Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

புரிந்துணர்வு உடன்பாடும் மக்களின் அவலங்களும்

  • PDF

தமிழ் மக்களின் பிரச்சனை என்ன? அவர்களின் அடிப்படை சமூக பொருளாதார பண்பாட்டுத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது? தமிழ் மக்களின் தேசிய போராட்டம் யாருக்கு எதிரானது? இவற்றை தெளிவாக விளக்கும் வகையில் "இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாதலின் பரிணாமமும்" என்ற எனது 112 பக்க சிறு நூல் ஒன்று விரிவாக ஆராய்கின்றது. பார்க்கவும். இதற்கு வெளியில் புரிந்துணர்வு உடன்பாட்டின் இன்றைய நிலைமையை இக் கட்டுரை குறிப்பாக ஆராய்கின்றது.

 

 

புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் தமது நலன் சார்ந்து கையெழுத்திட்ட ஒப்பந்தமே. கையெழுத்திட்டவர்கள் அதை கடைப்பிடிப்பது ஒரு அடிப்படையான விடையமாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைதிக்கானதும் சமாதனத்துக்குமானதும் எனக் கருதும் ஒவ்வொருவரும், இதன் மீறல்களை கண்டிப்பது அவசியமானதும் நிபந்தனையானதுமாகும.; இந்த அமைப்பினுள் அமைதி சமாதனம் என்று கோருபவர்கள், செய்து கொண்ட ஒப்பந்தத்தின் இருதரப்பு மீறலையும் நிபந்தனையின்றி கண்டிக்க வேண்டும். கண்டிக்க மறுப்பவர்கள், தாம் கூறும் அமைதி சமாதானம் என்பது வெறும் பித்தலாட்டமே என்பதை தமது நடத்தைகள் மூலம் வெட்ட வெளிச்சமாக்கின்றனர். இன்று புலிகள் சார்பாக நின்று அரசின் மீறல்களை மட்டும் கண்டிக்கும் போக்கு, சமாதானம் அமைதி மீதான வேடத்தை வெகுளித்தனமாக மாற்றியுள்ளது. ஆக்கிரமிப்பாளன் ஆக்கிரமித்த பிரதேசத்தில் புரிந்துணர்வை மீறுவது என்பது மிககுறைவாக சமகாலத்தில் இருந்துள்ளது. (பார்க்க கண்காணிப்பு குழு அறிக்கையை) இந்த மீறல் தன்னிச்சையாகவும், ஆக்கிரமித்து வாழ்ந்த வாழ்விடங்கள் சார்ந்துமே அதிகமாக இருந்துதுள்ளது. ஆனால் புலிகள் சொந்த மக்கள் மேல் புரிந்துணர்வு மீறலை செய்வது என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளது. இவை தன்னிச்சையாக அல்ல. இவை தலைமையின் வழிகாட்டலுக்குட்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் தொடர்ச்சியாக நிகழ்கின்றது. இவர்கள் தாமே செய்து கொண்ட புரிந்துணர்வும், அதன் மீதான மீறலையும் இதுவரை யாரும் மக்கள் நலனில் நின்று கண்டிக்கவில்லை. தனிப்பட்டவர்கள் மட்டும் கண்காணிப்பு குழுவுக்கு தம் மீதான சொந்த மீறல்களை அறிவித்ததுடன், பல மடங்கு அத்துமீறல்களை சொந்த வாய்க்கு வெளியில் முன்வைக்க முடியாத பீதிக்குள் முடங்கிவிடுகின்றனர். அத்துமீறல்கள் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக இருந்து கண்டிக்க தவறியிருந்தாலும் கூட, நாம் அதன் தார்ப்பரியத்தை ஏற்றக்கொள்ளமுடியும். ஆனால் அதுவே சொந்த மக்களுக்கு எதிராக இருப்பதால், இதை எப்படி ஏற்றுக் கொள்வது. சமாதனம் அமைதி தமிழ் மக்களின் உன்னதமான வாழ்வு என்று கூறி செய்த ஒப்பந்தத்தை தாமே மீறிவிடும் போது, அதன் பின் வால்பிடித்து செய்யும் பினாமி அரசியல் மற்றும் கருத்துகள் தமிழ் மக்களின் அமைதியான சமதனமான வாழ்வுக்கே வேட்டு வைக்கின்றது. இதை நாம் விரிவாக பார்ப்போம்.

யுத்தநிறுத்தம், அமைதி, சமாதானம் என்பது எப்போதும் மக்களுக்கானதே. ஆனால் அது சிலரின் குறுகிய நலன் சார்ந்துவிடும் போது, மக்களின் அவலம் ஆறாகவே பெருகுகின்றது.  மக்களுக்கு எதிரானதாகவே யுத்தநிறுத்தம், அமைதி, சமாதானம மாறிவிடுவதை அண்மைய புரிந்துணர்வு உடன்பாடு நிறுவுகின்றது. மக்களின் அவலத்தை புதிய வடிவில் ஒழுங்கமைப்பதே புரிந்துணர்வு உடன்பாடு என்றால், சமுதாயதச் சிதைவு மேலும் துரிதமாவது தவிர்க்கமுடியாது. எதிரி மேலும் பலம் பெறவும், ஆக்கிரமிப்பு நியாப்படுத்துவதற்கும் குறுந்தேசிய வாதிகளின் நடத்தைகள் அத்திவாரமாகிவிடுகின்றது. எதிரி ஆயுத முனையில் மட்டும் தமிழ் மக்களை அடக்கியாளவில்லை என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டாகவேண்டும்;. எதிரிகளும் புலிகளும் ஒரே பொருளாதார கொள்கையை கொண்டு இருப்பதாலும், உலகமயமாதலை இருவரும் ஒரேவிதமாக கையாண்டு தேசியத்தை விற்பதாலும், அரசியல் முரண்பாடு இவர்களுக்கிடையில் இருப்பதில்லை. உண்மையில் ஆக்கிரமிப்பின் மனித விரோதத்தை புலிகள் தமது குறுகிய நலனில் இருந்து அரசியலாக்கின்றனர். இதேபோன்று குறுந்தேசியவாதிகளின் மக்கள் விரோதத்தை, ஆக்கிரமிப்பாளன் குறுகிய நலனில் இருந்து அரசியல் ஆக்கின்றன். மக்களுக்கு வேறு தெரிவற்ற நிலையில் இரண்டு தளத்திலும், காலத்துக்கு காலம் மாறுபட்டு வெளிப்படும் மக்கள் விரோத தன்மைக்கு இசைவாக மக்கள் ஊசலாடுகின்றனர். அரசு இரணுவ வழிகளின் மட்டும் தமிழ் மக்களை அடக்கியளவில்லை. புலிகளின் மக்கள் விரோத நடத்தைகளை அரசியலாக்கியுமே, தமிழ் மக்களை அடக்கியாள முடிகின்றது. இன்றைய புலிகளின் நடத்தைகள் ஆக்கிரமிப்பாளனின் இராணுவ வழியை விட அரசியல் வழியை பலப்படுத்துகின்றது. புலிகளின் மக்கள் விரோத அரசியலை அரசு, தனது ஆக்கிரமிப்புக்கு சாதகமாக பிரச்சாரமின்றியே மாற்றியமைக்கின்றது. புலிகள் ஆப்பிழுத்த குரங்காகவே செயற்படுகின்றனர்.

சிங்கள பௌத்த இனவாத அரசு தமிழ் மக்கள் மேல் தொடர்ச்சியாக நடத்திய ஒரு இன அழிப்பு யுத்தம், பல்வேறு வழிகளில் மக்களின் அடிப்படை வாழ்வையே சிதைத்தது. பொருளாதார கட்டுமானங்கள், பண்பாட்டு கலாச்சார அடிப்படைகள், சமுதாயத்தின் கூட்டு வாழ்வியல் தொடங்கி குடும்பங்களை சிதைப்பது வரை, எல்லா வழிகளிலும் மக்களின் வாழ்வின் ஆதாரங்களை அழித்து ஒழித்தது. குறிப்பாக கடந்த 20 வருடங்களில் சீரான அழித்தொழிப்பு சார்ந்து வளர்ச்சி கண்ட இனவாத யுத்தம், தமிழ் மக்களை மட்டுமின்றி மலையக முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் வாழ்வையும் கூட அழித்துள்ளது, அழித்து வருகின்றது.

இந்த இனவாத யுத்தம் 60000 மேற்பட்ட தமிழ் மக்களை பலிகொண்டது. புலிகளில் அண்ணளவாக 18 ஆயிரம் போராட்ட வீரர்களை பலிகொண்டது. மற்றைய இயக்கங்களில் சில ஆயிரம் வீரர்களையும் (1987க்கு முன்பாக), இராணுவத்தில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோரையும் யுத்த முனையிலும், அழித்தொழிப்பிலும் பலியெடுத்தது. இதைவிட போராடியவர்களை உள் இயக்க படுகொலைகள் தொடங்கி மாற்று இயக்க படுகொலைகள் ஒரு தேசிய அரசியலாகியது. இந்த அரசியல் மக்கள் விரோத படுகொலைகள் முதல் சமூகத்தின் முன்னேறிய சமூக சிந்தனை கொண்டவர்களையும் விட்டுவிடவில்லை. ஒட்டு மொத்தமாக 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை ஏன், எப்படி, எதற்காக இவை என்று கேட்டதற்காகவே படுகொலை செய்த வரலாறு தொடருகின்றது. அத்துடன் எல்லைப்புற அப்பாவி சிங்கள முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்கள் படுகொலைகள் மற்றும் பொதுவாக உழைக்கும் மக்கள் கூடும் இடங்களில் நடத்திய குண்டு வெடிப்புகள் மூலம், 5 முதல் 10 ஆயிரம் மக்கள், போராடியவர்களால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். சிங்களச் சிறையில் விசாரணையின்றி கால வரைமுறையின்றிய ஒரு தலைமுறை அடைபட்டு துன்பத்தை துயரத்தை அனுபவிக்கின்றனர். தமிழ்ச் சிறைகளில் சித்திரவதை படுகொலை என்று கதறல்கள் தொடருகின்றது. இவர்களின் கதறல்கள் எதுவும் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கும் சரி, தேசியத்துக்கு சரி, கேட்டுவிடாத காதடைப்பில் சமாதானம் பற்றி புலம்புகின்றனர்.

தமிழ் பெண்களின் துயரம் வரைமுறையற்றது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் விதைவைகளாகியுள்ளனர். யுத்தம் காரணமாக குடும்பத்தில் இருந்து வெளியேறும் ஆணினால், பெண்களின் வாழ்க்கை நரகமாகி நாசமாக்கியுள்ளது. ஆணாதிக்க நெருக்கடிக்குள்ளும் நீடித்த இயல்பான பாலியல் தேவைகள் சிதைந்தன் மூலம், சமூகம் மனநோய்க்குள்ளாகின்றது. அத்துடன் வெளிநாடுகளை நோக்கி புலம் பெயர்ந்த சில லட்சம் ஆண்களால், பெண்களின் சுமை தலைக்கு மேல் எற்றியது. குழந்தைகளின் புலம் பெயர்வு, இராணுவ கடத்தல்கள் கைதுகள், இயக்கத்துக்கு செல்லல் மற்றும் கடத்தல்கள், மாற்றுக் கருத்து கொண்டிருந்தால் வீதிப் படுகொலைகள் முதல் காணமல் போனவர்கள் என நீளும் பட்டியல், பெண்ணின் தாய்மைப் பண்பில் பாரிய வேதனையுடன் கூடிய துயரத்தையும் மனநோயையும் உருவாக்கியுள்ளது. தாய் தந்தையின் சமூக அரவணைப்பற்ற நிலையால், குழந்தைகள் வக்கிரப்பட்டு ஆயுத கவர்ச்சிக்குள்ளாகியும் லும்பன் நிலையை அடைகின்றனர். சுற்றத்தையும் உறவுகளை இழந்த சமூகத்தில், குடும்ப பொறுப்பு உட்பட அனைத்து சுமையையும் சுமக்கும் அவலத்தைச் பெண்கள் சந்திக்கின்றனர். யுத்த பிரதேசத்துக்கே உரிய பொருளாதாரத்தை பெண்கள் ஈடுகொடுத்த வாழ்வு என்பது, ஆணாதிக்க பாலியல் வக்கிரத்தின் நெருக்கடிக்குள் பெண்ணை பாலியல் அடிமையாக்குவது, சுரண்டுவது, சூறையாடுவது ஒரு வடிவமாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சிலருக்கு செல்லும் ஏகாதிபத்திய கறைபடிந்த பண நோட்டுகள், இரண்டு நேர் எதிரான சமூக வாழ்வை தமிழ் மண்ணில் வீங்க வைத்துள்ளது.

தமிழ் மண்ணில் வாழ்வின் ஆதாரங்களான நிலத்தை வைத்திருந்தவர்களின் தயவில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள், உழைப்பும் கூலியுமின்றி பஞ்சம் பிழைக்கின்றனர். மூலதனமின்றிய, கூலியுமின்றிய வாழ்வை வாழ்வது என்பது, அவர்களின் சாதிய அடிமை விதியாகியுள்ளது. நிலபுலமின்றி, சாதிய அடிமைத்தனத்தில் சிக்கி வாழும் வாழ்வு கோரமானதாகவும் கேவலமானதாகவும் உள்ளது. தேசியம் உயர்சாதி ஆதிக்கம் சார்ந்து  ஆயுதபாணியாகிய போது, அவர்களின் இயல்பான எதிர்ப்புகளைக் கூட ஒடுக்குவது தேசிய உணர்வாகியது. உயர்சாதிய தேசிய ஆட்சி அமைப்பில் இந்த மக்களின் துயரத்தையிட்டு எதையும், எந்த தேசிய தலைவனும் இந்த மக்களுக்காகச் செய்துவிடவில்லை. இன்று வடக்கில் பெரும்பான்மை மக்களாக தாழ்த்தப்பட்டவர்கள்; மாறிவிட்ட நிலையிலும், சொத்துரிமை மற்றும் பொருளாதார ஆதாரமின்றி சிறுபான்மையினரின் அடிமைகளாக நக்கி பிழைக்கின்றனர். இதை மீறுவது தேசிய குற்றமாக, தேசத் துரோகமாக கருதி அடக்கப்படுகின்றனர். கஞ்சிக்கு அரசின் தயவில் கிடைக்கும் கூப்பன் அரிசியில், காலத்தை ஒட்டுவது தேசிய விதியாகிவிட்டது.

சிங்கள ஆக்கிரமிப்புகள் கூர்மையான போது, தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசங்களை விட்டு வெறும் கையுடன் அகதியாகிய புலம்பெயர்வுகள் எண்ணிக்கையில் அடங்காதவை. ஒட்டமொத்த பிரதேசங்களை இனவாத அரசு ஆக்கிரமித்த போது, அந்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் ஒட்டுமொத்தமாகவே வேறு பிரதேசங்களுக்கு புலம் பெயர்ந்தனர். இதில் போராடியவர்களின் குறுகிய நலன்களும் இனைந்த போது, இந்தப் புலம் பெயர்வின் சோகம் பலமடங்காகியது. இனவாத யுத்தமும், போராடியவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளும் கூர்மையாகிய போது, மேற்கு நோக்கி 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களை, சொந்த மண்ணில் இருந்தே துரத்தியுள்ளது. இதைத் தவிர இந்தியா மற்றும் மத்திய கிழக்கை நோக்கியும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களை நடுகடத்தியுள்ளது. வடக்கு கிழக்கு அல்லாத பிரதேசங்களை நோக்கி 10 லட்சம் வரையிலான தமிழ் மக்களை புலம் பெயரவைத்துள்ளது. தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்விடத்தை பறிகொடுத்து, சொந்த உறவுகள், பண்பாடுகள், பொருளாதார ஆதாரங்களை எல்லாம் இழந்து, சொந்த மண்னுடன் இருந்த இரத்த உறவையே கைவிட்டு விடுமளவுக்கு யுத்தத்தின் கோரம் எள்ளி நகையாடியது, நகையாடுகின்றது. தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையையே கேள்விக்குள்ளாக்க, இந்த புலம்பெயர்வு கோரத் தொடங்கியுள்ளது. புலிகளின் அதிகாரத்தில் கடந்த 15 வருடமாக தமிழ் குறுந்தேசியவாதம் வக்கிரமான போது, சொந்த மண்ணைவிட்டு வெளியேறிவது ஒரு போக்காகியது. இவை மேலும் துல்லியமாக வளர்ச்சி பெறுகின்றது. சுயநிர்ணயத்தை அழித்தொழிக்கும் பலவடிவங்களை புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பும், என்றுமில்லாத வகையில் சமூகம் கண்டு வருகின்றது.

குறுந்தேசியவாதிகளின் மக்கள் விரோத தேசிய விரோத அரசியல், முஸ்லீம் மக்களை சொந்த மண்ணிலேயே எதிரியாக்கியுள்ளது. யாழ்குடா நாட்டில் வாழ்ந்த பாரம்பாரிய முஸ்லீம் மக்களை, அங்கிருந்தே உடுத்த உடுப்புடன் துரத்தினர். மன்னார், முல்லைத்தீவு வவுனியா தொடங்கி கிழக்குவரை விரிந்த தளத்தில் முஸ்லிம் விரோதப் போக்கு கையாளப்பட்டது. கிழக்கில் முஸ்லீம் கிராமங்கள் முதல் பள்ளிவாசல்கள் வரை கூட்டம் கூட்டமாகவே மக்களை படுகொலை செய்யவும், கிராமங்களை விட்டு துரத்துவதும் கூட தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமாகி தியாகமாகியது. இது போன்று அப்பாவி சிங்கள மக்களையும் கிராமாகவே எல்லையோரங்களில் கொன்றுவிடும் தேசிய விடுதலை நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. இதற்கு பதிலடியாக தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்றுவிடும் நிகழ்வுகள் நிகழ்ந்தன.

35000 சிங்கள இனவாத பௌத்த இராணுவ வீரர்கள் இராணுவத்தை விட்டு ஒடிய அளவுக்கு, எந்த இராணுவ வீரனும் புலிகளிடம் சரணடையவில்லை. எதிரியை ஈவிரக்கமின்றி கொன்றுவிடும் காட்டுமிராண்டித்தன நிலைக்கு போராட்டம் தரம் தாழ்ந்தால், இன்று வரை புலிகளுக்கு எதிரான சிங்கள இனவாத இராணுவமாக இராணுவம்; நீடிக்கமுடிகின்றது. சரணடைவே மரணம் என்கின்ற போது, போராடிமடிவது எதிரியின் (கூலி இராணுவத்தின்) வீரமாகிவிடுகின்றது. கொன்று விடுவதே தேசியமாகி வீரமாகின்ற போது, எதிரி இறுதி வரை தன் உயிருக்காக போராடும் பண்பு வளாச்சி பெறுகின்றது. புலிகளிடம் சரணடைந்த இராணுவ எண்ணிக்கையை விட, இராணுவத்திடம் சரணடைந்த புலிகளின் எண்ணிக்கை அதிகமாகும். குறிப்பாக புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பின் பல பத்து போராளிகள், சிங்கள அரசிடம்  சரண் அடைந்துள்ளனர்.

இலங்கையில் அமைதி, சமாதானம் என அனைத்தும் ஒட்டு மொத்த மக்களுக்கும் வழங்கப்படவேண்டம். அவர்களின் வாழ்வியல் முன்னேற்றம் தான் உண்மையான அமைதியும் சமாதானமுமாகும். ஆனால் மக்களின் அடிப்படையான வாழ்வியல் மீது இந்த புரிந்துணர்வு ஏற்படவில்லை. மக்களின் துன்பங்கள் துயரங்களை துடைக்கும் வகையில் புரிந்துணர்வு எற்படவில்லை. மாறக புலிகளின் குறிப்பான நலன்களில் இருந்தும், அரசின் நலன்களில் இருந்தும் இந்த புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த புலிகளின் குறிப்பான நலன்களில் இருந்து கிடைக்கும் எச்சில் இலைகளில் தான், மக்கள் நலன்கள் வாயளவில் பேசப்படுகின்றது. மறு தளத்தில் மக்களின் சுமை, புதிய வடிவில் புலிகளின் நலன் சார்ந்து அதிகரித்து வருகின்றது.

புலிகள் நலனும் மக்களின் துயரமும்

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான போது புலிகளும் அவர்களின் பினாமிகளும் கூறியது என்ன? யுத்த அவலத்தில் இருந்து மக்களை மீட்கவும் அவர்கள் பொருளாதார ரீதியாக மூச்சுவிடவும், இடைகால நிர்வாகம் தமது கையில் தரப்படவேண்டும் என்றனர். மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் யுத்த அவலங்களை நிவர்த்தி செய்யும் நிவாரணத்தை செய்யப் போவதாக அறிவித்தனர். மக்கள் மத்தியில் அரசியல் வேலை (இப்படி கூறியதன் மூலம், இவ்வளவு நாளும் மக்கள் மத்தியில் அரசியல் வேலை செய்யவில்லை என்பதை ஒத்துக் கொண்டனர்) செய்யப் போவதாக கூறினர். சர்வதேச நிருபர்களை சந்தித்தது, முஸ்லீம் தவைர்களை சந்தித்தது என்று பல தரப்பட்டவர்களுடன் முதன்முதலாக உரையாடினர். தாம் இனிமேலும் புலிகள் அல்ல, ப+னையாகி விட்டதாக கூறமால் கூறிச் சத்தியம் செய்தனர். மக்கள் தமிழ் மக்கள் என்று அடிக்கடி கூறுவது வார்த்தைக்கு வார்த்தை அதிகரித்தது. ஆனால் மக்கள் என்ன நிவாரணத்தை, என்ன அனுகூலத்தை புதிதாக பெற்றனர் என்று ஆராய்ந்தால், இதன் வெட்ட முகம் நிர்வாணமாவது தவிர்க்க முடியாது.

புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைப்படி, காடுகளில் இருந்த புலிகள் நகரத்துக்கு சுதந்திரமாக சட்டபூர்வமாக வந்தனர். புலிகளின் கட்டுப்பாடு அல்லாத பிரதேசங்களில், புலிகள் சுதந்திரமாக நடமாடத் தொடங்கினர். சுதந்திரமாக சட்டபூர்வமாக வந்தவர்கள், மக்களுக்கு எதைத் தானமாக நிவரணமாக கொடுத்தனர்.

1.இராணுவ கட்டுப்பட்டு பிரதேசத்தில் விற்கப்படும் பொருட்களுக்கும், மக்கள் பெறும் அன்றாட கூலிக்கும் நேரடி மற்றும் மறைமுக வரியை அமுல் செய்து சூறையாடுவதன் மூலம்,  மக்களின் சுமையை புதிதாக தலைக்கு மேலே ஏற்படுத்தினர்.

2.அனைத்து அசையா சொத்துகளின் மேல் குறிப்பாக நிலங்களில் உற்பத்தி நடந்தாலும் சரி நடக்கா விட்டாலும் சரி அவற்றின் மேல் குறித்த தொகையை தரப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளனர். அப்படி கோரும் பணத்தைக் கட்ட மறுத்தால் அல்லது முடியாவிட்டால் குறித்த அசையா சொத்தை அல்லது நிலத்தை தம்மிடம் ஒப்படைக்க கோரிவருகின்றனர். மக்கள் இனம் தெரியாத புதிய வரிகள் மற்றும் பண வசூல் மூலம் வதைபடுவது அதிகரிக்கின்றது.

3.பெரிய சொத்துடையவர்கள் தனித்தனியாக இனம் காணப்பட்டு, அவர்களிடம் விரும்பியவாறு பெரும் தொகை (லட்சக் கணக்கில் அதாவது லட்சம் முதல் 40 50 லட்சமும்; அதைவிட கூடவும்) பணத்தை கோரியும் மிரட்டிப் பறிப்பது நிகழ்கின்றது. இதன் மூலம் தேசிய முதலாளித்துவத்தின் அடிப்படை நிதி ஆதாரத்தையும், அந்த சக்தியில் முதலீட்டு திறனையும் அழித்தொழித்து, அதை தேசிய எல்லை கடந்து ஓட நிர்ப்பந்திக்கின்றனர்.

4.தமிழ்பிரதேசங்களுக்கு திறகப்படும் பாதையெங்கும், அதை கடந்து செல்லும் அனைத்துக்கும் குறிப்பாக ஆள்வரி, வாகனவரி, உள்வரும் பொருட்களுக்கு வரி, வெளிச்செல்லும் பொருட்களுக்கு வரி என மக்களின் அனைத்து வாழ்வுக்கும் செயற்பாட்டுக்கும் வரி அறவிடப்படுகின்றது. மக்களின் வாழ்வியல் மேல் எப்படி பணம் புடுங்குவது என்பது சுதந்திரமான புலிகளின் நடமாட்டத்தின் மையக் குறிக்கோலாகியுள்ளது.

5.மக்கள் மக்கள் என்று வாய்க்கு வந்தபடி கூறுபவர்கள், ஆட்சேர்ப்பை தீவிரமாக்கியதுடன் மக்களுக்கு தெரியாமல் (பெற்றோருக்கு) தெரியமல் குழந்தைகளின் சுயவிருப்பம் என்ற அடிப்படையில் இரகசியமாக கொண்டு செல்லப்படுகின்றனர். மக்கள் புலிகளை வரவேற்கின்றனர் என்பது, பெற்றோருக்கு தெரியாமல் பிள்ளைகளை கொண்டு செல்லும் போது இதில் முரண்படும் மக்கள் என்ற வர்த்தை ஜாலமும் வெற்று அரசியல் உள்ளடக்கமாகும். இங்கு இந்த ஆள் சேர்ப்பின் போது ஆயுதக் கவர்ச்சியும், அறியாமையும், மறைமுக நிர்ப்பந்தமுமே ஒரு தேசிய அரசியலாக உள்ளது. சொந்த பெற்றோருக்கு தெரியாமல் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு எல்லாம், மக்களின் நலனுக்கு (பெற்றோரின் நன்மைக்கே) என்று சத்தியம் செய்யத் தவறுவதில்லை. அத்துடன் கிழக்கில் வீட்டுக்கு ஒருவரை தரவேண்டும்; அல்லது சொந்த அசையா சொத்தை தம்மிடம் ஒப்படைக்க கோருகின்றனர்.

6.ஆட்சோப்பில் கட்டாயப்படுத்தி பிள்ளைகளை கடத்தி செல்வது மற்றொரு வடிவமாக வரைமுறையின்றி தொடருகின்றது. 1990 இல் ஈ.பி.ஆர்.எல்.எப்.யும் ஈ.என்.டி.எல்.எப்.யும் இந்தியக் கைக்கூலிகளாக செயற்பட்ட போது, இயக்கத்துக்கு ஆட்களை கட்டாயமாகக் கடத்திச் சென்று எப்படி இணைத்தனரோ, அதை விட மோசமாக கட்டாயமாக இணைப்பது நிகழ்கின்றது. பிள்ளைகளுக்கு கிழக்கில் கிராமம் கிராமமாக பெற்றோர் இரத்த திலகமிட்டு இணைத்தாக குறுந்தேசியம் கடந்தகாலத்தில் சத்தியம் செய்த மண்ணில், இன்று அது சூனியமாகிவிட்டது என்பது அதன் வெட்டுமுகத்த்தின் கொடுரத்தையே நிர்வாணமாக்கின்றது. இந்த கட்டுரை எழுதிக் கொண்டு இருந்த போது, கிழக்கில் புலிகளுக்கு தெரியாமல் தப்பிய சில பத்து புலிகள் இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.

7.புலிகளுடன் முரண்பாடு கொண்டவர்களை (பல்துறை சார்ந்து) கடத்திச் செல்வது, தாக்குவது அரசியல் மயமாகியுள்ளது. இனந்தெரியாத தாக்குதல், படுகொலைகள் புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு ஆங்காங்கே அதிகரித்து நடக்கின்றது.

8.பல தொழில்களை சொந்த உரிமையாளரிடம் இருந்து, கட்டாயமாக நஸ்டஈடு இன்றி அபகரிக்கின்றனர்.

9.பல சுயதீனமான வெகுஜன அமைப்புகளை அவர்களின் அனுமதியின்றி முறைகேடாக புலிகள் பயன்படுத்துகின்றனர் அல்லது அப்படியே அபகரித்து சொந்த அமைப்பாக்கி விடுகின்றனர்.

தீவிரமான புலிகளின் அரசியல் நடவடிக்கையாக இவையே அரங்கேறுகின்றது. இவையே தமிழ் மக்களுக்கு வழங்கும் நிவாரனமாக உள்ளது. தீவிரமாக எந்த வழிகள் ஊடாக பணத்தை கறப்பது, தீவிரமாக எப்படி ஆட்களைச் சேர்ப்பது, முரண்பட்டவர்களை எப்படி எந்த வழிகளில் ஒழித்துக் கட்டுவது போன்றனவே, புலிகளுக்கு தெரிந்த ஒரேயொரு அரசியலாகும். மக்கள் பெற்றுக் கொண்ட அமைதி சமாதானம் இதைத் தாண்டியவையல்ல. இதற்கு வெளியில் மக்கள் எதையும் புதிதாக பெற்றுவிடவில்லை. புலிகளின் அணுகுமுறைகளில் நடந்துள்ள சில மற்றங்கள் அரசியலில் நடக்கவில்லை. சர்வதேச ரீதியாக எதிர் கொள்ளும் நெருக்கடிகள் மற்றம் சர்வதேச ரீதியாக பலரை அணுக வேண்டிய நிர்ப்பந்தங்களால், கடந்த கால அனுகுமுறைகளில் சில மற்றத்தை புலிகள் செய்துள்ளனர். இதனால் அண்டிப் பிழைக்கும் பினாமியம் சக்கடைகளில் இருந்து வரைமுறையின்றி பெருக்கெடுக்கின்றது. ஆனால் புலிகளின் அரசியலில் எந்த மற்றமும் நிகழவில்லை. இதனால் அவர்கள் கையாளும் அனுபவமற்ற புதிய எல்லா பிரச்சனையிலும், மக்கள் விரோத கண்ணோட்டம் நேருக்கு நேர் மக்களுக்கு எதிராக பிரதிபலிக்கின்றது. மக்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதை இவர்கள் அனுபவ ரீதியாக புரிந்து கொள்வதில்லை. அன்றாட வாழ்வின் தேவைக்கு மக்கள் எப்படி வாழ்கின்றனர், அவர்களின் பசி பட்டினிகள்  என் நிகழ்கின்றன, போராடுபவர்கள் எப்படி இதை இல்லாது ஒழிக்க முடியும், என்று எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள், மக்களின் துயரத்தை அவர்களின் முதுகில் தூக்கி வைக்கவே முடிகின்றது.

1.பொது இடங்களில் இருந்து (பாடசாலை, வழிபாட்டுத் தலங்களில்…) ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றக் கோரும் புரிந்துணர்வு உடன்பாடு, அடிப்படையில் புலிகளின் இராணுவ நலன் சார்ந்த கோரிக்கையாகவே இருந்துள்ளது. இதில் மக்கள் எதாவது நன்மையடைகின்றார்கள் எனின், புலிகளின் நோக்கத்துக்கு பின்னால் கிடைக்கும் எச்சில் சோறுதான். மக்கள் நலன் சார்ந்த, தேசிய நலன் சார்ந்த கோரிக்கையை புரிந்துணர்வு உடன்பாடு கொண்டிருக்கவில்லை. அதேநேரம் மக்களின் நலன் சார்ந்து புலிகளின் பிரதேசத்தில் மக்களிடம் அபகரித்த எந்த சொத்தையும் புலிகள் மக்களிடம் மீள கொடுத்துவிடவில்லை. அத்துடன் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களின் பாடசாலைகள், வழிப்பாட்டு தலங்கள், சொத்துக்கள் என எதையும்  புலிகள் மீளக் கொடுத்துவிடவில்லை.

2.மீன்பிடித் தடை நீக்கம் கூட இராணுவ நலன் சார்ந்ததே. புலிகளின் கடற் புலிகளின் சர்வதேச நடமட்டாத்துக்கு இது அவசியமானதாக இருந்தது. அத்துடன் உளவு நடவடிக்கைக்கு இது நிபந்தனையாக இருந்தது. மின் பிடியை நம்பி மக்கள் வாழ்வை தொடங்கும் போது, மீனுக்கு வரி என்ற நிலைமையும் மக்களின் வாழ்வை சுமையாக்கின்றது. பாதை திறப்பில் பொருளுக்கு வரியும், மக்களின் இடம் பெயர்வுக்கு வரியுமாக எங்கும் எதிலும் புலிகளின் நலனே மைய விடையமாகவுள்ளது. மக்களின் நலன்கள் இரண்டாம் பட்சமானவை.

3.இப்படி நிலங்கள் முதல் அனைத்திலும் குறிப்பான புலிகளின் இராணுவ நலனும், அதில் இருந்து பண வசூலிப்பும் மைய நோக்கமாகின்றது. மக்கள் உண்மையில் இதில் எச்சிலில் சோறு பொறுக்கி வாழ்கின்றனர் என்பதே உண்மை.

நிவாரண அரிசி முதல், பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கை வரை கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதில் ஒரு பகுதி சோற்றை விருப்பத்துக்கு மாறாக அபகரிக்கப்படுகின்றது. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிகளின் வரவை மக்கள் வரவேற்பதாகவும், கொண்டாடுவதாகவும் கூறிக் கொள்ளும் பின்னணியில், மக்களின் விருப்பத்துக்கு வெளியில் ஒரு வன்முறை அரசியல் சமூகமயமாகியுள்ளது. உண்மையில் இப்படி வரவேற்ப்பை நடத்தியவர்களும், கொண்டாடியவர்களும் யார்? ஆக்கிரமிப்பு இராணுவ நிர்வாகத்தில் மக்களின் இரத்தை உறிஞ்சி வாழ்ந்த ஒட்டுண்ணிகளுடன் இணங்கி போகாத அல்லது முரண்பட்ட ஒட்டுண்ணிகள்தான் என்பது இன்னமொரு உண்மையாகும். இவர்கள் புலிகளின் அனுசாரனையுடன் மக்களின் இரத்தை உறுஞ்சி வாழவும், எதிர்தரப்பை ஒழித்துக்கட்டி தாம் மட்டும் மக்களின் இரத்தை உறிஞ்சும் இரத்த உரித்தை அடைய விரும்பியவர்களே களமிறங்கினர்.

யாழ் பல்கலைக்கழகம் போன்றவை நடத்திய போராட்டங்கள் தன்னியல்பான சில ஜனநாயக கோரிக்கை சார்ந்த ஆரம்பத்தில் இருந்த போதும், பின்னால் அதன் தலைமை குறுகிய நோக்கத்தை படிப்படியாக வெளிப்படுத்திய போது, அங்கு போராட்டமும் ஒய்ந்துவிட்டது. உண்மையில் ஆரம்பத்தில் இருந்த ஜனநாயக கோரிக்கை சார்ந்த உணர்வோட்டங்களும், அது சார்ந்த போராட்டங்களும் படிப்படியாக ஒய்ந்து, சிலரின் நலன் சார்ந்த போராட்டங்களை உருவாக்கிய போது மக்களின் வெறுப்புக்கு உள்ளாகின்றது. குறுகிய நோக்கம் கொண்டவர்களின் குறிப்பான நலன்கள், புலிகளின் இராணுவவாத நலன்கள் என எல்லாம் இணைந்து, மக்களை நேரடியான வன்முறைக்குள் அடக்கிவிடுவது நிர்வாணமாகின்றது. இராணுவ வன்முறையை விட இது அதிகமானதாகவும், நேரடியானதாகவும் வெளிப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு என்பது பொதுவான சமூகத் தளத்தில் கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் என்ற விரிகின்றது. தனிப்பட்ட அத்த மீறல்கள் விதிவிலக்காகவே இருக்கின்றது. அது பாலியல் வன்முறை, சந்தேக நபர்களை கடத்தல், கொள்ளையடித்தல்…. என்ற குறிப்பானவை வக்கிரமாக வெளிப்பட்டது. ஆனால் இவை பொதுவான ஆக்கிரமிப்பு விதிக்கு உடபட்டது.

ஆனால் புலிகள் தனிப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒன்றை அல்லது பலதை நேரடியாகவும் மறைமுகமாகவும் புடுங்கிவிடும் நோக்கில் வரி, ஆட் சேர்ப்பு, மிரட்டல் என்பன தீவிரமான வடிவமாகிவிட்டது. இதை நேரடி மறைமுக மிரட்டல், துரோகி பட்டம் என பல வடிவில் நிர்ப்பந்தம் கொடுத்து கையாளுகின்றனர். இதன் மேல் பொதுவான கண்காணிப்பு, கட்டுப்பாட்டை இதன் மேல் நிறுவுகின்றனர். தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் மீதான சுமை மற்றும் அடக்குமுறை கடுமையாகின்றது. ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில்; இன்று இரட்டைச் சுமையை மக்கள அனுபவிக்கின்றனர்.

பினாமி அரசியலின் பின்னுள்ள துரோக நோக்கமும்

தமிழ் மக்களின் முதுகில் மேல் சவாரி செய்து, அவர்களுக்கே துரோகம் செய்த தமிழ் கங்கிரஸ் புலிகளின் பினாமி அரசியலின் இன்று தமிழ் மக்களுக்கு எதிரான தரகராக மாறியுள்ளனர். புலிகளால் துரோகியாக அறிவிக்கப்பட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் உட்பட பலர் துரோக குற்றச்சாட்டில் கொல்லப்பட்டனர். பல தொண்டர்கள் புலிகளின் வதைமுகாமில் காணமல் போனார்கள். உண்மையில் துரோகிகளாகவே  பவனிவந்தவர்கள், இன்று புலிகளின் உத்தியோகபூர்வமற்ற பினாமி அரசியல் கட்சியாகியுள்ளது. துரோகியாக அறிவிக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் நாபா உட்பட பல தலைவர்களையும், அவர்களின் உறுப்பினர்களையும்  புலிகள் கொன்றனர். ஆனால் இந்த இந்தியக் கைக்கூலி துரோக தலைவர்கள், புலிகளின் உத்தியோகபூர்வமற்ற பினாமி பேச்சாளராக மாறியுள்ளனர். ரெலோ உறுப்பினர்களையும் அதன் தலைவர்களையும் உயிருடன் வீதிகளின் எரித்தது முதல் படுகொலைக்கு உள்ளானவர்கள். இந்திய இலங்கை கைக்கூலியாக செயல்பட்டு அரசியலில் பிழைத்தவர்கள், இன்று புலிகளின் நம்பிக்கையான பினாமி ஆலோசராகவும் பேச்சாளராகவும் மாறியுள்ளனர்.

இந்த கட்சிகளும், இதன் தலைவர்களும் தமிழ்மக்களும் துரோகமிழைத்தனர். ஈவிரக்கமற்ற வகையில் தமிழ்மக்களை படுகொலைகள் செய்யப்படுவதற்கு பச்சiயாக துணைபோனவர்கள்;. இந்திய இலங்கை அரசின் கைக் கூலிகளாக நக்கி பிழைத்ததுடன், அவர்களின் தயவில் மீள அவதாரம் பெற்று அரசியல் வாதியானவர்கள். அவர்களின் பாதுகாப்பில் பிழைத்த கிடந்தவர்கள். இன்று புலிகளின் கைக்கூலியாகவும் பினாமியாகவும் இடமாறியுள்ளனர். இந்த பினாமித்தனம் கூட மற்றொரு கைக்கூலித்தனமாகும். இவர்களின் சுயமான அரசியல் வாழ்வின் பின், இந்தியா இலங்கை அரசின் கைக்கூலியாக இருந்த போதும் சரி, புலிகளின் கைக்கூலி பினாமியாக இன்று மாறிய போதும் சரி, இவர்கள் மக்களுக்கு துரோகம் இழைக்கும் தமது பொறுக்கி வாழும் அரசியலையே அடிப்படையாக கொண்டுள்ளனர். மக்களின் பிரச்சனையையிட்டு இவர்களுக்கு ஒரு துளிதன்னும் அக்கறை கிடையாது. மக்கள் மீதான அடக்குமுறைகளை தங்களின் நிறத்துக்கு ஏற்ப மூடிமறைத்து, அடக்கு முறைக்கு பச்சையாகவே துணைபோகின்றனர். முன்பு இந்தியா இலங்கை அரசுகள் மக்களுக்கு இழைத்த கொடூரமான அடக்குமுறைகளை முடிமறைத்தபடி, புலிகளுக்கு எதிராக கருத்துக் கூறி நக்கிப்பிழைத்தவர்கள். இன்று புலிகள் மக்களுக்கு எதிராக கையாளும் அனைத்து அடக்கு முறையையும் மூடிமறைத்தபடி, அரசுக்கு எதிராக கருத்துக் கூறியபடி முதுகெலும்பற்ற பினாமியாக மீளவும் நக்கித் திரிகின்றனர். தமக்கென சொந்த அரசியலை முன்வைக்கவும், அதில் இருந்து மக்கள் பிரச்சனையையை முன்னெடுக்கும் அனைத்து தகுதியையும் இழந்துவிட்டனர். தமிழ் மக்களின் இரட்டைத் துயரம் மலையளவானது. ஏகாதிபத்திய ஆசியுடன் சிங்கள இன பௌத்த ஆக்கிரமிப்பாளர்கள், தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள ஒடுக்குமுறையை எதிர்த்து போராடுவது என்பது, மக்களின் அடிப்படை நலன் சார்ந்து தான் சாத்தியமானது. ஆனால் மக்களின் நலன்களை துச்சமாக மதித்து, மக்கள் தலையின் மேல் எறி இருந்து உதைக்கும் புலிகள் போன்ற அமைப்பின் பினாமியாக கைக் கூலியாக வாழ்வது, இந்த துரோக குழுக்களின் மற்றொரு பச்சசையான கட்டி கொடுப்பாகும்;.

மூச்சக்கு மூச்சு புலிகளின் இராணுவ வாதத்துக்கு இசைவாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமுல் செய்யத் துடிக்கும் இந்தத் துரோகிகளின் அறிக்கைகள் மற்றும் போராட்டங்கள் அனைத்தும், பினாமித்தனத்தின் ஒரு வெட்டுமுகம்தான்;. இலங்கையை சிங்கள பௌத்த இனவாத தரகு அரசு உலகுக்கே தரைவார்த்துக் கொண்டிருக்கும் போது, இதை மௌனமாக அங்கீகரிப்பது கைக் கூலித்தனத்தின் மற்றொரு வெட்டுமுகம். இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட உலகின் ஆதிக்க சக்திகள் அனைத்திடமும்; இலங்கையை பிரித்து விற்றுக் கொண்டிருக்கும் போது, அதற்கெதிராக எந்தப் போராட்டத்தையும் இந்த பினாமிகள் முன்னெடுக்கவில்லை. இந்த துரோக கைக்கூலிகள் ஏகாதிபத்தியத்தினதும், பிராந்திய ஆதிக்க வாதிகளினதும் செல்லக் குழந்தைகளாக இருக்கின்றனர். அதே நேரம்; ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதார கொள்கையை, தமது கொள்கையாக கொண்டிருப்பது தேசியத்துக்கு இழைக்கும் அடிப்படையான துரோகமாகும்;. மக்களின் முதுகின் மேல் எறி சவாரி வரவும், அவர்களைக் கொண்டே விபச்சாரத்தை செய்யும் தரகுகளாக இருப்பதும் எதார்த்தத்தின் வெட்டுமுகமாகும்;.

இந்த துரோக கைக்கூலி பினாமி கட்சிகளுக்கு வெளியில், இதைப்போன்ற பல குழுக்களும், அறிவித்துறையினரும், பத்திரிகைகளும் அணிதிரண்டு நிற்கின்றனர். தமிழ்மாறன், சோதிலிங்கம், சிவத்தம்பி, யமுனா ராஜேந்திரன், சிவராம் … என்று பல பத்து பச்சோந்திகளும், வீரகேசரி, தினக்குரல், உதயன் போன்று முதுகெலும்பற்ற பல பத்து பத்திரிகைகளும், செய்தி சேகரிப்பவர்களும், பி.பி.சி முதல் பல தளத்தில் செயற்படும் பினாமி நிலைப்பாட்டுக்கு அப்பால், மக்கள் பிரச்சனையை புலி மற்றும் அரசுக்கு வெளியில் நடுநிலையாக செய்தியை யாரும் வெளிப்படுத்துவதில்லை. மக்களின் துன்பம் துயரத்தை பற்றி கடுகளவு அக்கறை இவர்களுக்கு கிடையாது. ஏகாதிபத்தியத்திடம் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை ஆதரித்தும், புலிகளின் இராணுவ கண்ணோட்டங்களை நியாப்படுத்தவும், அவர்களின் மக்கள் விரோத நடத்தைகளை மூடிப் பாதுகாக்கும் நிலைக்கு தரம் தாழ்ந்துள்ளனர். முன்பு செய்தி அமைப்புகள் மக்கள் விரோத சம்பவங்களை வெறும் செய்தியாக கூட தமது பத்திரிகையில் வெளியிட்டன. ஆனால் இன்று எதையும் அவை வெளியிடுவதில்லை. உதாரணமாக புலிகளுக்கு எதிராக ஜீன் 30 வரை 270 முறைப்பாடுகளை கண்காணிப்பு குழுவுக்கு முன் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதில் 56 முறைப்பாடுகள் யுத்தநிறுத்த மீறலாக கண்காணிப்பு குழுவே அறிவித்துள்ளது. மக்களுக்கு எதிராக இந்த யுத்தநிறுத்த மீறல் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு இருந்த போது, இதைப்பற்றி எந்த செய்தி பத்திரிகையிலும் யாரும் எதையும் பார்க்கமுடியாது. இதை மூடிமறைப்பதே பத்திரிகை தருமமாக பினாமியம் அங்கீகரிக்கின்றது. அறிவுத்துறையினரோ பால் குடிக்கும் பூனை போல் கண்ணை முடிக்கொண்டு புலம்புகின்றனர். உண்மையில் யுத்த நிறுத்த மீறல்கள், புலிகள் தரப்பில் பல பத்து மடங்காகும்;. ஆனால் அவை முச்சுக் குழாய்க்குள்ளேயே சிக்கி கொலைப் பீதிக்குள் அடங்கிவிடுகின்றது. அரசுக்கு எதிராக 110 முறைப்பாடுகள் வந்த போது, இதில் 20 யுத்த மீறலாக அடையாளம் கண்டுள்ளது கண்காணிப்பு குழு. இதை தேசிய பத்திரிகைகள் முதல் அறிவுத்துறையினர் வரை பல பத்துமுறை புரட்டிப் போட்டு பெரிய செய்தியாக்கினர். இன்று தமிழ் பிரதேசத்திலும் சரி, தமிழில் வெளிவரும் அறிக்கைகள், கண்டனங்கள் அனைத்துமே செயற்கையாகவே உருவாகின்றன. புலிகள் எதைப்பற்றி, எப்படி, என்ன நினைக்கின்றரோ, அதைப்பற்றி மட்டும் அவர்கள் வழியில் கூறுவதே அனைத்து தளத்திலும் கருத்தாகி பினாமியமாக அரங்கேறுகின்றது. இதை அரசியல் வெற்றி என்று புலிகள் கொட்டுமுரசு கொட்டும் போது, சமூக அறியமையும் முடத்தனமும் சமூகமயமாகின்றது. இதன் மூலம் உண்மையில் தமிழ் தரப்பு செய்தி அமைப்புகள், அறிவித்துறையினர் என்று பல பத்து பிழைப்புவாதிகள் மக்கள் மீதான வன்முறைக்கு துணைபோய், பச்சையாகவே தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கின்றனர். இதன் மூலம் மக்கள் மேலான அடக்குமுறைகள் மேலும் அதிகரிக்க துணைபோகின்றனர். இதுதான் பினாமி அரசியலின் உள்ளடக்கமாகும்;.

குழந்தைகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் ஏகாதிபத்திய நலன்களுடன் இணங்கும் குறுந்தேசியம், சமூக அறியாமையை ஆயுதபாணியாக்கி போராட்டமாக்கின்றனர்

சிறுவர்களை ஆயுதபாணியாக்குவதாக புலிகள் மேல் குற்றம்சாட்டி, இதை ஒரு மனித உரிமை மீறாலாக ஏகாதிபத்தியங்கள் உலகமயமாக்கின்றனர். ஏகாதிபத்தியம் தனது நலன் சார்ந்து கூக்குரல் போhட, குறுந்தேசியம் அதன் எல்லைவரை இதை அனுசரித்து போவதும் நிகழ்கின்றது. இதன் மூலம் குழந்தைகளின் அடிப்படை உரிமை மீறப்படுகின்றது. குழந்தைகளின் அறியாப் பருவம், அறிவின் வளாச்சி இன்மை போன்ற காரணங்களால் தான், ஆயுதபாணியாக்கவதை எதிர்ப்பதாக பலர் மார்புதட்டுகின்றனர். உண்மையில் அறிவு என்பது என்ன?

இயற்கையை மனிதன் தனது வாழ்வின் சமூகத் தேவையுடன் மாற்றும் உழைப்பை தொடங்கியது முதல், அதைப்பற்றிய அறிவே அறிவியலாகும்;. அதாவது மனிதன் இயற்கையை புரிந்து கொள்ளவும், தனது வாழ்வின் உயிர்வாழ்வுக்கு அதை மாற்றக் கற்றுக் கொள்ளவும், இயற்கையை அதன் போக்கில் பாதுகாக்கவும் உள்ள அறிவே அறிவியலாகும்;. இயற்கை அழிக்கப்படும் இன்றைய மனித வாழ்வில், மனிதனின் இயற்கை வாழ்வுக்கு புறம்பாக சூறையாடப்படும் நிலையில், அறிவியல் என்பது முடிமறைக்கப்படுகின்றது. அறிவு என்பது இயற்கையை சூறையாடுவதையும், மற்றவனை துன்புறுத்துவதுமே அறிவியலாகவுள்ளது. மனித வாழ்வில் இயற்கை மீதான உழைப்பும், அதன் பயன்பாடும், இயற்கை பாதுகாப்பும் மூலதனத்துக்கு அடிமையாகிய போது, அறிவியல் என்பது அடிப்படையில் நலனடிக்கப் படுகின்றது. இதை ஒட்டிய சமூக வாழ்வியல் உள்ளடக்கங்கள் எல்லாம் போலித்தனமாக கட்டமைக்கப்படுகின்றது. மனிதனின் இன்றைய வாழ்வில் எதிர் கொள்கின்ற அனைத்து பிரச்சனைகளும், பொருளாதார உறவுகளும், சமூக உறவுகளும், இயற்கையுடனான பிணைப்பு சார்ந்த அறிவு என்பது, அறவே தெரிந்து கொள்ள முடியாத சூனியத்தில் மனிதன் மந்தைக் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளான். மூலதனம் எதை தனது சந்தைக்கு சாதகமானதாக கருதுகின்றதோ, எதை தனது தேவையாக கருதுகின்றதோ அதுவே அறிவின் எல்லையாக மாற்றிவிடுகின்றது. மூலதனம் தனது லாப நோக்கில் எதை உற்பத்தி செய்கின்றதோ, அதை உற்பத்தி செய்யவும், உண்ணவும், உடுக்கவும், ரசிக்கவும் கற்றுக் கொடுத்த நுகர்வே, சமூக அறிவியலாகவுள்ளது. நுகர்வு அறிவியல் அறிவை பூச்சியமாக்கிவிடுகின்றது. இந்த அறிவு தனிமனித நலனில்; வடிகாலகிவிடுன்றது. இயற்கை, உயிரிணத் தொகுதி, மனித சமூகம் என்ற எல்லையில் அறிவு என்பதை மறுக்கும் மூலதனம், தனது நலனுக்கு இசைவாக அறிவை நலமடிக்கின்றனர். உண்மைக்கு பதில் பொய்யையும், வாழ்வுக்கு பதில் சமூகச் சீரழிவையும், சமூகத்துக்கு பதில் தனிமனித வக்கிரத்தையும், இயற்கைக்கு பதில் இயற்கை அழிப்பையும் சமுதாயமயமாக்கி விரிந்த தளத்தில் அறிவை பூச்சியமாக்கப்படுகின்றது.

இந்த இடத்தில் தான் உலகளவில் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களின்; அறிவு என்பது குறுகிய நலன்களின் எல்லைக்குள் சீரழிக்கப்படுகின்றது. இந்த அமைப்புக்காக ஆயுதம் எந்தும் குழந்தைக்கும் பெரியவருக்கும் இடையில் நோக்கத்தில் முரண்பாடு எற்படுவதில்லை. பெரியவர்களை விட சிறியவர்கள் ஏன் எதற்கு என்று பல பத்து கேள்விகளை பெரியவர்களை விட கேட்டுவிடுபவர்கள் தான். ஆனால் அதை அடக்கிவிட்டால் பெரியவர்களை விட, சொன்னதைச் செய்யும் இயந்திர பொம்மையாகிவிடும் இயல்புடையவர்கள்;. பெரியவர்கள் சமூக வாழ்வில் அதாவது உழைப்பில் ஈடுபட்ட அனுபவம், குழந்தையை விட முன்னேறிய தன்மையாக இருப்பதால் சமூகத் தன்மை கொண்ட குணாம்சம் அதிகமாக இருக்கும். குழந்தை இயந்திரமயமாக அடக்கப்படும் போது அடங்கிப் போகும் தன்மையும், சொன்னதை செய்யும் அடிமை தன்மையும் பெரியவர்களில் இருந்து பண்பியல் ரீதியாக வேறுபடுகின்றது. சமூகத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் போது இந்த பண்பியல் கூறு குறிப்பாக செயலாற்றுகின்றது. ஆனால் சமுதாயத்தில் அறிவியலை பூச்சியமாக்கும் உலகமயமாதல், இதற்கிடையில் உள்ள வேறுபாட்டையும் இல்லாது ஒழிக்கின்றது. உதாரணமாக இன்றைய அமெரிக்கா ஜனாதிபதி ஜோர்ச் புஸ்சுக்கு நைஐpரிய என்ற நாடு எங்கு இருக்கின்றது என்பது தெரியாது. அதே நேரம் அதை அவர் ஒரு கண்டம் என்றார். இவர் தான் அமெரிக்கவின் ஜனாதிபதி. உலகெங்கும் ஆக்கிரமிப்புக்கு வழிகாட்டும் ஒரு ஜனதிபதியின் அறிவு இது. அமெரிக்கா மக்களின் அறிவுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மற்றொரு உதாரணம் பாரிஸ்சின் முன்னாள் மேயர்pடம், பாரிசில் நிலத்துக்கு கீழ் ஒடும் புகையிரத வண்டிக்கான மாதச் சீட்டின் விலை என்ன என்ற கேட்கப்பட்ட போது, அவர் 1950 களில் இருந்த விலையையே கூறினார். (இது போன்ற பல கேள்விகளுக்கு) இன்று அவர் கூறிய விலையை விட 8 முதல் 10 மடங்கு விலை கொடுத்தே பயணயச் சீட்டை பெற்று மக்கள் வாழ்கின்றனர். இவர்தான் பாரிஸ் நிர்வாகத்தையும், மக்களையும் வழிநடத்தினார். இதுதான் பல நாடுகளின்; தலைவர்களின் அறிவின் எல்லை. இவை சாதாரணமான விடையங்களில் வெளிப்படுத்திய முட்டாளுக்குரிய .அறிவின் சூனியத்தைக் காட்டியது.

முதலாளித்துவம் உருவான போது குழந்தை உழைப்பு அதன் அச்சாக இருந்தது. அதற்காகவே உலக ஜனநாயகத்துக்கு ஆயிரம் விளக்கங்களையும் சட்ட அமைப்புகளையும்  கடந்த 300 வருடங்களாக மாற்றி மாற்றி வகுத்தவர்கள். இன்று குழந்தைகளை ஆயுதபாணியாக்குவதை எதிர்க்கும் ஏகாதிபத்தியங்கள் முதல் அதன் வாலைப்பிடித்து தொங்கும் குறுந்தேசிய வீரர்கள் வரை இதன் அடிப்படை நோக்கத்தை பற்றி கேள்வி எழுப்பவில்லை. உலகின் தனது சொந்த வயிற்றை கழுவவும், குடும்ப பாரத்தையும் சுமக்கும் வகையில் மிகக் குறைந்த கூலியில் உழைக்கும் 25 கோடி குழந்தைகளின் நிலைமைக்கே இந்த ஏகாதிபத்திய அமைப்பே காரணமாகும்;. குழந்தை உழைப்பை கொண்ட ஜனநாயக சர்வாதிகார நாடுகளின் ஆட்சி அமைப்பையும், பாசிச சர்வாதிகார நாடுகளின் ஆட்சி  அமைப்பையும் பாதுகாப்பதே ஏகாதிபத்தியமாகும். 15 வயதுக்கு குறைந்த மூன்று வயது குழந்தைகள், நாளொன்றுக்கு 15 மணி நேரம் வரை உழைக்கும் இந்த பிஞ்சுகளின் இரத்தத்தில் தான், உலக ஜனநாயகம் கொடி கட்டிப்பறக்கின்றது. இதை முதுகுமுறிய பாதுகாக்கும் ஏகாதிபத்தியங்கள் தான் குழந்தைகள் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். உலகமயமாதல் தனது பொருளாதார சந்தையை விரிவாக்கும் போது, அதற்கு தடையாக குழந்தை உழைப்பு மலிவுக் கூலியாகி தடை செய்யும் போதே, அதற்கு எதிராக மூச்சு அடைக்க குக்கூரல் இடுகின்றனர். இன்று ஏகாதிபத்திய பணத்தில் இயங்கும் தன்னார்வக் குழுக்களின் தயவில் குழந்தை தொழிலாளர்கள், தொழிச் சங்கம் அமைத்து போராடும் நிலைமையில் உலகம் உருளுகின்றது. இந்த நிலையில் தான் ஆயுதம் ஏந்துவதை ஏகாதிபத்தியங்கள்; எதிர்க்கின்றனர்.

உண்மையில் புலிகள் போன்ற வலது குழுக்கள், மக்களிடமிருந்து அன்னியமான போக்கில் ஆட்பற்றாக்குறையை இந்த குழந்தைகளே நிவர்த்தி செய்கின்றனர். அத்துடன் சமூகத்துக்கு எதிரான நடத்தைகளை, ஆயுதம் ஏந்திய குழந்தைகளைக் கொண்டு இலகுவாக செய்யமுடிகின்றது. அத்துடன் இருக்கும் ஏகாதிபத்திய அமைப்பும், அதன் ஜனநாயக சூறையாடலையும் பாதுகாக்க தடைகற்களாக ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் உள்ளது. ஆயுதம் எந்திய வலது பிரிவுகள், சூறையாடலில் தமது பங்கையும் தரகையும் கோரும் போது இதை மறுக்கும் மூலதனம் ஆயுதப்பலத்தின் அடிப்படையாக உள்ள குழந்தைகளை பற்றி குக்கூரல இடுகின்றனர். இந்த ஆயுதம் ஏந்தி வடிவத்தை ஒழித்துக்கட்ட, குழந்தை பற்றி முதலைக் கண்ணீர் வடிப்பது அவசியமாகிவிடுகின்றது.

இன்று ஏகாதிபத்திய அமைப்பில் குழந்தைகள் கொண்டு நடத்தப்படும் அழகுராணிப் போட்டிகள் உருவாக்கும் அழகுபண்பாடு, குழந்தைகளின் நுகர்வுச் சுதந்திரம் பற்றியும், அதன் உரிமை பற்றியும் நுகர்வு அமைப்பு குழந்தை உரிமையாக விளக்கம் கொடுக்கின்றது. இது மேட்டுக் குடிகளின் கலச்சாரத்தை ஜனநாயகமாக்கி சமூக பண்பாடாக கட்டமைக்கப் படுகின்றது. நுகர்வுச் சந்தை தளத்துக்கு சுதந்திரம் என்ற கல்வி சாhந்து, பண்பாடு, கலாச்சாரமும் குழந்தைகளுக்கு ஊட்டப்படுகின்றது. இப்படி ஏகாதிபத்தியங்கள் உலகமயமாக்கும் பொருளாதார கலாச்சார பண்பாடுகளை குழந்தைகளுக்கு ஊட்டி  வளர்த்தபடியே, ஆயுதம் ஏந்தும் உரிமையை மட்டும் இந்த ஜனநாயக கனவான்கள் வேடிக்கையாகவே எதிர்க்கின்றனர்.

இந்த உலகமயமாகும் அமைப்பில் குழந்தைகள் உழைத்து வாழவும், நுகர்வு சுதந்திரத்தை கொண்டிருக்கவும் முடியும் என்றால், குழந்தையின் ஆயுதம் ஏந்தும் உரிமையை நாம் பாதுகாக்க போராடுவோம்;. அறிவை நுகர்வு வெறிக்குள் மட்டுப்படுத்தின், குழந்தையின் ஆயுதம் ஏந்துவதை கேள்விக்குள்ளாக்கும் தகுதி உனக்கு இல்லை. குழந்தையின் கல்வி மந்தைக்  கூட்டமாக எல்லைக்குள் நின்று மேயவும் பொறுக்கி வாழவும், நுகர்வு கலாச்சார எல்லைக்குள் நக்கி வாழவும், மூலதனத்தை பாதுகாக்கும் எல்லைக்குள் அடிமையை இருக்கும் வரை, ஆயுதம் ஏந்தும் உரிமை குழந்தைக்கு உண்டு. உலகமயமாதல் எதை குழந்தையின் உரிமை என்று கூறி, அதை தனது நலனுக்கு சேவை செய்யும் வகையில் கட்டமைக்கின்றதோ, அதை எதிர்த்துக் குழந்தைகள் ஆயுதம் ஏந்தும் உரிமையுண்டு.

இன்று புலிகள் தமது வலது அரசியலால் மக்கள் விரோதத்தை அடிப்படையாக கொள்ளும் போது, குழந்தைகளை அதன் கருவியாக்குவதை நாம் எதிர்க்கின்றோம்;. சமூகம் பற்றி சிந்தனை அறிவோ, மக்களின் நலன் பற்றி எதிர்ப்புணர்வை அறிவியலாக்கி, ஆயுதம் ஏந்தியது எதற்காக என்பதை முழுமையாக புரிந்த கொள்ளாத மந்தைக் கூட்டமாக உருவாக்குவதையே நாம் எதிர்க்கின்றோம். மக்களின் வாழ்வுடன் இணைந்த, அவர்களின் உழைப்பில் பங்கு பற்றியபடி, சமூக நலன் சார்ந்த அறிவை விருத்தி செய்த படி ஆயுதம் ஏந்தி அதற்காக போராடும் உரிமை, அவர்களின் வாழ்வின் அடிப்படையான விடையமாகும். இந்த அமைப்பையும் அறிவையும் மாற்றும் போராட்டம் பெரியவருக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் உண்டு. சமூகம் பற்றி கல்வி சிறுவயதில் தொடங்கப்பட வேண்டும். இயற்கை பற்றியும், அதில் உயிரினங்கள் பற்றியும், அதில் மனிதன் சமூக வாழ்வு பற்றி கல்வியும் இன்றைய கல்வி முறைக்கு மாறாக அவசியமானது. இதை முற்றாக மாற்றி அமைக்கும் போராட்டத்தின் தொடர்ச்சியில், ஆயுதம் ஏந்தல் என்பது யாருக்கும் விதிவிலக்கை யாரும் வழங்கிவிடமுடியாது. ஆயுதம் ஏந்தல் என்பது அறிவியல் சிந்தனைத் தளத்தில் இருந்து, இந்த சமூகத்தை மாற்றியமைக்கும் வன்முறை போராட்டம் வரை அனைத்து மக்களுக்கும் உள்ள உரிமையாகும்;.

வரி ஒரு கொள்ளையாக மாறிவிடுவது எப்போது?

பரந்து விரிந்த சமூகமாக மனித இனமாக மாறி தனிமனித சூறையாடும் நலன்களே ஜனநாயமாக உள்ள போது, வரி என்பது அடிப்படை விடையமாக உள்ளது. இந்த வரி மக்களின் நலன் சார்ந்து, மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயன்படுத்தின் இதன் மீதான விமர்சனம் அவசியமற்றவை. மக்களின் உழைப்பு, அவர்களின் சமூகத் தேவை பூர்த்தி செய்யும் வரையறைக்கு வெளியில் தனிமனித சொத்துரிமை உடைய சமூகத்தில் வரி அவசியமாகின்றது. இது இயற்கை நெருக்கடியை எதிர் கொள்ளும் பொது நிவாரணமாகவும், முதியோர் பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு, அங்கவீனர் பராமரிப்பு, உற்பத்தி விரிவாக்கம், கல்வி, மருத்துவம், குடியிருப்பு, கலாச்சார விரிவாக்கம் என்ற விரிந்த சமூகத் தேவைகளை மக்களுக்காகவே பயன்படுத்த, அவர்களிடம் இருந்து ஒரு பகுதியை அறவிடுவதை யாரும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. மக்களிடம் இருந்து பெறுவதை அவர்களுக்கே மீள பயன்படுத்தும் போது, இங்கு வரி என்பது மக்கள் விரோதமாக இருப்பதில்லை.

ஆனால் மக்களிடம் பெறும் வரியை அவர்களுக்கு பயன்படுத்தாது, சிலர் நலன்களை சார்ந்த அவர்களுக்கு பயன்படுத்தும் போது, வரி என்பது கொள்ளையாக சூறையாடலாகிவிடுகின்றது. இன்ற தமிழ் பிரதேசங்களின் வாங்கப்படும் வரி எதற்காக பயன்படுத்துகின்றனர் என்பதே மையமான கேள்வியாகும். பாடாசாலை கல்விச் செலவு, மருத்துவச் சேவை முதல் அரசு ஊழியர்களின் சம்பளம் வரை இலங்கை அரசே தமிழ் பிரதேசத்தில் வழங்குகின்றது. அதாவது இலங்கையில் தமிழ் அல்லாத மற்றைய பகுதிகளின் வாழும் மக்களின் சமூகத் தேவைகள் போன்றே தமிழ் பகுதியிலும் (மருத்துவம், கல்வி, இலவச உணவு விநியோகம், மானிய உணவு, விவசாயம்,… என எண்ணற்ற விடையங்கள்) அரசே நிர்வகிக்கின்றது. இதில் இன ஒடுக்கமுறை சார்ந்த புறக்கணிப்புகள் இருந்த போதும், ஊழியர்க்கான சம்பளம் முதல் அரசின் தயவில் நிர்வாகச் செலவு முதல் அடிப்படைத் தேவைகள் சார்ந்து உள்ளன. இந்த நிலையில் இந்த உழைப்பின் மேலும், சமூகத் தேவைகள் மீதும் கூட புலிகளால் வரி அறவிடப்படுகின்றது. புலிகளால் வாங்கப்படும் வரி மக்களுக்களின் சமூகத் தேவைக்காக திருப்பி விடப்படவில்லை. ஒரு சில சமூக பராமரிப்புகளை விதிவிலக்காக செய்த போதும், அவை நிர்ப்பந்தம் காரணமாகவே நிகழ்கின்றது. சமுதாயத்தின் தேவை, நலன் என்பதில் இருந்த வரி கையாளப்படவில்லை.

புலிகளின் இராணுவவாத அரசியல் வரியை உறிஞ்சி வாழ்கின்றது. மக்களிடம் வாங்கும் வரியை நவீன ஆயுதச் சந்தையில் தொலைக்கின்றது. உலகில் பல நாடுகள் மக்களிடம் கொள்ளையிட்டு சூறையாடும் வரியை தேசிய பாதுகாப்பின் பெயரில் ஆயுத தளபாடங்களுக்கு எப்படி திருப்பிவிடுகின்றனரோ, அதையே புலிகளும் செய்கின்றனர். உலகளவில் வசூலிக்கும் வரியில் பெரும் பகுதியை, ஆயுத தளபாடங்களுக்கும் சொந்த இராணுவத்துக்கும் செலவு செய்யும் அதிகூடிய சதவீதத்தை உலகளவில் புலிகள் மட்டுமே கொண்டிருப்பர். இது புலிகளின் மக்கள் விரோத வலதுசாரி ஆயுதவாத அரசியல் கண்ணோட்டமாகும்;. ஆயுதமே அவர்களின் அரசியலாக உள்ள போது, இது அதன் விதியாகின்றது.

வரியின் எல்லையை எடுப்பின், அதன் வரைமுறை என்பது கட்டுப்பாடு அற்றது. ஒரு பொருள் எத்தனை முறை விற்கப்படுகின்றதோ, அத்தனை முறை வரி அறவிடப்படுகின்றது. ஒரு பொருள் எத்தனை முறை உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றதோ அத்தனைமுறை, அவற்றின் மேல் வரி அறவிடப்படுகின்றது. விற்பனை மட்டுமல்ல, உற்பத்தி மீதும், அதன் பயன்பாட்டின் மீதும், பல தளத்தில்; இது நேரடி மற்றும் மறைமுக வரி, எல்லைகள் அற்ற விரிந்த தளத்தில் வசூலிக்கப்படுகின்றது. அன்றாட நுகர்வு பொருட்களின் விலை நிர்ணயத்தில் இருந்து, அதை வாங்கும் கூலி பணத்துக்கும் கூட வரி அறவிடப்படுகின்றது. அரசு கட்டுப்பாடு அல்லாத பிரதேசத்துக்குள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு வரி அறவிடப்படுகின்றது. அரசின் பொருளாதாரத் தடை பொருட்களை உட் செல்வதை மறுக்கின்றது. அதை நீக்கக் கோரி போராடிய அதே நேரம், புரிந்துணர்வு உடன்படிக்கை அதை நீக்கக்கோரியது. ஆனால் பொருட்கள் உள் வந்த போது 5 முதல் 25 சதவீதமும் அதற்கு கூடுதலான வரியும் புலிகளால் அறிவிடப்படுகின்றது. இதில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து, பொருட்களுக்கு என்ன வரி என்ற ஒழுங்குபடுத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டனர். இது 5 முதல் 25 சதவீத வரியை பொருட்கள் மீது கோருகின்றது. வரி அற்ற எல்லை என்பது மிக குறைந்த எண்ணிக்கை கட்டுப்படுத்தியது. இந்த பொருட்கள் உட் சென்று மக்களை அடையும் போது, தமிழ் மக்களின் வாங்கும் திறன் குறைந்த பட்சம் 5 முதல் 25 சதவீத பொருளாதார நெருக்கடிக்குள் இந்த வரி கொண்டு வருகின்றது. உதாரணமாக கல்விக்கு அவசியமான பேப்பர் மற்றும் கொப்பிக்கு 20 சதவீத வரி அறவிடப்படுகின்றது. கட்டிட பொருளுக்கு 25 சதவீத வரி அறவிடப்படுகின்றது. உடுப்புக்கு 10 சதவீத வரி. இப்படி வரி பட்டியல் ஒன்றை வரைமுறையற்ற வரிக்கு பதிலாக முன்வைக்க புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதை இராணுவ பிரதேசமான யாழ்ப்பாணமும், கிழக்கு பகுதிகளும் புதிதாக சந்திக்கின்றன.

இங்கு வரி சொந்த தேசிய உற்பத்தி பாதிகப்படுமாயின் வெளியில் இருந்து உள் வரும் பொருளுக்கு உயர்ந்த வரி அறவிடுவது அவசியமாகும். ஆனால் தேசிய உற்பத்தி மற்றும் தேசிய பொருளாதாரத்தை கட்டமைக்காத நிலையில், வரிமுறை என்பது மக்களின் அடிப்படை தேவைகள் மறுக்கப்படுவதை சமூக மயமாக்கின்றனர். இன்று உலகளவில் ஈராக், கியூபா, வடகொரியா போன்ற நாடுகளுக்கு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் ஏகாதிபத்திய தடைகள் எப்படியோ, அதையே புலிகள் வரி மூலம் செய்கின்றனர். தேசிய பொருளாதார அமைப்பை பாதுகாக்கவும், அதை பலப்படுத்தவும் வரி அறவிட்டால் வரவேற்க முடியும்;. தேசி பொரளாதாரத்தை கட்டமைக்காத தேசியம், ஏகாதிபத்திய பொருளாதாரத்துக்கு கம்பளம் விரிக்கும் தேசியத்தின் மேல் அறவிடும் வரி, மக்களுக்கு நஞ்சு ஊற்றிக் கொடுத்து தற்கொலை செய்யத் தூண்டுவதாகும். குழந்தையின் பால் மாவுக்கு 7 முதல் 8 சதவீத வரி என்பதன் மூலம் குறைந்த வரி உடான சலுகை என்று கூறி, தம்மைத் தாம் நியாப்படுத்திக் கொள்வே இது உதவும்;. இதற்கு வரிவிலக்கு அளிக்கவில்லை. பாடசாலை தமிழ் மாணவர்களின் கல்விப் பொருட்களுக்கு வரி அறவிடப்படுகின்றது. வரி என்பது சொந்த உற்பத்தி பதிக்கப்படும் போதும், ஆடம்பர பொருட்கள் மீதானதாக இருக்க வேண்டும்;. அடிப்படை தேவைக்கும், தாம் உற்பத்தி செய்யாத பொருட்களுக்கும் வரி என்பது தற்கொலைக்கு வழிகாட்டுவதாகும்;.

அடுத்து புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீதான சுழற்சியான வரி என்பது, சொந்த பிரதேசத்தில் வாங்கும் திறனை அழிக்கின்றது. மற்றயை பிரதேசத்தில் சந்தைப்படுத்தும் திறனை இழக்கின்றது. உற்பத்திகள் யுத்தத்தில் சிக்கி பல்வேறு நெருக்கடி மற்றும் வரியால் உற்பத்தி செலவு உயர்வாக மாறுவதால்;, உள்ளுர் மக்கள் வாங்கும் திறனை இழந்து விடுகின்றனர். இதை வெளியில் சந்தைப்படுத்தும் போது உற்பத்தி மீதும், வர்த்தகம் மீதும் வரியைக் கையாளும் போது, உற்பத்தியாளர்கள் அதை உற்பத்தி செய்வதையே கைவிடுகின்றனர். இதனால் தேசிய வளம் அழிவதுடன், மக்கள் உழைத்து வாழும் திறன் அழிக்கப்படுகின்றது. வரி என்பது மக்களின் சமூக வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் அறவிடப்படுவது மறுக்கப்படும் வரை, அது சூறையாடலாக கொள்ளையாக மாறிவிடுகின்றது.

இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களின் அறவிடப்படும் பணம்

மக்களின் மேலான நேரடி மற்றும் மறைமுக மிரட்டல் மூலம், சிறு தொகையில் இருந்து பெரும் தொகையான பணம் வசூலிக்கப்படுகின்றது. புலிகளின் அரசியல் வேலை இது தான் என்பதும், இதைத் தாண்டி எதுவுமல்ல என்பதும் வெளிச்சமாகியுள்ளது. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்கள் மீதான சிவில் நிர்வாகம் என்பது, பணம் வசூலிப்பதும் ஆட் சோப்பதுமே என்பதை  எதார்த்ததில் வெளிப்படுத்துகின்றனர். மக்களின் தேசிய நலன்களை அரசியல் ரீதியாக உறுதி செய்து வளர்த்தெடுக்கும் அரசியல் மயமாக்கல் என்பது, தேசியம் பற்றி தெளிவைக் கோருகின்றது. ஆனால் புலிகள் தேசிய பொருளாதாரம் என்ற அடிப்படை விடையத்தில், ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் தரகுகளாக செயற்படுவதையே அரசியலாக கொள்ளும் போது, பணத்தைப் பெறுவது அரசியலாகிவிடுகின்றது. தமது சிவில் நிர்வாகம் என்பது மக்களின் தேசிய பொருளாதாரத்தை கட்டமைத்து நிர்வாகிப்பதைக் கோரவில்லை. மாறக இலங்கை அரசின் பணத்தை அடிப்படையாக கொண்டும், ஏகாதிபத்திய உலகமயமாதல் பணத்தை ஆதாரமாக கொண்டு, அரசுசாரா ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் அமைப்பு மற்றும் கிறிஸ்துவ நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையே கோருகின்றனர். இயல்பில் நடந்து கொண்டிருப்பதை தாம் கட்டுப்படுத்தி அதன் மூலம் மக்களை கவரவும்;, அதிலும் தமது இராணுவ அரசியலுக்கு தேவையானதை சூறையாடவுமே விரும்புகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு கிடைப்பதில் ஒருபகுதியை நாம் எடுக்கும் அதிகாரத்தையே கோருகின்றனர்.

இந்த நிர்வாகம் என்பது பணத்தை அறுவடை செய்வதை ஆதாரமாக கொள்கின்றது. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் பண வேட்டையில் இருந்த தடைகளை புரிந்துணர்வு உடன்பாடு இல்லாது ஒழித்தது. இதைத் தொடர்ந்து எல்லா இடத்திலும், எல்லா வீட்டிலும் புடுங்கக் கூடியதை புடுங்குகின்றனர். மறைமுக மிரட்டல், நேரடி மிரட்டல் இதன் அரசியலாக உள்ளது. நிலங்கள் போன்றவை விவசாயம் செய்ய வி;ட்டாலும் கூட வரி அறிவிடப்படுகின்றது அல்லது நிலத்தை தம்மிடம் ஒப்படைக்க கோருகின்றனர். எங்கும் எதிலும் கையை வைப்பதுடன், பணத்தைப் பெறுவதை மையமான குறிக்;கோளாக கொள்ளும் போது, போராட்டத்துக்கு எதிரான உணர்வுகள் வளர்ச்சி பெறுகின்றது. இப்படி சேர்க்கும் பணத்தை அந்த மக்களுக்கே பயன்படுத்தப் படுவதில்லை என்பது மற்றொரு உண்மையாகும். இராணுவ வாதம் சார்ந்து நவீன ஆயுதம் மூலம் புரட்சி செய்யும் கனவுடன், மக்களின் வாழ்வு அழிக்கப்படுகின்றது. இது புலிகள் அரசியலாகும் போது, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கே வேட்டு வைத்து விடுமளவுக்கு மாறிச் செல்லகின்றது.

ஆட்சேர்ப்பு இயல்பு நிலையைக் கடக்கும் போது

பெற்றோருக்கு தெரியாமல் நடத்தும் ஆட் சேர்ப்பும், பெற்றோருக்கு தெரிய நடத்தும் கட்டாய ஆட் சேர்ப்பும் புலிகளின் மற்றொரு அரசியலாகும்;. பணம், ஆட் சேர்ப்பும் நவீன ஆயுதங்களும்; தமிழீழத்தை உருவாக்கும் என்ற குறுந்தேசிய கண்ணோட்டம், தமிழ் மக்கள் மேல் சவாரி வைப்பதை குறிக்கோளாக கொள்கின்றது. வாய்க்கு வாய் புலிகளை இராணுவ பிரதேசங்களில மக்கள்; வரவேற்பதாகவும் கூறும் இவர்கள் தான், அந்த மக்களின் குழந்தைகளை அவர்களுக்கு தெரியாமல் கடத்திச் செல்வதில் கவனம் செலுத்துகின்றனர். பராளுமன்ற கதிரைப் பேர்வழிகள் முதல் புலிகளின் அரசியல் பிரமுகர்கள் வரை, மக்களை போராட்டத்துக்கு வென்று எடுக்கும் வழிமுறை இதுதான். குழந்தைகளை கோரியும், காணாமல் போன தமது குழந்தைகள் எங்கே என்று புலிகளிடம் மண்டியிடும் நிலைக்கு, மக்கள் அரசியல் ரீதியாக தாழ்த்தப்படுகின்றனர். பெற்றோருக்கு தெரியாமால் ஆயுதக் கவர்ச்சிய ஏற்படுத்தி கவரும்; பிள்ளைகள் மற்றும் கட்டாய ஆட் சேர்ப்பில் உள்ளவோர் அனைவரையும் வன்னி நோக்கிக் கடத்தப்படுகின்றனர். இது மட்டுமே அவர்கள் தப்பிச் செல்வதை தடுக்கும் புலிகளின் கடைசி அரசியல் எல்லையாகும்;. மட்டக்களப்பில் பலர் தப்பிச் சென்று பொலிஸ் மற்றும் இராணுவத்திடம் தொடர்ச்சியாக சரண் அடைகின்றனர். 1990 இல் இந்திய கைக் கூலிகளாக செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் எப்படி கட்டாய ஆட் சேர்ப்பை நடத்தி பிள்ளை பிடிகாரர் ஆனார்களோ, அதே போன்று புலிகள் இன்று பிள்ளை பிடிக்கும் நிலைக்கு தமது அரசியலை தரம் தாழ்த்தியுள்ளனர்.

தமது எதிரிகளை கடத்துவதும், ஒழித்துக் கட்டுவதும்.

இது புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குள் இருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது. மாற்றுக் கருத்து என்பது நலனடிக்கப்பட்ட தமிழீழ மண்ணில், முரண்பாடுகள் உள்ளிருந்தே புகைகின்றது. அத்துடன் புலிகளின் அரசியலில் இருந்து மாறுபட்டவர்கள் புலிகளின் பினாமியாகவும், தனித்துவமாகவும் முரண்பாடுகின்றனர். அத்துடன் அரசின் தயவில் செயற்படு;ம் குழுக்கள் தனி நபர்கள் என்ற தளத்திலும் முரண்பாடுகள் வெடிக்கின்றன. அரசுடன் இணைந்து செயற்படுவர்களுக்கும் புலிகளுக்கும் இடையில் அரசியல் ரீதியான வேறுபாடு இல்லை. ஆனால் அரசுடன் இணங்கி நிற்;பதா எதிர்த்து நிற்பதா என்பதே முரண்பாடு. இதன் அடிப்படையில் அரசியல் முரண்பாடற்ற பல குழுக்கள் புலிகளின் பினாமியானார்கள்;. முன்னைய துரோகிகள,; இன்று தேசிய வீரர்களாக உலாவும் விசித்திரம் நடக்கின்றது.

இன்னமும் உடன்பாடத முரண்பாடு கொண்டோரை, புர்pந்துணர்வு உடன்பாட்டின் பின்பாகவும் தாக்குவது, கடத்துவது, காணமல் போவது தொடர்ந்தும் புதிய வடிவத்தில் நிகழ்கின்றது. முன்பு ஆயுத முனையில் நடந்தவை இன்று கொட்டந் தடிகள், முகமூடிகள் முதல் நடு இரவு தாக்குதல்கள் என பல வடிவத்தில் நடைபெறுகின்றது. உயிருடன் கிணற்றில் போட்டு கொல்வது, வடக்கு முதல் கிழக்குவரை ஒரேவிதமாக நடக்கின்றது. எண்ணிக்கை சரியாக தெரியாவிட்டாலும் பல கொலைகள் இதே விதத்தில் நடைபெற்றுள்ளது. பினாமிய பத்திரிகைகள் இதை செய்தியாக வெளியிடுவதைக் கூட ஜனநாயக விரோதமாக கருதுகின்றது. இதுபோன்ற ஆட் கடத்தல்கள், தாக்குதல்கள் என்று பல நடைபெறுகின்றது. என்ன நடக்கின்றது என்பதை, மக்களின் தமக்கிடையிலான செய்தி பரவல் மூலமே செய்தியாக்கி வருகின்றனர்.

காணமல் போனோர் சங்கங்கள் ஒரு குறித்த பட்டியலை வைத்துக் கொண்டு மட்டும் போராடும் மோசடி கேவலமானது. இந்த குறித்த பட்டியலுக்கு முன்பு காணமல் போனோர் பற்றியோ, இதன் பின்னால் காணமல் போனோர் பற்றியோ எந்த அக்கறையையும் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் காணமல் போனது சரி என்பது, இவர்களின் வக்கிரம்.

புலிகளின் பாஸ் முறையும், ஆக்கிரப்பளானின் பாஸ் முறையும்

புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு பாஸ் முறையை ரத்துச் செய்யக் கோரி குறுந்தேசிவாதிகள் முதல் பினாமிகள் தலைகீழாக நின்று கோரினர். சிங்கள இனவெறி பௌத்த அரசோ இரட்டை பாஸ் முறையாக உள் வருவதும் வெளிச் செல்வதையும் கட்டுப்படுத்தியது. இந்த இரட்டை பாஸ் முறையில் அனைத்தையும் நீக்கிய போது, இயல்பில் புலிகளும் பாஸ் முறையை நீக்குவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரை புலிகள் பாஸ்முறையை நீக்கவில்லை. அதாவது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச மக்கள் மீதான பாஸ் முறை மட்டுமே, அந்த மக்களை புலிகளுடன் நிற்க வைத்துள்ளது. உண்மை என்ன என்பதை ஆராயின், புலிகள் தமது பிரதேசத்தில் பாஸ் முறையை நீக்கம் பட்சத்தில், அங்கு வாழும் மக்கள் அந்த பிரதேசத்தை விட்டே வெளியேறிவிடுவர் என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகின்றது. வறுமை மற்றும் பொருளாதார பலமற்றவர்கள் எதுவும் செய்ய முடியாது  அதற்குள் வாழ்வார்கள். ஆனால் மற்றவர்கள் வன்னியை விட்டே புலம் பெயர்ந்து விடும் அவலம், போராட்டத்தின் வெட்டமுகமே காட்டுகின்றது. தேசியம் மக்களுக்கானதாக இருப்பின் இப்படி நிகழுமா? பினாமிகள் புலிகளின் பாஸ் முறையை ரத்து செய்யக் கோரி மூச்சு விடவேயில்லையே ஏன்?

புலிகள் பலத்காரமாக  வெளியேற்றிய முஸ்லீம் மக்களின் நிலை

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள குடியேற்றவது என்ற விடயத்தில் எந்த குறுந்தேசியவாதிகளுக்கும் சரி  பினாமிகளுக்கும் சரி அக்கறையில்லை. பிழைப்புவாத முஸ்லீம் தலைவருடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடந்த இரகசிய ஒப்பந்தத்தின் பின்னால், இந்த மக்களின் குடியிருக்கும் உரிமை கொடிகட்டி பறக்கின்றது. யுத்த ஆக்கிரமிப்புகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலும், மக்கள் வாழமுடியாத சூனிய பிரதேசங்களிலும் மீள குடியேற்றம் நிகழ்கின்றன அல்லது அது கோரப்பட்டு போராடப்படுகின்றனது. பாடசாலைகள், கோயில்கள் என்று இராணுவத்தை வெளியேற்றியும், வெளியேறக் கோரியும் போராட்டங்களை புலிகளும், பினாமிகளும் ஒழுங்கு செய்கின்றனர். ஆனால் முஸ்லீம் மக்களின் மீள குடியமர்வு பற்றி யாரும் அக்கறைப்படவில்லை. அவர்களின் பாடசாலைகள் கோயில்கள் எல்லாம் இருந்தன. எந்த பல்கலைக்கழகமும், எந்த மாணவர் அமைப்பும், எந்த பொது அமைப்புகளும் இதற்காக குரல் கொடுக்கவோ, போராடவோ இல்லை. உண்மையில் முஸ்லீம் காங்கிரஸ் புலிகளுடன் செய்த இரகசிய பேரத்தின் பின்னால், மீண்டும் முஸ்லீம் மக்கள் மீள வன்முறைக்கு உள்ளானதே எதார்த்தம் காட்டுகின்றது. புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்க கோரும் இடைக்கால நிர்வாக சபையும், நிச்சயமாக முஸ்லீம் மக்களுக்கானவை அல்ல. இதையே கடந்த காலமும் நிகழ்காலமும் காட்டுகின்றது.

கிழக்கில் நடந்த முஸ்லீம் - தமிழ் மக்கள் கலவரம் தொடர்பாக

தமிழ் கூட்டமைப்பு புலிகளின் பினாமியாக சென்ற தேர்தலில் நின்ற போது, எந்த முஸ்லீம் வேட்பாளரையும் தனது சார்பாக நிறுத்த தவறியதில் இருந்தே, முஸ்லிம் மக்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தினர். கிழக்கில் புலிகளின் பினாமிகள் நடத்திய தொடர்ச்சியான ஊர்வலங்கள், ஒட்டு மொத்த மக்களின் நலனை பிரதிபலிக்கவில்லை. மாறக புலிகளின் குறிப்பான நலனை பிரதிபலித்தது. புலிகளுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கிடையில் நடக்கும் மோதல்களில் முஸ்லீம் இனத்தவர் ஈடுபடும் போது, அதை முஸ்லீம் இனத்துக்கு எதிரானதாக காட்டவும் சித்தரிக்கவும் செய்தனர். இந்த தனிப்பட்ட மோதல்கள் கூட புலிகளின் ஜனநாயக விரோத அரசியலில் இருந்தே தோற்றம் பெறுகின்றது.

இப்படி நடந்த மோதலில் ஒரு இனத்துக்கு எதிராக மற்ற இனத்தை களத்தில் இறக்கியது புலிகளே. இதை ஊர்வலமாக்கி மற்றயை இனங்கள் வாழும் பிரதேசங்கள் ஊடாக நகர்த்திய போது, அந்த மக்களுக்கு எதிரான கோசங்கள், வன்முறைகளே ஒரு இனமோதலாக வளர்ச்சி பெற்றது. இதில் ஒரு பகுதி முஸ்லிம் இளைஞர்கள் புலிகளைப் போல் தமிழ் மக்களை எதிரியாக கருதி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் தமிழ் தரப்பின் பின்னணியில் புலிகள் இருந்தனர். புலிகள் இல்லாமல் எதும் அசையாது. அறிக்கை முதல் ஊர்வலம் வரை புலிகளின் பினாமி முத்திரை குத்தியே வெளிவந்து நடக்கும் போது, கலவரம் மட்டும் என்ன விதிவிலக்காக!  இல்லை, இதன் பின்னணியில் புலிகள் இருந்தனர் என்பதே உண்மை. இந்த கலவரத்தில்; தமிழ் கூட்டமைப்பின் பங்கும் பணியும் கூட இருந்தது என்பதும் மற்றொரு உண்மையாகும்.

ஜே.வி.பியின் அரசியல் பச்சை இனவாதமே

இடதுசாரிகள், மார்க்கசியவாதிகள் என்ற பெயரில் மார்க்சிய லெனிய படங்களின் கீழும், சிவப்புக் கொடி பிடித்து தமது பச்சை இனவாதத்தை நவீனப்படுத்தவதில் என்றுமில்லாத வக்கிரத்தை வெளிப்படுத்துகின்றனர். புலி என்றும், தமிழ் மக்கள் என்றும் அலறும் ஜேவிபி, இதற்கு எதிரான போராட்டமே வர்க்கப் போராட்டம் என்று முழக்கமிடுகின்றனர். புலிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகளவில் அமெரிக்கா உள்ளிட்ட இந்தியா வரை ஒரே குரலில் ஒடுக்குமுறையை கையாளும் நிலைக்கு, ஜே.வி.பி ஆதரிப்பது தான் வேடிக்கை. இனவாத்தை அரசியலாக்குபவர்கள்;; நாட்டை ஏகாதிபத்தியத்திடம் கூறுபோட்டு விற்கும் நிலையிலும், சிவப்பு கொடிபிடித்து மா.லெனிய படங்களை தூக்குபவர்கள், புலிகளுக்கு எதிராக களமிறங்கும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடவில்லை. தமிழ் மக்களையும், புலிகளை எதிர்த்து நிற்பதன் மூலம், ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு குண்டி கழுவி விடுவதில் ஜே.வி.பி சாதனை படைக்கின்றது. வரலாற்று ரீதியாக இனவாதத்தை இலங்கையில் அரசியாக கொண்ட பெரும்பான்மை கட்சிகள் இரண்டும் அடக்கி வாசிக்க, ஜே.வி.பியோ அந்த இனவாத வெற்றிடத்தை கௌவ்விக் கொள்ள ஆலாய் பறக்கின்றது. இந்த இனவாத அரசியலை அரங்கேற்ற, ஏகாதிபத்தியத்திடம் வாலட்டுவது இலங்கையில் புதிய ஒரு இனவாத அத்தியமே.