Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் சாணக்கிய சம்பந்தரின் அமெரிக்கப்பயணம்

சாணக்கிய சம்பந்தரின் அமெரிக்கப்பயணம்

  • PDF

பிணக்காடாக்கிய பேரழிவு

இனம் மீட்சிகொள்வதற்கான படிப்பினைகளை

மட்டுமே விட்டுச்சென்றதாயில்லை

மீள்பொறிக்கான சதியாளரிடம் கையளித்துள்ளது

ஏகாதிபத்தியங்களின் முட்டி மோதலிற்குள்

மூழ்கி முத்தெடுப்பதாய்

சாணக்கிய சவடால் மீளெழுந்துள்ளது

 

பிரபாகர அவதாரம் புலத்து ஆய்வாளர்களால்

அமெரிக்க வரவுக்காய்

காக்கவைத்து அழிக்கப்பட்டது முடிவெய்துவதாயில்லை

தேசியத்தலைவராக

சம்பந்தர் அவதாரம் உலாவரதொடங்கியுள்ளது

சுற்றுப் பேச்சுக்களில்

தமிழர் எஞ்சியுள்ள மூச்சும் இரைகொள்ளப்படுகிறது

மக்களின் எதிர்ப்புணர்களை

வாக்குக்களாக மாற்றிக்கொண்டவர்கள்

அமெரிக்கப் பறப்பு

ஆயிரம் அர்த்தம் கொண்டதாய் மார்தட்டியபடியே

வெளியிடமுடியா இராஜதந்திரமாக

மக்களிற்கு மௌனம் சாதிக்கப்படுகிறது

யார் இவர்கள்

இந்திய அமெரிக்க உறவின் செல்லப்பிள்ளைகள்

எலும்புத் துண்டுகளை பெற்றுத்தருவோம்

இணங்கிப் போகுமாறு சொல்லப்போகிறார்கள்

ஆசியப்பிராந்திய போட்டியின்

தரகர்களாய் ராஜபக்சபோடு கூடப்போகிறார்கள்

தமிழரோடு சேர்த்து

இலங்கைத்தேசம் விலை பேசப்படுகிறது

விழித்துக்கொள்வோம்..