Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயக மக்கள் முன்னணி நாளை யாழ் நகரில், மாபெரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம்!

நாளை யாழ் நகரில், மாபெரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம்!

  • PDF

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் பதாகை கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் 15-01-2012 அன்று யாழ் நகரில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்!


வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து!


கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து!


அனைத்து அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய்!

 

என்ற கோஷங்களுடன் இடம்பெறும் இவ் கவனஈர்ப்பு பதாகை கையெழுத்திடும் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு சமவுரிமை இயக்கத்தினர் அழைக்கின்றார்கள்.

இராணுவ ஆட்சியை மேற்கொண்டிருக்கும் அரசிற்கு எதிராக அனைத்துவிதமான எதிர் நடவடிக்கைகளையும் முடக்கிவிட வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் இலங்கை மக்கள் இருக்கின்றார்கள்.

மாணவர்கள் கைதினைத் எதிர்த்து ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எவையும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இடம்பெறவில்லை. எதிர்ப்பரசியலை கட்டமைத்துக் கொள்ள தமிழ் பகுதியை பிரநிதித்துவம் செய்யும் அமைப்புகள் பெரும் தவறிழைத்து வருகின்றனர். இந்த நிலையில் சமவுரிமை அமைப்பின் இந்த செயற்பாடு முக்கியமானதாக அமைகின்றது. இந்தப் போராட்டத்திற்கு தமிழ் பகுதியில் இருக்கும் சமூக ஆவலர்கள், ஜனநாயக சக்திகள் இந்தப் போராட்டத்துடன் இணைந்து கொள்ள வேண்டும். இணைந்து செயற்படுவதன் ஊடாகவே ஜனநாயக சமூகத்தை இலங்கையில் உருவாக்கிக் கொள்ள முடியும்.

சமவுரிமை இயக்கத்தினர் தொடர இருக்கும் போராட்டத்தை இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும். ஜனநாயகப் போராட்ட வடிவங்களை ஊக்குவிப்பதன் ஊடாக போராட்டத்தினை வளர்த்தெடுக்க முடியும். பரந்து பட்ட ரீதியாக போராட்டங்களை வளர்தெடுப்பதன் ஊடாக அனைத்துவித ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட பாதையை உருவாக்கிக் கொள்ள முடியும்.


அனைத்து ஜனநாயக சக்திகளே போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்!


அனைத்து முற்போக்காளர்களே, இடதுசாரிகளே இந்த போராட்டத்தினை வளர்த்திட ஒத்துழையுங்கள்!


இன, மத பேதம் கடந்து புதிய சமூகத்திற்கான பாதையை ஏற்படுத்துவோம்!.

 

-சம உரிமை இயக்கம்

Last Updated on Monday, 14 January 2013 19:02