Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நேர்காணல்: தோழர் பசந்தா -பொலிட்பிரோ உறுப்பினர் ஒன்றிணைந்த நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்)

  • PDF

கேள்வி: புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் ஒரு வர்க்க போராட்டம் நடைபெற்று வருவதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். நேபாளத்தில் எந்த விதமான சக்திகள் அது முன்னேறுவதற்கு தடையாகவோ அல்லது ஆதரவாகவோ உள்ளது என்றும், அவை அரசில் சட்டத்தை உருவாக்குவதில் எவ்விதம் வெளிப்படுகின்றன என்றும் குறிப்பிட முடியுமா? வெவ்வேறு கட்சிகளில் இந்த சக்திகளின் தாக்கம் எவ்வாறு உள்ளது. எத்தகைய கட்சிகள் பிற்போக்கானவை?

 

 

பதில்: ஒரு நாட்டில் அரசு அதிகாரத்தை முன்னெடுத்து செல்ல அரசியல் சட்டம் ஒரு முக்கியமான அரசியல் சாசனம் ஆகும். அரசு அதிகாரத்தை போன்றே அரசியல் சட்டமும் குறிப்பிட்ட வர்க்கத்தை ஒடுக்கப்படும் அல்லது ஒடுக்கும் வர்க்கத்தை சார்ந்தே உள்ளது. மக்கள் யுத்தத்தின் ஒரு கால கட்டத்தில், அரசியல் சட்டசபை முடிவு பெறாத நேபாள புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்து செல்ல ஒரு செயலுத்தியாக காணப்பட்டது. இராணுவ ரீதியாக மக்கள் யுத்தத்தின் போது போர் புரிந்த வர்க்கங்கள், தற்போது அரசியல் சட்ட சபையில் கருத்தாக்க அடிப்படையிலும் அரசியல் ரீதியிலும் மோதிக் கொண்டன. வர்க்கப் போராட்டம் நடத்தப்பெறும் நிகழ்விடம் மாறியிருக்கலாம் ஆனால் அதன் நோக்கம் கைவிடப்படவில்லை.

முடியரசு வீழ்த்தப்பட்டவுடன், நேபாளத்தின் நிலப்பிரபுத்தவம் வலுவிழந்து விட்டது. அரசியல் அதிகாரத்தில் தரகு முதலாளித்துவத்தின் கை ஓங்கியது. இருப்பினும் அரசு அதிகாரத்தின் குணாம்சம் பெரிதும் மாறுபட்டுவிடவில்லை. அணைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை, தேசத்தை, வட்டாரத்தை, பாலினத்தை சார்ந்த மக்கள் ஒரு புறமாகவும்; பிற்போக்கு அரசு அதிகாரத்தில் உள்ள தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ வாதிகள் மறுபுறமாகவும் உள்ள முரண்பாட்டில் மாற்றம் ஏதும் வந்து விடவில்லை. இதுதான் முக்கிய முரண்பாடாக உள்ளது. இது அரசியல் சட்ட நிர்ணய சபையிலும் காணப்படுகிறது. எனவே இந்த அரை நிலப்பிரபுத்துவ, அரைக்காலணிய நேபாள சூழலில் காணப்படும் அடிப்படை முரண்பாடுகளை தீர்வு கண்டு அரசியல் அதிகாரத்தை மறுசீரமைக்க ஏற்ற அரசியல் சாசனத்தை எழுவதை முன்னேடுத்து செல்வதே நமது கட்சி, இந்த அரசியல் நிர்ணய சபையில் நிறைவு செய்ய வேண்டிய முக்கிய கடமையாக உள்ளது. இருப்பினும், அரசியல் சட்டத்தின் உள்ளடக்கத்தை  பொறுத்த மட்டில் இருவழி போராட்டம் மிகவும் கூர்மையடைந்துள்ளது.

இங்கு நாம் எதிர் கொள்வது, அரசியல் நிர்ணய சபையில் எதிர்கொள்வது வர்க்கங்களையேயாகும், கட்சிகளை அல்ல. இருப்பினும் ஒரு கட்சியின் கருத்தாக்க அரசியல் வழி என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்க நலனை பிரநிதித்துவப் படுத்தப்படுகிறது. இந்த பின்னணியால் கட்சிகளுக்கு இடையேயும் எங்கள் போராட்டம் தொடர்கிறது. நேபாள காங்கிரசு கட்சி, யூ.எம்இஎல் இன் ஒரு பிரிவினர் மற்றும் மாதேச பகுதியில் உள்ள சில கட்சிகள் நேபாளத்தில் உள்ள நிலப்பிரபுத்துவ, தரகு மற்றும் அதிகார வார்க்க முதலாளித்துவ நலனைப் பிரதி நிதித்துவப்படுத்துகின்றனர். எனவே அவர்களுடன் அரசியல் நிர்ணய சபையில் நாங்கள் தீவிரமாக மோதவேண்டியுள்ளது.


கேள்வி: எழுச்சி ஏற்படுவதற்கு முன் தேவையாக இருப்பது வர்க்கம், வளர்ந்த வர்க்கம் தான் கட்சி அல்ல என்று லெனின் கூறியதாக முன்பு கூறியிருந்தீர்கள். மக்களின் புரட்சிகர எழுச்சி எதிரிகள் ஆட்டம் கண்டு நிற்கும் போது அது தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டள்ளதாக கூறுனீர்கள். அப்படியானால் உங்களுடைய குறுகிய கால செயலுத்தியை நடைமுறைப்படுத்த உங்கள் சுய வலிமையை விட பிற கட்சிகளில் அடங்கியுள்ள வர்க்கப் பிரிவினரின் தன்மையையும் கணக்கில் கொண்டுதான் தீர்மானிக்கின்றீகளா? தங்களது நாட்டில் இத்தகைய நிலை எவ்வாறு உள்ளது?

பதில் : எனது கருத்தின் படி, லெனின் ரஷ்ய சோசலிச சனநாயக தொழிலாளர் கட்சி (போல்ஷ்விக்) யின் மத்திய குழுவிற்கு எழுதிய கடிதத்தில் எழுச்சிக்கு தேவையான மூன்று நிபந்தனைகளாக, வளர்ந்துள்ள வர்க்கம்- மக்களின் புரட்சிகர  எழுச்சி- எதிரி முகாமில் காணப்படும் வலுவான ஆட்டம் காணல் போன்றவைகளை முன் வைத்துள்ளதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். நான் லெனின் கூறியதை முன்வைக்கும் போது அதே அர்த்தத்தில் தான் குறிப்பிட்டேன். எனவே எமது கட்சி எழுச்சிக்காக தனியான ஒரு செயலுத்தியை உருவாக்கி விடவில்லை. ஆனால் கட்டாயமாக புரட்சிகர, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட கட்சியில்லாமல் வளர்ந்த வர்க்கம் வெற்றியை நோக்கி இட்டுச் செல்லப்பட முடியாது. எனவே புரட்சிகர கட்சியின் தேவை உள்ளது. லெனினை சுட்டிக்காட்டும் போது வெறும் உண்மையான கம்யுனிச கட்சியும், அதனை ஆதரிக்கும் மக்களும் மட்டும் இருந்தாலே எழுச்சியை நடத்திட போதுமானதல்ல. மாறாக, வளர்ந்த வர்க்கம் முழுமையாக, எதிரியை துக்கியெறிய தயாராக இருக்க வேண்டும். எதிரியும் தற்போதைய நிலையை தக்க வைத்துக்கொள்ள இயலாத நிலையில் இருக்கவேண்டும். நமது நாட்டிலும் எழுச்சி குறித்து பேசுவதாக இருப்பின் இதுவே நம்மை பொறுத்தவரை உண்மையாக இருக்க முடியும்.

கேள்வி: இந்தியாவில் புரட்சிகர சக்திகளுக்கு எதிராக பச்சை வேட்டை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டபோதும், இலங்கையில் தமிழர் மீது இனப்படுகொலை நடத்தப்பட்ட போதும் தங்கள் வெளிப்பாடு தாமதமாகவே இருந்தது. பாராளுமன்ற திரிபுவாத போக்கின் வெளிப்பாடாக இதைக் கருதுகிறீர்களா?

பதில் : இந்திய விரிவாதிக்க ஆளும் வர்க்கங்கள் பச்சை வேட்டை நடவடிக்கையை மேற்கோண்ட உடனேயேயும், இலங்கை தமிழர் மீது படுகொலைத் தாக்குதலை மேற்கொண்ட உடனேயே நாங்கள் எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும். நாங்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டோம். எங்களது கட்சியில் இது குறித்தும் கூர்மையான இரு வழி போராட்டம் நடந்து வருகிறது.

கேள்வி: தெற்காசியாவைப் பொறுத்தவரை புறச்சூழலில் புரட்சிகர சூழல் நிலவுவதாகவும் நீங்கள் கூறியுள்ளீகள். இந்திய விரிவாதிக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக இணைந்து புரட்சிகர போக்கிற்கு எதிராக நிற்கிறது. நேபாள புரட்சியின் மீதும் இந்திய புரட்சியாளர் மீதும் அதன் தாக்கம் எவ்வாறு உள்ளது. இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராக நீங்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்: தெற்காசியாவில் புறச்சூழல், புதிய ஜனநாயக புரட்சி வெற்றியை நோக்கி பயணிக்க ஏதுவாக உள்ளது. இருப்பினும் புரட்சிகர மாற்றத்தை ஆதரிக்கும் சக்கதிளிடையே ஒற்றுமை மிகவும் பலவீனமாக உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய விரிவாதிக்கமும், அவர்களின் கைப்பாவைகளும் இப்பகுதியில் உள்ள புரட்சியை குறிப்பாக நேபாள புரட்சியை முழுமையாக ஒடுக்கிவிட விழைகிறார்கள். எனவே தமது அகநிலை சக்தியை வளர்தெடுக்க புரட்சிகர சக்திகள் மூன்று நிலையில் ஐக்கிய முன்னணியை கட்டியமைக்க முயலவேண்டும். முதலாவது ஒவ்வோரு நாட்டிலும் உள்ள பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான புரட்சிகர முற்போக்கு ஜனநாயக சக்திகளின் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்களின் ஐக்கிய முன்னணியை கட்டியமைக்க வேண்டும். இரண்டாவதாக இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராக உள்ள அனைத்து சக்திகளின் ஐக்கிய முன்னணி கட்டியமைக்கப்பட வேண்டும். மூன்றாவதாக உலகம் முழுவதும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உள்ள அனைத்து சக்திகளை ஒருங்கிணைத்து ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி உருவாக்கப்பட வேண்டும். இவை மூன்றுமே இப்பகுதியில் உள்ள புரட்சிகர சக்திகளால் கட்டி எழுப்பப் படவேண்டும். இதன் மூலம் தெற்காசிய நாடுகளில் புதிய சனநாயக புரட்சியை வெற்றிப் பாதை நோக்கி பயணிக்க அகநிலை சக்தியை வலுப்படுத்த இயலும்.

கேள்வி: இந்திய மாவேயிஸ்டுகள் உங்களுடைய ஒருங்கிணைப்பு தத்துவத்தை நகர்புற பகுதிகளில் புரடசிகர எழுச்சிப் பாதை எனவும், கிராமப்புறங்களில் நீண்ட கால மக்கள் யுத்தம் என்றும் முன்வைப்பதை விமர்சனத்துடன் அணுகுகின்றனர். மேலும், ஆளும் வர்க்கத்துடன் தேர்தல் பாதையில் அமைதி வழியில் போட்டி என்றும் அரசு அதிகாரத்தை துக்கி எறியாமல் பங்கேற்பதையும் விமர்சனத்துடன் அணுகுகின்றனர். தற்போது தங்களது இரண்டு ஆண்டு அனுபவம் என்ன சொல்கிறது. ஒருங்கிணைப்பு தத்துவமும், அமைதிவழி போட்டி முறையும் இன்றும் சாத்தியமா?

பதில்: ஒருங்கினைப்பு என்பதை நாங்கள் தத்துவமாக முன்வைக்கவில்லை. ஆயின் கிராமப்புற பகுதிகளில் நீண்ட கால மக்கள் யுத்தத்திற்கும், நகர் புறங்களில் மக்கள்திரள் போராட்டங்களுக்குமான உறவுகள் குறித்து அது விவாதிக்கிறது. இவ்வித வடிவத்திலான போராட்டங்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டதல்ல என்றும், ஒன்றை ஒன்று துணை நிற்பவை என்றும் தலைவர் மாவோ சரியாக குறிப்பிட்டுள்ளார். மக்கள் யுத்தம் துவங்கப்படுவதற்கு முன்பு நகர்புறங்களில் நடைபெறும் மக்கள் திரள் போராட்டங்கள் கிராமப் புறங்களிலும் மக்கள் யுத்தத்தை வளர்த்தேடுக்க உதவுகிறது. மறுபுறம் மக்கள் யுத்தம் வளர்த்து எடுக்கப்பட்ட பின்பு மக்கள் திரள் இயக்கம் அதற்கு உதவிகரமாக உள்ளது. இதன் மூலம் மக்கள் திரள் போராட்டங்களும் மக்கள் யுத்தமும் ஒன்றுடன் ஒன்று துணை புரிபவை என்றும், மக்கள் யுத்தமே அரை நிலப்பிரபுத்துவ அரைக்காலணிய நாடுகளில் முதன்மையானதாகவும் என்று குறிப்பிடுகிறார்.

இருப்பினும் சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் மாவோ குறிப்பிட்ட இந்த கருத்தை சரியாக உள்வாங்கப்படவில்லை. ஒரு தலைப் பட்சமாக மக்கள் யுத்தம், மூன்றாம் உலக நாடுகளுக்கான வடிவங்களாகவும் சித்தரிக்கப்படுகின்றது. இந்த போக்கு இரு போராட்ட காலங்களுக்கிடையில் பொரும் சுவரை எழுப்பி நிற்கிறது. நீண்ட கால மக்கள் யுத்தம் மூன்றாம் உலக நாடுகளுக்கு பொருந்தும் என்பது உண்மைதான். அதேபோன்று புரட்சிகர எழுச்சியும் வளர்ந்த நாடுகளுக்கு பொருந்தும் ஆயின், அவை இரண்டிற்கும் இடையே எல்லைக் கோடு வகுப்பது தவறானது. அரை நிலப்பிரபுத்துவ அரை காலணிய நாடுகளில், அதிகார வர்க்க, முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் விளைவாக, அந்த நாடுகளில் உள்ள வர்க்கங்களின் இடையிலான உறவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எமது கருத்தில் புறச்சூழல் ஏற்பட்டுள்ள இந்த புரட்சிகர மாற்றம் இரண்டு வகையான போராட்ட வடிவங்களையும் ஒரே சமயத்தில் கொண்டு செல்லவும், மக்கள் யுத்தத்தை முதன்மையாக நடைமுறை படுத்தவும் கோருகிறது. இதனை தெளிவுபடுத்தலே நாங்கள் ஒருங்கிணைப்பு என்று பிரயோகித்தோம்.

அதாவது,  எழுச்சியின் சில செயலுத்திகள் மூன்றாம் உலக நாடுகளில் நீண்ட கால  மக்கள் யுத்தத்தின் யுத்த தந்திரத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த கருத்தாக்கம் இன்று வரை சரியானது மட்டுமல்ல அது மேலும் வளர்த்தேடுக்கப்பட வேண்டும். மேலும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள தோழர்கள் அவர்களது புரட்சிகர எழுச்சிப் பாதைக்கு இணையாக நீண்டகால மக்கள் யுத்த பாதையின் செயலுத்திகளை உள் வாங்க வேண்டிய அவசியத்தை நாங்கள் அழுத்தம் அறிகிறோம். முதலாளித்துவம் பொரும் மாற்றத்திற்கு உட்பட்டடிருப்பதால் முதலாளித்துவ பாராளுமன்றம் மாற்றம் ஏதும் இன்றி துவக்கத்தில் உள்ளது போன்றே இருப்பதில்லை. இருவகைப்பட்ட நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தத்தம் நாடுகளில் வர்க்கப் போராட்டத்தை முன்னேடுத்துச் செல்ல இந்த ஒருங்கிணைப்பு கருத்தாக்கத்தை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். இருவகைப்பட்ட செயலுத்திகளை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் வெறும் கூட்டுக் கலவையாக மாறிவிடாமல் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

புரட்சியானது அமைதி வழியில் இருந்து வன்முறை போராட்ட வடிவம் வரை நெளிவு நிறைத்த பாதையில் நேர் கோடற்ற பாதையில் வளைந்து செல்கிறது. வன்முறை போராட்டங்கள் யாவும் புரட்சிகரமானது என்றோ, அமைதி வழிப்பாதை அனைத்தும் சீர்திருத்த வழி என்றோ நாம் முடிவு செய்ய முடியாது. கட்சியின் வழியைக் கொண்டு அது முடிவு செய்யப்படுகிறது. கட்சியின் வழி சரியானதாக இருப்பின் அமைதி வழிப்போராட்டங்கள் வலிமையை பெருக்கிக் கொண்டு உயர்மட்ட வன்முறை போராட்டத்திற்கு வளர்த்தேடுக்க பயன்படுகிறது. கட்சியின் வழி தவறானதாக இருப்பின் வலிமையான வன்முறை போராட்டங்களும் பெரும் சீர் திருத்தங்களை வென்றேடுக்க ஒரு போரட்டத்திற்கான வழியாக அமைகிறது. எனவே போராட்ட வடிவம் என்பது முதன்மையானதல்ல. அதற்காக அமைதி வழியான மாற்றத்திற்காக முன்வைக்கும் வாதமாக இதை கருதத் தேவையில்லை. முடிவாக ஆயதம் தாங்கிய பாட்டாளி வர்க்க போராட்டமே முதலாளித்துவத்திடமிருந்து பாட்டாளிகளுக்கு அதிகார மாற்றத்தை பெற்று தருகிறது.

நேர்காணல் : சுதாகர்
தொகுப்பு : பீட்டர்