Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

யுத்த வெறியர்களின் மத்தியஸ்தமும் சமாதனமும் - சுகந்தன்

  • PDF

உலகமெங்கணும் அமைதியும் சமாதானமும் வேண்டி தரப்புக்களுக்கிடையில் தரகராக பணிபுரியும் நோர்வேயின் சமாதான வெண்புறா அதன் இறக்கைகளுக்குள் ஒளித்து வைத்திருப்பது என்ன ?

 

 

ஆப்கானிஸ்தான் மீது நேரடித் தாக்குதலுக்கென தனது எவ்-16 அதி நவீன போர் விமானங்களை மத்திய ஆசியாவின்இ முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் ஒன்றான கீர்கிசிஸ்தானில் நிலை கொள்ள வைத்திருக்கும் இந்த நடவடிக்கை எந்த சமாதான முயற்சிகளில் சேரும்! ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்புக்கு தனது படைகளையும் விமானங்களையும்இ ஆசிகளையும் வழங்கிய நோர்வே அணிவகுத்து நிற்பது யாருக்குப் பின்னால்? எந்த சமாதானத்துக்கு? ஒருபுறத்தில் கொலைக்களத்துக்கு கொலைகருவி தந்தது மட்டுமின்றி கொலையாளியாகவும் பங்கேற்றிருக்கும் நோர்வே மறுபுறத்தில் புத்தருக்கு போதனை செய்யப் போகின்றது. எப்படி?

கீர்கிசிஸ்தானில் படைத்தளம் அமைத்து அதனை அண்டிய மத்திய ஆசியப் பிரதேசங்களின் மீது தனது மேலாண்மையையும் இராணுவமுற்றுகைiயுயும் ஏற்படுத்தும் அமெரிக்க படைகளுக்கு உறுதுணையாக தனது படைக்கலன்களை அனுப்பிக் கொண்டிருக்கும் நோர்வேயின் நோக்கம் என்ன சமாதானமா? அமைதியா? நாட்டின் வரவு செலவுப்பட்டியலில் 50 கோடி நோர்வேஜிய நாணயம்இ இங்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் எவ்-16 விமானங்களைஇ தரை இலக்குகளை துல்லியமான தாக்கியழிக்கும் லேசர் கருவிகளோடு நவீனப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி போருக்கானதா சமாதானத்துக்கானதா?

எந்தவிதமான பொதுசன ஊடகங்களின் விவாதப்பிரதிவாதச் சலசலப்;புகளும் இன்றி இவ்வாறான இராணுவப் பங்காளிப்பு பாத்திரத்தை நோர்வே கீர்கிசிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய  கூட்டு விமானப்படைக்கு தனது ஆகாயப்படை தளவாடங்களை வழங்கியதன் முலம் ஆக்கிரப்பு நோக்கத்தை நிருபித்திருக்கிறது.

நோர்வேயின் விசேட படைப்பிரிவுகள்இ ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஏற்கனவே பங்கு கொண்டிருந்தமை யாவரும் அறிந்ததே. இப்போது நாசகாரி விமானங்கள் கீர்கிசிஸ்தானின் ஆயயௌ விமானப்படைத்தளத்தில் மையம் கொண்டிருக்கும் அமெரிக்க ஏவுபடைகளுடன் இணைந்திருந்து செய்யப்போவது என்ன சமாதானமா? சமாதானத்துக்கு நோபல் பரிசில் வழங்கும்இ உலகெங்கும் சமாதான தேவதையாக வேடமிட்டிருக்கும் நோர்வே உண்மையில் 1991 இலிருந்து நேரடியாகவே போர்களில் ஈடுபட்டிருக்கின்றது.

இலங்கையில் அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தி யுத்த மீறல் கண்காணிப்பிற்கு பொறுப்பேற்றிருக்கும் நோர்வேயின் மறுமுகம் நோக்கம் என்ன? நோர்வேயின் முதுகுக்குப்பின் ஒளிந்திருப்பது நயவஞ்சகமான அமெரிக்க ஏகாதிபத்திய மேற்குலக நாடுகளின் சுரண்டல் பொருளாதார நலன்களும்இ உலகமயமாதல் கனவுகளும்இ இராணுவ நலன்களும் தான். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகின்ற கதை வெளிப்பட நாட்கள் தூரத்தில் இல்லை.

செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்கா மீதான தாக்குதலின் பின்னாலே தான்இ பயங்கரவாதத்துக்கு எதிராக கச்சை வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு பயங்கரவாதத்துக்கு எதிரான பொது நோக்குப் போரில் கைகொடுக்கும் நோர்வேயின் நடவடிக்கையாக இருக்கின்றது என்பதைஇ படையனுப்பிய நிகழ்வு காட்டுகின்றது. ஆனால் மத்திய கிழக்காசியா என்பது ஐரோப்பிய ஆசிய  வலயத்துள் ஒருங்கே கிடக்கும் நாடுகளின் மீதான இராணுவப்பிடியின் திறவுகோல் என்ற இராணுவ உபாயத்தில் குறிகொண்டலையும் அமெரிக்க இராணுவ இரும்புப்பிடியை இறுக்கிஇ இப்பிராந்தியங்களில் உள்ள முன்னாள் சோவியத் குடியரசுகளாகவிருந்த உஸ்பெகிஸ்தான்இ கீர்கிஸ்தான் போன்ற நாடுகளின் அவல நிலையைப் பயன்படுத்தி அந்நாடுகளை வியூகம் கொண்டு மத்திய கிழக்காசியாவின் மீதான தனது நீண்ட நாளைய ஆக்கிரமிப்பு வளைப்புக்களை செய்வதே அமெரிக்காவின் கனவாகும். இது செப்டம்பர் 11 ம் திகதிக்கெல்லாம் முன்னமேயே இடப்பட்ட திட்டமாகும். காலம் கனிந்து இலகுவாக ஆக்கிரமிப்புக்களை செய்ய பயங்கரவாதப் பூச்சாண்டி காட்ட முடிந்தது என்பது மட்டுமே  செப்டம்பர் 11 ம் திகதிக்குப் பின்னதான விளைவாகும். உலகைப் பேய்க்காட்டுவதற்கு அவர்களுக்கு செப்படம்பர் 11 ம் திகதி ஒரு சாட்டு. மற்றைய உலகநாடுகளின் மீதான அராஜக இராணுவ நடவடிக்கைகளுக்கு உள் நாட்டில் கிளம்பும் எதிர்ப்பை சமாளித்துக்கு கொள்ளவும் இந்த பயங்கரவாதப் பூச்சாண்டி நன்கு பயன்படுகின்றது.

இதே போல் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு பக்கப்பாட்டு பாடவும்இ ஏன் நேரடியாக போருக்கு படைபலம் தரவும் நோர்வே போன்ற மேற்குலக அரசுகளுக்கு இது வசதியான சாட்டாகுமே தவிரஇ இவர்கள் சமாதானத்தின் தூதுவர்கள் அல்லர். நோர்வே போருக்கு குதித்திருப்பது அமெரிக்க சர்வதேச இராணுவ விரிவாக்கத்திட்டத்திற்கு உறுதுணை புரிவதற்காக அன்றி வேறொன்றல்ல.

சீன எல்லையிலிருந்து ஆக 25 மைல்கள் தூரத்திNலுயே இந்த அமெரிக்க கூட்டு விமான ஏவுபடைகள் இருப்பது கவணத்துக்குள்ளாகியுள்ளது. இந்தப் பிரதேசங்களில் இராணுவ பிரிவுகளை வைத்து சுற்றி வளைப்பதன் மூலம் சீனத்தின் வாசலில் தனது படையணியை பலப்படுத்தும் அமெரிக்க நடவடிக்கையின் ஒரு கூறு இதுவெனவும்இ எண்ணெய் குழாய் நிர்மாணத்துக்கும்இ அது ஊடறுக்கும் நாடுகளின் அரசுகளை தனது இராணுவப்பிடிக்குள் கட்டி வைக்கும் நடவடிக்கைக்கும்இ எதிர்காலத்தில் முரணான நிலையெழும் வகையில் ருசியா நடவடிக்கைகளில் இறங்குமாயின்;இ அதன் வாசலியே அதனை எதிர் கொள்ளும் இராணுவ நிலைகளை வைத்திருப்பதற்குமான ஒரு இராணுவ போர்வியூகத்தின் முன்னோடிய தயாரிப்பு வேலை தான் இந்த கீர்கிஸ்தான் விமானப்படைக்கூட்டு மையமாகும். இதற்கும் பயங்கரவாதத்தை எதிர்த்த போருக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

மத்திய ஆசியா இ அதனுடைய ஜந்து முன்னாள் சோவியத் குடியரசுகளான துர்க்மேனிஸ்தான்இ உஸ்பெகிஸ்தான்இ கசாக்ஸ்தான்இ தாட்சிகிஸ்தான்இ கீர்கிசிஸ்தான் என்பவை உள்ளடங்கஇ ஈரான்இ ஆப்கானிஸ்தான்இ பாக்கிஸ்தான்இ இந்தியா நாடுகளுக்கு வடக்கில் அமைந்திருக்கும் அதேவேளை அதன் மேற்கெல்லையாக கஸ்பிக்கடலையும்இ கிழக்கில் சீனாவையும் கொண்டு அமைந்திருக்கும் ஒரு இராணுவ கேந்திரமான பிரதேசமாகும். அது மட்டுமல்லாமல் அது எண்ணெய்இ எரிபொருள் மூலவளங்களை பெருமளவில் தன்னகத்துள் கொண்டது. வல்லரசுகளின் இந்த எண்ணெய் வளத்தின் மீதான போட்டா போட்டிக்கு இந்தப் பிரதேசம் குறிவைக்கப்பட்டிருக்கின்றது.

செப்டம்பர் 11 ம் திகதிக்குப்பின் இந்த நாடுகள்இ இவை ருசியாவின் பின்புல நாடுகளாக இருந்துகொண்டிருப்பினும் (இந்த முன்னாள் 5 சோவியத் குடியரசுகளும்) தமது நாட்டை அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கும்இ தளம் அமைப்பதற்கும் திறந்து விட்டன. இந்த அமெரிக்க படைகளின் வரவு மத்திய ஆசியாவின் சரித்திரத்தில் ஒரு புது அத்தியாயமாகும். அமெரிக்கஇ மேற்குலக இராணுவம் முதல் தடவையாக இப்பிரதேச மண்ணில் மகா அலெக்சாண்டரின் ( கி.மு 334) பின் முதல் தடவை காலடி பதித்திருப்பது இப்போது தான்.

சீனத்தேசத் தலைமைகளால் இந்த படைவரவு சீனத்தை முற்றுகை கொள்ளும் நடவடிக்கையாக உணரப்பட்டுள்ளது. ஜரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டிகளில்இ பெரும்பாலான ஜரோப்பிய நாடுகள் என்றுமில்லாதவாறு தமது இராணுவ வல்லமையை  கட்டியமைக்கும் முயற்சியில் போட்டாபோட்டி போடுகின்றன. இந்த வல்லமைகளோடு; உலகின் எஞ்சிய நாடுகளின் மீதான ஆதிக்கத்துக்கு அமெரிக்காவுடன் ஈடாக பலத்தில் நிற்பதற்காக தயார் செய்கின்றன. ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் கொண்டிருக்கும் நாடுகள் அமெரிக்க இராணுவ விஸ்தீரணத்தைக் கண்டு அது தமது கட்டுக்கோப்புக்குள்ளிருக்கும் மற்றை நாடுகளின் மீதான தமது மேலாதிக்க நலன்களை கொள்ளை கொண்டு போய் விடும் என்று அஞ்சுகின்றன என்று அண்மையில் வெளியான வுhந நுஉழழெஅளைவ எழுதியுள்ளது. இன்றைய அமெரிக்க உலக ஒழுங்குக்கு சரி சமமாக தாமும் தம்மை சரி செய்து கொண்டு தயாராகாத வரைஇ தாம் ஓரம் கட்டப்பட்டு விடுவோம் என்ற அச்சம் இந்நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

சிறிய நோர்வே போன்ற மேற்குலக நாடுகள்இ தமது பாட்டுக்கு சும்மா இருந்துவிடமுடியுமா? அவை அமெரிக்காவின் முதுகுப்பின் ஒளிந்திருப்பது தேவையாகி விடுகிறது. இந்த கூட்டுச் சேர்க்கைக்கு ஒசாமா பின்லாடனோஇ பயங்கரவாதமோ அல்ல பின்னணி. உலகை அடக்கிஇ உழைப்பை கசக்கி பிழிந்து சுரண்டிக் கொழுக்கும் அமெரிக்கஇ ஜரோப்பிய ஏகாதிபத்திய போட்டா போட்டிகளும் குழுச் சேர்க்கையும் தான் காரணம்.

அந்த வகையில் நோர்வே இலங்கை பிரச்சனையை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவுக்கு இலகு வழி சமைக்கும் ஒரு சமாதான வேடதாரி தான் நோர்வே. தமிழ் மக்கள் மீதோஇ சிங்கள மக்கள் மீதோ பாசமும் பற்றும் கொண்டு சமாதானத்தை உருவாக்கித் தர இவர்கள் வரவில்லை. இருபத்தியோராம் நூற்றாண்டு புதிய அமெரிக்க சகாப்தமாக விளங்கும் என்று கூறிய கிளின்ரனின் கூற்றுக்கு இவர்கள் தான் கதாபாத்திரங்கள். உலக ஆக்கிரமிக்கவும்இ மறு காலனியாக்கவும் நோர்வை போன்ற நாடுகளின் சமாதான வேடங்கள் கூட படிகற்கள் தான்.