Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நேபாள புரட்சியின் பின்னடைவு:தலைமையின் துரோகத்திற்கு எதிராக தோழர் கிரண் அழைப்பு....

  • PDF

இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கும்,உழைக்கும் மக்களுக்கும் தெம்பூட்டும்,நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நேபாள புரட்சி,நேபாள மாவோயிச கட்சித்தலைமையின் காட்டிக்கொடுத்தலால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.மக்கள் விடுதலை ராணுவமும் நயவஞ்சகமான முறையில் கலைக்கப்பட்டுவிட்டது.

ஆனாலும், நேபாள மாவோயிசக் கட்சியின் மிக முக்கிய தலைவர்களும்,அணிகளும் கட்சித்தலைமையின் துரோகக் காட்டிக்கொடுத்தலுக்கு எதிராக இன்று களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.அப்போராட்டத்தின் ஒரு அங்கமாக நாடு தழுவிய அளவில் புரட்சியாளர்களின் கூட்டத்தைத் தோழர் கிரண் தலைமையிலான புரட்சிகர அணியினர் கூடுவதற்கு அழைப்பை வெளியிட்டுள்ளார் அதனை இங்கு வெளியிடுகிறோம்.

நாடு தழுவிய கூட்ட அழைப்பு.

தோழர்கள் கிரண், பாதல் ஆகியோர் செய்தி குறிப்பு ஒன்றை நேபாள மாவோயிச கட்சியின் சார்பாக வெளியிட்டுள்ளார்கள். (அதில் கட்சித் தலைமையோடுட் கட்சியின் ஒரு பகுதி தலைவர்களும் வேகமாக தேசத்தை அடிபணிய வைக்கவும், வலது திருத்தல்வாதத்தில் விழ வைக்க  ப்பட்டு கொண்டிருக்கிற இந்த குழப்பமான சூழலில் ,கட்சி தோழர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு புரட்சிகர நிலைப்பாட்டின் அடிப்படையில் ஒருங்கிணைவது அவசியம்.ஆகவே இது தீவிரமாக சிந்திக்கவும் கேட்டு கொண்டிருக்கிறார்கள்.அதில் புதிய அரசியல் அமைப்பு சார்ந்த முடிவுகள் எடுக்க  இடது பாதையினரின் கூட்டம் ஜூலை 15- அன்று நடத்த முடிவெடுத்துள்ளார்கள்)

இன்று தோழர் கிரண் தலைமையிலும்,தோழர் பாதலின் மேற்பார்வையிலும் நடைபெற்ற நேபாள மாவோயிச கம்யுனிச கட்சியின் புரட்சிகர பிரிவின் சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இந்த பத்திரிக்கை செய்தியில் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

 


முதலில் மக்களுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு ஒரு நிமிடம் உணர்வு பூர்வமான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.மத்திய குழு சார்பில் தோழர் கிரண் அரசியல் அறிக்கையை முன்மொழிந்தார்.

அந்த விவாதங்களுக்கு பிறகு தேவையான திருத்தங்களுக்கு பின்னர் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய முடிவுகளாவன:

 

1. கட்சியையும், மற்றைய கட்சியினரையும் கலந்தாலோசிக்காமல், சட்டத்திற்கு புறம்பாகவும், சதித்தனமாகவும் மே 2 அன்று தற்போதைய அரசியல் நிர்ணய சபையை கலைத்து விட்டு  புதிய தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட கேலிக் கூத்தை கடுமையாக எதிர்கின்றோம்.

2. சட்டசபை என்ற முன்மொழிவு நேபாள மக்களின் பத்து வருட தியாகம்,வலிமை,அர்ப்பணிப்பு மற்றும் வீரத்தால் உருவானது. அது உருவாக்க பட்டதின் நோக்கம் உழைக்கும் மக்களுக்கும், விவசாய கூலிகளுக்கும், பெண்களுக்கும்,மாதேசிகளுக்கும், முசுலீம்களுக்கும், தலித்துகளுக்கும், மற்ற தேசிய இனங்களுக்குமான உரிமையை உறுதி செய்து, பழைய அதிகாரத்தில் இருந்து மாறி தேச விடுதலையை பாதுகாப்பதாகும். புரட்சிகர நேபாள மக்கள் புதிய அரசியல் சட்டத்தை, அரசியல் நிர்ணய சபை மூலம் எதிர்பார்க்கின்றனர். அதற்கு நேரெதிராக, தற்போது நடக்கும் நிகழ்வுகள் அவர்களின்  எதிர்பார்ப்பையும், விருப்பங்களையும், தியாகங்களையும் கடுமையாக புண்படுத்துவதாக உள்ளது.

3சட்டம் இயற்றுவதில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் அரசியல் நிர்ணய சபையில் உள்ளவர்களின் அதிகாரப் போட்டி, முக்கிய கட்சி தலைவர்களின் திறமையின்மை,புதிய சட்டத்திற்கு எதிரான சதிகள், வெளிநாடுகளின் குறுக்கீடுகள், முந்தைய முடியாட்சி அதிகார கும்பலின் எதிர்ப்புகள், தேசத்தை அடிபணிய வைக்கும் சிந்தனை கொண்ட மாவோயிச கட்சியின் ஒரு பகுதி தலைவர்கள். இதன் அடிப்படையில், சட்ட வரைவு கமிட்டியின் துணை கமிட்டி, சட்ட வரைவு கமிட்டி தலைவர், முக்கியமாக கமிட்டியின் ஒருங்கிணைபாளர்களான பாபுராம் மற்றும் பிரசந்தா ஆகியோர்கள் இதற்கு காரணமாக தெரிகிறார்கள்.


4.மறுதேர்தல் குறித்த அறிவிப்பானது அவர்களின் சட்டத்தை  எழுதும் திறமையின்மையையும்,இயலாமையையும் நிரூபிக்கும் எள்ளி நகையாடத்தக்கவையாகும்.அது மட்டுமின்றி கடந்த 4-ஆண்டுகளாக இவர்களின் நாடகங்கள் தலைவர்களின் இயலாமை மக்களுக்கு ஆதரவாக சட்டமியற்றுவதை சதித்தனமாக தடுத்தவை எல்லாம் இது போன்ற நிர்ணய சபைகளின் மூலம் எந்த அரசியல் பாதையையும் உருவாக்க இயலாது என்பதையே காட்டுகிறது.இந்த சூழலில் மறுத்தேர்தலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

5.இன்றைய நிலையில் மக்களுக்குப் புதிய அரசியல் வழியும் மாற்று அமைப்பும்தான் தேவையானது.இதன் காரணமாக அனைத்து கட்சிகள் உழைப்பாளர்களும்,விவசாயக் கூலிகளை உள்ளடக்கிய ஒடுக்கப்பட்ட மக்களும் பெண்களும்,தலித்,முஸ்லீம்,மாதேசி மற்றைய பிரதேசங்களின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து, இவர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒரு கூட்டரசை ஏற்படுத்தி, இருக்கின்ற, சட்ட வரைவு வேலைகளை முடித்து, மேற்கொண்டு அரசியல் வழியை மேற்கொள்ள வழிகான வேண்டும்.அரசியல் வழியையும்,போராட்டத்தை முன்னெடுக்கவும், இந்தக்கூட்டம் தேசப்பற்றாளர்கள்,குடியாட்சிக்கு ஆதரவானவர்கள்,முற்போக்காளர்கள் மற்றும் இடதுகள் உள்ளடக்கிய முன்னணியை உருவாக்க முடிவெடுத்துள்ளது.

இன்றையச் சூழலில் பாராளுமன்றவாதிகள், குடியாட்சிக்கெதிரானவர்கள், சர்வாதிகாரிகள் தோல்வியடைந்த நிலையில், நாடாளுமன்ற சர்வாதிகார முறையை மறு தேர்தல் எனும் நாடகத்தின் மூலம் அரங்கேற்றி நம்மை வேடிக்கை பார்க்க வைக்க நினைக்கிறார்கள். நாட்டின் சுதந்திரத்தை காக்கவும், குடியரசை நிறுவவும், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீரவும் புதிய ஜனநாயக குடியரசு முக்கியமானதாகும். நாம் அதனை நோக்கி நடைபோட வேண்டும்.

கட்சித் தலைமையோடு கட்சியின் ஒரு பகுதி தலைவர்களும் வேகமாக வர்க்க மற்றும் தேசத்தை அடிபணிய வைக்கவும், வலது சந்தர்ப்பவாதத்தில் விழ வைக்கப்பட்டு கொண்டிருக்கிற இந்த குழப்பமான சூழலில் கட்சி தோழர்கள் தமது நிலைபாட்டை மாற்றிக் கொண்டு புரட்சிகர நிலைபாட்டின் அடிப்படையில் ஒருங்கிணைவது அவசியம். ஆகவே இது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டுகிறோம்.

இந்த கடினமான சூழலில் நாடு தழுவிய அளவிலான கூட்டம் ஜூலை 15- அன்று நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அது அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த முடிவுகளை எடுக்க அவசியமானதாகும்

தேதி:ஜுன் 6 -2012

ஆங்கில மூலக்கட்டுரை:

NATIONAL GATHERING CALLED

http://suraavali.blogspot.fr/2012/06/blog-post_13.html

Last Updated on Thursday, 14 June 2012 12:34