Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் தொழிலாளர்கள்: பிரிந்திருந்தால் தற்கொலை சேர்ந்திருந்தால்விடுதலை!

தொழிலாளர்கள்: பிரிந்திருந்தால் தற்கொலை சேர்ந்திருந்தால்விடுதலை!

  • PDF

"குடும்பத்துடன் ராம் தற்கொலை' என்றுதான் செய்தி வந்தது. மனைவிக்கு விஷம் கொடுத்ததை விட, ஒரு வயதே நிரம்பிய பிஞ்சு குழந்தைக்கும் விஷம் புகட்டியதுதான் பெரிதாக பேசப்பட்டது. இதற்கெல்லாம் "காரணம் கடன் தொல்லை' என்று மூன்றே சொற்களில் முடித்துவிட்டார்கள். ஆனால், மூன்று சொற்களுக்குள் அவனது மொத்த வாழ்க்கையையும் அடக்கிவிட முடியுமா? சென்ற வருடம் வரை அவன் நன்றாகத்தான் வாழ்ந்தான். குழந்தை பிறந்த மகிழ்ச்சியை பந்தல் போட்டு, ஊரை அழைத்து, விருந்து வைத்து கொண்டாடினான்.

 

பெரிய நிறுவனத்தில் கைநிறைய சம்பளம். அரசு ஊழியரான அவனது அப்பா தனது பணிக்காலத்தின் இறுதியில் பெற்ற சம்பளத்தை அவன் ஓரே வருடத்தில் எட்டி விட்டதை ஊரேஅதிசயமாகப் பேசிக்கொண்டது. நடுத்தர வர்க்க அந்தஸ்திலிருந்து உயர் நடுத்தரவர்க்கமாகவும், ஒருவேளை அதற்கு மேலேயும் அவன் போகக்கூடும் என்பதால், சுற்றமும் நட்பும் அவனையும் அவனது வாழ்க்கை முறையையும்

 

இளம் தலைமுறைக்கான முன்னுதாரணமாக்கிக் கொண்டது. ஒன்பது மாதங்களுக்கு முன்புவரை கம்ப்யூட்டர் துப்பிய காகிதத்தில் அவனது அலுவலக மேலாளர் கையெழுத்து போடும் வரை  இதுதான் ராமின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை

மேலாளரின் கிறுக்கலான ஒரேயொரு கையெழுத்து மொத்தமாக ஆசிட் ஊற்றி கழுவிவிட்டது.

வேலைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை அவன் காட்டியபோது அப்பா அதிர்ந்து போனார். மகன் நிரந்தர வேலையில் இருப்பதாகத்தான் அதுவரை அவர் நம்பியிருந்தார். அந்த நம்பிக்கை நொறுங்கியது ஒருபக்கம் இருக்க, என்ன காரணத்துக்காக வேலை போனது என்று கேட்டதற்கு பதில் சொல்லத்தெரியாமல் மகன் அழுதது அவரை நிரம்பவே பாதித்தது. லேபர் கோர்ட்டுக்குப் போகமுடியாதா, தொழிற்சங்கம் இல்லையா என்று அவர் எழுப்பிய கேள்விகள் எதுவும் மகனுக்குப் புரியவில்லை. ரிசெஷன், டௌன் சைஸிங் என்று மகன் கூறிய பதில்களோ அவருக்குப் புரியவில்லை. கிரகக் கோளாறு என்ற தீர்க்கமான நம்பிக்கையுடன் பரிகாரம் செய்வதற்கு அலைந்து கொண்டிருந்த அம்மா மட்டுமே இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொண்டவளாகவும், இதனை எதிர்கொள்ளும் மனவலிமை படைத்தவளாகவும் தெரிந்தாள். தந்தை இடிந்து போனார். புதிய வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையில் முன்பு வாங்கிய சம்பளம் பாதியாகக் குறைந்திருந்தது. வேலை நேரம் பதினாலு மணிநேரமாக உயர்ந்தது. அன்றைய நண்பர்கள், அன்று சாப்பிட்ட ஓட்டல்கள், அன்று செலவு செய்த தோரணை அனைத்தையும் மாற்றிக் கொள்ளவேண்டியிருந்தது. வீட்டை ஏலம் விடப்போவதாக கடன் கொடுத்த வங்கி நோட்டீஸ் அனுப்பியது. கடன்கள் ஏற ஏற கைப்பேசி எண்ணை வாரத்துக்கொரு முறை மாற்ற வேண்டியதாயிற்று. விடியற்காலையில் வீட்டை விட்டு புறப்பட்டு, நடுராத்திரியில் பதுங்கிப் பதுங்கி சொந்த வீட்டுக்குள் திருடனைப் போல் நுழைவது

வாடிக்கையானது. பிறகு கடன்காரர்களின் ஏச்சு, மிரட்டல், மனைவியின் கண்ணீர், சண்டை; ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவும் விருப்பமில்லாத இறுக்கம், துயரம்; இறுதியில் குடும்பத்துடன் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை.

 

தற்கொலை என்று முடிவு செய்த ராம், அவனைப் பெற்றவர்கள், அவனுடன் ஓருடல் ஈருயிராக வாழ்ந்து உதட்டில் நுரை வழிய இறந்த மனைவி  யாருக்கும் தங்கள் வாழ்க்கை ஏன் இப்படி தலைக்குப்புற கவிழ்ந்தது என்பதற்கான காரணம் புரியவில்லை. ""நன்றாகப் படித்தேன். நல்ல வேலை கிடைத்தது. நேர்மையாக உழைத்தேன். ஆனாலும் எனக்கு மட்டும் ஏன் இப்படி...?'' என்ற கேள்விதான் இறுதிவரை அவனைத் துன்புறுத்தியது. கடன்காரர்கள் அளித்த துன்பத்தைக் காட்டிலும், இந்தக் கேள்விக்கு விடை தெரியாத துன்பமே அவனைத் தற்கொலைக்குத் துரத்தியது. இதே விதமான கேள்விகளைத்தான் இன்று எண்ணற்ற ராம்களும், ராமசாமிகளும் சுமந்து திரிகிறார்கள். சுமையின் கனம்தான் அதிகரிக்கிறதே தவிர, எந்தக் கோயிலிலும், தேவாலயத்திலும், மசூதியிலும் அதனை இறக்க முடியவில்லை.

மரத்தடி ஜோதிடர் முதல் கார்ப்பரேட் ஜோசியர் வரை யாராலும் இதற்கு தீர்வும் சொல்ல முடியவில்லை.

···

2008ம் ஆண்டு மட்டும் 57,639 திருமணமான ஆண்களும், 30,224 திருமணமான பெண்களும் தற்கொலை செய்துக் கொண்டு இறந்திருக்கிறார்கள். இதில் திருமணமாகாதவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. பன்னாட்டு

நிறுவனங்கள் கோலோச்சும் பெங்களூருவில் 2,396 பேரும், சென்னையில் 1,309 பேரும், மும்பையில் 1,111 பேர்களும், டெல்லியில் 1,107 பேர்களும் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள்;

வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள்.

தொழிலாளர்களின் நிலை இப்படியென்றால் விவசாயிகளின் நிலை இன்னும் கவலைக்கிடம். 1997 முதல் 2007 வரை 1,82,936 பேர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது 32 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தன்

வாழ்க்கையை முடித்துக் கொள்கிறான்.

 

1991 மற்றும் 2001ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8 மில்லியன் விவசாயிகள், விவசாயம் செய்வதையே நிறுத்திவிட்டு தொழிலாளர்களாக, உதிரி பாட்டாளிகளாக மாறியிருக்கிறார்கள். மறுகாலனியாதிக்கம்  இந்த பத்து

எழுத்துக்கள்தான் இவையனைத்துக்கும் காரணம்.

 

முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படையை, அது தொழிலாளர்களை உறிஞ்சும் விதத்தை மார்க்ஸ் நிரூபித்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாகின்றன. முதலாளித்துவப் பொருளாதாரத்தைப் பராமரிப்பதற்கும், முதலாளி வர்க்கத்தின் நலனைப் பேணுவதற்கும்தான் அரசு சேவை செய்கிறது என்பது அனுபவப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும், அரசு குறித்த பிரமை திட்டமிட்டே பேணப்படுகிறது.

அரசியலும் பொருளாதாரமும் வேறுவேறுதான் என முதலாளித்துவ அறிவுஜீவிகள் தினந்தோறும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும், தனது பொருளாதார நோக்கங்களை, நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற மாற்றங்களை அரசியல் அரங்கில் உலக முதலாளித்துவம் செய்து கொண்டுதான் இருக்கிறது. மறுகாலனியாக்கத்தின் கீழ், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் குறித்த விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம், ஒடுக்கப்பட்ட நாடுகளின் அரகளிடம் இல்லை.

உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் ஆணைகள்தான்

தொழிலாளர் நலச் சட்டங்களையும் அவ்வர்க்கத்தின் உரிமைகளையும்

தீர்மானிக்கின்றன. இந்தியத் தொழிற் சங்கங்களின் தொழிற்சங்கச் சட்டம், 1926 மற்றும் 1947  48 ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கி வருபவை. இவைதான்

தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமையையும், வேலை நிறுத்த உரிமையையும் அளித்து வருகின்றன. ஆனால், 1999ல் பாரதிய ஜனதா தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையத்தை அமைத்தது.

அவர்கள் சர்வதேச நிதி நிறுவனத்துக்கும், உலக வங்கிக்கும் விசுவாசமாகச் செயல்பட்டு சுரண்டுவதற்கு ஏற்றார்ப் போல தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைக்க ஆலோசனைகளை வழங்கினார்கள். சிறிய அமைப்புகள் முதல் பெரிய

நிறுவனங்கள் வரை தங்கள் விருப்பப்படி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் வேலையைவிட்டு நீக்கவும் செய்யலாம். 300 அல்லது அதற்குக் கீழே உள்ள எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் எந்த சட்டமுறைகளுக்கு உட்படாமலும், முன்னறிவிப்பு இன்றியும் கதவடைப்புச் செய்து கொள்ளலாம். தங்களது நிறுவனம் பலவீனப்பட்டுவிட்டது என்ற காரணத்தை முன்வைத்து முதலாளிகள் கட்டாய ஓய்வு, நட்ட ஈடு, ஆகியவற்றைக் கொடுத்து தொழிலாளர்களை வெளியேயற்றலாம். தொழிற்சாலைகளின் முக்கியமான மையப்பணிகளில் மட்டும் நிரந்தரத் தொழிலாளர்களை வைத்துக் கொண்டு பிற பணிகளை ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு நிறைவேற்றலாம். ஊதிய நிர்ணயிப்பு குறித்து முடிவெடுக்க தொழிற்துறையில் தனி அமைப்புகள் எதுவும் தேவையில்லை. தொழிலாளர் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு முறை அவசியமில்லை. ஆனால், வேலை நிறுத்தம் செய்ய ரகசிய வாக்கெடுப்பு அவசியம் தேவை. அதேநேரம், ஒரு வேலை நிறுத்தத்தை அரசியல் நோக்குடையது என்றும் சட்ட விரோதமானது என்றும் முடிவு செய்ய அர க்கு உரிமை உண்டு. சட்ட

விரோதமான வேலை நிறுத்தங்களுக்கு கடும் தண்டனை வழங்கலாம். உள்ளிருப்பு வேலை நிறுத்தம், மெத்தனவேலைப் போராட்டம் மற்றும் சட்டப்படியான வேலை நிறுத்தம் ஆகியவற்றை அந்த இழை அறுபடும்போது, அவன் வேலைநீக்கம்

செய்யப்படும்போது இந்த வட்டம் நொறுங்குகிறது. ஒருநாளின் 24 மணிநேரங்களும் அவனுக்கு வெறுமையாகிறது. காலியான சட்டை பாக்கெட்டும், பணமில்லா வங்கிக் கணக்கும் வாழ்க்கை மீதான அச்சத்தை அவனுக்குள் ஏற்படுத்துகிறது.

தண்டனைக்குரிய தீய நடத்தைகளாக கருதலாம். பெரும்பான்மையான தொழிலாளர்களின் ஏற்பைப் பெறாத தொழிற் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யலாம். அவர்களின் எல்லா தொழிற்சங்க உரிமைகளையும் முடக்கலாம். விடுமுறை நாட்களை இயன்ற அளவுக்குக் குறைக்கலாம். 8 மணி நேர வேலை என்பதை முடிவுக்குக் கொண்டு வரலாம். 20க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் சிறு நிறுவனங்களுக்கு என தனி தொழிற் சட்டங்களை ஏற்படுத்தலாம். மேற்பார்வையாளர்கள் மற்றும் உயர்நிலைப் பதவி வகிப்பவர்களை, அவர்கள் எவ்வளவு குறைந்த ஊதியத்தைப் பெற்று வந்தாலும், தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கி வைக்கலாம். பெண்களுக்கென தனி தொழிற் சங்கங்களை நிறுவும் வகையில் தொழிற் சங்க விதிகளை அமைத்து தொழிலாளர்களை பால் ரீதியாக பிளவு படுத்தலாம். இவையெல்லாம் இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையம் அரசுக்கு கொடுத்துள்ள பரிந்துரைகள். இவற்றை எந்த இந்தியத் தொழிற்சங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற போதிலும் அரசு அதையே நடைமுறைப்படுத்த முயன்று வருகிறது. இப்படி தொழிற்சங்கத்தின் பாதுகாப்பு இல்லாமல் வேலை இழக்கும், வாழ்வை இழக்கும் பிரச்சினைகள் அதிகரிப்பதன் காரணமாகவே தொழிலாளர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றன. எனவே, ராம் என்ற மனிதனின் தற்கொலைக்கான காரணத்தை, அவனது மன உறுதி அல்லது உறுதியின்மையில் மட்டும் தேடுவதென்பது, அவனது வேலையிழப்புக்கான காரணத்தை அவனது கிரகநிலையில் தேடிய அவனுடைய தாயின் மூடநம்பிக்கைக்கு இணையானதாகும். பொருளாதார மந்தம், அதன் விளைவாக நடைபெறும் ஆட்குறைப்பு என்பவை தனிமனிதர்களின் துரதிருஷ்டத்தினால் விளைந்தவை அல்ல. முதலாளித்துவத்தின் இயல்பான அராஜகம் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவிக்கிறது. தனது வர்க்கம் தோற்றுவித்த நெருக்கடியின் சுமையை முதலாளிவர்க்கம் தொழிலாளிகளின் மீது தள்ளி விட்டுவிட்டு, தனது இலாபம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

 

ஆட்குறைப்பு, வேலை நேர அதிகரிப்பு, ஊதியவெட்டு என என்ன பெயரிட்டு அழைத்தாலும் இந்நடவடிக்கைகளின் நோக்கம் இதுதான். நெருக்கடி, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகள் இயற்கை உத்பாதங்களைப் போலத் தவிர்க்க முடியாதவை என்றும், அத்தகைய சுனாமிகள் தாக்கும்போது, நீந்திக்கரையேறும் திறமையை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்வது மட்டும் தான் நாம் செய்யத்தக்கதென்றும் முதலாளித்துவம் தொடர்ந்து மூளைச்சலவை செய்கிறது.

 

'போட்டி நிறைந்த உலகில் நீ உயிர் வாழ வேண்டுமென்றால் உனது திறமையை நீ வளர்த்துக் கொள்ளவேண்டும். வாழ்வதும் சாவதும் உன் கையில்தான் இருக்கிறது...' என்பதை திரும்பத் திரும்ப நாள்தோறும் மக்கள் மனதில், செவியில், கண்களில் பதிய வைத்துக்கொண்டே இருப்பதுதான் கருத்தியலின் வேலை. இந்த "உன்னால் முடியும் தம்பி' மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யும் தொழிலாளிகளை தடுக்க,

பாக்ஸ்கான் நிறுவனம் (சீனாவில்) அமைத்திருக்கும் தடுப்புவலை!

மேதினப் பேரணி:

தொழிலாளிகள் ஒன்று திரள்வதின் மூலமேவிடுதலையை பெறுவர்! தனிநபர் நம்பிக்கையைத்தான் பேராசிரியர்கள், செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அறிவுஜீவிகள், கலைத்துறையினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள்...என பலரும் ஓதுகின்றனர். ஒரேவார்த்தையில் சொல்வதென்றால் இதன் நோக்கம் சுயநலம் கொண்ட நுகர்வோர்களை

உற்பத்தி செய்வதுதான். ஒரு மனிதனின் வாழ்க்கை என்று சொல்லப்படுவதைக் கொஞ்சம் உடைத்துப் பார்ப்போம். அது என்ன? அவனுடைய வேலை, வருமானம், பிற அன்றாடப் பணிகள், அவனுடைய பொழுதுப்போக்கு, வாழ்க்கைத் தகுதி, அவனது

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டிருக்கும் உறவு இவை அனைத்தும் அடங்கியதுதான் வாழ்க்கை. இவை அனைத்துமே அவனுடைய பொருளாதாரத் தகுதி என்ற இழையில்தான் பின்னப்பட்டிருக்கின்றன. அந்த இழை அறுபடும்போது, அவன் வேலை நீக்கம் செய்யப்படும்போது இந்த வட்டம் நொறுங்குகிறது. ஒருநாளின் 24 மணிநேரங்களும் அவனுக்கு வெறுமையாகிறது. காலியான சட்டை பாக்கெட்டும், பணமில்லா வங்கிக் கணக்கும் வாழ்க்கை மீதான அச்சத்தை அவனுக்குள் ஏற்படுத்துகிறது.

எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம் என்ற நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஊழியனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். மேலாளர் சாதாரணமாக அழைத்தாலும் அது வேலைநீக்க உத்தரவுக்கான அழைப்பாக இருக்குமோ என்ற அச்சம் அவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை நடுங்கச் செய்கிறது. இப்படி பயந்துப் பயந்து வாழ்பவன் ஒருநாள் அவன் அச்சப்பட்டது போலவே வேலை நீக்கம் செய்யப்பட்டதும் மனச்சோர்வும், மன அழுத்தங்களும் ஆக்கிரமிக்கின்றன. தனது அனுபவத்துக்கும் திறமைக்கும் இன்னும் நல்ல வேலை கிடைக்கும் என நம்பிக்கையுடன் விண்ணப்பங்களை அனுப்ப ஆரம்பிப்பவன், தொடர்ந்து அவை புறக்கணிக்கப்படும் போது தடுமாற ஆரம்பிக்கிறான். எந்த வேலையிலும் சேர முடியாத தன்னுடைய நிலையை தனிப்பட்ட தோல்வியாகவும், தனக்கு மட்டுமே நேர்ந்த அவலமாகவும் கருதத் தொடங்குகிறான்.

அவனையும் அறியாமல் அவன் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறான். புதிய வேலையில் குறைந்த ஊதியத்துக்கு அல்லது பாதி ஊதியத்துக்கு பணியமர்த்தப்படும்போது வாழ்க்கை கவிழ்த்துப் போடப்படுகிறது. அந்தஸ்து குறைகிறது. தேவைகளைச் சுருக்கவேண்டியிருக்கிறது. துன்பங்களைச் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. சுயகௌரவம் என்று அவன் கருதிக் கொண்டிருந்த அனைத்தும் வெடிக்கின்றன. இதன் விளைவாக, தன்னைச் சுற்றி இருப்பவர்களிடத்தில்  குறிப்பாக குடும்பத்தினரிடமும், நெருங்கிய நண்பர்களிடமும்  தனது இயலாமையையும் கோபத்தையும் மூர்க்கத்துடன் காண்பிக்க ஆரம்பிக்கிறான். இதனால் குடும்ப உறவுகள் சிதைகின்றன. தற்கொலைகளைப் போலவே மணவிலக்குகளும், பாலியல் குற்றங்களும், புதிதுப் புதிதாகத் தோன்றும் குற்றவாளிகளும் கூட இந்தச் சூழ்நிலையின் விளைபொருட்கள்தான். தன்னையே வெறுக்கும் இந்த நிலை,

தற்கொலைக்குத் தள்ளுவது மட்டுமல்ல, போதைக்கும் அடிமைத்தனத்துக்கும் தள்ளுகிறது. முதலாளித்துவத்தை எதிர்கொண்டு முறியடிக்க முடியாமல் தோற்றவர்கள், முதலாளித்துவத்தின் கொடிய வடிவமான பாசிசத்திடம் சரணடையும் மனநிலைக்கு எளிதில் ஆட்படுகிறார்கள். மும்பையின் சிவசேனா, ராஜ்தாக்கரே போன்றோரின் காலாட்படைகள், குஜராத்தின் இந்து வெறிக்கொலைக்காரர்கள், ஐரோப்பாவின் புதிய

நாஜிகள் போன்ற போக்குகள் வளர்வதற்கும் இது வழி கோலுகிறது. தற்கொலையின் இடத்தை கொலை நிரப்புகிறது.

மென்மேலும் அதிகரித்து வரும் முதலாளித்துவத்தின் தாக்குதலை தொழிலாளிவர்க்கத்தால் தற்போது முறியடிக்க முடியாமல் இருக்கலாம். அந்தத் தாக்குதலை ஒரு வர்க்கம் என்றமுறையில் இணைந்து எதிர்கொள்ளும் போது கூட வெற்றி நிச்சயமற்றதாக இருக்கலாம். எனினும் அத்தகைய கூட்டுத்துவ செயல்பாடு ஒரு தொழிலாளியை மனச்சோர்வு, மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றிலிருந்து விடுவிக்கிறது. தன்னுடைய பிரச்சினை என்பது தனது தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, தன்னைப் போன்ற பலரது பிரச்சினை என்ற எளிய உண்மையைக் கூட அத்தகைய கூட்டுத்துவ செயல்பாட்டின் மூலம்தான் ஒரு தொழிலாளி உணர முடிகிறது. தன் மீதான தாக்குதலை, தனது வர்க்கத்தின் மீதான தாக்குதலின் அங்கமே என்று புரிந்து கொள்ளும் அந்தக் கணத்திலேயே அவனது தனிப்பட்ட பிரச்சினைகள் தோற்றுவிக்கும் மனக் கிலேசங்களிலிருந்து அவன் விடுபடத் தொடங்குகிறான். தனது அதிருஷ்டம், துரதிருஷ்டங்களுக்கு வெளியே சுயேச்சையாக

இயங்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இயக்கத்தை அறிவியல் கண் கொண்டு பார்க்கத்தொடங்குகிறான். வேலை இழப்பு, வீட்டு வாடகை, கடன் தொல்லை, கல்விச் செலவு, மருத்துவச் செலவு போன்ற பிரச்சினைகள் தனக்கு மட்டும் உரியவை அல்ல, தம் அனைவருக்கும் உரியவை என்ற பார்வை, அப்பிரச்சினைகளுக்கான தீர்வை உடனே வழங்கிவிடுவதில்லையெனினும், தவறான தீர்வுகளை நாடுவதிலிருந்து அவனைத் தடுத்து நிறுத்துகிறது. தனிப்பட்ட கோபம் தோற்றுவிக்கும் சீரழிவிலிருந்தும் உளவியல் பாதிப்புகளிலிருந்தும் கூட்டுத்துவ நடவடிக்கை என்பது ஒரு மருந்தாக இருந்து அவனைப் பாதுகாக்கிறது. புத்தாக்கம் செய்கிறது. சங்கமாகச் சேர்வது என்பது தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உரிமை மட்டுமல்ல, சங்கம் என்பது பொருளாதாரக் கோரிக்கைகளை வெல்வதற்கான கருவி மட்டுமல்ல, அது தொழிலாளி வர்க்கத்தின் மனோதிடத்தை வளர்க்கின்ற, தன்னம்பிக்கை ஊட்டுகின்ற, தற்கொலைகளிலிருந்து தடுக்கின்ற, தனிநபர்ஆற்றலை வளர்க்கின்ற ஒரு அருமருந்து.

· அறிவுச் செல்வன்