Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சமவுரிமைக்கு எதிராக, அரசுக்கு ஆதரவான பிரச்சாரம்

சமவுரிமைக்கு எதிராக, அரசுக்கு ஆதரவான பிரச்சாரம்

  • PDF

சமவுரிமை இயக்கத்தையும் அதன் போராட்டங்களையும் முடக்க அரசு இன்று "சமவுரிமை"யை உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றது. அந்தவகையில் சமவுரிமை இயக்கம் முன்வைத்துள்ள சமவுரிமைக்கான திட்டம் தான் அரசின் திட்டம் என்பது போல அரசுக்கு ஆதரவான வகையில் சிலர் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றனர். அரசின் "சமவுரிமை" தான், ஒடுக்கப்பட்ட மக்களின் சமவுரிமைப் போராட்டம் என்று கூறுகின்ற இவர்கள் அரசு உச்சரிக்கும் சமவுரிமைக்கும்; ஒடுக்கப்பட்ட மக்களின் சமவுரிமைப் போராட்டத்திற்கும் இடையில் உள்ள அரசியல் வேறுபாட்டை அரசியல் நீக்கம் செய்துவிடுகின்றனர். அரசியல் உள்ளடக்கமற்ற சொற்களைக் கொண்டு, மக்களை மந்தையாக மேய்க்கின்ற அரசியல் எல்லைக்குள், இதை குறுக்கிக் காட்டி விடுகின்றனர்.

இலங்கையில் இனங்களுக்கும் மதங்களுக்கும் "சமவுரிமை" இருக்கின்றது என்று ஆளும் வர்க்கமும் அரசும் கூறுகின்ற கூற்றுக்கும், சமவுரிமையைக் கோரி போராடும் எமது போராட்டமும் ஒன்றா!? இரண்டும் "ஒன்று" என்கின்றனர். ஒரே "நேர்கோட்டில்" இருப்பதாக கூறுகின்றனர். இப்படி அரசின் செயற்பாட்டுக்கு ஆதரவாக இன்று பிரச்சாரம் செய்கின்றனர். அனைத்தையும்  திரித்தும் புரட்டி அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். புரட்சிகர அரசியலை அரசியல் நீக்கம் செய்வதன் மூலம், மலிவான இழிவான அரசியலை செய்ய முனைகின்றனர். இதை நம்புகின்றவர்கள் இந்தப் பிரச்சாரத்தில் உள்ள மக்கள் எதிர்ப்பு அரசியலை விளங்கிக் கொள்ளாமல் இன்னமும் அரசியல் கற்றுக்குட்டியாகவே இருக்கின்றனர்.புலிகள் இருந்த காலத்தில் ஜனநாயகத்தை நாங்கள்; கோரிய போது, அரசும் கூட புலிகள் மறுத்த ஜனநாயகத்தை பற்றிப் பேசியது. புலிகள் நாங்கள் கோரிய ஜனநாயகத்தையும், அரசும் பேசிய ஜனநாயகத்தையும் ஒன்று என்று கூறி பாசிசத்தை மக்கள் மேல் ஏவியது. இதைபோல் தான் அரசு சொல்கின்ற "சமவுரிமை" யும் சமவுரிமை இயக்கத்தினது சமவுரிமைக்கான கோசங்களும் இரண்டும் ஒன்று என்று கூறி சமவுரிமை போராட்டத்தை காட்ட முனைகின்றனர்.

 

 

 

அன்று புலிகள் கோரிய குறுந்தேசியத்தையும், நாங்கள் கோரிய சர்வதேசியத்தையும் ஒன்றுதான் என்றது அரசு. இது கடந்தகால அரசியல். இதேபோல் தான் "சமவுரிமையும்" என்று கூறுகின்ற, அதே அரசியல் கேலிக்கூத்தை இங்கு மீளப் பார்க்கின்றோம். இப்படி இரண்டும் ஒன்றெனக் கூறும் பிரச்சாரத்தை நம்பியவர்கள், இதில் ஒன்றுக்கு பலியானார்கள். புலியின் பின் "தேசியத்தையும்", அரசின் பின் "ஜனநாயகத்தை"யும், இரண்டையும் ஒன்றாக காட்டி பயணித்தவர்கள் இந்த அரசியலுக்குள் பலியானார்கள், மக்கள் விரோதிகளானர்கள். இவ் இரண்டுக்கும் எதிராக இதை வேறுபட முன்வைத்து போராடியவர்கள் நாங்கள். இதுதான் கடந்த வரலாறு. இன்று "சமவுரிமை" என அரசு புலம்புவதும், சமவுரிமை இயக்கம் முன்னெடுக்கவிருப்பதுவும் இரண்டும் ஒன்று என்றும், அவை இரண்டும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதாக கூறுகின்ற அவதூறு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றவர்கள் அதே பழைய அரசியலையே எமக்கு எதிராக மீளத் தொடருகின்றனர்.

மார்க்சிய அடிப்படையை மறுக்கின்ற இந்த அரசியல் அவதூறு, அன்று மார்க்சியத்தின் அரசு பற்றிய கூற்றுக்கு எதிராக அனாகிஸ்ட்டுகளால் (அராஜகவாதிகளால்) கூட கையாளப்பட்டது. அரசை ஒழிப்பதற்கு பதில் அரசை கோருவதாக கூறி, புரட்சி நடந்தவுடன் அரசு இருக்கக் கூடாது என்றவர்கள், அரசு பற்றி சுரண்டும் வர்க்கமும் சுரண்டப்படும் வர்க்கமும் ஒன்றாக நேர்கோட்டில் பயணிப்பதாக கூறிய அதே அரசியல் கேலிக்கூத்தைத்தான் இங்கு மீள முன்வைக்கின்றனர்.

இப்படி உதாரணங்கள் இருக்க மக்கள் "சமவுரிமை"யுடன் வாழ்வதற்கான உரிமையையும் அதற்காகப் போராடும் உரிமையையும் மறுப்பதற்கு, அரசின் அரசியல் இன்று இவர்களுக்கு உதவுகின்றது. அரசு எதைச் செய்ய விரும்புகின்றதோ, அதை பிரதிபிலித்து இரண்டும் ஒன்றுதான் என்ற கோட்பாட்டு அரசியல் கோட்பாட்டு விளக்கம் கொடுக்கின்றனர். இப்படி மக்களுக்கு கூறுகின்றவர்கள், மொட்டையும் தட்டையானதுமான, மக்களை மந்தையாக மேய்க்கும் அரசியலை தொடர்ந்து நடத்துகின்றனர்.

இனவொடுக்குமுறையையும், இனவாதத்தையும், மதவாதத்தையும் முன்வைத்து தொடர்ந்து சிறுபான்மை இன மத அழிப்பில் ஈடுபடும் அரசு அதையே தனது "சமவுரிமை" என்று கூறுவதும், அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சமவுரிமையைக் கோரி போராடுவதும் இரண்டும் ஒன்றா!? இலங்கையை ஜனநாயக சோசலிசக் குடியரசு எனப் பெயரிட்டு அன்றைய இன்றைய அரசுகள் அழைப்பதைக் காட்டி, பாட்டாளி வர்க்கம் கோரும் சோசலிசமும் இந்த வெற்று அலங்கரிப்பான பெயர்ப்பலகை மாட்டல் «சோசலிசமும்» ஒன்று தான் என்றுகாட்டி அரசியல் செய்கின்றவர்கள் அரசியலில் யாராக இருக்க முடியும்!?. அவர்கள் நோக்கம் எப்படிப்பட்டது?

அரசுக்கு எதிரான கோசத்தின் பின்னான அரசியலை, அரசியலை நீக்கம் செய்கின்றனர். அரசு எந்தநோக்கோடு இந்தக் கோசத்தை உச்சரிக்கின்றதோ, அந்தவகையிலேயே அதை திருப்பி சொல்லுகின்ற அரசியல் வங்குரோத்தை பார்க்கி;ன்றோம். அரசு, இன்று தொடங்கி உள்ள சமவுரிமைக்கான மக்கள்திரள் போராட்டத்தை முறியடிக்க, «சமவுரிமை» கோசத்தை அரசு தனதாக அதை முன்னிறுத்துகின்றது. மக்கள் தனக்கு எதிராக சமவுரிமையின் அடிப்படையில் அணிதிரள்வதைத் தடுக்க, தனக்கு எதிரான கோசங்களை கூட தான் முன்னெடுப்பது போல் காட்டும் திசைதிருப்பும் வித்தையிது. இவ்வாறு தான் அரசுகள் இருக்கும் என்பதை மறுத்து இவை இரண்டும் ஒன்று தான் என்று கூறுபவனின் நோக்கம் நயவஞ்சகமானது, மக்களுக்கு எதிரானது. இதற்குள் அங்கும் இங்கும் ஊசலாடும் போது, இந்த அரசியல் நயவஞ்சகத்தைப் புரிந்து கொள்ளாத அரசியல் என்பது, அப்பாவியாக இருப்பதை பறைசாற்றுகின்றது.

ஒரு அரசும், அதைச் சார்ந்த ஆளும் வர்க்கங்களும் எப்போதும் எங்கும் மக்கள் நலன் சார்ந்த மக்கள் அரசாகத்தான் தன்னைக் காட்டிக்கொள்ள முனையும். இது தனக்கு எதிரான வர்க்கத்தின் கோசத்தை கூட தனதாக்கிக் கொண்டு தான் தன்னை தக்கவைக்கும். இரண்டுக்கும் இடையிலான இடைவெளியை மறைப்பதன் மூலம், புலப்படாததாக்குவதன் மூலம் தான், தன்னை மக்கள் நலன் சார்ந்த அரசாக காட்டும். இந்நிலையில் மக்கள் நலன் சார்ந்த அரசியல் கோசத்துக்கும் அரசு தனது நலன் சார்ந்து வைக்கும் ஒரே மாதிரியான கோசத்துக்கும் வித்தியாசம் இல்லை எனப் பிரச்சாரம் செய்வது அடிப்படையில் அரசின் நலனுக்கு துணைபோகும் மக்கள் எதிர்ப்பு அரசியலே. இல்லையில்லை, இவை இரண்டும் ஒன்று தான் என்று கூறுகின்ற இவர்களின் கூற்றின் மூலம் இவர்கள் அரசின் பிரச்சார வெற்றிக்கு துணைநிற்கிறார்கள். இதைத்தான் அரசும் செய்ய முனைந்தது. இதுதான் சமவுரிமை போராட்டத்துக்கு எதிராக அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி. இரண்டும் ஒன்று என்று சொல்லக்கூடிய கைக்கூலிகளை அரசியல்ரீதியாக மகிந்த அரசு உருவாக்கியிருக்கின்றது. சமவுரிமைக்கான போராட்டத்தை முறியடிக்க, இரண்டும் ஒன்று என்று கூறி பிரச்சாரத்தை அரசுக்கு நோக்கத்துக்கு சார்பாக செய்யவும், சமவுரிமை இயக்கத்தை எதிர்த்து போராடவும் தமிழர் மத்தியில் அணியை உருவாக்கி இருக்கின்றது இலங்கை அரசு. இவ்வாறு அரசுக்கு சார்பாக சக்திக் பிரச்சாரம் செய்வது இன்று சமவுரிமை போராட்டத்துக்கு எதிராக அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி எனக் கூறலாம்.

"சமவுரிமை" முன்வைக்கின்ற புள்ளியில் "சுயநிர்ணயத்தை" வைத்துவிட்டால் அது சமனாகிவிடாது என்று கூறுகின்ற அரசியல் குதர்க்கம் இங்கு குறுகியது. "சுயநிர்ணயத்தை" பிரிவினையாக முன்னிறுத்துகின்றவர்களின் மூடிமறைத்த அரசியல் மந்திரமாகும்.

இனவொடுக்குமுறைக்கு எதிராகவும், இனவாதத்துக்கு எதிராகவும் போராடுவதை தடுக்கும் அரசியல் குதர்க்கமாகும். சுயநிர்ணயத்தைக் கோருவதையும், அதற்காகப் போராடுவதையும், இனவொடுக்குமுறைக்கு எதிராக, இனவாதத்துக்கு எதிரான போராட்டம் தடுக்கவில்லை.  இல்லை இது எம்மைத் தடுப்பதாக வேஷம் கட்டுவது, இனவொடுக்குமுறைக்கு எதிராக, இனவாதத்துக்கும் எதிராக போராடுவதை தடுக்க போடும் வேஷம் தான். அரசு முன்வைக்கும் "சமவுரிமை"யையும், எமது சமவுரிமைப் போராட்டத்தையும் ஒன்று என்று கூறி அரசின் "சமவுரிமைக்கு" ஆதரவாக பிரச்சாரம் செய்வது போல், இனவொடுக்குமுறைக்கு எதிராக, இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை அரசு சார்பானதான காட்டி அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றனர். இந்த அரசியல் என்பது மக்கள்விரோத, இனவாத அரசியல். இது இன்று அரசுசார்பு அரசியலாக செயற்படுகின்றது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

07.02.2013

Last Updated on Monday, 10 June 2013 21:49