Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

புலியெதிர்ப்புக்கு பின் முகிழ்ந்த வெண்தாமரை ஒரு வராலாற்று துரோகம்

  • PDF

அடுத்து இருண்ட "இருள்வெளி" தொகுப்பில் முதல் தொகுக்கப்பட்ட  Nஐhர்ஐ.இ.குருஷ்ஷேவ்வின் "வாக்களிக்கப்பட்ட பூமிக்கு" என்ற இலங்கையரசு சார்பு கட்டுரையைப் பார்ப்போம்.

 

 

இவர் புலியெதிர்ப்பு காய்ச்சல் பிடித்து முத்திப் போய்யுள்ளவர். புலியெதிர்ப்பின் பின் ஒளித்தபடி ஐனநாயக வேஷம் போட்ட இவர் தமிழ் மக்களின் துன்பம் துயரத்துக்கு மாற்றுத் தீர்வு எதையும் முன்வைக்க முடியாது, சிங்கள அரசு ஒடுக்குமுறைக் கூடாக தீர்வை முன்மொழிபவர். யுத்தமற்ற சிங்கள இனவாத ஆதிக்க அமைதிதான் ஐனநாயகம் எனக்கூறும் இவர், சுரண்டும் - சுரண்டப்படும் போராட்டத்தில் சுரண்டும் பக்கம்தான் என தாயகத்தில் எழுதி தனது கம்யூனிச எதிர்ப்பை பச்சையாக பிரகடனம் செய்தவர் என்பதால் இருண்ட "இருள்வெளி"யில் வர்க்க விசுவாசத்துடன் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதியவைகளை கொஞ்சம் ஆராய்வோம்.

"இந்திய இராணுவகாலத்திலும் நிலைமை வழமைக்கு திரும்புவதன்மூலம் தங்களின் முக்கியத்துவம் மறைந்து விடுமோ என்ற அச்சம் தான் ’இந்திய ஆக்கிரமிப்புக்கு’ எதிராக ’உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை எதிர்த்து’ புலிகளை போரிடச் செய்தது." என்று தமது மக்கள் விரோத கண்டுபிடிப்புகளை வைக்கின்றார். புலிகளின் பொதுவான தவறான அரசியல் வியூகங்களை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, சிங்கள இனவெறி ஆக்கிரமிப்பாளனுக்காக, துரோகிகளுக்காக புலியெதிர்ப்பு ஐனநாயக வேடத்தின் நின்று கூறும் கூற்றுதான் இவை.

இலங்கை - இந்தியா ஒப்பந்தம் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை வழங்கியதல்ல. மறாக தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதித்துவம் செய்யாத தமிழ்மக்கள் மீது பலாக்காரமாக திணித்த உடன்பாடு இந்தியா நலனை உள்ளடக்கியதும், சிங்கள மேலாதிக்க இனநலன்களை உள்ளாடக்கிய இவ்ஒப்பந்தம் தமிழ்பேசும் மக்களுக்கு எதிரான வகையில் உருவாக்கப்பட்டது. இது அன்றும் இன்றும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆணால் புலியெதிர்ப்பு காய்ச்சல் பிடித்தவர்களுக்கு தமிழ்மக்களும் புலிகளும் ஒன்றுபோல் இனவாத அரசுக்கு தெரிவது போல், இந்த மக்கள் விரோத கனவான்களுக்கும் ஒன்றாக தெரிகின்றது. தமிழ்மக்களின் நலன்களும் புலிகளின் நலன்களும் வேறு என்பதை காணத்தவறுவதும், பின் சிங்கள இனவாத தீர்வுகளை தமிழ்மக்கள் முன் புலிஎதிர்ப்பின் பின் ஒளித்து நின்று திருடன் போல் திணிப்பது ஒரு போக்காக உள்ளது. தமிழ்மக்களின் ஐனநாயக கோரிக்கைக்கு தீர்வை வழங்காத எல்லா ஒப்பந்தமும், அங்கு போராடிக் கொண்டிருக்கும் எந்த குழுவும் (புலி அல்லது எதுவாயினும்) எதிர்த்து போராடுவது யதார்த்தம். இங்கு புலிகள் உள்ளனரே ஒழிய வேறு முரண்பாடு இருப்பதில்லை. தமிழ் பேசும் மக்களின் தீர்வு  சுயநிர்ணயத்தில் மட்டும்தான் தீர்க்கப்படமுடியும்.

அதாவது குடும்பப்பிரச்சனையில் ஆண்சார்பு குடும்பம் தலையிட்டு திணித்த தீர்வை பெண் எதிர்த்தால் அடங்காப் பிட்ரி எனத் திட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும். இது பெண்நிலைவாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.

புலிகளின் ஐனநாயக விரோத அரசியலை விமர்சிக்கும் உரிமைவேறு, தீர்வை திணிக்கும் கோடரி பாம்பு வேலையும் கூட்டிக் கொடுக்கும் காவாலி தொழில்தான்.

இந்த கூட்டிக் கொடுக்கும் வரிகளை மேலும் பார்ப்போம். "இன்றும் யாழ்பாணத்தில் நிலைமை வழமைக்கு திரும்புவதால் தமிழ் மக்கள் தங்களை அடியோடு மறந்துவிடக்கூடும் என்ற அச்சம்தான் இன்று யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே நிகழும் தாக்குதல்களுக்கு காரணமாகின்றது." என்ற புல்லரிக்கும் வரிகள் எட்டப்பர்களின் தொழில்ரீதியானது.

ஏகாதிபத்திய தயவில் பாசிச சிங்கள இனவெறி தர்பார் ஆக்கிரமிப்பில் தமிழ்மக்கள் ஐனநாயக தீர்வை அடைந்துள்ளதாக கூறுவதும், ஆக்கிரமிப்பை அங்கீகரிப்பதும் சமாதான மண்டலமாக காட்டுவதும் நயவஞ்சகத்தனமானது.

தமிழ்மக்கள் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்த போராட்டம் இயல்பானது. இதில் புலியல்லாத அமைப்பு இருப்பினும் இது நிகழ்ந்தேயிருக்கும்.

மக்கள் ஐனநாயகத்தை மட்டும்தான் கோருகின்றனர். சிங்கள - தமிழ் மக்கள் வேறுபாடுயற்ற ஐனநாயக உரிமையைத்தான் கோருகின்றனர். இது மறுக்கப்படும் எல்லா நிலையிலும் போராட்டம் இயல்பானது. இங்கு புலிகள் தாக்கினால் என்ன கம்யூனிசகட்சி தாக்கினால் என்ன இது போராட்டப் பாதையின் வடிவமாகும். புலிகளின் ஐனநாயக விரோத அரசியல் மட்டும் விமர்சனத்துக்குரியதே ஒழிய போராட்டமல்ல.

மேலும் சிங்கள அரசு சார்பாக கூறுவதைப் பார்ப்போம். "..... அங்கு வாழுகின்ற மக்களுக்கு? எங்களை மீட்டுச் செல்லுங்கள் என்றோ, அந்நிய இராணுவம் வெளியேற வேண்டும் என்றோ மக்கள் அபயக்குரல் எழுப்பவில்லை." என்கின்றார். பாசிச சிங்கள ஆக்கிரமிப்பாளனின் இனப்படுகொலை, கற்பழிப்புகளுக்குள் எல்லாம் நல்லாக உள்ளது எனவே போராட்டத்தை கைவிடவேண்டும் என்கிறார் இ.குருஷ்ஷேவ். ஆணால் புலிகளின் மக்கள் விரோத அரசியலைத் தாண்டி மக்கள் ஆதரவும், புலிகளில் இணைவதும் நீடிக்கின்றது. அதுசரி உங்கள் சிங்கள இராணுவம் ஆக்கிரமிக்க மக்கள் கோரினர்களோ. அப்படித்தான் என இனவாதிகளும் அதன் எடுபிடிகளும் விதிவிலக்கின்றி கூறிவருகின்றனர் என்பதை மேற்கூறிய வரிகள் துல்லியமாக நிறுவுகின்றது.

பாசிச சிங்கள ஆக்கிரமிப்பாளனின் சிங்கள மேலாதிக்க ஒடுக்குமுறைக்குள் உள்ளமக்கள் எப்படி புலிகளை போராட பகிரங்கமாக அழைக்கமுடியும். சுpங்கள இனவாத அரசு, புலிகள் மக்களை நிர்பந்தித்து போராடவைப்பதாக கூறுவதும், இந்த எட்டப்பன் கூறுவதும் ஒன்றாக உள்ளது. புலிகளின் மக்கள் விரோத அரசியல் மக்களின் அபிப்பிராயத்தை மறுக்கின்றது என்பதால் மக்களின் போராட்டத் தேவையை அது மறுத்துவிடவில்லை. இந்த மக்களின் ஐனநாயகக் கோரிக்கைக்கான போராட்டத்தில் தான் புலிகளின் அரசியல் நீடிப்பு நிகழ்கின்றது. இதை தமிழ்துரோகிகளும், இனவாத அரசும் காணமறுப்பதும் சேறுயடிப்பதும் தொடர்கின்றது.

அடுத்து சிங்கள இனவாதஅரசுக்காக வக்காளத்து வாங்குவதைப் பார்ப்போம். "......, சந்திரிகா அரசையும் பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் இரகசியமாக இராணுவரீதியில் பலப்படுத்திக் கொண்டு சமாதான முயற்ச்சிகளை முறியடித்து மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்ததன் விளைவு...... ஆப்பிழுத்த நிலைதான்." என்று கூறுவதன் மூலம் சந்திரிகாவின் வெண்தாமரை இயக்கத்தின் ஆதரவாளராக மாறி சிங்கள சமாதான வாதியாகிவிடுகின்றார். பல்கலைக்கழக ஆசிரியர்சங்கம் மற்றும் இனவாதிகள் போல் இவரும் புலம்புகின்றனர். புலிகள் யுத்தைத்தைத் தொடங்கிய தவறான ராஐதந்திரமற்ற இராணுவவதாப் போக்கை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சிங்கள இனவாத ஆக்கிரமிப்பாளர்களை சமாதான புறாக்களாக காட்டி, தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை "சமாதான முறியடிப்புக்குள்" பூச்சுற்றி விலை பேசும் கயமை புலியெதிர்ப்பு கோசங்களுக்குள் மக்களை விற்று பிழைக்க விரும்யும் துரோகிகளுக்கு ஒப்பானதாக உள்ளது. சிங்கள அரசு சமாதானத்தை முன்மொழியும் நேர்மையான அரசாக இருப்பின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இன்றியே சுயநிர்ணயயுரிமையை அங்கீகரித்து அதன் அடிப்படையில் சுயமாக இயங்கமுடியும். இதற்க்கு புலிகளோ வேறு யாருமோ தடையாக இருக்கமுடியாது. இதற்க்கு முதலில் தேவை இனவாதமல்லாத சமூகப் பார்வைதேவை. இது உமக்கே இல்லாத போது அந்த இனவாத அமைப்பின் தலைவர்களுக்கு எப்படி ஏற்பட முடியும்.

அடுத்த இனவாத ஆய்வைப் பார்ப்போம். "பலம் பொருந்திய நிலையில் ஆயுதங்களை கீழேபோடாமல் பேச்சுவார்த்தை நடத்திய புலிகள் தற்போது, வெற்றிகரமாகப் பின்வாங்கி (அல்லது தற்காலிகப் பின்னடைவு) பேச்சுவார்த்தை மூலமான தீர்வுமீது இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் தகர்த்திருக்கிறார்கள்." என்கின்றார்.

பேச்சுவார்த்தை மூலம் இன்றைய சிங்கள இனவாத பாசிச புத்தமத அரசிடம் தமிழ்மக்கள் தீர்வு பெற்று இருக்கமுடியும் என்று சத்தியம் செய்கின்றனர். புலிகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை அடைய முயன்று தோற்கடிக்கப்படும் நிகழ்வை மீள நிறுவவேண்டிய இராஐதந்திர போக்கை மறுத்து, சிங்கள இனவாத சதிக்கு இரையாகி தொடங்கிய இராஐதந்திரமற்ற யுத்தத்தை இனவாத அரசுபோல் இந்தத் துரோகிகளும் பயன்படுத்தி தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராக பயன்படுத்துவதில் தான் என்ன ஒற்றுமை. ஏதோ அரசு தீர்வை வழங்க காத்திருந்ததாக கயிறு விடுவதும் அதை தமிழ்மக்கள் நம்பவேண்டும் என புலியெதிர்ப்பின் பின் ஒழித்தபடி ஊளையிடுகின்றனர். இருக்கும் இனவாத அரசமைப்புக்குள் ஒரு சமாதான தீர்வு சாத்தியமில்லை என்பதை உலக அரசியல் இலங்கை அரசியல் பலமுறை மீளமீள நிறுவியுள்ளது. அப்படி ஏதாவது ஒரு தீர்வு தள்ளப்படின் அது இனவாதத்தை தகர்க்காத அதன் எல்லைக்குள் மட்டும்தான் பிரசவிக்கப்படுகின்றது. இதை போராடும் அமைப்பு ஏற்றுக்கொள்ளும் எல்லாப் போக்கிலும் துரோகத்துடன் மட்டும் தான் அரங்கேறுகின்றது.

இவரின் அடுத்த கூற்றைப் பார்ப்போம். "பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் துணிச்சலுடன் கடந்தகால நிபந்தனைகளைக்கூட விதிக்காமல் பேச்சு வார்த்தை நடத்த முன்வந்த அரசின் கரங்களைப் பலப்படுத்தாமல், காலைவாரிவிட்டதால் அரசுக்குக்கூட அந்த தீர்வுப்பொதி முக்கியத்துவம் அற்றதாகப் போய்விட்டது. வடக்கு - கிழக்கு இணைப்பு, மாநில சுயாட்சி முதல் ஆயுத ஒப்படைப்பு நிபந்தனைவரை பல்வேறு விட்டுக்கொடுப்புகளுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த அரசுக்கு, இராணுவத்தின் முனைப்புக்கு அடிபணியவேண்டிய நிலையைக் கொடுத்த பெருமை புலிகளையே சாரும்." என்கின்றார்.

அதாவது துரோகிகள் போல் இனவாத சுத்துமாத்து போல் கைதேர்ந்திருக்கவேண்டும் என்கின்றார். அரசு இரணுவத்திடம் சரணந்துள்ளதாம். இது மாபெரும் கண்டுபிடிப்பு. இராணுவம் யுத்தம் செய்யாது ஒடிஒளித்து விட விரும்பும் நிலையில், புத்தமத குருக்களும், அதன் அச்சு ஏகாதிபத்திய இனவாத அரசும்தான் யுத்தத்தை நடத்த முனைப்பு கொண்டுள்ளது. இந்த சுரண்டும் இனவாத தரகுமுதலாளித்துவ அரசுதான் இராணுவத்தை யுத்தத்துக்கு நகர்த்துகின்றது. இதை மறுத்து புலிகளை குற்றம் சாட்டுவது பச்சை இனவாதமாகும். அடுத்து சந்திரிகா வடக்கு - கிழக்கை இனைத்த மாநில சுயாட்சியை முன்வைத்தாராம். நம்புங்கள் கூறுவதை. எங்கே யாரிடம் முன்வைத்தார். பச்சை இனவாதிகளின் தீர்வு பொதி எனக் கூறுவது இன்று வரையும் வெற்று வார்த்தையாகவே உள்ளது. இது எல்லோருக்கும் தெரியும். ஆணால் புலிக் காய்ச்சல் பிடித்த செம்மறிகளுக்கு மட்டும் தெரிவதில்லை. ஏன்?

தமது வயிறும், தனது குடும்பமும் வாழ்ந்தால் போதும் என நம்பும் இவர்கள் தமிழ் மக்களின் ஐனநாயக உரிமையைக் கூட விலைபேசி சிங்கள இனவாதத்துக்கும், ஏகாதிபத்திய கயவர்களுக்கும் விற்று பிழைப்பவர்கள் இவர்கள். அதற்க்காக இல்லாத ஒன்றை உண்டென்றும், பொய்களை முன்வைத்து இனவாதிகள் போல் பிரச்சாரம் செய்கின்றனர். அதுசரி புலிகள்தான் தீர்வுப் பொதியை  குழப்பினர் என்ற ஒருதலைப்பட்சமான சேறுயடிப்புக்கு வெளியில் வரலாற்று அனுபவம் நீடித்துள்ளது. 1948 முதல் எத்தனை பேச்சு வார்த்தைகள், எத்தனை ஒப்பந்தங்கள் அமுலுக்கு வந்தன. அப்போது எல்லாம் புலிகளா குழப்பினர். எப்போதும் சிங்கள இனவாதிகள்தான் அற்ப சலுகையைத்தானும் வழங்க மறுத்து தமிழ் மக்கள் மீது யுத்தத்தை திணித்தனர். இது அன்றும் இன்றும் பொது உண்மையாக உள்ளது. இங்கு புலிகள் இதை சரியாக கிரகிக்க தவறி தாக்குதலில் முந்திக்கொண்ட இராணுவாத அரசியல்தான் விமர்சனத்துக்குரியது. யுத்தம் நிச்சயம் வரும் என்பதை இந்த இனவாத அமைப்பில் சரியாக கிரகிக்க தவறிய புலிகளின் அரசியல் பலவீனத்தை விமர்சிக்க தவறி, சிங்கள அரசு போல் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை சேறுயடிப்பது துரோகத்தனமாகும்.

அரசு விட்டுகொடுத்ததாம். ஏதை? எனின் யாருக்கும் தெரியாது. அதுசரி தமிழ் மக்களின் நியாயமான உரிமையை, ஐனநாயகக் கோரிக்கையில் நாங்கள் அரசிடம் பிச்சை கேட்க்கவில்லை. அரசு விட்டுக் கொடுக்க அவர்களின் உரிமையில் நாம் பங்கு (இப்படித்தான் சிங்கள இனவாதம் பேசுகின்றது.) கோரவில்லை. மறாக எமது உரிமையை மீட்க்க போராடுகின்றோம். அரசு விட்டு கொருத்தது என்று கூறும் அனைவரும் இனவாத சிங்கள அரசு நிலையில் நின்றுதான் பேரம் பேசி தமிழ் மக்களை அந்த இனவாத எல்லைக்குள் ஆழப்புதைத்து மீளமுடியாத வகையில் ஒடுக்கத்தான் விட்டுக் கொடுத்ததாக கதையளக்கின்றனர்.

புலிகள் காலை வாரிவிட்டதால் அரசுக்கு தீர்வு வைக்கவேண்டிய அவசியமற்றதாகிவிட்டது என்று கூறி இனவாத அரசின் நிலையை பாதுகாக்கின்றார். அரசு என்பது தமிழ் - சிங்கள - முஸ்லிம் - மலையக மக்களுக்கானதாக இல்லாத போது மட்டும் தான் தீர்வுப் பொதி வைக்கவேண்டிய அவசியமற்றதாகிவிடுகின்றது. இந்த அரசு சிங்கள இனவாத அரசாக உள்ளது அம்பலமாகின்றது. இதை மூடிமறைக்க புலிகள் மேல் குற்றம் சாட்டுபவன் அசல் துரோகியே. அவ்வளவே.

அடுத்த வரிகளை ஆராய்வோம். "சர்வதேச அரங்கில் நடைபெறும் மாற்றங்கள் என்னவோ நம்மவர்கள் கண்ணில் படுவதில்லை. சர்வதேச 'கெடுபிடி' அரசியல் சமன்பாடு மாறியதால் ஏற்பட்டமற்றங்கள் எங்களை இன்னமும் பாதிக்கவில்லை.......பாலஸ்தீனம் முதல் அயர்லாந்து வரைக்கும் யுத்தவெறியர்களுக்கும் மத்தியில் சமாதானத் தீர்வுகான முனைப்பு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. எழுபதுகளில் கம்போடியாவும் எண்பதுகளில் லெபனானும் தொண்ணூறுகளில் பொஸ்னியாவும் இருந்த நிலையில் அங்கு சமாதானம் நிலவுமென்று யார் நினைத்திருப்பார்? ......சர்வதேச பங்களிப்பு......" என அமெரிக்க ஒற்றை உலக ஆதிக்கத்துக்காக சமாதான வேடம் தரிக்கின்றார்.

"கெடுபிடி" மாறியதைப் போற்றும் மர்மம் அமெரிக்கா தலைமையில் உலகை ஆளும் கணவுகளில் தத்தளித்தபடி எழுதும் போது அது அம்மனமாகிவிடுகின்றது. கனடா நாட்டில் அகதி பெயரில் அதில் சுகமாக இருந்தபடிதான் இவர் இப்படி எழுதுகின்றார். இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் அகதியாக வாழ்தபடியோ, அடுத்த நேர உணவுக்கு  என்ன செய்வது எனத் தெரியாது பரிதவித்தபடியோ, குழந்தையின் கதறலுக்கு ஒருவாய் பால் கொடுக்க முடியாத தாய்மையில் நின்றோ, சிறுமியின் பால்மனம் மாறாத நிலையில் விபச்சாரம் செய்யும் நிலையில் நின்றோ, நடக்க முடியாத சிறுவர் சிறுமியர் உடல்உழைப்பில் நாள் பூராவும் உழைத்தபடியோ அல்ல இந்த கனவானின் குடும்பம் இந்த துரோகியும் சமாதானம் பற்றி உரைக்கின்றனர்.

சமாதானம் யாருக்கு வேண்டும் எனின் சுகமாக வாழ்பவனுக்குத்தான். சமாதானத்துக்கு  எதிரான போராட்டம் யாருக்கு வேண்டும் எனின் வறுமையில் வாழ்பவனுக்கு, தொட்டாலே தீட்டு என சேரியில் தள்ளபட்டவனுக்கு, கறுப்பு என்றால் நரகம் எனச் சொல்லி ஒடுக்கும் நிறவெறிக்கு எதிராக, பெண் என்றால் அடிமை எனச் சொல்லும் இந்த உலகுக்கு எதிராக என எங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதப் போராட்டம். இதற்க்கு எதிராக ஒடுக்கும் வர்க்கம்தான் சமாதானத்தை முன்மொழிவதன் மூலம் தமது அதிகாரத்தை பாதுகாக்கின்றனர்.

அதாவது உலகமயமாதல் அதற்க்கு இசைவான அரசியல் மாற்றங்கள் இதுதான் இன்றைய உலக சமாதானமாகும். கோட்பாட்டில் புலியெதிர்ப்புடன் யோர்ஐ இ.குருஷ்ஷேவ் ஏகாதிபத்திய அமைதிதான் உலக அமைதியெனக் கருதுபவர். அதுதான் இப்படி புலம்ப முடிகின்றது.

தென் ஆபிரிக்கா கறுப்பு இனமக்கள் கறுப்புத் தலைவனைத் தெரிந்ததுக்கு அப்பால், அரசும் பொருளாதாரமும் வெள்ளையினத்திடம் இருக்க எற்பட்ட சமாதானம் நீடிக்கமுடியாது. ஏன்எனின் அந்தமக்கள் தமது விடுதலைக்கு போராடுவதைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. பாலஸ்தீன மக்களின் தியாகங்களை விலைபேசி விற்றதுக்கு அப்பால் அரபாத் சாதித்தது என்ன எனக் கேட்பின் இஸ்ரேலிய ஆதிக்கத்துக்கு பட்டுக்கம்பளம் விரித்து சாமரை வீசியதுதான் நிகழ்ந்தது வரலாறாகியுள்ளது. இஸ்ரேல் இடம் கெஞ்சிக் கேட்பதுதான் பாலஸ்தீன மக்களுக்கு சமாதானம் கோருகின்றது. ஒப்பந்தத்தை செய்தவர்களும் அதை பேனை பிடித்து கையெளுத்திட வைத்த அமெரிக்காவும் பாலஸ்தீனமக்களை எட்டி உதைக்கத்தான் முடிந்தது.

கம்போடியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது சுரண்டலை எதிர்த்து அமெரிக்கா ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளரை எதிர்த்து போராடிய வெற்றிகளை பறித்தெடுத்து வழங்கிய சமாதானம் அந்த மக்களை சமாதானவாதிகள் இடம் கையேந்த வைத்துள்ளதுடன் கம்போடியா செல்வத்தை அன்னியர் சூறையாடவே சமாதானம் பிறந்தது. இதுதான் உலக மாற்றம். இதுதான் உலக அமைதி.

இதை இலங்கைக்கு கோருவதும், சிங்கள இனவாதத்துக்கு கம்பளம் விரித்து சாமரை வீசுவதும், தனது இனத்தை தற்கொலைக்கு இட்டுச் செல்ல தமிழ்மக்களை கோருவது ஒரு தேசதுரோகியின் குரலே ஒழிய வேறுஒன்றுமல்ல. இவர்கள் ஏகாதிபத்திய அமைப்பை பாதுகாக்க விளக்கங்கள் ஆய்வுகள் பெயரால் மக்களின் அடிப்படை உரிமைகளை கூவிவிற்பது மட்டும்தான் நிகழ்ந்தவண்ணமுள்ளது.

அடுத்த பொன் மொழியைப் பார்ப்போம். "......இந்தச் சண்டித்தனங்கள் எங்களை "விட்டுக் கொடுப்புகளுடன்" கூடிய சமரசத்துக்கு விடுவதில்லை. மாற்றுத் தரப்பு மட்டுமே சமரசம் செய்ய வேண்டும்......... இந்த யுத்த மனோபாவம் சமாதான வேட்கையாக மாறாதவரைக்கும் சமாதானம் எங்களுக்கு கைக்கெட்டாத ஒன்றுதான்" என்கின்றர். யுத்தமனோபவாம்தான் யுத்தம் என்கின்றர். தமிழ்மக்களின் ஐனநாயகக் கோரிக்கைதான் யுத்தம் என்பதை சிங்கள பாசிச இனவாதிகள் போல் மறுக்கின்றர். முதலில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை வழங்கிய பின் யுத்தமனோபாவம் இருப்பின் அதைப் பேசுங்கள். சுpங்கள இனவாதிகள் தமது ஏகாதிபத்திய எட்டப்பர் வேலையை மறைக்க பாசிச வடிவம் எடுத்து தமிழ்மக்கள் முன் திணித்த யுத்தத்தை திசைதிருப்பி தமிழ்மக்கள் மீது சாத்துப்படி வைக்கும் பார்ப்பான் போல் வைப்பது கடைந்தெடுத்த நரித்தனமாகும்.

யுத்தமனோபாவம் தான் சமாதானத்துக்கு தடையென்பது அடிப்படையிலும் தவறானது. மாறாக தமிழ் மக்களின் ஐனநாயக உரிமையை தரமறுப்பதுதான் சமாதானத்துக்கு தடை மட்டுமின்றி இன்றைய யுத்தத்துக்கும் அடிப்படையாக உள்ளது.

புலிகளின் அரசியல் தவறான போக்கில் அதன் ஐனநாயக விரோத அரசியலை சாதகமாக கொண்டு தமிழ்மக்களின் உரிமைப் போரை சேறுயடிப்பது கேடுகெட்ட மோசடியாகும். புலிகளின் ஐனநாயக விரோத அரசியலுக்கு எந்த விதத்திலும் குறைந்தல்ல அரசு தமிழ்மக்களின் ஐனநாயகக் கோரிக்கையை மறுத்து ஒடுக்குவது.

ஆணால் புலியெதிர்ப்பு கனவான்களுக்கு முதலாவது மட்டும் கண்ணுக்கு தெரிவதும் மற்றதை மூடிமறைத்து பிரச்சனையை திசைதிருப்புவது சிங்கள இனவாதத்துக்கு சாமரை வீசுவதாகும். இப்படி வேடம் இடுபவர்களையிட்டு "சமூகப்பொறுப்புடனும் சமாதான வேட்கையுடனும் ஈடுபடுபவர்களுக்குக்கூட, பல்வேறு தடங்கல்கள்." என்கின்றார். என்ன சமூக பொறுப்பு. என்ன சமூக வேட்கை. எல்லாம் ஏகாதிபத்திய ஒழுங்குதான். எல்லாம் வசதியனவன் வழ வைக்கும் வேட்க்கைதான். எப்போதும் ஒடுக்குபவனின் சார்பான சமாதான சமூகப் பொறுப்புதான். சிங்கள மேலான்மை மீதான பற்று விசுவாசம் தான் சமாதான நாட்டம். இதுதான் புலியெதிர்ப்பு ஐனநாயக வேடதாரிகளின் கனவு. தொடர்ந்து கடமை தொடர்பாக கூறுவதைப் பார்ப்போம். "எது தடையாக இருந்தாலும் எங்கள் குறிக்கோள் ஒன்றுதான். அடிப்படை மனிதஉரிமைகளை மதிக்கும், சமாதானத்துடன் கூடிய, சுயகௌரவத்துடன் வாழும் ஐனநாயக வாழ்க்கைமுறை. யுத்தத்திற்க்கும் அழிவுக்கும் எதிரான சிந்தனைப்போக்கு. அதை நோக்கியதாகத்தான் எங்கள் இலக்கியங்கள் படைக்கப்படவேண்டும்." என்கின்றார்.

அடிப்படை மனித உரிமை என்பது முதலாளி தொழிலாளியை சுரண்டும் உரிமை. சுயகௌரவத்துடன் வாழும் உரிமை இருப்பவன் இல்லாதவன் பற்றி அக்கறையற்ற சுயகௌரவம் கொண்ட பூமியின் அமைதி.

ஓடுக்கப்பட்டவன் யுத்தம் செய்தால் முதலாளியின் அழிவை எதிர்த்த சிந்தனை அதை நோக்கிய குரல்கள்தான் குறிக்கோள். பார்ப்பான் - பள்ளன் அமைதிப் பூங்கா, தமிழன் - சிங்களவனின் இனவாதத்தைக் கேள்வி கேட்க்காத சமாதான வேட்கையை படைக்க வேண்டுமென்கின்றார். அமைதி, சமாதானம் ஒடுக்குபவனுக்கும் வசதியாக வாழ்பவனுக்கும் சார்பானது. ஓடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பானதல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போதும் தமது உரிமைக்காக போராட்டத்தை நடத்துகின்றனர். இது அமைதியை கெடுக்கிறது என்றோ, யுத்த பிரியர்கள் என்றோ ஒடுக்குபவன் மீளமீள வரலாறு எங்கும் புலம்பிய நத்தல்களே. மக்கள் எப்போதும் போராட்டத்தையே தமது வாழ்வாக கொண்டனர்.

இதை மறுத்து ஆதிக்க சக்திகளுக்காக எப்படி குரல் கொடுக்கின்றார் எனப் பார்ப்போம். "உலகநாடுகள் எங்கும் சிதறிப்போனாலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கள் மொழியையும் தாய்நாட்டையும் மறக்காமல், "அடுத்த பாஸ்கா nஐயுசவலேமில்'  என்று பாடிக்கொண்டே யூதர்கள் வாழ்ந்தார்கள். வெறும் கோஷங்களோடு மட்டும் நில்லாமல், பொருளாதாரரீதியில் பலம்பெற்றதால் இன்று தமது விருப்புவெறுப்புகளிற்கேற்ப உலக அரசியல் போக்கிலும் அவர்களால் அழுத்தம் கொடுக்க முடிகிறது." என்று எழுத சுகன் தொகுக்க சனநாயகவாதிகள் அச்சேற்றிய நிலையில் அதை கொண்டாட "சுகிப்பு" சந்திப்பையும் நடத்தினர்.

யாழ்பாண வெள்ளாளர் மேலான்மைதான் அடிக்கடி யூத உதாரணத்தைக் காட்டி அப்படி நாம் இருக்க பிரகடனம் செய்கின்றனர். ஆயிரம் ஆண்டு தாண்டினாலும் தங்கள் தாய்நாட்டை மறக்காமல் இருப்பதாக கூறுவதன் மூலம் 1948 இல் பாலஸ்தீன மக்களை துரத்தி ஆக்கிரமித்த அராஐகத்தை மூடிமறைத்து இந்த ஏகாதிபத்திய விசுவாசி யூதரின் பெயரில் கரடிவிட்டு சாமரை வீசுகின்றார். பொருளாதார பலம் பெற்று உலக அரசியலில் விரல் விட்டு ஆட்டுகின்றனராம். அருமையிலும் அருமை பொருளாதாரத்தில் எப்படி பலம் பெற்றனர். யூத முதலாளிகள் மக்களை ஒட்டச் சுரண்டி அதை ஆக்கிரமிப்புக்கு பயன் படுத்தும் அதே தந்திரத்தைத் தான் இந்தியா பார்ப்பான் பெரும் செல்வந்தர்ராக தாழ்த்தப்பட்ட மக்கள் முதல் அனைவரையும் சுரண்டி ஆக்கிரமிப்புக்கு ஆதிக்கத்துக்குமாக அலைகின்றனர். யூத மக்களுக்கு என்று ஒரு தேசம் இஸ்ரேல் என்ற நாட்டை அமெரிக்கா ஏகாதிபத்திய ஆதரவுடன் உருவாக்க முன் இருந்ததில்லை. இன்றும் அமெரிக்கா வரவு செலவிலும், அமெரிக்க ஏகாதிபத்திய உலக பாதுகாப்பிலும் தான் இஸ்ரேல் இருக்க முடிகின்றது. நாட்டை இராணுவ மயமாக்கி யுத்த நெருக்கடியை பேனுவதன் மூலம், அரபு உலகில் அமெரிக்கா ஏகாதிபத்திய ரவுடித்தனத்தில் குட்டி ரவுடியாக உயிர் வாழும் நாடுதான் இஸ்ரேல். இன்று பாலஸ்தீன மக்களின் வாழ்வு எங்கள் ஊரில் சேரியில் வாழ்வோர் போலும், அவர்களின் மண்ணை தொடர்ந்து ஆக்கிரமிப்பதன் மூலமும், படுபிற்போக்கான யூத மத பேனுகையிலும் அதன் கேவலங்களிலும் பாதுகாக்கும் மதப் பண்பாடு கலாச்சாரம் மொழி என்பன சமூக ரீதியில் எதிர் தன்மை வாய்ந்தவை. யூத முதலாளிகளின் ஈவிரக்க மற்ற சுரண்டும் பண்பாட்டை மற்றைய முதலாளிகளில் இருந்து வேறுபடுத்தி பார்க்கக் கூடிய வகையில் வேறுபட்ட மிக கேவலமான பாத்திரத்தை இனம்காணமுடியும். யூத இனத்தை இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாசிகள் ஒடுக்கிய வரலாற்றில் இருந்து எந்தவிதத்திலும் வேறுபட்டது அல்ல இன்றைய பாலஸ்தீன மக்களின் நிலை. அந்தளவுக்கு யூத ஒடுக்குமுறையுள்ளது. யூதன் பற்றிய பிரமைகள் விளக்கங்கள் முன்னெடுப்புகள் எல்லாம் மற்றவனை ஒடுக்கும் போக்கு சார்ந்தது. இருபது கோடி செவ்இந்திய மக்களை கொன்றும் ஆக்கிரமித்த அமெரிக்க ஏகாதிபத்தியம் யூத ஒடுக்குமுறையை பாதுகாக்க அணிவகுப்பதும், அதை விளக்கி போற்றுவதும் ஆக்கிரமிப்பாளன் சார்பானதே.

இதைப் பாதுகாத்து போற்றுவது பள்ளன் பறையரை பொருளாதார பலம் கொண்டு ஒடுக்கி பலம் பெற்ற உயர்சாதிகள் போற்றுவதுக்கு இணையானது. பின்நவீனத்துவ படைப்புகள் இது போன்ற ஆதிக்க பிரிவுகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான் என்பதை இவ் வெளியீடு கோடுயிட்டு காட்டியது. தலித் பின்நவீனத்துவம் என எல்லாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏகாதிபத்தியத்தை பாதுகாக்கும் நெம்புகோல்கள் தான் என்பதை இவ்மலர் செம்மையாக நிறுவியுள்ளது.

குறிப்பு 1: இதையொட்டி கருத்துகளை கொண்ட ஏகாதிபத்திய பிரச்சார நாயகன் காமினி வியான்கொட "அரசியல் தீர்வின் எதிர்காலம்" என்ற கட்டுரையை எழுதியுள்ளார். "அரசியல் தீர்வில்" நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தமிழ்மக்களையும், புலிகளையும் கோருவதன் மூலம் சிங்கள அரசின் இனவாதத்துக்கு மூகமுடி போடுகின்றார். அரசியல் தீர்வு என்பது ஆணுக்கு எதிரான பெண்ணின் ஐனநாயகக் கோரிக்கையை மறுத்து, ஆணின் ஆணாதிக்கத்துக்கு உட்பட்டு வாழும் விட்டுக்கொடுப்புக்கு உடன்பட வேண்டும் என்கின்ற ஆணாதிக்கமாகும்.(இது சிங்கள மேலாதிக்கமாகும்.)

குறிப்பு 2: அடுத்துபெண்ணியத்தை அனுகுதல் குறித்து எஸ்.வி.றஃபேல் எழுதிய கட்டுரையில் ஒருபகுதியைப் பார்ப்பதன் மூலம் அக்கட்டுரையை விமர்சனமின்றி புரிந்து கொள்ளமுடியும். "பாலியல் செயற்பாடுகளில் மீதான, அவை தொடர்பான மனித நடவடிக்கைகளில் மீதான பார்வையுடன் மட்டுமே பெண்ணியச் சிந்தனைகளை அணுகுவதென்பது காலங்கடந்த ஒன்றாகத் தோற்றம் அளிக்கின்றது. ஏனெனின் "பெண்" எனும் கருத்தாக்கம்  "பெண்" சார்ந்த உடலாகவும், பெண்சார்ந்த மனம் ஆகவும் பார்க்கப்படத் தொடங்கியாயிற்று." என்கின்றார்.

பெண்விடுதலை என்பது பாலியலின் பின் உடலாகவும் தற்போது மனம் சார்ந்ததாகவும் பார்பாதல் பார்த்தால் பெண்விடுதலைக்கு வித்திடும் என்கின்றார்.

பெண்விடுதலையை இந்தமாதிரி கொச்சைப் படுத்துவது நகைப்புக்குரியது. பெண்ணின் பிரச்சனையை பாலியல், உடல், மனம் என வகைப்படுத்தி காட்டுவது பிரச்சனையை திசைதிருப்புவதாகும். பெண்ணின் பிரச்சனை என்பது ஆணாதிக்கமாகும். இது சுரண்டுவதில்தான் கட்டியமைக்கப்பட்டுள்ளது. அதாவது சுரண்டல் சமூகத்துக்கு இசைவாக பெண் ஒடுக்குமுறை மாற்றம் காண்கின்றது. பெண்விடுதலை என்பது சுரண்டல் சமுதாயத்துக்குள் சாத்தியமில்லை. ஆணால் சீர்திருத்தங்கள் நடக்கமுடியும். இதுவும் மாறுகின்ற உற்பத்திமுறைக்குள் மட்டும்தான் சாத்தியம். இது வரலாறு முழுக்க நீண்ட ஆதாரமாக உள்ளது. பெண் அடிமைப்படுத்திய வரலாறு என்பது சுரண்டல் சமுதாயத்தின் தொடக்கத்தில் உருவானதே. இதில் ஆண் பெண்ணின் உழைப்பை, உடலை என அனைத்தையும் சுரண்டிய போக்கு சமுதாய சுரண்டலுக்கு வெளியில் ஒருபோதும் தொடங்கியதில்லை. பார்ப்பானியம் எப்படி சுரண்ட தீண்டத்தகாதவர் முதல் சாதியமைப்பை தொடங்கினர்ரோ அது போல்தான் இந்த ஆணாதிக்கமும் மற்றவனை சுரண்டி சுகபோகமாக வாழ எனக் கருக்கொண்ட அடக்குமுறையாகும். பெண் ஆணாதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமாயின் சுரண்டல் சமுதாயத்தை எதிர்த்த போராட்டத்தில் எல்லா துறையிலும் விதிவிலக்கின்றி நடத்தவேண்டும். இந்த ஆணாதிக்கம் சுரண்டல் சமுதாயத்தில் ஒன்றுடன்ஒன்று இணைந்து போய்யுள்ளது. இதைப் பிரித்தெடுத்துப் போராட யாராலும் முடியாது. எனவே பெண்விடுதலைப் போராட்டம் என்பது இருக்கு சமுதாயத்துக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்று இதை தலைகீழ் ஆக்குவதில் மட்டும்தான் சாத்தியம். இது பாட்டாளிவர்க்க தலைமையிலான போராட்டத்தில் மட்டும்தான் வெற்றி பெறமுடியும் என்பதும் சமூக விஞ்ஞான உண்மை என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது. இதை மறுத்து திசைதிருப்பி எழுதும் எஸ்வி.றஃபேல் போன்றோர் கட்டுரை ஆணாதிக்கத்தை பாதுகாக்கும்  மறைமுக கதையளப்புகளே.