Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

விஜய பாடசாலையில் தலைகள் துண்டிக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்தன.

  • PDF

இலங்கைக்கும் துண்டிக்கப்பட்ட தலைகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. புதை குழிகள் காரணமாக அரசாங்கங்கள கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு. புதைகுழிகளினாலேயே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் உண்டு. இந்த மண்ணில் இன்னும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணமுள்ளன.


இன்முறை மாத்தளைப் பிரதேசத்தில் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தளை புதைகுழி குறித்து தகவல் கிடைப்பதற்கு முன்னரேயே 71 கிளர்ச்சியோடு சம்பந்தபட்டவர்களுடையது என்று பொறுப்பு வாய்ந்தவர்களால் கூறப்பட்டது. ஆனால் அவை 71ஐ சேர்ந்தவர்களதல்ல, 89ஐ சேர்ந்தவர்களது என்று தெரிய வருகிறது. ஆம், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் ' பொறுப்புக் கூற வேண்டியவர்களேதான்" ' பலகடுவ நீரூற்றுக்கு பக்கத்தில் கை கால்களைக் கட்டி 22 பேரை உயிரோடு பெற்றோல் ஊற்றி கொளுத்தினார்கள்.

அங்கிருந்த அநேகமானோரர் கூம்பியன்கொட பன்சாலையின் வதை முகாமில் இருந்தவர்கள். அவர்களது கை கால்கள் உடைக்கப்பட்டு நடக்கக்கூட முடியாமல் இருந்தார்கள். உயிரோடு கொளுத்தப்பட்டபோது சிலர் தீயிலிருந்து தப்பிப்பதற்காக துடித்துத் துடித்து ஊர்ந்து சென்றாலும் அவர்களால் உயிர் வாழ முடியவில்லை. துடித்து துடித்து மடிந்தார்கள். அவர்களது வேதனைக் குரலைக் கேட்டவர்கள் இன்றும் கூட உயிரோடு இருக்கிறார்கள்.


ரத்தோட்டை வெலங்கஹவத்தையில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் வீட்டோடு எரிக்கப்பட்டார்கள். சிறு குழந்தைகளோடு வீட்டைப் பூட்டி வெளியே வர முடியாதவாறு வீட்டைச் சுற்றி பெற்றோல் ஊற்றப்பட்டு வீட்டோடு சேர்த்து கொளுத்தப்பட்டார்கள். வீட்டிலிருந்த அத்தனை பேரும் தீயில் கருகி மாண்டார்கள். முவந்தெனிய என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் போலிஸை இராணுவமே சுட்டுக் கொன்றது. அதன் பின்னர் விஜய வித்தியாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 35 பேரை வீட்டில் கொண்டுபோய் விடுவதாகக் கூறி இராணுவ டிரக் வண்டியில் கிராமத்துக்கு அழைத்து வந்து கைகளிரண்டையும் பின்புறமாகக்கட்டி அவர்களை சுட்டுக் கொன்றார்கள்.


அவர்களின் உடல்களை பெற்றோல் ஊற்றி கொளுத்தும்போதும் சிலர் இறந்திருக்கவில்லை என்று ஐ.பி. சோமரத்ன பிற்காலத்தில் திருகோணமலையில் வைத்து என்னிடம் கூறினார்". இது மாத்தளையில் வெளிவந்துக் கொண்டிருக்கும் கூட்டுப் புதைகுழிகளின் வரலாற்றில் இரண்டு சந்தர்ப்பங்களாகும். போஸிலேன் தொழிற்சாலைக்கு அருகில் செயற்படுத்தப்பட்டு வந்த பொலிஸ் பிரிவைத் தவிர மேலும் 4 வதை முகாம்கள் மாத்தளை நகரில் செயற்பட்டு வந்தன. அவை கஜபா படைப் பிரிவின் துணைப்பிரிவின் கீழ் செயற்பட்டவையாகும்.


மாத்தளையில் கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டு பிடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் விஜய வித்தியாலயம், கூம்பியன்கொட பன்சலை மற்றும் விருந்தினர் விடுதியில் செயல்பட்டு வந்த முகாம்களில் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.


கூம்பியன்கொட பன்சாலை பிரவெனா மண்டபத்திற்கு பின்னால் இரும்புத் தகடொன்றை வைத்து அதற்குக் கீழ் தீ மூட்டி கை கால்கள் கட்டப்பட்ட மனிதர்களை அதன் மேல் போட்டு உயிரோடு கொளுத்தினார்கள். சில நேரங்களில் இந்தத் தகடுக்கு மின்சாரம் பாய்ச்சப்பட்டிருந்தன. அதன் பின்னர் தோல்கள் உரிந்து இரத்தம் வழிந்தோடும்வரை அடித்துக் கொன்றார்கள். அந்த இரத்தக் கறைகள் சமீப காலம் வரை பன்சாலையில் காணப்பட்டது.


பிரித் நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டிருந்த 15 பேரைக் கொன்றார்கள். இப்போது அந்த கூட்டுப் புதைகுழி இருக்கும் இடத்தில் அமைந்திருக்கும் மெக்டொவெல் கோட்டைக்குச் சொந்தமான தோட்டத்தில் காணப்பட்டவை விஜய வித்தியாலயத்தின் ஓல்கட் மண்டபம் மற்றும் குணசேன மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் எழும்புக்கூடுகள். அங்கு கிட்டத்தட்ட 800 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். சிலர் கொலை செய்யப்பட்டு தலைகள் மாத்திரம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருந்ததாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் பிற்காலத்தில் கூறினார்கள். சில நாட்களில் விருந்தினர் விடுதியிலும் விஜய வித்தியாலயத்திலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அந்த தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டார்கள். அந்த சடலங்கள்எங்கும் கொண்டு செல்லப்படவில்லை.


இப்போது சொல்கிறார்கள் 47 வருட கொள்ளை நோயினால் இறந்தவர்கள், மண்சரிவினால் இறந்தவர்கள் அங்கு புதைக்கப்பட்டார்கள் என்று. வில்ஷெ யார் மலையில் ஏற்பட்ட மண்சரிவினால் அவ்வளவு பேர் இறக்கவில்லை. அவர்கள் வைத்தியசாலை மயானத்தில் புதைக்கப்பட்டார்கள். மயானம் அருகிலேயே இருக்கும் போது ஏன் உடல்களை ஒரே இடத்தில் புதைத்தார்கள்? 71ல் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு யாரும் கொல்லப்படவில்லை. அவர்கள் போலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் 13 பேர் இறந்தார்கள். அதுவும் தாம்பேகம கிராமத்தில். அவர்களது உடல்கள் நாவுல பகுதியில் புதைக்கப்பட்டன". நீங்கள் இதுவரை வாசித்த இந்த வார்த்தைகள் அந்த வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்து உயிர் பிழைத்த ஒருவருடைய வார்த்தைகள்தான்.


மாத்தளை வைத்தியசாலையின் பின்புறம் மெக்டோல் கோட்டைக்குச் சொந்தமான தோட்டத்தில் காணப்பட்ட கூட்டு புதைகுழிகளின் வரலாறு மட்டுமல்ல, 88-89 காலகட்டத்தில் மாத்தளை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞரகளின் தலைவிதி அப்படித்தான் தீர்மானிக்கப்பட்டது. கொள்ளை நோயினால், மண்சரிவினால் மற்றும் 71ல் கொல்லப்பட்டவர்களின் உடல்கள்தான் என்று கூறி படுகொலைகளின் வரலாறு மூடி மறைக்கப்படுகிறது. மீண்டும் அவரதுகுரலை கேட்போம்.


"அந்தக்காலத்தில் இந்தப் பகுதிக்கு கஜபா ரெஜிமென்ட் தான் பொறுப்பாக இருந்தது. முதலில் மேஜர் குணதிலக இருந்தார். பின்னர் நிலைமைகள் பாரதூரமானபோது கோடாபய ராஜபக்ஷ வந்தார். முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர் மொஹான் விமலசூரிய என்ற அதிகாரி. அவர் கொடூரமான முறையில் மனிதர்களைக் கொன்றார். மொஹான் விமலசூரிய, குமாரசிங்க என்றழைக்கப்படும் வங்கி அதிகாரியை பிடித்துக் கொண்டுவந்து அவரது காதை வெட்டி, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுத்தட்டில் போட்டார்.


துண்டிக்கப்பட்ட தலைகள் விஜய வித்தியாலயத்தின் பின்புறம் குவிக்கப்பட்டிருந்தது. உடல்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக பின்னர் அறிய முடிந்தது. விஜய வித்தியாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களைப் பார்ப்பதற்கு வாரத்துக்கு ஒரு முறை கண்டி செஞ்சிலுவை சங்கத்திலிருந்து வருவார்கள்.


அவர்கள் வருவதற்கு முன்தினம் இரவில் சிலரை மெக்டொவல் தோட்டத்திற்கு கொண்டு சென்று கொன்றார்கள். போஸிலீன் கட்டிடமொன்றில் போலிஸ் பிரிவொன்று செயற்பட்டு வந்தது. அதற்கு பொறுப்பாக இந்தவர் ஏ.எஸ்.பீ. பாலசூரிய. அவர் பிடித்து வந்த ஒவ்வொரு மனிதனையும் கொன்றார். கற்கலால் தலையில் அடித்தும் மனிதர்களைக் கொன்றார். கை கால் கட்டி தண்ணீர் தாங்கிகளுக்குள் போட்டும் கொன்றார். அப்படியாக படுகொலை செய்யப்பட்ட மனிதர்களின் உடல்களை கொளுத்தவில்லை. இடத்துக்கிடம் புதைத்தார்கள்.


இப்போது தோண்டப்படுவது அந்தப் புதைகுழிகள்தான். "திறந்த பொருளாதாரம்" என்ற நாமகரணத்தோடு அன்றைய ஐக்கிய தேசியக்கட்சியினால் இலங்கை மக்கள் மீது சுமத்தப்பட்ட நவ தாராளமய முதலாளித்துவத்தையும், ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மட்டுமே மாற்றமுடியாத, சர்வவல்லமை பொருந்திய நிறைவேற்று அதிகாரம் கொண்ட சர்வாதிகார ஆட்சியையும் எதிர்த்துப் போராடிய ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் அரச படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.


பலபேரது உடல்கள் பாதையோரங்களில் வீசப்பட்டிருந்தன. சிலர் எங்கே , எப்படி புதைக்கப்பட்டார்கள் என்றே தெரியவில்லை. புதை குழிகள் இப்போதுதான வெளிவரத் துவங்கியுள்ளன. 'உம்.. என்றால் வனவாசம். ஏன்.. என்றால் சிறைவாசம்" என்றுதான் படித்திருக்கிறோம். ஆனால் இப்போது உம்.. என்றால் வதை முகாம். ஏன்.. என்றால் புதை குழியாக இருக்குமோ?

Last Updated on Friday, 29 November 2013 08:30