ருகீ பர்னாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டபை்பு சம்பந்தமான முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த கைது இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலுக்கு சிறந்த உதாரணமாகும். 16ம் திகதி இரவு அவர்கள் இருவரும் கிளிநொச்சியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ம் திகதி கிளிநொச்சி தர்மபுறம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டோடு சம்பந்தப்பட்டவர்கள் எனக்கூறி தாயும் மகளும் கைது செய்யப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காகச் சென்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, தர்மபுறம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமாரி பாலச்சந்திரன் என்பவரின் வீட்டுப்பக்கமாக வெடிச்சத்தம் கேட்டதாக கூறி அவரும் அவருடை 13 வயது மகள் விபுஷிகாவும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். ஜெயகுமாரி பாலச்சந்திரனின் மூன்று ஆண்மக்கள் காலஞ்சென்றிருப்பதோடு ஒருவர் காணாமல் போயுள்ளார். அவருடைய மகள் காணாமல் போனவர்கள் தேடுவதற்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டது காணாமல் போனவர்கள் தொடர்பான ஆர்ப்பாட்டங்களை செயலிழக்கச் செய்வதற்காவே என்பது தெளிவு. இப்போது அது குறித்து குரலெழுப்பிய மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

 

ருகீ பர்ணாந்து மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்த ஒரு வழக்குரைஞர் கிளிநொச்சி பொலிஸில் விசாரித்தபோது கைது செய்யப்பட்டதை நிராகரித்தமை பாரதூரமான நிலையாகுமென்பதே எமது கருத்தாகும். இப்படியான நிலைமையின் கீழ் அவர்கள் உயிராபத்தான நிலையில் இருப்பது தௌிவாகிறது. ருகீ பர்ணாந்து மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் இந்நாட்டின் முதல்நிலை மனித உரிமை செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீது இவ்வாறான அச்சுறுத்தல் தொடுக்கப்பட்டிருப்பதன் மூலம், மனித உரிமைகளுக்காக தோற்றி நிற்பவர்களுக்கு இலங்கை ஆபத்தான நாடாக மாறுவது தெரிகிறது.

 

ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கையில மனித உரிமைகள் சம்பந்தமான பிரேரணை குறித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருப்பதன் மூலம், எப்படியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சர்வாதிகார் மற்றும் ஜனநாய விரோத பயணத்தை கைவிட அரசாங்கம் தயாரில்லை என்பது தெரிய வருகிறது. இந்த நிலைமையின் கீழ் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்காக பரவலான மக்கள் செயற்பாடொன்று தேவைப்படுகிறது. அதற்காக ஏதாவதொரு வெளிச்சக்தியின் மீது நம்பிக்கை வைப்பதில் பலனில்லை. மக்களின் பரவலான தலையீட்டின் ஊடாகவே ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியும். மனித உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் அனைத்து வித அச்சுறுத்தல்களையும் உடனடியாக நிறுத்துமாறு ஆட்சியாளர்களை வற்புறுத்தும் நாம், தமது உரிமைகளுக்காக நிறுவனப்படுமாறும், அணிதிரளுமாறும், செயற்படுமாறும் இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

 

-முன்னிலை சோஷலிஸக் கட்சி-

Last Updated on Wednesday, 19 March 2014 08:13