Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மக்களுக்கு எதிரான பழைய அரசியல் பாதையில் "தமிழீழ மக்கள் கட்சி"

  • PDF

தமிழீழ மக்கள் கட்சி சார்பான மூன்று "தமிழீழம்­­" இதழ்கள் அண்மையில் வெளியாகியுள்ளது. இக் கட்சியின் பிரகடனம் தமிழ்ப் போராட்ட வராலாற்றில் புலிகளின் மாற்று அமைப்பு மீதான ஜனநாயக மறுப்புக்குப் பின்னலான அழித்தொழிப்பின் பின் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுத்தப்பட்ட ஒர் அமைப்பாகும். மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தக்காகவும், அந்த மக்களின் விடுதலைக்காக  போராடும் உரிமைக்காக போராட உள்ள உரிமையை வென்று எடுக்க, அனைத்து ஜனநாயக விரோத பாதைக்கும் எதிராக போராடும் செயல், கருத்து தளத்தை பாதுகாக்க வேண்டிய கால கட்டத்தில் ஊண்றி நின்றபடி, தமிழீழ மக்கள் கட்சியின் பிரகடனத்தை அவர்களின் கட்சி திட்டமின்றியே அரசியல் ரீதியாக ஆராயவேண்டியுள்ளது.

 

 

அவர்களின் கட்சியின் அரசியல் திட்டம் இது வரை கிடைக்கவில்லை. இருந்த போதும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவின் பிரகடனங்கள் ஊடாக பார்ப்போம்.

தம்மை தீப்பொறியின் தொடர்ச்சியாக உயிர்ப்பாகவும் பின்னால் தமிழீழ மக்கள் கட்சியாக இனம் காட்டுகின்றனர். தீப்பொறியின் வராலாறும், அதன் அரசியல் வழியை வகுத்தவருமான கேசவன் பற்றி எந்த விதமான கூற்றுமின்றி, அஞ்சலியும் இன்றி அனாதையாக்கியபடி, அவரின் அரசியலை அனாதையாக்கியபடி எதிர் திசையில் (இவர் தான் புதியதோர் உலகம் நூலை எழுதியவர். இவர் புலிகளால் கடத்தப்பட்டு கொல்லாப்பட்டார்.) காலை பின்பக்கம் எட்டி வைத்துள்ளனர். இந்த நிலையில் கேசவனின் அரசியல் மார்க்கத்தை உயர்த்தி பாதுகாக்க தமிழீழ மக்கள் கட்சியின் அரசியலை விமர்சிப்பது அவசியமாகியுள்ளது.

புளாட் இயக்கத்தின் உள் அராஜகத்தை எதிர்த்த சிறு குழுவாக தமக்குள் வெளியேறியவர்கள், பின்னால் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இன்மையும், அதன் தலைமை இன்மை தான் இயக்கத்தின் அராஜகவாத  அரசியல், ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தது என சரியாக இனம் கண்டவர்கள், தாம் புரிந்து இருந்த மாக்சியம் அல்லாத பூர்சுவா நிலையில் இருந்து கடந்து செல்ல உள்முரண்பாட்டுடன் கேசவனின் வர்hக்கப் போராட்டத்தை தேசியத்தில் இணைக்க போராடிய நிலையில் அதற்க்காக கடத்தப்பட்டார்.

கேசவனின் கொலையைத் தொடர்ந்து மாhக்சியம் அல்லாத பூர்சுவா நிலையை மார்க்சியமாக கூறியபடி அதை மறுத்து மார்க்சியம் விமர்சனத்தக்கு உள்ளாக்கின்றோம் எனக் கூறியபடி, அதை எந்த விதத்திலும் விமர்சிக்காது இருந்த இயக்க அரசியலையும் தாண்டி அடுத்த தீவிர வலது பக்கத்தில் தமது அரசியலை அடையாளம் காட்டியுள்ளனர். இதன் வெளிப்பாடாக வெளியான "தமிழீழம்" மூலம் பாhப்போம்.

"எந்தவொரு போராட்ட வரலாற்றிலும் பலவேறு சமூக பிரிவுகள் தமது நலன்களை அடையும் விதத்தில் தமக்கென தனியான அமைப்புகளை உருவாக்குவதும், அவற்றின் பலத்தில் போராட்டத்தை முன்னெடுத்து செல்வதும் தவிர்க்க முடியாதது. மேலும் ஓட்டுமொத்த போராட்டத்தில் நன்மை கருதி சக அமைப்புகளுடன் குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் ஜக்கிய முன்னணி அமைத்துப் போராடுவது வராலாற்று நியதியாகவும் உள்ளது." என முன்வைக்கின்றனர். இந்த ஆசிரிய முன்னுரைகளில் எங்குமே எதிரி யார் என்று குறிப்பிடாத "கட்சி" பிரகடனம் செய்தவர்கள் எதிரியுடன் கூட்டுக்கு போவதும், ஓடுக்கப்பட்ட மக்களின் தலைமையை நிராகரித்து சுரண்டும் வர்க்கத்துக்கு கீழ் அணிதிரட்ட கோருவதே இந்த அரசியல் விளக்கமாகும்.

அதாவது "பல்வேறு சமூக பிரிவுகள் தமது நலனை அடையும் விதத்தில்" போராடுவதை அங்கிகரிப்பதன் மூலம் தரகு மற்றும் நிலப்பிரத்துவ வர்க்கத்தினர் தமது நலனை அடைய ஏகாதிபத்தியத்துக்காக  போராடுவதை, இதை இவர்கள் "நமது விடுதலைப் போராட்டத்தில் மக்கள் தமது அரசியல், சமூக பொருளாதார கோரிக்கைகளை முன்வைத்து அமைப்புரீதியில் போராட வேண்டும்" (இங்கு மக்கள் யார்?) என்ற கோரிக்கையையும் அதன் சமூக நோக்கத்துக்காக அங்கிகரிக்க முடியும் என்கின்றனர். இந்த இடத்தில் தமது தத்துவ விலகல் போக்கில தமிழ் தரகு, நிலபிரபுத்துவ பிரிவு இலங்கையில் நலிந்த விளிம்பு பிரிவு என்பாதால் கூட்டு அமைக்க மறைமுகமாக கோருகிறனர்.

இந்த இடத்தில் "பல்வேறு சமூக பிரிவுகள் தமது நலனை அடையும் விதத்தில்"  போராட முடியும் எனின் ஆணாதிக்கச் சமூகப் பிரிவும், சுரண்டல் சமூகப் பிரிவும், சாதி தகர்க்காத தலித் என்ற சமூகப் பிரிவுகளும், அதைப் பேன வௌவேறு சமூக சாதிப் பிரிவுகளும் என என்னற்ற அமைப்புகளும் எப்படி யார் தலைமையில் எந்த வர்க்க நோக்கத்துக்காக ஜக்கியப்பட முடியும் என்பது தெளிவானது.

பாட்டாளியை கொள்ளையிட்டு சூறையாடும் சுரண்டும் வர்க்கத்தையும், இது போன்று ஆணாதிக்கம், சாதியம் என சமூகத்தில் வௌவேறு சமூகப் பிரிவுகளின் முரண்பட்ட நலன்களை எந்த அரசியல் வழிகளில் தீர்க்கமுடியும். ஏன் தமிழீழத்தில் அரசு எப்படியிருக்கும்? அதன் தலைமை சக்திகள் யார்? சமுதாயம் வன்முறையால் கட்டியமைக்கப்பட்டுள்ள நிலையில் எப்படி ஒழிப்பீர்கள்?  வன்முறை மூலமா? அல்லது வேறு வழியிலா? எப்படி? கடந்த காலத்தில் உலகளவிலான வன்முறைப் போராட்டத்தை எப்படி பார்க்கின்Ppர்கள்? அதில் இருந்து எப்படி வேறு பட்ட வகையில் உள்ளீர்கள்? அரசு என்பது வர்க்கத்தின் கருவியா? இல்லையா? எப்படி? தொழிளார் வர்க்கத்தின் ஓரே ஒரு போராட்ட ஆயுதமான மார்க்சியத்தை எதிரியாக பார்க்கின்றீர்களா? இல்லையா? எப்படி? உங்கள் வர்க்க நிலை என்ன? அதற்கான குறிப்பான அரசியல் நலன் என்ன? நீண்ட கால அரசியல் என்ன? இரண்டுக்கும் இடையில் வளர்ச்சியின் ஒழுங்கு என்ன?

இது பற்றி பொதுமைப்படுத்திய இன்றைய பொது உலக கண்ணோட்டத்தக்குள் இருந்தபடி "கொடிய சிங்களப் பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பிராந்திய ஏகாதிபத்திய சக்திகளின் நெருக்குததல்களுக்கு எதிராகவும் தமிழ் தேசம் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றது. இந்த வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தினூடாக அதன் பிரிக்க முடியாத வரலாற்று தேவையாகவும் தமிழீழ மக்கள் கட்சி ஆனது பரிணமித்துள்ளது." மிக கவணமாக தெரிவு செய்யப்பட்ட இவ் வரிகள் புலிகளின் பின் மறைமுகமாக பிணாமியாக ஆள் திரட்ட முனைகின்றது. சிங்கள பேரினவாதமும், இந்தியா விஸ்தரிப்பு வாதமும் குறிப்பாக புலிகளின் இன்றைய  எதிரியாக உள்ளது. இதை மட்டும் கவனமாக குறிப்பிடும் "தமிழீழ மக்கள் கட்சி" பத்திரிகையான தமிழீழம் புலிகளால் எதிரியாக இனம் கட்டாத ஏகாதிபத்தியத்தை வசதி கருதியும், ஏகாதிபத்திய நலன் கருதி மறந்த அரசியலின் வராலற்று தொடர்ச்சியில் பரிணமிக்கின்றனர். இதை பெயரில் "கட்சி" போட்டு கொண்டு  வராலாற்றை ஏமாற்றி வென்று விட முயல்கின்றனர். எமது எதிரி யார்? சிங்கள பேரினவாதம், பிராந்திய விஸ்தாரிப்பு வாத இந்தியா, மற்றும் தமிழ் சிங்கள தரகு நிலப்பிரபுத்துவ பிரிவுகள், மற்றும் ஏகாதிபத்தியம் என்பதை மறந்து பரிணமித்த தமிழீழ மக்கள் கட்சி எதைச் சாதிக்க முனைகின்றது என்பதை நாம் மிளக் கூறவேண்டியாதில்லை.

அடுத்து "நண்பர்கள் சகதோழர்களுடன் எமது கருத்துக்களையும் செயற்பாடுகனையும் தொடர்ந்து  விவாதியுங்கள்" என்கின்றனர். பல்வேறு நபர்கள், நட்புரீதியான வர்க்கங்களின் இடையில் உள்ள கோட்பாடு விடையங்கள் மீது திறந்த பகிரங்கமான விவாதத்துக்கு தயாராற்ற எல்லா நிலையிலும் ஜனநாயகம் என்பது கோசத்துடன் நீடித்து இறுதியில் வன்முறை வித்திடப்படுகின்றது. ஜனநாயகம் என்பது விவாத்தை கேள்விகள் மீதும், சமூக இயக்கத்தின் போக்கின் மீதும் ஜனநாயகப்படுத்துவதுதான். இல்லாது தனக்கான அமைப்புக் கட்டல் கூட ஜனநாயகத்தை மறுக்கின்றது. அதாவது சொந்த அமைப்பிலும், வெளியிலும் எழுப்புபவைக்கு விஞ்ஞானபூர்வமாக பதில் அளிக்காத விடையங்கள் மீது ஜனநாயக விரோதமாக அணிதிரட்டப்படுவதும், அது குழுவாதமாக மாறுவதும், சொந்த அணிக்குள் கேள்வி எழும் போது வெளியில் நிகழ்ந்தது சொந்த அமைப்புக்குள் ஜனநாயக விரோதமாக மாறுகின்றது.

இந்த வகையில் குறிப்பாக உயிர்ப்பு மீதும், கடந்த சர்வதேச நிகழ்வுகள் மீதும் எழுப்பட்ட கேள்விகள் மீதான தத்துவார்த்த விடையங்களுக்கு பதிலாளிக்காத "தமிழீழ மக்கள் கட்சி" பிரகடணம் உண்மையில் சொந்த அணிக்குள்ளும், வெளியிலும் ஜனநாயக விரோதமாக குழுவாத கண்ணோட்டத்தில் உருவாக்கப்பட்டவையே. பதிலளிக்க முடியாத  தத்துவார்த்த எல்லைக்குள் நீடிக்கும் இவர்கள் விஞ்ஞான பூர்வமான மார்க்ஸ்சிய விவாதங்களையும், செயல் தளத்தையும் எதிராக காட்டி வந்தடைவது தவிர்க்கமுடியாது. ஏன் எனின் சமூக பிரச்சனைக்கு வர்க்கங்களின் முரண்பாடு சமரசங்களால் முடிவாக்கமுடியாது. இந்த வர்க்கங்களில் சில திட்டவட்டமாக எதிரியாக இருப்பதும், மற்றவை தவிர்க்க முடியாது பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் மட்டுமே வெற்றி பெறமுடியும் என்ற உலகப் பொருளாதார நிலைமையில் சொந்த எதிரி வர்க்கத்துக்கு எதிரான வர்க்கப் பிரிவுகளின் ஜக்கியம் என்பது திறந்த விவாத அரங்கில், எந்த வர்க்கத்தை எந்த எல்லைக்குள் பிரநிதித்துவம் செய்கின்றோம் என்பதை தெளிவாக்கும் விவாத்தை நடத்துவதுதான் ஐனநாயகப் பண்பாகும். மூடிமறைத்த தனது சொந்த வர்க்க நலனை காட்ட மறுத்து ஏமாற்ற, விவாத்துக்குள் இறங்க மறுக்கும் அந்த கணமே இயல்பில் தன்னகத்தே ஜனநாயக மறுப்பை அடித்தளமாக கொள்கின்றது. இந்த வகையில் உயிர்ப்பு முதல் தமிழீழ மக்கள் கட்சி விவாத்தை செய்து தெளிவடையாத, தெளிவாக்காத வகையில் உருவாக்கப்பட்ட அந்த கணமே அது ஜனநாயக மறுப்பை அணைத்து தளத்திலும்   தனக்குள் உள்வாங்கி அடிப்படையாக்கியுள்ளது.

தமிழீழ மக்கள் கட்சியின் சின்னத்தில்  "சுதந்திரம் - தமிழீழம் - சமத்துவம்" எனப் போடப்பட்டுள்ளது. 17ம் நூற்றண்டில் பிரஞ்சு முதலாளித்துவ புரட்சி "டுஐடீநுசுவுநு – நுபுயுடுஐவுநு – குசுயுவுநுசுNஐவுநு" (சுதந்திரம் - சமத்துவம் - சகோரத்துவம்) எனகோரி போராடியாது. சகோரத்துவம் என்பதும் தமிழீழம் என்பது சராம்சத்தில் ஓன்றே. தமிழீழம் என்பது பல்வேறு சமூகப் பிரிவுகளின் சமூக பொருளாதார கோரிக்கைகளின் தகர்வு இன்றிய இணைப்பு என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. பிரஞ்சு முதலாளித்துவப் புரட்சி எதைக் கோரியதோ அதையும் அல்லது அதைவிடக் குறைவாக தமிழீழ மக்கள் கட்சி கோருவது தெளிவாக்கியுள்ளது. ஏகாதிபத்திய சமுதாயத்தில் ஓரு தேசிய முதலாளித்துவப் புரட்சியை கோருவதும், அதைத்தாண்டி ஒரு இம்மியும் கோர தேசியவாத எல்லை பாட்டாளி வர்க்கத்துக்கு தூக்கு கயிற்றை கொடுத்து நாட்டை ஏகாதிபத்தியத்துக்கு தரைவார்ப்பதுதான். எப்படி தேசிய முதலாளித்துவ வார்க்கம் சின்னக் கோசத்தின் அடிப்படையில் வெற்றி பெறும் என்று விளக்கியதில்லை. அதை அதன் சொந்த அணிகள் எழுப்பதா வரை மீண்டும் ஈழ இயக்க வராற்றுக் கதை போல் வேதளமாகும் கதைதான்.

இங்கு பாட்டாளியின் சொந்த கோரிக்கைகளை இந்த மூன்று அடிப்படைகளும் மறுதலிக்கின்றது. உதரணமாக சுதந்திரம் மறுக்கப்பட்டவனுக்கும் மறுபவனுக்கும் இடையில் மட்டும் உயிர் வாழ முடியும்  என்பதால்  சமத்துவ, சகோரத்துவ, தமழீழம் என்பது சுதந்திரம் யாருக்கு உண்டோ அதற்க்குள் சமத்துவத்தை, சகோரத்துவத்தை மட்டும் கோருவதே. இந்தச் சுதந்திரம் என்பது ஓடுக்கும் வர்க்க சுதந்திரம் என்பதை அடிப்படை மூன்று விடையமும் துல்லியமாக்கின்றது. இதைத்தான் பிரஞ்சுப் புரட்சி தொழிலாளிக்கு அடக்குமுறையுடன் பரிசாக்கியது. இப்படி இது ஒவ்வொரு துறையிலும் கூறமுடியும்.

இதழ் மூன்று ஆசிரியர் குறிப்பில் "ஆயுதமேந்திய போராட்டப்பாதை அவசியம் என்பதை நடைமுறையில் நிருபித்த சிவாகுமாரனை நாங்கள் கௌவரமாக நினைவு கூர்கின்றோம். அதேபோன்று தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் தலைவராய் உயர்ந்து நிற்கின்ற நெல்சன் மன்டடேலா, ஐனாதிபதி பதவியிலிருந்து விலகி செல்வதையும் நாங்கள் கௌரவப்படுத்துகிறோம். ஓர் உண்மையான மக்கள் தலைவர், போராட்ட களத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள முடியும் என்பதற்குரிய உயிருள்ள சான்றாக, எம் காலத்தில் ஐனநாயக பிம்பமாக வாழ்ந்த காட்டிய ஒரு மக்கள் தலைவருக்கு, தமிழ்தேசத்தின் சார்பில் பிரியாவிடை கூறுவதில் பெருமிதமடைகிறோம்." என தமிழீழ மக்கள் கட்சி சார்பாக பிரகடனம் செய்கின்றனர்.

சொந்த இயக்கத்தை கட்டிய தோழர் கேசவனுக்கு அவருடன் தோழ் நின்று மரணித்த தோழர்களுக்கும் இருட்டடிப்பும், துரோகத்தையும் பரிசாக வழங்கியவர்கள் எந்த அரசியலை இதற்க்கூடாக முன்வைக்கின்றனர் எனப் பார்ப்போம்.

சிவகுமரானுக்கு முன்பு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக முன்னொக்கவில்லையா? ஏன் இலங்கையில் அதற்க்கு முன்பு ஆயுதப் போராட்டப் பாதை இருக்கவில்லையா? "எமது போராட்டத்தின் ஓரு திருப்புமுனை" யை சிவகுமரான் எடுப்படுத்தினர் எனின் அதற்க்கு முன் ஏற்படவில்லையா? ஆம், சிவகுமார் எற்படுத்திய அரசியல் என்பது புலியின் இன்றைய அரசியலைத்தான்.

சுத்த தனிநபர் பயங்கரவாத வெடிகுண்டு அரசிலில் தொடங்கி சயனைட் ஈறாக ஆயுதம் தான் அனைத்தும் என்பதை சிவகுமரான்  தொடங்கியதையே புலிகள் இம்மியும் விலாகது பிரதிபலிக்கின்றனர். தரகுமுதலாளிகளான தமிழர் விடுதலைக் கூட்டணியின் இராணுவப் பிரிவாக சிவகுமரான் போன்றோர் வெளிக்கிளம்பிய போது, அது ஐனநாயக மறுப்பு அராஐகவாதம் படுகொலை அரசியலை மட்டும் அரசியல் ஆக்கினர். மக்களின் சொந்த பிரச்சனைகள் மீது அரசியல் மயப்படுத்துவதற்க்குப் பதில் ஒரு சிலர் புரட்சி நடத்திவிட முடியும் என்ற தனிநபர் பயங்கரவாத அரசியலின் பிதா மகன் ஆவர் சிவகுமார்.  பின் உருவான தனிநபர் பயங்கரவாத அழித்தொழிப்பு இயக்ங்களின் முன்னோடியாவர். சயனைட் தற்கொலை அரசியல் என்பது மக்களும், போராளியும் வாழ்வதற்க்காக போராடுகின்றனர் என்பதை கோட்பாட்டில் மறுத்து, தனிநபர் பயங்கரவாத அரசியலில் தனிநபர் தற்கொலை செய்வதன் மூலம் இரகசியம் பாதுகாக்கப்படும் என்ற சுத்த இராணுவக் கண்ணோட்டமாகும். ஏன் ஒருவன் எதிரிக்கு எதிராக கைதின் போது கூட உயிர்வாழ போராட முடியாது என்பதற்க்கும், வாழ்வதற்க்கான போராட்டம் அங்கும் உண்டு என்பதை ஏன் மறுக்கவேண்டும். இவை எல்லாவற்றின் முன்னோடிதான் சிவகுமார். ஏன் புளாட் இயக்க உள் அராயகவாதிகளின் குருவாக இருக்கும் வகையில் தனிநபர் பயங்கரவாத அரசியலில் ஐனநாயக மறுப்பு, மாற்றுக் கருத்துக்கு படுகொலை என்ற அனைத்தின் பிரதிநிதியாவர். தமிழீழ மக்கள் கட்சியின் நினைவு கூரால் என்பது உண்மையில் சிவகுமரானின் அனைத்து அரசியல் வழியின் மீதானது என்பதும், புலிகளின் அரசியலைப் பாதுகாப்பதுமே ஓழிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாற்று அரசியல் பாதையை முன்வைக்கவில்லை.

 

அடுத்து ஐனநாயகம் பற்றியும், நெல்சன் மண்டேலா பற்றியும் புல்லரிக்கும் அரசியலைப் பார்ப்போம். நெல்சன் மண்டேலா நிறவாதத்துக்கு எதிராகவும், சொந்த நாட்டு விடுதலைக்காகவும் போராடியதும், அதற்க்கு எதிராக சிவகுமார் போல் சயனைட் அடிக்காது சிறைச்சாலையையே தனது உயிர் வாழ்வுக்கானதும், மக்ளுக்குமானதான போராட்டக் களம் ஆக்கியதால் புகழ்பெற்ற தலைவானர். இவ் இயக்கம் போராடிய காலத்தில் பாட்டாளி வர்க்கத்துடன் முன்னணி அமைத்து போராடிய போது, ஆயிரக்கணக்கில் தமது வர்க்க இலட்சித்தை அடையும் போராட்டத்தில் கொல்லப்பட்டும், சித்திரவதைகளை பல கண்ட மக்களின் தியாகங்கள், கோரிக்கைகளை மண்டேலா ஆட்சி ஏறிய பின்னர் துரோகம் இழைத்தை மூடிமறைத்து தமிழீழ மக்கள் கட்சி நியப்படுத்தும் போது, இவர்களும் மண்டேலா போல் சொந்த அணிக்கு எப்படி துரோகம் செய்வார்கள் (உதாரணமாக கேசவன்) என்பதை மறைமுகமாக கோடிட்டுக்காட்டுகின்றனர்.

 

தென்னாபிரிக்காவில் இருந்த நிறவெறி வெள்ளையின நிறவாத ஆட்சி மூலம் தொடர்ந்தும் சுரண்டல் அமைப்பை பாதுகாக்க முடியாத வகையில் மக்கள் எழுச்சியைக் கண்ட ஏகாதிபத்தியம், இதை மாற்ற நடத்திய ஆட்சி மற்றமே நெல்சன் மண்டேலா அரங்கேற்றம் ஆகும். இந்தியா, இலங்கை போன்று காலனி நாடுகளுக்கு ஏகாதிபத்தியம் வழங்கிய அதே போலிச் சுதந்திரம் போன்று தென்னாபிரிக்க மக்ளுக்கு வாக்களிக்கும் சுதந்திரம் உட்பட நிறவாதத்தை நியப்படுத்தும் சட்டங்களை அகற்றி எற்படுத்திய ஆட்சியில் கறுப்பு நிற தலைவர்கள் சட்ட மூலம் நிறவாதம் அற்ற சுரண்டல் ஆணாதிக்க அமைப்பை பாதுகாக்க நெல்சன் மண்டேலாவும், அவர் தலைமையில் போராடிய கட்சிக்கும் வழங்கிய பிச்சையில் ஆட்சியேறியவர்கள்.

 

இருந்த வெள்ளை இன அரசு அமைப்பு ஒத்துக் கொண்டு வழங்கிய பிச்சைக்கு அப்பால் ஒரு இம்மியையும் கூட கறுப்பு தலைவர்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. வெள்ளையின ஆட்சியில் வெள்ளையரிடம் குவிந்திருந்த பொருளாதாரம் பறிமுதல் செய்யப்படவில்லை. அத்துடன் ஏகாதிபத்திய பன்நாட்டு சூறையாடும் நிறுவனங்களை தேசிய மாயமக்கிவிடவில்லை. அதை பாதுகாப்பதில் நெல்சன் மண்டேலா மிக விசுவாசத்துடன் முன்னைய ஆட்சியாளர்களின் வழியில் சுரண்டப்படும் வர்க்கத்துக்கு எதிராக அடக்குமுறையுடன் ஆட்சியை நடத்தினர். ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் சரி, தேசியவாதிகளின் கோரிக்கையான தேசிய அரசு, தேசிய முதலாளித்துவ சொத்துக்கு பதில், ஏகாதிபத்திய சொத்துரிமையை பாதுகாப்பதில் நெல்சன் மண்டேலா ஓடுக்கு முறைக்கு ஊடாக அதிகராவர்க்கமாக ஓடுக்கும் மக்களுக்கு எதிராக சேவை செய்தவர்.

 

தமிழீழ மக்கள் கட்சி ஐனநாயகம் பற்றி கோட்பாடு முதலாளித்துவ எல்லையைத்தாண்டி ஒருபடிதன்னும் மேலே செல்லவில்லை என்பதை இவை காட்டுகின்றது. ஐந்து வருடத்துக்கு ஒருக்கால் ஆட்சி மாற்றம் நடப்பதை முதலாளித்துவ ஐனநாயமாக பார்க்கும் முதலாளித்துவ வாதிகள் போல், இவர்கள் அதற்க்கு மேலாக ஐந்து வருடம் மட்டுமே ஒருவர் ஆள வேண்டும் என்று கூறி முதலாத்துவ ஐனநாயகத்தை மேலும் மூடி மறைக்க விரும்புகின்றனர். இவர்களின் முன்னோடிகளாக, அமெரிக்க ஐனாதிபதி ஆட்சியில் இரு முறையில் ஆளமுடியும் என்பதை ஒன்றாக்கினால் இவர்கள் ஐனநாயகம் பூத்துக் குழுங்குவதாக கொண்டாடுவார்கள்.

 

அதாவது ஆட்சிக் காலத்தால் ஐனநாயகத்தை வரையறுப்பதும், எல்லை போடுவதும், அல்லது நெருக்கடியில் இராஐpனாமச் செய்வதையுமே ஐனநாயக ஆட்சியாக சொல்வதன் மூலம், தமிழீழ மக்கள் கட்சி ஆட்சி கால எல்லையால் ஐனநாயகத்தை தருவதாக பிரகடனம் செய்கின்றனர்.

 

ஐனநாயகம் என்பது காலத்தால் அல்ல தீர்மானிப்பது. மாறாக ஆட்சி யாருக்கு, எந்த மக்களுக்கு சேவை செய்தது என்பதே ஐனநாயகத்தைத் தீர்மானிக்கின்றது. நெல்சன் மண்டேலா சுரண்டும் வர்க்கத்துக்கு சேவை செய்தவரே ஒழிய, சுரண்டப்பட்ட மக்களுக்கு சேவை செய்தவர் அல்ல. இவரின் ஆட்சி சுரண்டும் வாக்க ஐனநாயகம்தான். இதை யாரும் மறுக்கமுடியாது.

அடுத்து தேர்தல் மூலம் ஐந்து வருடத்துக்கு ஒருக்க ஆட்சி ஏறுபவர்கள் இருக்கும் வர்க்க ஆட்சிக்குள் மட்டுமே ஆளவும், அதையே ஐனநாயகமாக மக்களுக்கு காட்டவும் முடியும். இந்த வர்க்க ஆட்சியை மாற்றவோ, கவிழ்க்கவோ முடியாது. ஐந்து வருடத்துக்கு ஒருக்க தெரிவு செய்யப்படுபவர்கள், அல்லது இராஐpனமா மூலம் ஐனநாயகவாதிகளாக காட்டுபவர்கள் இருக்கும் ஆளும் அதிகர வர்க்கத்துக்கு சேவை செய்யும் பொம்மைகள் ஆவர். இந்த அதிகார வர்க்கத்தை மாற்றவோ, அவர்கள் மீது அதிகாரம் பண்ணவோ சுரண்டும் ஐனநாயகம் மூலம் தெரிவு செய்பவர்களால் முடியாது. அவர்களின் வர்க்க ஆட்சிக்குள்தான் எல்லாம்.

 

தென்ஆபிரிக்காவில் வெள்ளையின ஆதிக்கத் தில் இருந்து கறுப்பு பொம்மை ஆட்சி மாறிய போது ஆளும் அதிகாரவர்க்கம் மாறிவிட வில்லை. மாறாக அதற்க்கு உட்பட்ட, நிறவாத பிளவுச் சட்டங்களை சுரண்டும் வர்க்க எதிர்ப் பின்றி, சுரண்ட சுரண்டுவர்க்க அனுமதியுடன் ஆளும் வர்க்கம் நிறவாதத்தை சுரண்டலுக்காக விட்டுக் கொடுத்தன் மேல்தான் நெல்சன் மண்டேலா ஐனநாயகவாதியாக நாடகமாடினர். போராட்டத்தில் தியாகம் செய்த பாட்டாளிகளின் கோரிக்கையோ, தேசிய வாதிகளின் ஐனநாயக கோரிக்கையையோ துரோகம் இழைத்து சுரண்டும் வர்க்கத்துக்கு காலாற சேவை செய்தவர். இந்த வர்கத்தின் பிரதிநிதியாக இருந்தது  இராஐpனமா செய்தால் மக்களுக்கு ஐனநாயகம் வந்துவிடுவதில்லை மட்டும் இன்றி ஐனநாயகம் பூத்துக்குழுங்குவதில்லை. ஓடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார் என்ற கேள்வியும், தொடந்தும் அந்த மக்களின் ஆட்சிக்காக போராட தயார் அற்ற நிலையில் ஐனநாயகம் என்பது ஏமாற்று வித்தையாகும். தமிழீழ மக்கள் கட்சி நாளை இதையே தமிழ் மக்களுக்கு வழிகாட்ட இதன் ஊடாக கோடிட்டுக் காட்டுகின்றனர்.