Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் போபால் கொலைகார 'டௌ' - வே வெளியேறு

போபால் கொலைகார 'டௌ' - வே வெளியேறு

  • PDF

""நாபாம்'' தீக்குண்டு, ""ஏஜெண்ட் ஆரஞ்ச்'' போன்ற இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் உலக முன்னணி நிறுவனம் ""டௌ கெமிக்கல்ஸ்''. அதன் நாசகார ஆயுத உற்பத்திக்கு எதிராக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மக்கள் போராடுகிறார்கள். குறிப்பாக, வியத்நாம் போரில் பயன்படுத்தப்பட்ட பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்ததும் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் தான்.

 

 

 

1984 போபால் நச்சு வாயுப் படுகொலைகளுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை, உலகம் முழுவதுமுள்ள அதன் ஆலைகளோடு டௌ கெமிக்கல்ஸ் வாங்கிவிட்டது. பிற நாடுகளில் யூனியன் கார்பைடு ஆலைகளின் விபத்து மற்றும் பிற கட்டுப்பாடுகளை ஒப்புக்கொண்டுள்ள டௌ கெமிக்கல்ஸ், நமது நாட்டில் மட்டும் போபால் படுகொலைகளுக்கான நட்டஈடு வழங்கவும் எஞ்சியுள்ள நச்ப் பொருட்களை போபால் ஆலையிலிருந்து அகற்றவும் பொறுப்பேற்க அடாவடியாக மறுக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து நமது நாட்டில் முதலீடு செய்யும்படி சோனியா மன்மோகன் சிதம்பரம் கும்பல் அழைப்பதோடு, போபால் விவகாரத்தில் டௌ கெமிக்கல்சின் அடாவடிக்குத் துணை போகிறது. இதையொட்டி சென்னையில் ஆக. 15இல் ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பு.மா.இ.மு. மற்றும் பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் ""கொலைகார டௌவே வெளியேறு'' என்ற முழக்கத்துடன் முற்றுகைப் போராட்டம் நடத்தின. இதன் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் பொதுக் கூட்டங்களை புரட்சிகர அமைப்புகள் நடத்தியுள்ளன.

 

திருச்சியில்...

 

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக செப்.16 அன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் பழனிச்சாமி தலைமையில் தோழர் ராஜா கண்டன உரை, தோழர் துரை.சண்முகம் சிறப்புரை மற்றும் ம.க.இ.க. மையக்கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியுடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க மக்களின் பேராதரவு வரவேற்புடன் இப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

விழுப்புரத்தில்...

 

விழுப்பும் மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், விவசாயிகள் விடுதலை முன்னணியும் இணைந்து, விழுப்புரம் இரயில் நிலையம் சந்திப்பில் புரட்சிகர கலைநிகழ்ச்சியோடு பொதுக்கூட்டம் நடத்தின. முன்னதாக பேருந்துநிலையம், கடைவீதி, குடியிருப்புகள் என்று விழுப்புரம் நகரம் முழுவதும் வீச்சான பிரச்சாரமும், நிதி திரட்டுதலும் பல பிரிவு மக்களின் வரவேற்பு ஆதரவுடன் நடந்தன. தோழர் அம்பேத்கார் கண்டன உரை, தோழர் காளியப்பன் சிறப்புரை மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழு புரட்சிகர கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து ஆதரவளித்தனர்.

 

புதுவையில்...

 

புதுச்சேரி தொழிற்பேட்டைப் பகுதியான திருப்புவனையில் ஆக. 30 அன்று போபால் நச்சுவாயு படுகொலைக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டமும் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் பு.ஜ.தொ.மு. சார்பாக நடைபெற்றது. தோழர் பழனிச்சாமி தலைமை தாங்க தோழர்கள் அய்யனார், கலை மற்றும் காளியப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வணிகர்களும், தொழிலாளர்களும் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். இது புரட்சிகர அமைப்புக்கும் அரசியலுக்கும் நம்பிக்கையையும் தருவதாக அமைந்தது.

 

உசிலையில்...

 

செப். 9 அன்று, உசிலையில் பெரும் பொதுக்கூட்டமும் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன. தோழர் சந்திரபோசு தலைமையில் தோழர் குருசாமி துவக்க உரை மற்றும் தோழர் கதிரவனின் சிறப்புரையுடன் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் போபால் நச்சுவாயு கோரக் கொலைகள், 26 ஆண்டுகளாகியும் அதற்கு நீதி மறுக்கப்படுவது, ""டௌ கெமிக்கல்ஸ்'' போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தொடரும் கொலை கொள்ளை ஆகியவை விளக்கப்பட்டன. புதிய ஜனநாயகப் புரட்சி என்ற மாற்று முன்வைக்கப்பட்டது. ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியும் போபால் மக்களின் துயரம் என்ற நாடகமும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவை தவிர, மானாமதுரை, கீழச்செவல்பட்டி, சிவகிரி, உடுமலை, கம்பம் ஆகிய ஊர்களிலும் மக்களின் பேராதரவோடு பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

பு.ஜ.செய்தியாளர்கள்.