Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயக மக்கள் முன்னணி மக்களை அடிமையாக்கி ஆள்வதை கொண்டாடும் தினந்தான் ‘சுதந்திர தினம்”

மக்களை அடிமையாக்கி ஆள்வதை கொண்டாடும் தினந்தான் ‘சுதந்திர தினம்”

  • PDF

மரணத்தைவிடக் கொடுமையான, கொடூரமான, வாழமுடியாத வாழ்க்கைதான். இதில் தன்னுயிரை விடுதலையின் பெயரால் தியாகம் செய்வதைவிட, தன்னை மக்களுக்காக அர்ப்பணித்துப் போராடுவதென்பது கடினமானது. இந்த நிலையை புரிந்துகொண்டு “சுதந்திரதினம்” யாருக்கு என்பதை புரிந்துகொள்ளுதல்  அவசியம்.

மக்கள் தம்மை தாம் ஆளாதவரை, மக்களுக்குச் சுதந்திரம் கிடையாது. இனத்தின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், பாலின் பெயரால்…, மக்களைப் பிளந்து, அவர்களை மோதவிட்டு ஆள்வதை குறிக்கின்றதே ‘சுதந்திரதினம்” இதன் மூலம் மக்களை ஒடுக்கியும், சுரண்டியும் வாழ்கின்றவர்களின் ‘சுதந்திரத்தை”த் தான்,  ‘சுதந்திரம்” என்கின்றனர்.

தங்கள் மேலான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடத மக்களுக்கு சுதந்திரம் கிடையாது. இப்படி இன்று நினைத்தாற்கூட, மரணம் தான் பரிசாகக் கிடைகின்றது. அரசு வழங்கும் உத்தியோகபூர்வமற்ற மரண தண்டனை என்பது, காணாமல் போதல் மூலம் நிறைவு செய்யப்படுகின்றது. இப்படி வகைதொகையின்றி காணாமல் போனவர்கள், போகின்றவர்கள் பட்டியல் முடிவின்றித் தொடருகின்றது. இங்கு யார்தான் ‘சுதந்திரத்தை” கொண்டாடுகின்றனர். நாட்டு மக்களா!? அல்லது இதை செய்யும் ஆளும் வர்க்கமா!? சொல்லுங்கள்.


இன்று இலங்கையில் மக்களுக்குச் சுதந்திரமில்லை. தாம் விரும்பிய அரசியலைச் செய்ய சுதத்திரமில்லை. தாம் நினைத்ததைச் சொல்லச் சுதந்திரமில்லை. தமக்காகப் போராட சுதந்திரமில்லை. உண்ணவும், உடுக்கவும், உறைவிடத்துக்கு கூட வழியில்லாத மக்கள் கூட்டத்தினது சுதந்திரத்திற்கான அர்த்தம் தான் என்ன? எழுதவும், பேசவும், அவர்கள் விரும்பிய அரசியல் செய்யவும் உரிமை அற்றிருக்கின்றபோது, இவைகளே மரணத்துக்குரிய குற்றங்களாக இருக்கும் நிலையில் ‘ஜனநாயகம்” “சுதந்திரம்” என்று கூறுவது எதனை? ஆக யாருக்கு ‘சுதந்திரம்”!? எதற்குத்தான் ‘சுதந்திரம்”!? சொல்லுங்கள்.

பாராளுமன்றச் சாக்கடையில், ‘ஜனநாயகத்தின்” பெயரில் புரள்வதற்கு ‘சுதந்திரம்”, மக்களைச் சுரண்டி வாழும் சுரண்டும் வர்க்கங்களுக்கு ‘சுதந்திரம்”. மக்களை சமூக ரீதியாக பிளந்து, மோதவிட்டு ஆள்வதற்கு ‘சுதந்திரம்”. கூலிக் கும்பலாக நக்கிப் பிழைக்க ‘சுதந்திரம்”, காணாமல் போனவர்களாக்கி கொன்று குவிக்க ‘சுதந்திரம்”. நிலமைகள் இவ்வாறிருக்கும் போது, சொல்லுங்கள் மக்களுக்கு சுதந்திரம் என்னவென்று.

சிங்களவனுக்கு ‘சுதந்திரம்” என்று சொல்லும் குறுந்தேசியப் பொய்யை நம்பாதே. இது எங்கள் ‘சுதந்திரம்” என்று கூறும் பெருந்தேசிய பொய்யை நம்பாதே. மக்களை ஒடுக்கி, அவர்களைப் பிளந்து கூறும் ‘சுதந்திரம்” பற்றிய விளக்கங்கள் மோசடியானவை -  புரட்டுத்தனமானவை.

புலிப் ‘பயங்கரவாதத்தைக்” காட்டி மக்களை ஒடுக்கியாண்ட அரச பயங்கரவாதம், இன்று புலி வருகிறது இதோ வந்துவிட்டது என்று பீதியூட்டி மக்களை ஆள முனைகின்றது. மக்களை மிரட்டி அடிபணியவைக்க முனைகின்றது. அனைத்துக்கும் தொடர்ந்து புலி முத்திரை குத்தி, சமூகத்தின் உயிர் மூச்சை நிறுத்திவிட முனைகின்றது. மறுதளத்தில் சுதந்திர மூச்சுகளைக் கடத்தி, அவர்களைக் காணாமல் போனவராக்கி விடுகின்றது.

எங்கும் எதிலும் இராணுவம் நுழைகின்றது. சட்டவிரோத கொலைகாரக் கும்பலொன்று புலானாய்வின் பெயரால் சுதந்திரமாக ஆட்டம் போடுகின்றது. அரசின் குடும்ப சர்வாதிகாரம், இராணுவ சர்வாதிகாரமாக மாற்றப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியில் மாபியாக் கும்பலொன்று கொழுத்து வருகின்றது.

அன்னியரின் சுரண்டலும் சூறையாடலும் தொடரும் வண்ணம் தேசிய இனவாத உணர்வுகள் ஊட்டப்படுகின்றது. உற்பத்தியில் ஈடுபடாத நிதிமூலதனம், நாட்டின் வரவு செலவில் அண்ணளவாக 50சதவீதத்தை சட்டபூர்வமாகவே கொள்ளையிடுகின்றது. சுதந்திரத்தின் மகிமையே இதுதான்.

யுத்தத்தின் பின்னான வடக்கு கிழக்கு மக்களின் ‘சுதந்திரம்” என்பது, இராணுவ முகாமுக்குள் வாழ்தல்தான். இயற்கை உபாதைகளைத் தீர்ப்பதற்குக் கூட, இராணுவத்திடம் அனுமதி கோரவேண்டும் என்ற அளவுக்கு எங்கும் எதிலும் இராணுவத் தலையீடுகளும், அத்துமீறல்களும் தொடர்கின்றன. இப்படி இராணுவத்தின் கீழ் வாழ்வதைத்தான் தமிழ்மக்கள் விரும்பிய ‘சுதந்திரம்” என்கின்றது அரசு. இதைத்தான் புலிகளிடம் இருந்து மீட்டதாக பீற்றிக்கொள்ளும் வண்ணம் இராணுவ ஆட்சி நடக்கின்றது. அரச கைக்கூலிகளும், மக்களை அடக்கியாண்டு தின்று கொழுக்கும் தங்கள் கொழுப்பைத்தான் ‘சுதந்திரம்” என்கின்றனர்.

யுத்தத்தில் வாழ்விழந்த மக்கள் குடியிருக்க வீடு இல்லை. உழைத்து வாழ தொழில் இல்லை. உழுதுவாழ மூலதனமில்லை. மக்களை பிச்சைப் பாத்திரங்களுடன் நிற்கவைத்து, பிச்சை போடுகின்றது அரசு. வாழ்வதற்காக தங்கள் உடலையே விற்கின்ற அவலம். வடக்கு – கிழக்கில் ஒரு இலட்சம் விதவைகள். வடக்கில் மட்டும் 4300 குழந்தைகள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில். இதைவிட 9678 குழந்தைகளை பராமரிக்கும் உற்றார் உறவினர்கள். இவை அரச புள்ளி விபரங்கள். மொத்தத்தில் வடக்கில் மட்டும் 14000 குழந்தைகள் பெற்றோரை இழந்துவிட்டனர். விதவைகள் சமூகமாக, அனாதைக் குழந்தைகள் சமூகமாக, ‘சுதந்திரத்தின்” பெயரில் அவர்களை கொன்றது யார்? சொல்லுங்கள். இப்படி வாழவைத்தவர்கள்தான், ‘சுதந்திரம்” கொண்டாடுகின்றனர்.

உன் சமூகத்தை திரும்பிப் பார். புலியில் இருந்த பெண்  போராளிகள் யுத்த அவலத்தை மட்டுமல்ல, ஆணாதிக்கத்தின் பொது விளைவை மட்டுமல்ல, குரூரமான ஆணாதிக்க சமூக புறக்கணிப்புகளையும் அனுபவிப்பது தான், இன்று அவளுக்குரிய “சுதந்திரமாகி” விட்டது.

எங்கும் அவலம், எதிலும் அவலம். யுத்தம் கொன்றதைவிட அமைதியான – இழிவான வாழ்வு கொல்வது தான் கொடுமையானது, கொடூரமானது. இதையெல்லாம் தட்டிக் கேட்கும் சிங்களவர்களும், முஸ்லீம்களும் கூட,  “சுதந்திர” இலங்கையில் இன்று காணாமல் போகின்றனர். இவையெல்லாம் யுத்தத்தின் பின்னான சுதந்திரம். இந்த நிலையை உருவாக்குபவன், இதையே நாட்டின் பொது அமைதியாக சமூக இருப்பாக்க முனைபவன் என்ன நினைக்கின்றானோ, அதுவே “சுதந்திரத்தின்” வரைவிலக்கணமாகின்றது. இதைப் பார்த்து மகிழ்ச்சியாக வாழ்பவனின் வக்கிரமான இரசனையே, மக்களை அடிமையாக அடங்கி வாழக்கோருகின்றது. இதைத்தான் தங்களின் “சுதந்திர” தினமாக அவர்கள், மக்களுக்கு எதிராக கொண்டாடுகின்றனர்.

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

04.02.2012

தொடர்பு மின்னஞ்சல் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும்

சக்தியாக உருவெடுக்கும்!

 

http://www.ndpfront.com/tamil/

http://www.ndpfront.com/sinhala/ (Under Construction)

http://www.ndpfront.net

http://www.tamilcircle.net/

ජනතාව යටත් කර පාලනය සමරන දිනය
‘ නිදහස් දිනය වෙ ‘

මරණයට වඩා කෲර වුත් ප‍්‍රචන්ඩ වුත් ජිවත් වීමට නොහැකි ජීවිතයකිග තමාගේ පණ නිදහස් යන නාමයෙන් පරිත්‍යාගයෙන් පුද නොකොට තමන්ව ජනතාව වෙනුවෙන් කැප කර සටන් කිරිම අපහසුයග මෙම තත්වය අවබෝධ කරිනිදහස් දිනය කාටද යන එක අවබෝධ කිරිම අවශ්‍ය වෙ‘ග ජනතාවන් තමන් තමන්ව පාලනය නොකිරිමෙන් ජනතාවට නිදහසක් නොමැත ජාතියේ නාමයෙන්ල කූලේ නාමයෙන්ල ආගමෙ‘ නාමයෙන්ල වර්ණයේ නාමයෙන්ල ලිංගභේද නාමයෙන්ල ජනතාව වෙන්කෛාට ඔවුන්ම සට‘ඨනයට ලක් කොට පාලනය කිරිම මෙයින් අදහස් වෙ‘ගිනිදහස් දිනයීමෙ මග’ින් ජනතාව යටත් කර සුරා කා ජීවත් වන අයගේ නිදහස තමයිිනිදහස’ කියන්නෙග තමගේ යටත් විජිතවාදයට විරුද්ධව සටන් කිරිමට ජනතාවට නිදහසක් නැත මෙසේ යයි සිත ූවහොත් මරණය පමණක් තග්ගක් සෙ ලැබෙ‘ රජයෙන් ලබා දෙන නිලනොලත් මරණ දඩුවම යනු අත ූරුදහන් වීම තූලින් අවසන් කර ඇත මෙසේ වග_ සීමාවක් නොමැතිව අතූරුදහන් වු අය අතුරුදන් වන අයගේ ලේඛනය අඛණ්ඩව අවසන් කිරිමෙන් තොරව දිගටම ක‍්‍රීයාත්මක වෙමින් පවති මෙහි කවුරුදිනිදහස සමරන්නේ’ රටෙ‘ වැසියන්ද? නැති නම‘ මෙය ක‍්‍රියාත්මක කරන පාලන වර්ගයාද? කියන්න අද ශ‍්‍රි ලංකාවෙ‘ ජනතාවන්ට නිදසක් නොමැත අපි කැමැති දේශපාලනය කීරිමට නිදහසක් නැත තමන් සිතු දේ කීමට නිදහසක් නැත කමන් වෙනුවෙන් සටන් කිරිමට ද ඔවුන්ට නිදහසක් නැත කන්නට අද’ින්ට ඉන්නට තැනක් මාර්ගයක් නොමැතිව ජනතාවන්ගේ නිදහස වෙනුවෙන් වු තේරුම කූමක්ද? ලීවමට කතාකිරිමට කැමති දේශපාලනය දියත් කිරිමට අයිතිය නොමැතිව කිබියේදීත් මෙවා සියල්ල මරණයට නියම කිරීමට වු චෝදනා ලෙෂ ඇති අතරිප‍්‍රජාතන්ත‍්‍රවාදය’ිනිදහස’ යනුවෙන් කියන්නේ කූමකටද? කාටද?ිනිදහස’ මොනවාටද? නිදහස කියන්න පාර්ලිමෙ‘න්තූ ජරා දේශපාලනයේිප‍්‍රජාතන්ත‍්‍රවාදය’ යන නමින් පෙරලිමටිනිදහස’ ජනතාවන්ව සුරා ජීවත්වන සුරන වර්ගයන්ටිනිදහස’ ජනතාවන්ව සමාජීය වශයෙන් වෙන් කර ඝට‘ඨනයක් ඇති කොට පාලනය කිරිමටිනිදහස’ කූලි කණ්ඩායමක් ලෙස ලෙව කා ජීවත්වනිනිදහස’ අතූරුදහන් වු අයව මරා ගොඩ ගහන්නිනිදහස්’ තත්වයන් මෙසේ තිබියදීත් කියන්න ජනතාවනි නිදහස කූමක් කියා

සිංහලයාටිනිදහස’ යන බව පවසන සුΩ දේශීය මුසාව විශ්වස නොකරන මෙ‘ අපේිනිදහස’ යනුවෙන් පවසන මහා ජාතියේ මුසාව විශ්වාස නොකරනු ජනතාව යටත් කර ඔවුන්ව භේදකොට පවසනිනිදහස’ ගෙන පැහැදිලි කිරිම‘ වංචා සහග’තයි මුසාවයි

කොටිිත‍්‍රස්ථවාදය’ පෙන්වා ජනතාව තළා රජයේ ත‍්‍රස්තවාදය අද කොටි එනවා මෙන්න ආවා යනුවෙන් භීතියට පත් කර ජනතාව පාලනය කිරීමට උත්සහ කරයි

ජනතාව බිය කර යටත් කිරිමට උත්සහ කරයි අඛණ්ඩව සෑමදේකටම කොටි මුද‍්‍රාව තබා ජීවිතය හුස්ම නවතා දැමීමට උත්සහ කරයි අනෙක් පැත්තේ නිදහස් හුස්ම පැහැර ගෙන ඔවුන්ව අතුරුදහන් වූ අය ලෙස පත් කරයි

සෑම තැනකම හුමුදාව ඇතුල් වෙ‘ නීති විරෙ`දී මිනීමරු කණ්ඩායමක් විමර්ශනය යන නමින් නිදහස්ව රග දක්වයි පවුල් ඒකාධිපති පාලනය හමුදා ඒකාධිපති පාලනය බවට පරිවර්ථනය වෙමින් පවතී මෙහි පසුපස මාෆියා කණ්ඩායමක් පෙ`ෂණය වෙ‘

විජාතික සූරාකෑම හා වෙනත් අයිතීන් උදුරා ගැනීම අඛණ්ඩව පවතින අතර දේශීය ජාතිවාද හැගීම‘
කවනු ලබයි නිශ්පාදනයේ නොයෙදෙන මූල්‍ය ප‍්‍රාග්ධනය රටෙ‘ අයවැයෙන් සාමාන්‍යන් 50% ක් නීත්‍යානුකූලව ඩැහැ ගනීයි මෙයයි නිදහසේ ආශ්චර්යය

යුද්ධයෙන් පසුව උතුරු නැගෙනහිර ජනතාවගේිනිදහසේ’ යනු හමුදා කදවුරු තුල ස්වාභාවික ශරීර අවශ්‍යතාවයන් ඉටුකිරීමටත් හමුදාවගේ අනුමැතිය ඉල්ලා ගත යුතුයි සෑම තැනම සෑම දේකම හමුදා බලපෑම‘ අනවසරෙන් ඇතුල්වීම‘ මෙසේ හමුදාව යටතේ ජීවත් වීමද කැමති දෙමල ජනතාව බලාපොරොත්තු වූිනිදහස’ බව පවසයි රජය මෙ‘කද කොටින්ගෙන් මුදාගත් පුරසාරම‘ දොඩන හමුදා පාලනය රජයේ කුලී පාතාලකල්ලිය ජනතාවන්ව යටත් කර කාපෝෂණය වී තමාගේ බලපුලුවන්කාරකමදිනිදහස’ කියන්නේ යුද්ධයෙන් ජීවිතය අගාධයට පත් වූ ජනතාවන් පදිංචියට නිවසක් නොමැතිව හම‘බකරන් ජීවත් වන්නට රස්සාවක් නොමැතිව ගොවිතැන් කිරිමට ප‍්‍රාග්ධනයක් නොමැතිව ජනතාව හිගමනයේ පාත‍්‍රයත් සමග හිදුවා හිගමන දමයි ජීවත් වීමට තමාගේ ශරීරය විකිණීටමෙ‘ දුර්භාග්‍ය උතුරු නැගෙනහිරේ ලක්‍සයක් පමණ වැන්දඹුවන් උතුරේ පමණක් 4300ක් පමණ ළමුන් ළමා පරිවාස ස්ථාන වලද මීට අමතරව 9978 දරුවන් රැුකබලා ගන්නා පිරිස මෙ‘වා රජයේ සංගණන විස්තර වෙ‘ සම‘පූර්ණයෙන් උතුරේ පමණක් දෙමාපියන් අහිමි වු දරුවන් 1400කි සමාජයේ වැන්දඹුවන් හා අනාථ දරුවන් නිදහසේ නමින් මැරුවෙ‘ කවුරුන්ද කියන්න මෙසේ ජීවත් කරවූ අය තමයි නිදහස සමරන්නේ

නුඹෙ‘ සමාජය දෙස හැරී බලන්න කොටින්ගෙන් සිටි කාන්තා සෙබලුන් යුද්ධයේ කෲරත්වය පමණක් නොව පුරුෂාධිපත්‍ය නිසා සිදුවීම පමණක් නොව පුරුෂාධිපත්‍යයෙන් සමාජය ප‍්‍රතික්ෂේප කොට අත්විදිම අද ඇයගේ නිදහසේ ඉරණම වී ඇත සෑම තැනම විදවීම‘ කෝකත් විදවීම‘ යුද්ධයෙන් මැරුවාට වඩා නිශ්ශබ‘ද පහත් ජීවිතය මැරීම තමයි කෲරත්වය ප‍්‍රචණ්ඩත්වය මෙ‘ සියල්ලක්ම සොයා බලන සිංහල මුස්ලිම‘ අයිනිදහස්’ ලංකාවෙ‘ අද අතුරුදහන් වෙ‘ මෙ‘ සියල්ලක්ම යුද්ධයෙන් පසු වු නිදහසයි මෙ‘ තත්වය උදා කරන මෙ‘ රටෙ‘ පොදු නිශ්ශබ‘ද සමාජයක සිටින කෙනෙක් බව සිතෙනවිදෝ ය තමයි නිදහසේ අර්ථකථනය මෙය බලා සතුටින් ජීවත් වෙන අයගේ රසාස්වාදය ජනතාවන්ව යටත්වී ජීවත් වීමට ඉල්ලා සිටියි මෙය තමයි තමාගේ නිදහස් දින වශයෙන් ඒ ජනතාවට විරුද්ධව සමරයි

 

නව ප‍්‍රජාතන්ත‍්‍රවාදී ජනතා පෙරමුණ


2012 02 04

Independence – Masses are being made Slaves And Celebration for Rulers


Dedicating oneself for the people and working towards it has more gravity than sacrificing one’s own life for freedom. Comprehending this and knowing for whom the Independent day celebrations are for is vital.

 

There is no independence for people unless people rule themselves. Masses are divided and manipulated in the name of ethnicity, caste, religion, colour or gender, in order to set them to fight with each other. Oppressors and exploiters can then easily take the powers in their hands and the rulers claim this as independence.

 

Masses have no freedom to struggle against their oppressions. Even attempting to articulate or thinking of this under the present context would award them with death. The Government does its unofficial and illegal executions in the form of making persons missing. Numerous persons were missing and still the disappearances without any trace are continuing and the list prolongs indefinitely. Who is doing this, the masses or the ruling class?

 

Today there is no any form of freedom in Sri Lanka. Masses have no option to have their own politics. They have no right to express their views. They have no freedom to organise and struggle for their rights. What is the meaning of independence of the people who cannot afford for sufficient food, clothing and no shelter for living? In a situation where freedom of speech and expression amount to fatal offences, the talk of democracy and freedom attribute to what and for whom? Is it to roll down in the so-called sewer of parliamentary democracy?

 

It is freedom for exploiters of the people. It is a freedom to make people missing and consequently kill them. Now tell, the freedom is for whom?

 

On the other hand, do not trust the lies of narrow nationalism that Sinhalese masses enjoy all forms of freedom with a fluorescent life. Oppressing the masses, dividing them and with the same tongue explaining about freedom is a form of hoodwinked treachery.

 

The Government oppressed the people in the past by the name of Tiger insurgency. Now, in order to subjugate and rule the people, threatening them by saying falsely that, re-emerging of tigers is imminent. It continues to brand everything with tiger stamp and trying to suppress the inspiration of the people. On the other hand active raisers of freedom voice are being made missing.

 

In each and every sphere the Army is intruding. A murderous group is operating with the sham banner of intelligent service. Family dictatorship is gradually transforming into military dictatorship. Behind all these, a mafia group is blossoming. To facilitate foreign exploitation and plundering, communal feelings are being encouraged. In the budget, 50 percent is allocated for non-productive transactions and that is robbed legally.  This is the glory of Independence.

 

After the war, the freedom of the people in the North and East is that of confinement within the army camp. The army intervention is there in all activities. It is to the extent that even to answer the call of nature, permission required. While repeatedly telling that the government liberated them from the crutches of the LTTE, It continues the rule through military and paramilitary. The rulers oppress the people and fattening themselves and ridiculously define it as independence.

 

People who lost their source of livelihood due to the war have no house to live, no job to do and no resources to cultivate. The situation forces the female for prostitution. 100,000 widows are in the North and East. In the North alone 4,300 children are in children orphan centres and relatives look after another 9678 children. The Government sources themselves provides these details. In the North 14,000 children lost their parents. In the name of freedom, who killed the bread winners of the population and made this society of widows and orphan children.

 

Turn back and look at your society. The former female fighters of the LTTE not only facing the problems of the male dominant society, in addition they experience the horrible negligence and ill treatment from their very own society.

 

The horrible thing is that the rulers proclaimed this as peace but people are killed and the killings surpass the war killings. The Sinhalese and Muslims who challenge this too are missing in the independent Sri Lanka. This is the type of “freedom” after the war. The oppressors who are responsible for this situation articulate the definition of freedom. The wicked behaviour of the persons who get pleasure in others suffering is the driving force for these oppressions. Those wicked ones celebrate independent day against the people.

 

 

New Democratic People’s Front

04.02.2012

e-mail: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


Last Updated on Saturday, 04 February 2012 07:19