Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

சந்தர்ப்பவாத முதலாளித்துவ வாதிகளின் வரலாற்றுத் திரிபு

  • PDF

ஓடுக்கப்பட்ட மக்களின் விடுதலை பற்றி, அவர்களின் போராட்டம் பற்றி சேறு வீசுவதில் இன்று பலர் பல தளத்தில் களம் கண்டுள்ளனர். இந்த வகையில் சரிநிகர் 150, 152 இல் மீளவும் சங்கமன் ஏகாதிபத்தியத்துக்காக விசுவாசமாக வரலாற்றைத் திரித்து தனது சந்தர்ப்பவாத  வரலாற்றுப் பொய்களில் முகிழ்ந்து எழுந்துள்ளார்.

 

 

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் மீதும், அவர்களின் தலைவர்கள் மீதும், அவர்களின் போராட்டத் தத்துவம் மீதும் தாக்குதல் நடத்துவதில் சங்கமனின் அளவு கடந்த விருப்பம் இந்த ஏகாதிபத்திய நுகத்தடியை பாதுகாக்கும் போராட்டத்தில் எழுவதே. இதை மறுக்கமுடியாத வகையில் அவர்களின் கோட்பாடுகள், அவதூறுகள் விம்மி வீங்கிப் போய்யுள்ளது.

அடுத்த நேர உணவுக்கு கையேந்தும் மனிதர்களின் உழைப்பை தமது ஆடம்பர வீம்புகளுக்காக சுரண்டி ஒடுக்கும் இந்த ஏகாதிபத்திய அமைப்பினை தகர்க்க சங்கமன் போன்றவர்கள் என்ன தீர்வை வைக்கின்றனர்? இதற்க்கு காரணம் என்ன?

தொட்டாலே தீட்டு எனக்கூறி சாதியால் ஒடுக்கி மனிதர்களை பிளந்து போட்ட உலகத்தில் இருந்து அந்த மக்கள் மனிதனாக வாழ என்ன தீர்வு உங்களிடம் உண்டு? இதற்க்கு கராணம் என்ன?

பெண்களை சக மனிதராக ஏற்றுக் கொள்ள மறுத்து அடக்கி ஒடுக்கி இரண்டாம் தரப் பிரiஐயாக எல்லாத்துறையிலும் வாழவிட்டுள்ள நாகரிக ஐனநாயக உலகில் இருந்து பெண்கள் மீள உங்களின் பாதைதான் என்ன? இதற்க்கு கராணம் என்ன?

ஆபிரிக்காவில் தடிகளாக மாறி பசித்த வயிற்றுடன் கூட்டம் கூட்டமாக மடிந்து போகும் மனிதர்களுக்கு என்ன தீர்வை முன்வைக்கின்றீர்கள்? இதற்க்கு கராணம் என்ன?

பச்சிளம் பாலகர்கள் பசித்த வயிற்றுடன் நேரக் கணக்கின்றி உடல் உழைப்பில் உழல்கின்ற அந்த பரிதாபத்துக்குரிய ஐPவன்களின் ஏக்கப் பார்வைக்கு என்ன தீர்வை வைத்துள்ளீர்கள்? இதற்க்கு கராணம் என்ன?

ஆணாதிக்க வக்கிரத்துக்கும், வறுமையின் கோரத்திலும் தம்மை மீறி பாலியல் பண்டமாக மாற்றப்பட்ட கள்ளம்கபடம் அற்ற அந்த பிஞ்சு மனங்களுக்கு என்ன தீர்வை முன்வைக்கின்றீர்கள். இதற்க்கு கராணம் என்ன?

எங்கும் மனித அவலத்தின் காட்சி. சிலர் வாழும் உலகுக்காக உலகம் உருள்கின்றது. அதைப் பாதுகாக்க உருளும் எழுத்துலகம் மக்களை சேறடிக்கின்றது. சங்கமனும் அவர் போன்றவர்ளும் முதலில் மக்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என தெளிவாக்க வேண்டும். எப்படி அவர்களை விடுவிக்க முடியும் என அடித்துக் கூற வேண்டும். ஆனால் அதுபற்றி எதுவுமின்றி மார்க்சியம் மீதும், அதன் தலைவர்கள் மீதும், அப்போராட்டங்கள் மீதும் நடத்தும் சேறடிப்பு மக்கள் கருசனைக்கு வெளியில் ஏகாதிபத்திய விசுவாசத்தால் நாற்றம் கண்டுபோய்யுள்ளது.

மார்க்சியம் மட்டும்தான் சுரண்டலை ஒழிக்கக் கோருகின்றது. மார்க்சியம் மட்டும்தான் சாதியைக் கடந்த சமூகத்தை வந்தடைய கோருகின்றது. மார்க்சியம் மட்டும்தான் நிறம், மொழி,....... கடந்தும் மற்றும் பெண்களை விடுவிக்க கோருகின்றது.

மார்க்சியம் மட்டும்தான் மனித சமுதாயத்தின் அனைத்து சமூக முரண்பாட்டிலும் மனிதனை விடுவிக்க கோருவதுடன், நடைமுறையில் போராடுவதுடன் அதற்க்காக உண்மையாகவும் இயங்குகின்றது. இதற்க்கு வெளியில் மக்களை விடுவிக்க எந்தக் கோட்பாடும், நடைமுறையும் கிடையவே கிடையாது. அப்படி உண்டு என்பவர்கள் அதை முன்வைப்பதை விடுத்து சேறுவிசுவது என்பது இந்த ஏகாதிபத்திய உலகைப் பாதுகாக்கத்தான். அதனால்தான் இவைகளை ஏகாதிபத்திய எச்சிலுக்காக சந்தர்ப்பவாத வேடங்களை மக்களின் பெயரில் கோசம் போட்டபடி  மக்களின் யதார்த்த நிலைமைகளுக்கு வெளியில், மக்களின் போராட்டகளுக்கு வெளியில் வம்புவாதம் நடாத்தித் திரிகின்றனர்.

புரட்சிநடந்த சோசலிச சமூகங்களில் மனிதப்படுகொலைகள் நடந்தன. அவை ஐனநாயகத்துக்கு விரோதமானவை. வன்முறையை ஒழிக்கப் புறப்பட்ட மார்க்சியம் வன்முறையில் இயங்கின்றது. எனப் பலவாக எடுத்துவைக்கும் கூற்றுக்கு மார்க்சியர்களாகிய நாம் எப்போதும் பதில் அளித்து வந்துள்ளோம்.

ஐனநாயகம் என்பது மனித ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் மட்டும் சுரண்டப்படுவனுக்கும் சுரண்டுபவனுக்கும் இடையில் மட்டும் உயிர்வாழ்பவைதான். ஆதிமனிதன் முன் ஐனநாயகம் இருக்கவில்லை. ஏன்எனின் ஒருவனை ஒருவன் சுரண்டி அடக்கி வாழவில்லை. அங்கு உணவுக்கான போராட்டம் கூட ஐனநாயக எல்லைக்கு வெளியில்தான் நடந்தது.

சனநாயகம் என்பது இன்று உள்ள ஏகாதிபத்திய அமைப்பில் சுரண்டிவாழும் பிரிவுக்கும் அதை அண்டிப் பிழைக்கும் பிரிவுக்குமானதே. சுரண்டப்படும் மக்களுக்கு எப்போதும் சனநாயகம் இருப்பதில்லை. மாறாக ஒருவாக்கு சுரண்டுவோருக்குப் போட மட்டும் சுரண்டப் படும் மக்களுக்கு சுரண்டும் வர்க்கம் வழங்கிய நஞ்சு தடவிய இனிப்பாகும். இது பண்பாடு கலாசாரம் ¼¼ என அனைத்திலும் மூளைச் சலவையை செய்தபடி வழங்கிய சனநாயகம், எங்கேயவாது இதில் சனநாயாகம் பூர்வமான மாற்றம் ஏற்படின், சனநாயகத்தை வான் அளவு புகழ்ந்து வழங்கியவர்களே வன்முறை கொண்டு நசுக்கினர், நசுக்கிவிடுவர்.

இது பாசிசம், இராணுவச் சட்டங்கள், மதச் சட்டங்கள், பொருளாதார முற்றுகை, இராணுவ சதி, படையெடுப்புகள் என ஏதோ ஒன்றை பயன்படுத்தி சனநயாகத்தை சுரண்டும் வர்க்கம் சார்பானதாக மாற்றிவிடுவர். உதாரணமாக பனாமாவில் தேசிய முதலாளித்துவ பிரிவு பராளுமன்ற வழிகளில் ஆட்சியேறிய போது அதை ஓடுக்கியதை இந்த சனநாயக உலகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. சங்கமான் போன்றோர் கண்ணைமுடிக் கொண்டு இருந்தது மட்டுமின்றி கம்யூனிஸ்டுகளை தாக்குவதில் குறியாக இருந்தனர்.

அமெரிக்கவில் இருபதுகோடி செவ்விந்திய மக்களை கொன்றும், ஆபிரிக்காவில் சட்டவிரோதமாக புகுந்து மனிதர்களை வேட்டையாடி மிருகங்களாக அடிமைப்படுத்தி வேலைவாங்கி (பார்க்க ஏழுதலைமுறை என்ற நாவலை, எப்படி மக்கள் நாவல் எழுத வேண்டும் என்பதற்க்கு எடுத்து காட்டும் கூட) அதில் உருவான அமெரிக்க சனநாயக ஏகாதிபத்தியம் பற்றிய மௌனமும், கம்யூனிஸ்டுகள் மீதான  சனநாயாகத் தாக்குதலும் ஏன் நடத்தப் படுகின்றன?

இந்தோசீனாவில் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட கம்யூனிஸ்டுகளை நரைவேட்டையாடியவர்கள் பற்றி ஏன் மௌனம்? இலங்கை அரசு 1971லும் 1979லும் வேட்டையாடியாது பற்றி ஏன் மௌனம்? தமிழ் மக்கள் ஐம்பதாயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்ட கொல்லாப்படுகின்ற நிலையில் ஏன் மௌனம். புலிகள் மாற்றுக் கருத்து கொண்ட ஐந்து ஆயிரம் பேரை கொன்றும், எல்லையோர அப்பாவி சிங்கள முஸ்லிம் மக்களை கொன்றும் துரத்தியது பற்றி ஏன் மௌனம். இப்படி உலகு எங்கும் பலப்பல ஆயிரமாக உள்ளதும், இதன் மீதான மூடிமறைப்பும் மௌனமும், இதை அம்பலப்படுத்தி போராடும் கம்யூனிஸ்டுகள் மீதான சேறுவீசல்கள் மட்டும்தான் இந்த ஏகாதிபத்திய உலகம் நீடிக்கவும் அதன் எல்லா மனித விரோதங்களும் தொடர அடிப்படையாக உள்ளது.

இவை எல்லாம் சனநாயகத்தில் மட்டும் அதாவது சுரண்டும் உரிமையில் மட்டும் நீடிக்கின்றன. இதனால் பாட்டாளிவர்க்கம் கம்யூனிச சமூகத்தில் சனநாயகம் என்பதை ஒழித்துக்கட்டிவிடும். இதன் முதற்படியாக சுரண்டும் வர்க்க பிரிவுகளுக்கும் அதை நியாப்படுத்தும் அனைத்துக்கும் சனநாயகத்ததை வழங்கமறுத்து விடுகின்றது. இதையடைய அந்தப் பிரிவு போராடுமாயின் போராட்ட தன்மைக்கு ஏற்ப்ப வன்முறையைக் கையாளும். இதற்க்காக மட்டும்தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை சோசலிச சமூகம் பாதுகாத்து வைத்துக் கொள்ள பாட்டாளி வர்க்கம் வன்முறையூடாக போராடுகின்றது. இங்கு இருதரப்புக்கு சனநாயகம் இருக்காது ஒருதரப்புக்கு மட்டும் சனநாயகம் இருக்கும். இது சுரண்டலை எதிர்க்கின்ற பிரிவுக்கு மட்டுமானது.

இன்று சனநாயகம் இருப்பது போல் உள்ளவை இந்த சுரண்டல் சமுதாய எல்லைக்குள் மட்டுமானவை. இந்த சமுதாயத்தை கேள்விக்குள்ளாக்கி தகர்க்கும் எல்லா நிலையிலும் சனநாயகம் பாசிசமாக தன்னை வெளிக்காட்டும். இதை யாராலும் மறுக்க முடியாது.

சோசலிச சமுகத்தில் உழைக்கும் மக்களின் ஒருதரப்பு சனநாயகத்தைப் பாதுகாக்க சுரண்டப்படும் பிரிவுகளின் கோட்பாடுகள், செயல்தளங்கள், பண்பாட்டு கலாசார தளங்கள்  என அனைத்துமீதும் நடத்தப்பட்ட வன்முறை சார்ந்த சாராத அனைத்துப் போராட்டத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைப் பாதுகாக்கவும் முன்னெடுக்கவும், அதன் தொடர்ச்சியில் ஒட்டுமொத்தமாக கம்யூனிச சமுகத்தில் ஐனநாயகத்தை ஒழித்துக்கட்ட ஒருதரப்பு சனநாயகம் ஒழித்துக்கட்டப்படும். இந்தப் போராட்டத்தில் இதற்க்கு வெளியில் ஏற்பட்டு இருக்கக்கூடிய விலகல்கள், தவறுகளை எந்த முதலாளித்துவ வாதியின் விமர்சனத்தையும் விட மார்க்சிய வாதிகள்தான் சுயவிமர்சனம் கொண்டு பார்ப்பதுடன், அதை அனுபவமாக கொண்டு தொடர்ச்சியான போராட்டத்தில் அவைகளை தவிர்க்கின்றனர். இதை யராலும் மறுக்கமுடியாது.

இந்த இடத்தில் சங்கமனின் தொடர்ச்சியான சேறுயடிப்புகளின் பின்னணியில் சரிநிகர் 153இல் ஆசிரியர் குறிப்புடன் சங்கமனை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

இந்தக் குறிப்பில் ஆசிரியர் குழுவும், கட்டுரையை எழுதியவரும் அவருக்கு எழுத சனநாயகம் வழங்குவது பற்றியும், இது போன்றவற்றை எதிர் கொண்டு பதிலளிக்க வோண்டும் என சனநாயகம் பற்றி விளக்கம் கொடுத்துள்ளனர்.

மார்க்சியவாதிகள் உலகளவில் சிறிய எண்ணிக்கையில் இருந்த போதும் அவர்கள்தான் ஏகாதிபத்தியத்துக்கும், அதன் எடுபிடிகள் மக்களின் பெயரில் முற்போக்கு காட்டிஎழுதும் எழுத்தாளருக்கு அச்சம் தரும் பூதமாக உள்ளனர்.

அதனால் தான் அவர்கள் எப்போதும் மார்க்சியத்தைத் தாக்கி வருகின்றனர். ஏகாதிபதியம் செய்யும் தொடர் அவதூறூக குவிந்து கிடக்கும் குப்பைப் பிரச்சாரத்தை, மக்களின் பின் ஒளித்துக் கொண்டு முற்போக்கின் பெயரில் இன்று எடுத்து வைக்கும் எழுத்தாளர்கள்தான் சமூகப் பாய்ச்சலை தடுக்கும் நேரடி வன்முறை சாராத பிரிவாக உள்ளனர்.

கருத்துச் சுதந்திரம் என்பதும், முற்போக்கு என்பதும் குறைந்த பட்சம் பாட்டாளி வார்க்கத்தை எதிர்க்காத நிலை மட்டும்தான் என்பதை மறுக்கும் அனைத்து நியாயவாதங்களும் கம்யூனிச எதிர்ப்பின் பின் ஏகாதிபத்திய கோட்பாட்டை பாதுகாப்பதுதான். ஏகாதிபத்தியத்தை எதிர்க்காத அதை எதிர்த்துப் போராடாத பிரிவுகளுக்கு சரிநிகர் முதல் பலர் கருத்துச் சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை தாங்கி போராட தயாரற்ற போக்கில் எழுபவைதான். இந்த மாதிரியான செய்தியூடகங்கள் ஏகாதிபத்திய பிரச்சாரத்துக்கான புதிய உத்தியை மறைமுகமாக முன் தள்ளுபவைதான்

இந்தமாதிரி வைக்கப்படும் எல்லாவண்ண அவதூறுகளையும் மார்க்சியவாதிகள் முகம் கொடுத்து அதை முறியடித்துப் பதில் அளித்துள்ளனர் பதில் அளிக்கின்றனர். இதற்க்கு எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டத்தில், அதன் கோட்பாட்டுப் போராட்டத்தில் நடத்திய வெற்றியில்தான் வர்க்கப் புரட்சி சாத்தியம் என்பதை தெளிவாக புரிந்து போராடி வருகின்றனர். இதைத்தான் மார்க்ஸ் முதல் மாவோவரை செய்தனர். இதைத்தான் இன்று மார்க்ஸ்சிய வாதிகள் செய்கின்றனர்.

அ.மார்க்ஸ் முதல் சங்கமன் வரை கம்யூனிச புரட்சிகளின் மீது தேடி எடுத்து வைக்கும் அவதூறுகளை சேறுயடிப்புகளுக்கு பின் உலகம் ஓளித்துக் கொண்டு நடத்தும் மறைமுக கொலைகளைப் பார்ப்போம்.

இந்த ஏகாதிபத்திய அமைப்பால் உலகில் மனிதனின் ஆயுள் எப்படி உள்ளது எனப் பார்போம். 1992 இல் யாப்பான் பெண்களின் சாராசரி ஆயுள் 81.2 ஆண்டுகளாக இருக்க ஆண்களின் ஆயுள் 75.5 ஆண்டுகளாக இருந்தது. இந்த ஏகாதிபத்தியத்தின் சூறையாடலைச் சந்திக்கும் ஆப்கானிஸ்தானில் பெண்ணின் ஆயுள் 42 ஆகவும் ஆணின் ஆயுள் 41 ஆகவும் உள்ளது. மூன்றாம் உலக நாட்டுக்கும் முதலாம் உலக நாட்டுக்கும் இது பொதுவான சாராசரியை கொண்டு உள்ளதைப் புள்ளிவிபரம் காட்டுகின்றது.

ஏன் இன்று கம்யூனிசத்துக்கு எதிராக பாதுகாக்கும் முதலாளித்துவம் எப்படி சனநாயகமாக ஆயுளில் உள்ளது என்பதற்க்கு அன்று மார்க்ஸ் எழுதிய மூலதனம் கூட ஆதராத்தை தருகிறது. "தொழிலாளி பாதி வாழ்நாளைக் கடக்க முன்பே சக்தியெல்லாம் இழந்து ஓய்ந்து போகிறார். ... ஏணியின் மேல்படி யிலிந்து கீழ்ப்படிக்கு சரிந்து விழுகின்றார். நவீனத் தொழில் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே வேறு எங்குமில்லாத அளவுக்கு ஆயுள் குறைவாய் இருக்கிறது. .. . மேல் நடுத்தர வர்க்கத்தின் சராசரிமரண வயது 38 ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் சராசரி மரண வயது 17"14

ஏகாதிபத்திய சூறையாடல் ழூன்றாம் உலக மனிதனின் ஆயுளைக் கூட தனது சொந்த நாட்டை விட அரைவாசியாக்கி மனிதனை அரை ஆயுளில் கொன்று ஒழிக்கின்றான். இப்படி முன்றாம் உலக நாடுகள் எல்லாவற்றிலும் பட்டினியிலும் நோயிலும் கொன்று அதில் சுகம் கானும் உலக மயமாதலும் அதை முண்டு கொடுக்கும் சனநாயகமும் மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கொன்று போடும் அமைதியில் தான் உயிர்வாழ்கின்றது. இந்த ஏகாதிபத்திய அமைப்பை பாதுகாக்கும் பேச மறுக்கும் பிரிவுகளுக்கு நாம் கருத்துச் சுதந்திரம் வழங்கத்தான் வேண்டுமோ?

ஆணாதிக்க வடிவத்திலும், வறுமையின் வடிவத்திலும், கல்வி இன்மையிலும் பெண்களை எப்படி சூறையாடி அடிமையாக ஏகாதிபத்தியம் வைத்துள்ளது எனப் பார்ப்போம்.

1992 இல் உகண்டா நாட்டில் ஒரு பெண்ணுக்கு 8.2 பிள்ளைகள் இருக்க இத்தாலியில் 1.3 டாக மட்டுமே உள்ளது. முன்றாம் உலக நாடுகளின் வறுமை, சிறுவர் இறப்பு போன்றன அதிக பிள்ளைகளைப் பெறவும் இந்த ஏகாதிபத்திய அமைப்புத்தான் காரணம். ஏகாதிபத்திய நாடுகளில் பெண் பெற்ற சலுகைகளை கூட முன்றாம் உலக நாடுகளின் பெண்கள் அடைய முடியாதவாறு ஏகாதிபத்தியம் தடுக்கின்றது. இந்த ஏகாதிபத்தியத்தை, அதை எதிர்த்து எழுதாத எழுத்துகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்.

பிறப்பு வீதத்தை எடுப்பின் (1992) ருவாண்டாவில் பிறப்பு வீதம் 52.2 டாகவும் இறப்ப வீதம் 15.6 டாகவும் உள்ளது. இது ஸ்பானியோலில் இறப்பும் பிறப்பும் 8.2 டாக உள்ளது. மக்களின் படிப்பறிவின்மை, வறுமை, நோய் போன்ற இந்த ஏகாதிபத்திய நுகத்தடியில் பிறப்பு இறப்பைக் கூட ஏகாதிபத்தியம் சார்பாக உள்ளது.

உலகில் அதிகூடிய பிறப்பு வீதம் (1992) காட்டாரில் 5.44 இருக்க nஐர்மனியில் -0.18 யாக குறைந்து சனத் தொகை குறையத் தொடங்கியுள்ளது. அதிகூடிய சனத் தொகையைக் கூட பெண்களை பிள்ளைகள் பெறும் இயந்திரமாக வைத்து இருக்கும் இந்த ஏகாதிபத்திய உலகம் தேவைதான?1

இப்படியாக குழந்தை இறப்பு, குழந்தை பிறப்பின் போது பெண்ணின் மரணம், வருமானம், நுகர்வு என அனைத்தும் இந்த ஏகாதிபத்திய அமைப்பு தனக்கு சாதகமாக வைத்து உலகை சூறையாடியும் மக்களை சனநாயகத்தின் பின்னால் அடக்கி கொன்று போடுகின்றது. இதற்க்கு எதிராக போராடவே பாட்டாளிவர்க்கம் வர்க்கப் போரை கோரிப் போராடுகின்றது. கம்யூனிசம் மட்டும்தான் போராடும் மக்களுக்கு முன் உள்ள ஒரே போராட்டப் பாதையாக உள்ளது.  இதை எதிர்த்துதான் எல்லா மார்க்ச்சிய விரோத புலம்பல்களும் காலத்துக்கு காலம் வெளிவந்து மார்க்சியத்தின் உண்மைகளின் பின்னால் நொருங்கி காணமால் போகின்றன.

இவராலும் பலராலும் எதிரியாக மக்கள் விரோதியாக காட்டும் கார்ல் மார்க்ஸ் கூறுவதில் இருந்து சில பார்ப்போம். ~~அதுவரை ஆப்பிரிக்காவுக்கும் ஆங்கிலேய மேற்கிந்தியத் தீவுகளுக்குமிடையில் மட்டுமே நடந்து வந்த நீக்ரோ-வர்த்தகத்தை, ஆப்பிரிக்காவுக்கும் ஸ்பானிய அமெரிக்காவுக்குமிடையில் நடத்துவதற்கும் அனுமதிக்கப்படும் தனிச் சலுகையை அசியெந்தோ ஒப்பந்தத்தைச் கொண்டு இங்கிலாந்து ஸ்பானியரிடமிருந்து கறந்தது அல்லவா, இது ஆங்கிலேய ராய தந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று இந்த வராலாற்றேடுகள் கொண்டாடுகின்றன. இவ்வழியில் இங்கிலாந்து ஸ்பானிய அமெரிக்காவுக்கு 1743 வரை ஆண்டுக்கு 4800 நீக்ரோக்களை வழங்கும் உரிமையைப் பெற்றது. இது பிரித்தானியக் கள்ள கடத்தலுக்கு அதிகாரப்பூhவப் போர்வை ஆயிற்று. அடிமை-வர்த்தகத்தைக் கொண்டு லிவர்பூல் உப்பிக் கொழுத்தது. இதுவே அதன் ஆதித் திரட்டலுக்கான வழியாய் இருந்தது..... 1790 இல் ஆங்கிலேய மேற்கிந்தியத் தீவுகளில் சுதந்திர மாந்தர் ஒருவருக்கு 10 அடிமைகள் வீதமும், பிராஞ்சு மேற்கிந்திய தீவுகளில் 14 அடிமைகள் வீதமும், டச்சு மேற்கிந்தியத் தீவுகளில் 23 அடிமைகளும் இருந்தனர்....முடியரசுக் கடற்படைக்கு ஆள் சேர்த்தது போலவே தொழிற்சாலைகளுக்குக்கும் வலுவந்தமாய் ஆள் சேர்த்தனர்....பர்மிங்காம் போன்ற இடங்களில் வௌவேறு வட்டார வேலையில்லங்களிலிருந்து பழகு தொழிலாளர்களைக் கொள்முதல் பழக்கம் உடனே பிறந்தது.....அவர்களது குறியெல்லாம் குழந்தைகளை முடிந்தவரை அதிகமாய் வேலைவாங்குவதே... இவ்விதம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பாவமுமறியாத, கேட்பாரற்ற பிறவிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நெஞ்சு பொறுக்காது. அதீத உழைப்பால் இறப்பின் விளிம்புக்குச் செல்லும் வரை அவர்களைத் துன்புறுத்தினார்கள்....சவுக்கால் அடித்தார்கள்... சங்கிலியால் பிணைத்தார்கள் சித்திரவதை செய்தாhகள்.. இப்படி யெல்லாம் நேர்த்தியான முறைகளில் கொடுமைப்படுத்தினார்கள் பட்டினியால் எலும்பும் தோலுமாகி விட்டவர்களையும் பல சந்தர்ப்பங்களில் சவுக்காலடித்து வேலை வாங்கினார்கள்... சில சந்தர்ப்பங்களில் கொடுமை தாளமால் சிலர் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது... ஆங்கிலேயரது தூண்டுதலின் பேரிலும், ஆங்கிலேயர் தந்த கையூட்டுக்காவும் செவ்விந்தியர்கள் தம் கோடரிகளுக்கு அவர்களை இரையாக்கினர்கள் வேட்டை நாய் கெண்டு தாக்குதலும் குடும்மித்தோல் உரித்தலும் ~கடவுளும் இயற்க்கையும் தனக்கு வகுத்தளித்த வழிகள்" என்று பிரித்தானியப் பாராளுமன்றம் பறை சாற்றியது... அதிகாரிகள் தாமே விலை நிர்ணயித்து  பரிதாபத்துக்குரிய இந்தியர்களை இஷ்டம் போல் கொள்ளையிட்டார்கள்....1866இல் ஆண்டில் பட்டினியால் மாண்ட இந்துக்கள் தொகை ஒரிசா மாகாணத்தில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகம். தொழிலாளர்கள் சங்கங்கள் யாவும் ~சுதந்திரத்துக்கும் மனித உரிமைகள் பிரகடனத்துக்கும் எதிரான முயற்ச்சி" என்று அறிவித்தனர்... பிச்சையெடுத்துக் கொண்டும் இருக்கிற...  சிறையில் கசையடி தரலாம்.... இடது தோழில் போக்கிரி... சூடு போட்டு கடின உழைப்புக்க அனுப்ப வேண்டும். அவர்கள் மீண்டும் பிச்சை எடுத்துப் பிடிபட்டால், கருணை காட்டாமல் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்."15 என மூலதனம் எங்கும் இந்த ஐனநாயக முதலாளித்துவத்தின்  வெட்க்கம் கெட்ட சூறையாடல்களை மாhக்ஸ் சமூகப் பொறுப்புடன் பதிவாக்கியுள்ளார். எந்த இலக்கியமும் முடியாதை தத்துவக் கட்டுரைக்கு அழகாக தந்தத மட்டுமின்றி அதற்க்கு எதிராக யாரைவிட உறுதியாக போராடியதால்தான் இந்த முதலாளித்துவ உலகம் அவரின் குழந்தைகளையும், அவரை பட்டியிலும், நொயிலும் சாகடித்தனர். மார்க்ஸ் படியாதது எது, சொல்லாது எது என்பதற்க்கு எல்லை வாகுக்க முடியாத வகையில் உயர்ந்து நிற்க்கின்றார்.

டயானாச் சீமாட்டிகளின் மூதையார்கள் மக்களை கொன்றும், சூறையாடியும் கொழுத்த பணத்தில்தான், இன்றைய நகரிக முதலாளித்துவமும், அதன் ஐனநாயக வேடங்களும் வேஷம் போடுகின்றன. அதை விசுவசமாக கௌவ்விக் கொள்ளும் போது அதற்க்கும் அக் குணம் வந்து விடுகின்றது. அது பொய், அவாதூறு என அனைத்தின் அவலாட்சனத்தை பிரதிபலிக்கத் தொடங்கின்றது.

இந்த முதலாளித்துவ எடுபிடிகளின் அற்பனத்தனத்தை எதிர்த்தபடி கம்யூனிஸ்டுகள் விடக்கூடிய தவறுகளை ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டப் பாதையில் நின்று விமர்சிப்பதை எப்போதும் கம்யூனிஸ்டுகள் வரவேற்க்கும் அதே நேரம், அதை உள்வாங்கிக் கொள்ளவும், சுயவிமர்சனம் செய்யவும் என்றும் தயங்கியதில்லை. இல்லாத அனைத்தும் ஏகாதிபத்திய பாதையை பாதுகாக்க முன்வைக்கும் ஏகாதிபத்திய எச்சில்களே. இதை எப்போதும் எதிரிக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தில் மார்க்ச்சியவாதிகள் சந்திக்க தயங்கியதில்லை தயங்கப் போவதுமில்லை.

இந்த வகையில் வரலாற்றை திரித்து மறுத்து அதன் மீது சேறு வீசும் சங்கமனின் அவதூறுகளைப் பார்ப்போம். சரிநிகர் 152 இல்­ "நான் ஒரு சந்தர்ப்ப வாதியா? " எனக் கேட்டு எழுதுவதைப் பார்ப்போம். "வரலாற்றிலும் இதற்கு உதாரணம் உண்டு. 1930களில் Nஐர்மனியில், வீமர் அரசு வீழ்ச்சிக்குப் பின், இடதுசாரிகள் அனைவரும் ஹிட்லரின் குண்டர்களால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்த போது, ரஷ்ஷியாவில் இருந்து உதவி கிடைக்கும், கிடைக்கும் எனப் போராடிக் கொண்டிருந்த இடதுசாரிகளைச் சாகவிட்டு, Nஐர்மனியில் ஹிட்லருக்குக் காவுகொடுத்தான் ஸ்ராலின்! காரணம் உண்மையான சோசலிசப் புரட்சி nஐர்மனியில் ஏற்பட்டால் தன் சர்வாதிகாரமும், தலைமையும் பறிபோய்விடும் எனப்பயந்தான் ஸ்ராலின். ஈற்றில் அந்த ஹிட்லருடனேயே ஒப்பந்தம் செய்து கொண்டான். . . . . இது இடதுசாரி உலகில் நடந்த மாபெரும் சந்தர்ப்பவாத அயோக்கியத்தனம்" என்கிறார் வரலாற்று திரிபுவாதியான முதலாளித்துவ சந்தார்ப்பவாதி சங்கமன்.

வரலாற்று திரிபு, சேறுயடிப்பு, கம்யூனிச எதிர்ப்பின் ஊடாக பாசிசத்துக்கு முண்டு கொடுப்பு, இதன் மொத்த வடிவம் இன்றைய ஏகாதிபத்தியத்துக்கு காவடியெடுத்து பாதுகாப்பதுதான்.

nஐர்மனியில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடியது யார்? கம்யூனிஸ்டுகள் அல்லாத இவர்கள் யார்? இந்த முதலாளித்துவ பாராளுமன்றத்தின் ஊடான ஐனநாயகவாதிகளும், கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்களின் கூட்டு சமதானவாதிகளே கம்யூனிஸ்டுகளை வேட்டையாடினரே ஒழிய ஸ்ராலின் அல்ல கம்யூனிச எதிர்ப்பாளரே.

இன்று எம் மண்ணில் புலிகள் கம்யூனிஸ்டுகளையும், சனநாயகவாதிகளையும் வேட்டையாடும் போது அதற்க்கு காராணமான முதலாளித்துவ தரகு புலிகளே, அதற்க்கு முண்டு கொடுக்கும் உங்களைப் போன்ற எழுத்தாளர்களுமே ஒழிய வேறுயாருமல்ல. சொந்த மண்ணில் அதைப் பற்றி மௌன அங்கீகாரம் எங்கோ நடந்த விடையத்துக்கு கம்யூனிஸ்டுகள் மீது வரலாற்று திரிபுடன் கூடிய சேறுவீசல் தான் இந்தமாதிரி எழுத்தாளர்களின் ஏகாதிபத்தியத் துக்கு வாலாட்ட ல்.

nஐர்மனியில் புரட்சி வரக்கூடாது என யார் விரும்பினார்கள். முதலாளிகளும், ஏகாதிபத்தி யமும், உங்களைப் போன்ற எழுத்தாளர்களுமே. nஐர்மனியில் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வர வேண்டும் என நீங்கள் விரும்புவீர்களா? இல்லை, ஒருக்காலுமில்லை. ஆனால் ஸ்ராலின் மீது சேறடிப்பு ஏன்? ஸ்ராலின் உண்மையில் nஐர்மானியில் புரட்ச்சி வரவேண்டுமென உழைத்ததை சகிக்க முடியாத கம்யூனிஸ் எதிர்ப்பாளர்கள் அதைச் செய்யவில்லை எனக் கூறுவதன் முலம் மீண்டும் கம்யூனிச அபயாம் ஏற்படுவதை தடுக்க அதன் அணிகளை சிதைக்க கனவுகாண்கின்றானர். இது ஹிட்லரின் கோயம்பாஸ்சின் அதே பாசிசத்தனம் தான்.

சோவியத்யூனியனும், ஸ்டாலின் எப்படி கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவியிருக்க முடியும்? ஐயா ஆய்வுக் குஞ்சே கொஞ்சம் உதவும் கரங்களை அவிழ்த்து விடுங்களேன். இப்படி உதவியிருக்க முடியும் என ஒருவரியைத் தன்னும் எழுதமுடியாது கோழையாகிப் போனீர்ரோ.  அதாவது ஸ்டாலின் படையெடுத்து உதவியிருக்க முடியும் என்று எடுத்தால், இதை இவர்களே ஆக்கிரமிப்பு என்றும், புரட்சி நடந்து விடும் எனப் பயந்து, அதிகாரம் பறிபோய் விடும் எனப் பயந்து என என்னென்ன கூற முடியுமோ அதை எல்லாம் வளைத்து பிடித்து இதே கம்யூனிஸ்ட் எதிர்ப்பு எழுத்தாளர்களே எழுதியிருப்பர். அத்துடன் உலக யுத்தம் தொடங்க கம்யூனிஸ்ட்டுகளின் ஆக்கிரமிப்பே காராணம் என எழுத சனநாயகத்தின் பெயரில், இதற்க்கு பதிலளிக்க வேண்டியது எமது கடமை என்ற பெயரில் சரிநிகர் பிரசுரித்திருக்கும்.

கம்யூனிஸ்டுகள் போராடுகின்றனர் என்றால் சொந்தப் பலத்திலேயே ஒழிய, வெளி ஆதரவுகளில் இருந்தல்ல. இது எப்போதும் நிபந்தனையானது. மற்றைய நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நேரடியாக, மறைமுகமாக உதவுவது என்பது சர்வதேச மற்றும் குறிப்பான நிலைமைக்குள் உட்பட்டதுதான். இது படை நகர்வு வரை பொருந்தும். இது அந்த நாடுகளின் வேண்டுகோள், மக்களின் நிலைமை என்பவற்றுடன் பொருந்தும்.

nஐர்மனி கம்யூனிஸ் கட்சி எப்போதும் சோவியத் உதவியைக் கோரியதில்லை. மாறாக சொந்தப் பலத்தில் சொந்த தியாகத்துடன் கம்யூனிசத்துக்கே உரிய போர்குணாம்சத்துடன் போராடியவர்கள். அதை உயர்த்திக் குரல்கொடுத்தனர்.

சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலம் பாசிசம் தொடர்பாக விடுத்த எச்சரிக்கையை nஐர்மன் கம்யூனிஸ்க் கட்சி  நிராகரித்தன் ஊடாக பாசிட்டுகளை எதிர்கொண்டு போராட தயார் அற்ற நிலைக்கு கட்சியை நகர்த்தி அழிவுக்Nக உள்ளாக்கினர். இதைப் பிரஞ்சுக் கட்சி சரியாக கையாண்டு பாசிட்டுகளை வெற்றிகரமாக எதிர்கொண்டனர்.

6வது அகிலத்தில் பாசிசத்தை எதிர் கொள்ள எச்சரித்த நிலை தொடர்பாக 7வது அகிலத்தில் (1935இல் ஆகஸ்டு 2ம் திகதி) டிமிட்ரோவ் அளிக்கப்பட்ட அறிக்கையை அகிலம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. இதில் சொல்வது என்ன எனப் பார்ப்போம்.

1935 வரை nஐர்மனியில் கம்யூனிஸ்டுகள் உள்ளடக்கி 4200 பேரை கொன்றும், 3,17,800 பேரை கைது செய்தும், 2,18,600 பேரை சித்திரவதை செய்தனர் nஐர்மன் பாசிட்டுகள். ஆஸ்திரியாவில் 1900 பேரைக் கொன்றும், 10,000 பேரை காயப்படுத்தியும் 40,000 பேரை கைது செய்தனர் சனநாயக பாராளமன்ற வாதிகள்.2

மார்க்சிய பெண்ணிலைவாதியும், அதற்க்காக தீவிரமாக போராடியவருமான கிளாரா செற்கின்    nஐர்மன் பராளமன்ற உறுப்பினராக இருந்தபடி எப்படி பாசிசத்தை எதிர் கொண்டர் எனப் பாhப்போம்.

1932 இல் பராளமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதுபெரும் அங்கத்தவர் என்ற நிலையில் பராளமன்ற தொடக் உரை ஆற்ற அழைத்த போது, ஐனநாயகத்தின் உற்பத்தியான பாசிட்டுகள் அவர்கள் சார்ந்த பத்திரிகைகள் "அவர் nஐர்மன் பாராளு மன்றத்தினுள் நுழைய துணிந்தால் அவருடன் கணக்குத் தீர்த்துக் கொள்ளப்படும்." என பிரகடணம் செய்தனர்.

மிகுந்த தள்ளாத வயதிலும் மொஸ்கோவில் இருந்து நாடு திரும்பி சமூக ஐனநாயக கட்சியின் சமரசத்தை அம்பலப்படுத்தி, பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்ணனியைக் கட்டுமாறு உணர்ச்சிமிக்க பேர் உரையற்றினர்.

அவர் நடுங்கும் கரத்தால் சாகும் முன் எழுதிய வரிகள் "அன்று பிரான்ஸ் முதலாம் பிரான்சிஸ்  பலேரியா போரில் தோற்றுவிட்ட பிறகு எழுதினான் "மானத்தை தவிர எல்லாவற்றையும் இழந்து விட்டேன்" என்று. இத்தகைய பெருமை மிக்க வார்த்தைகளுக்கு நேர்மாறாக இரண்டாவது அகிலம் கீழ் கண்டவாறு பிரகடணம் செய்யவேண்டும். எல்லாவற்றையும்  இழந்து விட்டோம், முதலாளித்துவ உலகிலிருந்து பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகவும், உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும், போராடியவர்கள் என்ற பெருமையை வேறு எல்லாவற்றிற்கும் மேலாக இழந்து விட்டோம். nஐர்மன் சமூக சனநாயகம் புரட்சிகர மாhக்சியத்தைக் காட்டிக் கொடுத்திலிருந்து தொடங்கி எப்போதும் துரோகங்களையே செய்து வந்துள்ள இரண்டாவது அகிலம் தனது அழிவை தானே தேடிக் கொண்டது."10  என மரணசணத்தில் எழுதியிருந்தார்.

"மேற்க்கு nஐர்மனியில் டீரனெநளமயணெடநச ஆன யுனநகயெரநச பதவிக்கு வந்ததும் கொம்யூனிஸ்ட்களை சிறையிட்டான். 1932 இல் 287000 உறுப்பினர்களையும் Nஐர்மன் பாராளுமன்றத்தில் 100 அங்கத்தவர்களையும் கொண்ட இரண்டாவது மிகப் பெரும்கட்சியாக விளங்கிய கொம்யூனிஸ்ட் கட்சி நாசிகளால் அழிக்கப்பட்டது."9 இதை இந்த பராளமன்ற கம்யூனிச எதிர்ப்பில், உங்களைப் போன்ற எழுத்தளார்களின் பராமரிப்பில் தான் நடந்தேறியது.

ஆம் பாசிசத்தை இந்த உண்ணதமான சனநாயகத்தை பாதுகாத்த போக்கில்தான் ஆட்சிக்கு ஏறியது என்பதும், கம்யூனிஸ்டுகள் இந்த சனநாயக பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் தான் உலக மகக்ளை பாதுகாத்தனர் என்பதான் உண்மையான வரலாறுயாகும்.

nஐர்மனியில் பாசிசத்தை தடுத்து நிறுத்த புரட்சி மட்டும்தான் ஒரே தீர்வாக இருந்தது. ஏன்எனின் உலகம் மீள பங்கிடப்பட வேண்டிய வகையில் ஏகாதிபத்திய முரண்பாடு யுத்ததுக்குள் தீர்வை கொண்டிருந்தது. இந்நிலையில் பாசிட்டுகளின் ஆட்சியை பின் தள்ளி புரட்சிக்கான தயாரிப்பைச் செய்ய சமூக சனநாயக்கட்சியுடன் கூட்டணிக்கு முன்வந்திருக்க வேண்டும். ஆனால் சமூகசனநாயக் கட்சி விடாப் பிடியாக ஐக்கியப்பட மறுத்து பாசிசத்துக்கு உதவினர்.

இதே நேரம் கம்யூனிஸ்க் கட்சி பாசிச அபாயத்தை குறைத்து மதிப்பிட்டனர். இது "இத்தாலி அல்ல nஐர்மனி" என கட்சியின் ஒருபகுதி பெருமை பேசியது. nஐர்மனியில் பாசிச வெற்றி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றனர். இப்படியாக தனது கட்சியை தற்கொலைக்கு வழிகாட்டினர். இதன் அதிகூடிய வகையில் “Pன்ஸ் நூமான் "ஹிட்லருடைய "மூன்றாவது சாம்ராஐயம்" எப்போதாவது வந்தால் அது ஆறு அடி ஆழத்திற்கு அடியில் தான் இருக்கும். அதன் மீது தொழிலாளர்களின் வெற்றிகரமான ஆட்சி நிறுவப்படும்"· (பக்கம்-27) என்றார். இதை அன்று எந்தத் தயாரிப்புமின்றி வாய்பந்தாடியதை சர்வதேசிய அகிலம் தொடர்ச்சியாக விமர்சித்தது.

ஒரு கட்சி தனது நாட்டு நிலையை சரியாக மதிப்பிடவும், அதை எதிர் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டுமே ஒழிய தீடிர் தாக்குதலைக் கண்டு திகைத்து தற்கொலைக்கு செல்ல முடியாது. இங்கு சோவியத் உதவியின்மை என்ற அவதூறு  நகைப்புரியாதாகின்றது.

அடுத்து nஐர்மனி-சோவியத் ஒப்பந்தம் பற்றி சேறடிக்கின்றர். nஐர்மனி-சோவியத் ஒப்பந்தம் ஏன் எதனால் ஏற்பட்டது. இதற்க்கு சனநயாக முதலாளித்துவ நாடுகள் பேசும் சுரண்டல் வரலாறே உண்டு. அதை ஆராய்ய தொடாச்சியாகப் பாhப்போம்.

ஏகாதிபத்திய யுத்தத்துக்குள் கம்யூனிஸ்டுகள் நாடு பிடிக்க ஈடுபடுவதில்லை. வர்க்க மோதலைக் கட்டுப்படுத்த, அதிக அளவு சுரண்ட புதிய நாடுகளை கைப்பற்ற ஆளும் வர்க்கத்தால் தெரிவு செய்யப்பட்ட வடிவமே பாசிசமாகும். இது சுரண்டலை அடிப்படையாக கொண்டு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடவும், ஒழித்துக் கட்டவும் ஆளும் வர்க்கத்தால் மிக நேர்த்தியாக தெரிவு செய்யப்பட்ட வடிவமே சனநயாக பாசிசம்.

பாசிசம் உங்களைப் போன்று பொய்களில் உருளும் அறிவாளிகளை வென்று எடுக்கவும், மக்களை ஏமாற்றி வைத்த கோஷங்களைப் பார்ப்போம். nஐர்மனியில்" தனிநபர்களின்  நலனைகளைக் காட்டிலும் பொது நலன்கள் உயர்ந்தவை முக்கியமானவை" இத்தாலியில் " நமது அரசு முதலாளித்துவ அரசல்ல. ஆனால் ஒன்றிணைக்கப்பட்ட கூட்டரசாகும்" யப்பானில் "சுரண்டல் அற்ற யப்பான்"2 (பக்கம் 9) என்று கூறித்தான் ஆட்ச்சியைக் கைப்பற்றினர்.

இப்படி ஏமாற்றிய சனநாயகமே எப்போதும் உயிர்வாழ்கின்றது. சனநாயகவாதிகளின் உண்மை என்பது எப்போதும் பொய்களையும் அவதூறுகளையும் ஆதாரமாக கொள்கின்றது. பாசிசம் உங்களைப் போல் கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்ட சனநாயக நபர்களின் உதவியுடன் அரங்குக்கு வந்தது.

"முன்றாவது பேராசு" (nஐர்மனி) கம்யூனிசத்தையும் சோசலிசத்தையும் "உலகம் முழுவதின் எதிரி" என அறிவித்தபடி "மேற்க்கத்திய நாகரீகத்தின் கோட்டை என்றும் கிழக்கு ஏதிரான சிலுவைப் போர்" க்கு முழுச்சுதந்திரம் வேண்டுமெனக் கோரினர்."3 (பக்கம் 13) இதன் மூலம் மட்டுமே இரண்டவது உலக யுத்தம் நியப்படுத்தப்பட்டு மக்களை ஆய்யத்தம் செய்ய சனநாயகவாதிகளும், சனநாயக அரசுகளும் இராணுவ மயமாக்கி nஐர்மனியை யுத்தத்துக்கு முன்தள்ளி தயாரித்தனர்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரன்ஸ்சும், மற்றவர்களும் கம்யூனிச எதிர்ப் பிரச்சரத்தில் ,ஈடுபட்டபடி nஐர்மனியை ஆயுதபானியாக்கியதை ஹிட்லர் வருணிப்பதில் இருந்து சில உண்மைகளை கணமுடியும்.

"  "போல்ஷிவிக் பூதத்தின் உதவி கொண்டு, சிவப்பு பிரளயத்திற்க்கு எதிரான கடைசி அரண் nஐர்மனி மட்டுமே என்று நம்பச் செய்துதான் என்னால் வெர்செய் வல்லரசுகளை கட்டுப்படுத்தி வைக்க முடியும் . . . . நெருக்கடியான காலகட்டத்தைக் கடக்க நமக்குள்ள ஒரே வழி வெர்செயிடமிருந்து பிரிந்து மீண்டும் ஆயுதந்தரிப்பதாகும்"4 (பக்கம்- 16)என்றான்.

யுத்தத்துக்கான முழுத் தயாரிப்புக்கு பின் மேற்க்கு நாடுகளின் (இது உங்களுக்கும் அப்பட்டமாக பொருந்தும்) கம்யூனிச எதிர்ப்பில் தான் நிறைவேற்றப் பட்டதை ஹிட்லரின் கருத்துக்குகள் தெளிவாக்கின்றன. சோவியத் மீதான தாக்குதலை நடத்துவிப்பதன் முலம் உலக யுத்தத்தில் nஐர்மனி பலவீனமான நிலையில் சமாதானத்தின் பெயரிலும், அமைதியின் பெயரிலும், மக்களின் பெயரிலும் தலையிட்டு சோவியத் உள்ளிட உலகை மீளப் பங்கிட்டுக் கொள்ள மேற்க்கு சனநாயகவாதிகள் விணிவடிய nஐர்மனியை பலப்படுத்தி காத்துக் கிடந்தனர். இதற்க்கு எதிராக சோவியத் விடுத்த அனைத்து பாசிச எதிர்ப்பு முன்னணிக்கும் வரமறுத்த பிரிட்டன், பிரான்ஸ் ஏகாதிபத்தியம் nஐர்மானி, இத்தாலி பாசிச ஏகாதிபத்தியத்துடன் 1938 செப்ரெம்பர் 29ம் திகதி மூனிக்கில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடனர்.

இதில் ஹிட்டலரும் முஸ்ஸோலீனியும், பிரஞ்சுப் பிரதமர் ஏ.டிலடியேவும், பிரிட்டிஸ் பிரதமர் நே.சேம்பர்லேனும் இரண்டம் உலக யுத்தத்தை சோவியத்துக்க எதிராக நடத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதற்க்கு பின் செப்ரெம்பர் 30ம் திகதி பிரிட்டிஸ்-nஐர்மனி புதிய ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. இது பரஸ்பரம் தாக்குவதில்லை எனப் பிரகடம் செய்தது. பின் டிசம்பர் 6ம் திகதி பிரன்ஸ்சும் சேர்ந்து கொண்டது. இதை சோவியத் கண்டித்தது. இதற்க்கு பதில் அளித்த சேம்பர் "உலக அமைதியைக் காப்பாற்ற"3 (பக்கம் 17) சோவியத் மீது யுத்த்ததை நகர்த்தினர். இதற்க்காக தமது காலனிகளையும், தமது செல்வாக்கில் இருந்த நாடுகளையும் ஆக்கிரமிக்க வழிவிட்டு "தலையிடாமை" "நடுநிலை" யின் பெயரில் பச்சைக் கொடி காட்டினர். இந்த வகையில் 1938 அக்டோபர் முதலாம் திகதி  பாசிச Nஐர்மனிய இராணுவம் சுதேத் பிரதேசத்துக்குச் சென்றது. 1939ஆம் ஆண்டு மார்ச்சில் செக்கோஸ் லொவாக்கியா முழுவதையும் கைப்பற்றினர். 1939 வசந்த காலத்தில் லித்துவேனியவின் ஒரு பகுதியைக் கைப்பற்றினர். ருமேனியாவுக்கு பொருளாதார சுற்றிவழைப்பூடாக சரணடைய வைத்தனர். 1939 எப்பிரலில் இத்தாலி அல்பானியாவைக் கைப்பற்றினர். இதற்க்கான முழுப் பொறுப்பு பிரிட்டிஸ்-பிரஞ்சு சனநாயவாதிகளின் கம்யூனிஸ்ச எதிர்ப்பில்  நடந்தேறின.

இதையொட்டி அமெரிக்கா வரலாற்று ஆசிரியர் பிரெடெரிக் ஷீமன் ~~இரண்டாம் உலக யுத்தத்தின் முன்னணைப்  பொழுதில் சனநாயக மக்களின் பொறுப்பு மிக்க பிரதிநிதிகள் வெளிப்படுத்திய முட்டாள்தனம் மற்றும் கபடத்தோடு ஒப்பிடக் கூடிய எதையும் மனித பலவீனம், முட்டாள்தனம் மற்றும் மனிதர்களால் இழைக்கப்பட்ட குற்றங்கள்"3 (பக்கம்-18) குறித்த சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக யுத்ததுக்கு காவடி எடுத்த துரோக சந்தர்ப்ப வாதம் மேற்க்கு நாட்டு சனநாயகவாதகளால் இழைக்கப் பட்டதை முதலாளித்துவ சனநயாகவாதி சங்கமன் வரலாற்ரை திரித்து ஸ்ராலின் மீது தள்ளும் திரிபுடன் கூடிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முடிமறைத்து பாதுகாக்கும் தனம் ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் தானே? இந்த உலக யுத்த ஆக்கிரமிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட ஹிட்லரின் வெளிநாட்டு அமைச்சார் ரிபென்ட்ரோப் கூறுவதை மேலும் பார்ப்போம்.

"இந்தக் கிழவர் இன்று பிரிட்டிஷ் பேரரசின் மரணதண்டனையில் கையொப்பமிட்டு இந்த தண்டனையை நிறைவேற்றும் தேதியை முடிவு செய்யும் பொறுப்பை எங்களுக்கு விட்டுள்ளார்."5 என்றான். இரண்டாம் உலக யுத்தத்தின் மூலப் பொறுப்பு மேற்க்கு சனநாயகவாதிகளின் கம்யூனிச எதிர்ப்பில் கையெழுத்திட்டதிலும், ஆயுதபாணியாக்கியதிலும் தொடங்கியது. யுத்ததின் போக்கில் எப்படி எப்போது எங்கு தாக்குவது என அனைத்தையும் மேற்க்கு சனநாயகவாதிகள் nஐர்மனி பாசிஸ்டுகள் இடம் தாரை வார்த்தன் ழூலம் சோவியத் மீதான தாக்குதலை ஊக்குவித்து ராஐதந்திர நகர்வில் திவிரமாக இறங்கினர்.

இது போல் ஐப்பானை ஆயுதபாணியாக்கி சோவியத் மீது தாக்குதலை நடத்த அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து பெரியாளவில் ஆயுத தாளபாட ஏற்றுமதியை நடத்தின. யாப்பான் இறக்கமதி செய்த ஆயுத தளபடங்களில் 86மூ தை இந்த முன்று நாடுகளும் ஏற்றுமதி செய்தன.

யாப்பான் 1936ம் வருடம் 25ம் திகதி nஐர்மனியுடன் "கம்யூனிச அகில எதிர்ப்பு உடன்படிக்கையை"3 (பக்கம் 23)செய்து கொண்டது. 1940இல் செப்பெடெம்பர் 27ம் திகதி இத்தாலியும் இணைந்து கொண்டதன் முலம் சோவியத் மீதான தாக்குதலை நடத்த தயாராகினர்.

இது குறித்து பிரிட்டிஸ் அரசியல்வாதி டே.லாயிட் ஐhர்ஐ கேலியாக கூறியதைப் பார்ப்போம்.

"ஹிட்லருடன் கெஞ்சிக்குலாவ சேம்பர்லோன் முன்று முறை தொடர்ந்தாற் போல்சென்றர். முசோலினியைக் கட்டித் தழுவவும் அபிஸ்ஸீனீயாவைக் கைப்பாற்றியதற்காக எமது அதிகாரபூர்வமான அங்கீகார வடிவில் பரிசளிக்கவும் அவர் ஸ்பெயினில் தலையிடுவதற்க்கும் நாங்கள் எந்தவிதத்திலும் தடையாக இருக்கமாட்டோம் என்று சொல்லவும் சேம்பர்லோன் விசேஷமாக ரோமிற்க்கு சென்றார். தனது உதவியை நமக்கு முன்மொழியும் அதிக வல்லமை வாய்ந்த ஒரு நாட்டிற்கு  நம்மை பிரதிநிதித்துவப்படுத்த அந்நிய அமைச்சர கத்திலிருந்து அதிகாரியை அனுப்பினார்கள் என்று ஏன் கூறவேண்டும்? இதற்க்கு ஒரு விடைமட்டுமே இருக்க முடியும். கனவான் நேவில் சேம்பர்லோன், லார்ட் “hலிபாக்ஸ் மற்றம் சர் சைமன் ஆகியோருக்கு ரஷ்யாவுடன் கூட்டுச்சேர விரும்பமில்லை."6 இந்த அளவுக்கு இரண்டாம் உலகயுத்தச் சதிகள் கட்டியமைக்கப்பட்டன.  இந்தநிலையில் தான் சோவியத்யூனியன் யுத்தத் தவிர்ப்பு உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது.

இந்நிலையில் 1939 ஆகஸ்டு 23ம் திகதி nஐர்மனி முன்மொழிந்த பரஸ்பரம் தாக்குவதில்லை என்ற ஒப்பந்தித்தில் சோவியத் கையொப்பமிட்டது. அதாவது மேற்க்கு நாடுகள் கம்யூனிச எதிர்ப்பு முன்னணி ஒப்பந்தத்தை nஐர்மனியுடன் செய்து பதினொரு மாதங்களின் பின், மேற்க்கு நாடுகள் உடன் பாசிச எதிர்ப்பு ஒப்பந்தம் செய்ய முனைந்து தோல்வி பெற்ற நிலையில்தான் சோவியத்-nஐர்மன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதான் உண்மை வரலாறு.

இந்த ஒப்பந்தம் உலக யுத்ததின் போக்கையே தலைகீழ் ஆக்கியது. மேற்க்கு நாடுகள் சோவியத் மீதான தாக்குதலை நடத்த துடித்து செய்த அனைத்து துரோக ஒப்பந்தங்களும் தவுடு பொடியானது. இதனால்தான் சங்கமன் இடதுசாரி வரலாற்றின் மாபெரும் சந்தர்ப்பாவாத அயோக்கியத்தனம் என்கின்றர். ஆம் மேற்க்கு நாடுகளின் கம்யூனிச எதிர்ப்பு ஆக்கிரமிப்பை தவுடு பொடியாக்கிய ஸ்ரலினை முதலளித்துவவாதிகள் இப்படி அழைப்பது அந்த வர்க்கத்தின் தோல்வியை பாட்டாளி வர்க்கம் வென்றதால் எழும் கூச்சல்களே இவை.

இதை பிரிட்டிஸ் இராணுவ வரலாற்று ஆசிரியர் லிடல் கார்ட் "இரண்டவது உலக யுத்தம்" என்ற நூலில் "போலந்திற்க்கு நேரடி உதவி அளிக்கவல்ல வல்லரசாகிய ருஷ்யாவின் ஆதரவைப் பெறுவதுதான் யுத்தத்தைத் தவிர்ப்பதற்கான ஓரே வாய்பாக இருந்தது.7

சோவியத்தின் சரியான ராஐதந்திரம் யுத்த்ததை திட்டமிட்டு நகர்த்தியவர்களை நோக்கி திரும்பியது. இதை பிரபல பிரஞ்சு அரசியல் பிரமுகர் ஏரியோ "பாசிச nஐர்மனி, தனது கழுத்துக் கயிற்றை அறுத்து, எஐமானையே கடித்த நாயைப் போலிருந்தது.8 "(பக்கம்-38) என சரியாக அன்று மட்டுமல்ல இன்றும் சங்கமனுக்கும் பதிலாளிக்கின்றார்.

இந்த ஒப்பந்தம் சரியான வகையில் கையெழுத்தானது மட்டுமின்றி உலக ராஐதந்திர வராலாற்றில் மிகத் தீர்க்கமானதும் கூட. ஒப்பந்தத்தை செய்த கம்யூனிஸ்க் கட்சியும் அதை தலைமை தாங்கிய ஸ்ராலினும் எதிர் பார்த்தபடி யுத்தம் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் நடந்து இருப்பின் ஒருக்காலும் யுத்தம் சோவியத் மீது நகர்ந்து இருக்கமாட்டது. இங்கும் பிரஞசு-பிரிட்டனின் கம்யூனிச எதிர்ப்பு சொந்த நாட்டையே பாசிட்டுகளுக்கு தியாகம் செய்து சோவியத்பால் யுத்தத்தை திணித்தனர்.

அன்று பிரான்ஸ்கும்-பிரிட்டனுக்கும் எதிராக nஐர்மனி போலாந்தில் தாக்குதலை நடத்திய போது படைப் பல நிலையைப் பார்ப்போம்.8

நாடுகள்  டிவிசன் டாங்கி பிரங்கி விமானங்கள் படையினர் கப்பல்

ஜெர்மனி 62 2800 6000 2000 1600 000 7 நீர்மூழ்கி

போலந்து 37 870 430 800 10 00 000 5 நீர்மூழ்கி

 

பிரன்ஸ் மீதான தாக்குதலின் போது படைப்பல நிலையை ஆராய்வோம்.8

நாடுகள் டிவிசன் விமானம் டாங்கி பீரங்கி

பிரான்ஸ் பிரிட்டிஸ் 147 3 800 3 100 14 500

ஜெர்மனி 136 3 824 2 580 7 375

ஜெர்மனியின் ஆக்கிரமிப்பின் போது மேற்க்கு நாடுகள் பாசிசத்தை உண்மையாக எதிர்ப்து இருப்பின் ஒருக்காலும் இரண்டாம் உலக யுத்தம் விரிவுபட்டுயிருக்காது. அதுபோல் இந்தளவு சேதமும் எற்பட்டிருக்காது. சோவியத் மீதும், கம்யூனிசக் கட்சி மீது இருந்த வெறுப்பு பாசிட்டுகள் இடம் நாட்டை தரைவார்த்த சனநாயவாதிகள் இன்று கம்யூனிஸ்டுகள் மீது சேறுயடிப்பது என்பது வர்க்கப் போரை தடுக்கும் தொடர்ச்சியில்தான்

இதை ஒட்டி ஜெர்மனி nஐன்ரல்கள் பீல்ட்மார்ஷல் வெகைடல், nஐனரல் யோடல் "பிரான்ஸ் பிரிட்டனும் மட்டும் தாக்குதலைத் தொடுத்திருந்தால் எங்களால் முற்றிலும்கற்பனையான தற்கப்பைத்தான் வைத்திருக்க முடியும்"9

"1939ம் ஆண்டில் நாங்கள் தோல்வியடையவில்லை என்றால் அதற்க்கு காரணம், போலந்துடன் நாங்கள் இறக்கியிருந்த போது மேற்கே 23 nஐர்மன் டிவிஷன்க ளுக்கு எதிராக நின்ற சுமார் 110 பிரான்சு மற்றும் பிரிட்டீஷ் 4 டிவிஷன்கள் முற்றிலு மாக செயலற்று இருந் தது."9

ஆறு கோடி மக்களின் உயிர், பல கோடி சொத்துகளை பாதுகாக்க மறுத்த கம்யூனிச விரோத ஊக்குவிப்புதான் இன்றும் சங்கமன் போன்ற பிரதிகளின் பிதற்றல்கள் என்பதை மேல் உள்ளது துல்லியமாக்கின்றது.

இதை பிரான்ஸ் ஆசிரியர் ஒருவர் எழுதியது எவ்வளவு சிறப்பாக பொருந்துகி றது எனப் பார்ப்போம்.

"நமது லோரைன் சேனையின் முழுச் செயலின்மைக்கான காரணத்தை அரசியல் நிலைகளில்தான் தேடவேண்டும்." என்கின்றர்

இந் நிலையில் ஸ்ராலின் ராஐதந்திரத்தின் மீக முக்கியமான தீர்க்க தரினத்தை நாம் பார்க்கமுடியும். அதாவது யுத்தத்தை மூட்டிவிட்ட ஏகாதிபத்தியத்துக்குள் நகரும் பட்ச்சத்தில் யுத்தம் சோவியத்பால் திரும்பாது எனக் கணித்ததும் இது உலக புரட்சியின் முன்னோட் டமான பாதையை திறக்கும் வகையில் கணிக்கப்பட்டது. ஆனால் கம்யூனிச விரோதத்தில் முழ்கிக் கிடந்த சமாதான சனநாயகவாதிகள் யுத்தத்தை நடத்தாது பின்வாங்கிச் சென்று பாசிட்டுகளை யுத்ததுக்கு தயார்படுத்தினர். இதை யாராலும் மறுக்கமுடியாது.

யுத்தத்தில் பாசிசத்தை எதிர்த்து போராடியதில் கம்யூனிஸ்ட்டுகள் என்றும் பின்நின்றதில்லை. யுத்தத்தின் இழப்பு, பிரான்ஸ்-பிரிட்டிஸ் படைப்பிரிவுகள் பாசிட்டுகள் இடம் கம்யூனிசத்துக்கு எதிராக காட்டிக் கொடுத்து செயல்பட வளங்களை கொடுத்தை இரண்டாம் உலக இழப்புகள் தெளிவாக்கின்றன.12

நாடுகள்         இறந்தோர் தொகை

சோவியத் யூனியன் 24,000,000

போலந்து        6,028,000

யூக்கோசிலேவியா  1,600,000

பிரான்ஸ்        520,000

செக்கோசிலேவியா 364,000

இங்கிலாந்து      320,000

அமெரிக்கா      320,000

nஐர்மனி        9,700,000

இத்தாலி        400,000

யுத்தத்தின் பின் கம்யூனிசத்துக்கு எதிரான ஐனநாயகம் மிளிரும் nஐர்மனியின் இன்றைய நிலைமை தொடர்பாக சிலவற்றைப் பார்ப்போம்.13

ஜெர்மனிய இராணுவ முகம்கங்களில் 37க்கான பெயர்கள் பாசிட்டுகளினதும், நாசி nஐனர்களினதும் பெயர்களை கொண்டதுடன், இவர்கள் யுத்த குற்றவாளியாக இனம்கணப்பட்டவர்கள். உலகின் யுத்தத்தினை பாதுகாக்கும் மருத்துவ பிரிவான செஞ்சிலுவைச் சங்கம் யுதர்களுக்கு இரண்டாம் உலக யுத்தத்தில் மருத்துவம் செய்யவில்லை. மாறாக யூதர்களை வதைத்துக் கொன்ற நாசி முகாம் பொறுப்பளார்களை செஞ்சிலுவை உத்தியோகத்தராக வேடம் இட்டு ஆஐன்டீனாவுக்கு தப்பியோட உதவியவர்கள். இதுபோல் தான் இத்தாலி போப்பண்டவரும், கத்தோலிக்க மதத்தலைமையும் நாசிகளுக்கு நாயக சேவை செய்தனர். ஏன் nஐர்மனியை பிரித்த மதில் கூட கம்யூனிசத்தை  வேர் அறுக்க கம்யூனிச எதிரிகளால் கட்டப்பட்டதே. 1961 ஆம் ஆண்டு வியன்னா நகரில் குருசேவ் - கெனடி இடையில் எற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி, சீமேந்து மேற்க்கு nஐர்மனியில் இருந்து வழங்கப்பட்டு மதில் கம்யூனிச எதிர்ப்பாக எழுப்பப்பட்டது. மதில் திட்டமிட்டபடி கட்டிமுடிக்க சீமேந்து மேற்க்கு nஐர்மனி வழங்கி கட்டிமுடித்த பின் தான் மேற்க்குnஐர்மனி திட்டமிட்டபடி எதிர்த்து கம்யூனிசத்துக்கு எதிரான பிரச்சரத்தை தொடங்கின. இப்படி தான் கம்யூனிச புரளிகள் வரலாற்றில் கட்டப்படுகின்றன.

உலகயுத்தத்தின் தோற்றுவாய் nஐர்மனி மட்டுமல்ல. கம்யூனிச எதிரான சமாதான சனநாயகவாதிகளான அனைத்துப் பிரிவும் கம்யூனிச எதிர்ப்புடன், உலகை மிளக் கைப்பற்றும் கனவுடன் யுத்தத்தை தயார் செய்து நடத்தினர். குற்றவாளிகள் nஐர்மனி மட்டுமல்ல. யுத்த சூத்திரவாதிகள் இன்று பந்தை வராலாற்று திரிபுகள் உடன் கம்யூனிஸ்டுகளை நோக்கி வேகம் வேகமாக எறிகின்றனர். ஆணால் வராலாறு என்பது உண்மையின் பக்கமென்பதால் இந்த கதையாளப்புகள் அந்த இடத்திலேயே பொசுங்கிப் போகின்றன. இதுதான் சங்கமன் போன்றோரின் அவதுறுகளும் கழிவுகளும் வீசபப்படும் அழுக்கும், நாற்றம் நிறைந்து போய்யுள்ளது.

1.புள்ளிவிபர ஆதாரம்  - LA NOUVELL économie mondiale en chiffres par PATRICE touchard-

2.ஐக்கிய முன்னணி தந்திரம் -டிமிட்ரோவ்-

3.இரண்டாவது உலக யுத்தம் -வி.அ.மத்சுலேன்கோ-

4.K.LUDECKE, I knew Hitler, New york, 1938,p,468

5.சோவியத் யூனியனின் சுருக்கமான வரலாறு, மாஸ்கோ,நவூக்கா,1972 பக்கங்கள் 303-304

6.W.Coates, Z.Coates, A History of Angolo-Soviet relations, London, 1945 p 614

7.இரண்டாவது உலக யுத்தம், இராணுவ பதிப்பகம், பக்கம் 27

8.சமர்-14

9.நியு ரென்பார் விசரானை தொகுதி, 1.

10.சக்தி இதழ் 2.4

11.அம்மா -9

12.RED STAR -8.2

13.அம்மா 9 -தமிழரசன் கட்டுரை

14.மூலதனம் பாகம் 1.2 பக்கம் 863

15. .மூலதனம் பாகம் 1.2