Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

ஆரியரின் இரத்த உறவு வழிவந்தவர்கள் அல்ல, அனைத்து பார்ப்பனர்களும் - சாதியம் குறித்து பாகம் - 14

  • PDF

இன்றைய பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு அடியைச் சேர்ந்த, 4000 வருடமாக வாழ்ந்து வந்த இரத்த உறவு வாரிசுகளா? எனின் இல்லை. பல இடைக்கட்டங்களின்றி, இன்றைய பார்ப்பனர்கள் உருவாகவில்லை. ஏன் பார்ப்பனியம் கூடத்தான்.

தனிச்சொத்துரிமை வர்க்க அமைப்புக்கேயுரிய இயற்கையான பொது விதி, தனிச்சொத்துடமை அடிப்படையில் யாரையும் சாதிய அமைப்பு போல் கட்டுப்படுத்துவதில்லை. சொத்துடமை தான், இங்கு தீர்மானிக்கின்றது. சாதிய அமைப்பிலான சொத்துடைமை என்பது, வர்க்க நிலையை சாதிகள் தமது தனி உரிமையாக்கியதன் விளைவாகும். இப்படி சாதிக்கு வித்திட்ட பார்ப்பனன், தன் சுரண்டும் தொழிலை தமது தனி உரிமையாக்கினான். அதாவது அதை தமது பரம்பரை உரிமையாக்கினர். இந்த தனி உரிமை, தனிச்சொத்துரிமை பொது விதியை மறுத்ததால், அது சாதியாகத் திரிந்தது. உலகில் இப்படி வேறு எங்கும் உருவாக்கமுடிவில்லை. சாதிக்கு முந்தைய வருண(ர்க்க) அமைப்பு, இப்படி இருக்கவில்லை. இது உலகெங்கும் இருந்துள்ளது.

வருண அமைப்பில் சொத்துடைய யாரும், மேலே உயர முடியும். அதேநேரம் சொத்தை இழந்தவர்கள் கீழே விழமுடியும். இப்படித்தான் வருண(நிற) அமைப்பை ஆரியரும் இழந்தனர். அது ஆரியரால்லாதவரை உள்ளடக்கிய ஒரு வர்க்க அமைப்பாகியது. இதைக் கட்டுப்படுத்தும் எந்த சாதிய விதியும், அங்கு கிடையாது. சொத்துடமையை அடைய எந்த தொழிலையும், யாரும் சுதந்திரமாக செய்யமுடிந்தது.

வருண அமைப்பில் பார்ப்பனர்கள் முதியவர்கள் போன்று, மதத் தகுதிக்குரிய தனி அந்தஸ்த்தை மதம் ஊடாக பெற்று இருந்தபோது, தனிச்சொத்துடமை விதி அந்த அமைப்பில் எப்போதும் எங்கும் பலமான கூறாக இருந்தது. இது நிறத்தை, பல இனத்தையும் கடந்து வெளிப்பட்டது. தனிச்சொத்துரிமை அமைப்பில் இது ஒரு இயற்கை விதியாக, அதுவே சமூக அமைப்பின் போக்கை நிர்ணயம் செய்வதாக இருந்தது. இது தொழிலுக்குரிய இயல்பான பரம்பரைத் தன்மை என்பதை அழிந்தது. பரம்பல் விதி, இயல்பான தடைகள், பரம்பரைத் தொழில் போன்றன, பொதுவாக எல்லா சமூகத்திலும் காணப்பட்ட பொது விதிகள்தான். ஆனால் தனிச்சொத்துரிமை இதைத் தகர்த்து, இதை மட்டுப்படுத்தியது. நிற வருண வேறுபாடு சமூக அமைப்பை நிர்ணயித்த போக்கு தகர்ந்து, வர்க்க வருணமாக மாறுமளவுக்கு சமூகக் கலப்புகள் நிகழ்ந்தது.

வேத-ஆரிய சமூக மூலத்தையும், அது கொண்டிருந்த மொழியையும், அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தினுள்ளாக சிதைந்ததன் மூலம், தமது இரத்த உறவு வழியான தூய்மை என்று சொல்லக் கூடிய அனைத்தையுமே ஆரியர் இழந்தனர். ஆரியர் என்ற வரலாற்று மூலத்தைக் கூட அவர்கள் இழந்தனர். சமூகத்தின் சிதைந்தால், அதன் தொடர்ச்சியில் தூய்மையான ஆரிய இரத்த வாரிசுக்குரிய மூலத்துக்கு இடமில்லை. இங்கு இது பலவாக திரிந்த போதுதான், பார்ப்பனர்களாக ஒரு பிரிவு உருவானார்கள். உண்மையில் கலப்பு அடியில் வந்த ஆரிய கலப்பு பரம்பரை தான், இன்றைய பார்ப்பனர்கள்.

இதற்கு வெளியில் தனிச்சொத்துரிமையிலான வருணம் சாதியாக முன்னம், தனிச்சொத்துரிமையின் விரிந்த எல்லைக்குள் வெளியில் இருந்து சென்ற பலர் பார்ப்பனரானார்கள். குருகுலக்கல்வி முறை குறித்த சாதிக்கானதாக மாறமுன்னம், இது பலரை பல பிரதேசத்தில் உள்ளவரையும் பார்ப்பனராக்கியது.

சுரண்டும் பார்ப்;பன பூசாரி வர்க்கம், தனது வேத ஆரிய சடங்குமுறையை அதன் இரகசியத்தையும், தனது சொந்த தனிமொழி மூலம் தனக்குள் பாதுகாக்க முடியவில்லை. அதாவது தனிச்சொத்துரிமை வ(ர்க்க)ருண அமைப்பில், அதை தற்பாதுகாக்க முடியாது போனது. (இரகசிய) மொழியான சமஸ்கிருதம் வெறும் மொழியே ஒழிய, சாதி போல் பார்ப்பன சொத்துரிமையை பாதுகாக்கும் வலுவுள்ள ஆயுதமல்ல.

சாதியை அடிப்படையாக கொண்ட நிலபிரபுத்துவ காட்டுமிராண்டி அடக்குமுறைச் சமூக அமைப்பில் மட்டுமே, இரத்த உறவு ஊடாக பார்ப்பன பரம்பரை ரீதியான சுரண்டல் முறையை ஒரு நீடித்த காலத்திற்கு பாதுகாக்க முடிந்தது. வருண அமைப்பிலோ தொழில் சார்ந்த சுரண்டல்கள், பரம்பரைத் தன்மைக்கு வெளியில், அதாவது இரத்த வாரிசுகளுக்கு வெளியிலும் இட்டுச் சென்றது. சாதியில் இது மறுக்கப்பட்டது.

வருண அமைப்பின் விதிக்கமைய அதாவது வர்க்க விதிக்கமைய, வர்க்க வீழ்ச்சி பரம்பரைக்குள் இயல்பானதாக இருந்தது. சுரண்டும் தொழில்;;, இதன் மேலான குருகுலக் கல்வி முறையும், ஒரு இரத்த உறவு கொண்ட பரம்பரைக்குரிய ஒரு சிறப்பு உரிமையாக இருக்கவில்லை. இதனால் ஆரிய-வேதச் சடங்கை, பரம்பரைக்குள் பாதுகாக்க முடியவில்லை. இலகுவாகவும் சொகுசாகவும் எமாற்றிப் பிழைக்கும் நல்ல வருவாய் கொண்ட சுரண்டலில், ஆரிய-பார்ப்பன பரம்;பரைக்கு வெளியில் இருந்தும் வந்த பலர் புதிய பார்ப்பனரானார்கள்.

இந்த ஆரிய-வேதச் சடங்குகள், அதாவது பார்ப்பனியம் மற்றைய மதங்களைப் போல், துறவையும் இதனுடாக மனித சேவையையும் முன்வைக்கவில்லை. தன்னை முன்னிலைப்படுத்தி, தன்னைக் கடவுளாக்கி, அது தனக்கேயுரிய ஒரு சுரண்டலைத் தான் முன்வைத்தது. இந்த வகையில் ஆரிய-வேத சடங்கு, உழைப்பில் ஈடுபட விரும்பாத ஒரு பிரிவிற்கு, வருவாயுள்ள சுரண்டல் தொழிலாகியது. மற்றைய மதங்கள் போல் இது துறவை மேற்கொண்டு, மக்களிடம் கையேந்தி உண்ணவில்லை. மாறாக மக்களை நேரடியாகவே சுரண்டித் திண்டது.

இப்படி உழைத்து வாழ விரும்பாத சமூகப் பொறுக்கிகளின், தூய தங்குமிடமாக வேத-ஆரிய சடங்கு மாறியதில் ஆச்சரியமில்லை. சூதும், சூழச்சியும் கொண்ட சதிகள் மூலம், சதியாளர்கள் எல்லாம் புதிய பார்ப்பனரானார்கள்;.

இந்த ஆரிய-வேத சடங்கு ஒரு மதமாக இந்திய சமுதாயத்தில் வெற்றி பெற்றதற்கான மூலம், இது தனக்காக தானே சுரண்டிய மதம் என்பதால் தான். இதனால் அது செயலூக்கமுள்ள ஒன்றாக எப்போதும் இருந்ததால், இருப்பதால் வெற்றிபெற்றது, வெற்றிபெறுகின்றது. அது தோற்ற போதெல்லாம், வென்றதை இலகுவாக செரித்தபடி, சமுதாயத்தின் அனைத்துக் கூறுகள் மீது பார்ப்பனியத்தை நஞ்சாகயிட்டனர்.

இதன் மூலம் பார்ப்பனப் பார்ப்பனியம் சுரண்டியதால், அது சுரண்டல் அமைப்பினை மீள இலகுவாக வெல்லவும், எதிர்புரட்சியை இலகுவாக நடத்தவும் முடிந்தது. அதன் சுரண்டும் வர்க்க மூலமே, சமுதாயத்தினுள் பார்ப்பனிய நஞ்சை இடுவது முதல், எதிர்புரட்சியின் மீட்சிக்கான ஒரு கூறாக இருப்பது மட்டுமின்றி, இன்றும் அப்படித்தான் இருந்து வருகின்றது.

இந்த பார்ப்பனியம் சுரண்டும் ஒரு கருவி என்பதால், ஆரிய–வேத இரத்த உறவைத் தாண்டிச் சென்றது. இந்த சுரண்டல் பார்ப்பனியம், பார்ப்பனரல்லாதவரை பார்ப்பனியமாக்கியது. சுரண்டும் ஆரிய-வேதச் சடங்கின் செல்வாக்கு, குறித்த ஒரு இடத்தைத் தாண்டிச் செல்லவும், அதன் சுரண்டல் தான் ஊக்கியாக்க செயல்படுகின்றது. பல பிரதேசத்தை சேர்ந்தவர்களையும், தூர இடங்களில் சென்று இதைக் கற்கவும் துண்டியது. இதை கற்பதற்கான தடைகளை ஊடாறுத்து, அதைக் கற்றுக் கொள்ள தூண்டியது. இதைத்தான் சாதிய அமைப்பு தடைசெய்தது.

வருண அமைப்பில் இந்த சுரண்டும் சூதுவாதுகளை கற்பிப்பது, நல்ல வருவாயுள்ள ஆச்சாரியத் (குருவின்) தொழிலாகியது. இதுவோ குருகுலக் கல்விக்கூடாக, புதிய பார்ப்பனர்களை உருவாக்கியது. இந்தக் கல்வியை இரகசிய மொழியான பார்ப்பன சமஸ்கிருத்தில் கற்றதாலும், கற்று வந்ததாலும், சமஸ்கிருதம் அவர்களுக்குரியதாக, இடம் விட்ட இடம் தாண்டிய சுரண்டல் மொழியாகியது.

எந்த சமூக பொருளாதார அடித்தளமும் அடிப்படையுமற்ற நிலையில், இந்த சுரண்டலும் சுரண்டல் மொழியின் பரம்பலும் நிகழ்ந்தது. சுரண்டும் வர்க்கமாக இருந்தால், இது வீரிய விதையாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இது ஒரு சுரண்டல் மொழியைக் கொண்டது என்பதால், அது எல்லை தாண்டி சுரண்டச் சென்றது. மொழி குறித்த சுரண்டும் தொழில் பிரிவில், தனி மொழியாகியது. இப்படி எந்த சமூகத் தொடர்ச்சியுமற்ற இந்த சமஸ்கிருத மொழி, வேத-ஆரிய சடங்கு மூலம் சுரண்டலை செய்தவரிடையேயான ஒரு மொழியாக நீடிக்க முடிந்தது. இப்படி இது ஒரு சுரண்டும் வர்க்கத்தின், சாதிய அடையாளம் பெற்ற இரகசிய மொழியாகியது. இது மட்டுமே இந்த சுரண்டல் தொழிலுக்குரிய ஒரு மொழியின் அடிப்படையாகவும் ஆதாரமாக்கியதால், அந்த மொழியின் இருப்புக்கு இதுவே அடிப்படையாகியது.

மற்றொரு வகையில் இந்த மொழியில் மட்டுமே வேத-ஆரிய சடங்குமுறைகள் இருந்ததுடன், அதை கடவுளின் மொழியாகவும் கற்பிக்கப்பட்டு இருந்தது.

இப்படி வரலாறு தெரிந்த காலம் முதலே, வேத-ஆரிய பார்ப்பனிய சடங்கை முன்னிலைப்படுத்தி வெளிவந்த அனைத்தும் சமஸ்கிருத்தில் எழுதப்பட்டது. அத்துடன் அவை பார்ப்பனரால், தன்னை தனது சுரண்டல் தொழிலையும் முன்னிலைப்படுத்தி நியாயப்படுத்தி எழுதப்பட்டது. அத்துடன் தமது இந்த சுரண்டல் நிலையைத் தக்கவைக்க, சுரண்டல் தொழிலை பாதுகாக்க, இதை கற்பதைத் தமது பரம்பரை உரிமையாக்கினர். இதை மதக் கோட்பாடக்கியதன் மூலம், இது சாதியக் கோட்பாடாகியது. சாதிப் பார்ப்பனியம் இப்படித்தான், இதற்குடாகத் தான் எங்கும் சமூகமயமாகியது.

13.பார்ப்பனப் பண்பாடு மிக இழிவானதாக உருவானது எப்படி? - சாதியம் குறித்து பாகம் - 13

12.பார்ப்பனரை மற்றயை பூசாரிகளில் இருந்து வேறுபடுத்தியது எது? - சாதியம் குறித்து பாகம் - 12

11.சமஸ்கிருதம் என்னும் தனி மொழியின் தேவை, ஏன், எதனால் எழுகின்றது? - சாதியம் குறித்து பாகம் - 11

10.தந்தைவழி தனிச்சொத்துடமைதான், ஆரிய-வேதச் சடங்குகளை சிதைவில் இருந்து மீட்டது : பாகம் - 10

9.ஏன் இந்திய சமூகத்தில் ஆரியர் சிதைந்தனர்? - சாதியம் குறித்து பாகம் - 09

8.ஆரிய பாடல்களோ கொள்ளையிட்டு வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது : சாதியம் குறித்து பாகம் - 08

7.சமஸ்கிருதம் பிழைப்பு மொழியானதால், அது சாதி மொழியாகியது :( சாதியம் குறித்து பாகம் - 07)உயிரற்ற ஆரிய சடங்கு

 

6.உயிரற்ற ஆரிய சடங்கு மந்திரமாக, அதுவே சமஸ்கிருத மொழியானது : சாதியம் குறித்து பாகம் - 06

5. ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்? : சாதியம் குறித்து பாகம் - 05

 

4. முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04

 

3. எங்கே? எப்படி? ஏன்? ஆரிய மக்கள் வரலாற்றிலிருந்தும் மறைந்து போனார்கள்! : பாகம் - 03

 

2. பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02

 

1. பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01

Last Updated on Thursday, 09 February 2012 18:10