Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் மார்க்சிச முகமூடியுடன் பாசிசத்துடன் உறவா ? புதியதிசைகளிடம் சிலகேள்விகள்

மார்க்சிச முகமூடியுடன் பாசிசத்துடன் உறவா ? புதியதிசைகளிடம் சிலகேள்விகள்

  • PDF

சில விடையங்கள் தமிழரங்கம் பிரசுரித்தால் ஆதாரம் எங்கே, விசாரணைக்கு வா இங்கே என கட்டளையிடும் நிலையில் இன்று புலத்தில் நடைபெறும் அரசியல் கூத்துகள் பற்றி சில தகவல்களையும், அது சம்பந்தமான என் கேள்விகளையும், கருத்தையும் இங்கு முன்வைக்க,  சொல்ல விழைகிறேன்.


யார் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர்...?

"லண்டனில் இன்று (19-10-2010) செவ்வாய்க் கிழமை மதியம் 12:30 மணிமுதல் மாலை 3:30 மணிவரை ஜி.எல்.பீரிஸின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் கலந்துகொள்ளும் மாநாட்டைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ........." பிரித்தானிய தமிழர் பேரவையால் குறுகியகால அவகாசத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வேலை நாளாக இருந்தும் கொட்டும் மழையிலும் கூட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.." இது புலிகளின் புலம்பெயர் இணையங்களில் ஒன்றான பதிவு இணையத்தில் வந்த செய்தி.

"லண்டனில் பீரிஸிற்கு எதிரான போராட்டம் : தமிழர் பேரவை நன்றி தெரிவிப்பு" என செய்தி வெளியிட்டது லங்காசிறி என்ற இன்னுமொரு புலிஆதரவு இணையம்.

இந்த ஆர்ப்பாட்டம் பற்றி செய்தி வெளியிட்ட வீரகேசரியும்  "பிரித்தானிய தமிழர் பேரவையால் குறுகியகால அவகாசத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ...... நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது" என கூறுகிறது.

யார் இந்த பிரிட்டிஷ் தமிழ் போறும்(BTF)?

இந்த பிரிட்டிஷ் தமிழ் போறும்(BTF) இன்று புலிகள் புலத்தில் பலகூறுகளாக பிரிந்த பின்னும் சில செல்வாக்குள்ள "பெரிய மனிதர்களால்" பெரும்பான்மையான இந்த கூறுகளின் புரிந்துணர்வுடன் இயங்கிவருகின்றது. நம்பகமான தகவல்களின்படி இந்த அமைப்பில் இயங்குவோர் பலர் நெடியவனின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் ஆவார்.  அதேவேளை தனிப்பட்ட உறவுமுறை, நட்பின் அடிப்படையில் நாடுகடந்த தமிழ் ஈழ அரச ஆதரவாளர்களும் இந்த பிரிட்டிஷ் தமிழ் போறும் அமைப்பில் இயங்குகின்றனர். இந்த அமைப்பு புலிகளின் கடைசிக்காலத்தில் பல லட்சம் பவுண்ட்ஸ் செலவு செய்து ஆர்பாட்டங்களையும், உண்ணாவிரதங்களையும், புலிகள் சார்பான மாநாடுகளையும் நடாத்தியது பலருக்கு நினைவிருக்கலாம். இன்றும் பலமான பொருளாதார அடிப்படையைக் கொண்டது இந்த அமைப்பு. 

இந்தக் கட்டுரையாளருக்கு தெரிந்த அளவிலே இந்த ஆர்ப்பாட்டம் புலிகளின் பினாமி அமைப்புகளில் ஒன்றான பிரிட்டிஷ் தமிழ் போறும் இனாலேயே ஏற்பாடு செய்யப்பட்டது.

இனியொருவின் செய்தி.

ஆனால் இது சம்பந்தமாக செய்தி வெளியிட்ட நாவலனை ஆசிரியராக கொண்ட இனியொரு இணையம்  ஜீ.எல்.பீரிஸ் வருகைக்கு எதிராக பிரித்தானிய தமிழ்ப் பேசும் மக்களின் ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பிட்ட கட்டுரையில்   இவ்வாறு கூறுகிறது.

....."இன்று (19.10.2010) லண்டனில் அருண்டல் ஹவுஸ் இன் முன்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. .... ஆர்ப்பாட்டத்தில் 1500 புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டனர். .....பிரித்தானிய தமிழ் போரமும்(BTF), புதிய திசைகள் அமைப்பும் இலங்கை அரசிற்கும் போர்க்குற்றவாளிகளின் சர்வதேசப் பிரசன்னத்திற்கும் எதிரான இப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தன. அமைப்புக்கள் சார்புநிலையின்றி தன்னிச்சையாக மக்கள் கலந்துகொண்டதை அறியக்கூடியதாக இருந்தது."

"மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன எனவும், அது புதிய திசைகளால் வெளியிடப்பட்டதெனவும் இனியொரு கூறுகிறது.

எனது கேள்விகள்.

ஆனால், புலிகளின் பினாமி அமைப்பான பிரிட்டிஷ் தமிழ் போறும் (BTF) உடன் செயற்படுபவர்களும், இந்நிகழ்வில் கலந்து கொண்டோருமான சிலர் இந்தக் கட்டுரையாளருக்கு தெரிவித்த தகவலின்படி, தமது அமைப்புக்கு அதாவது பிரிதீஷ் தமிழ் போருமுக்கு(BTF) சம்பந்தமில்லாத நபர்கள் மூவர்  திடீரென ஆர்ப்பாட்டத்தின் நடுவில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்ததாகவும், அதை தமது உறுப்பினர் சிலர் தடுத்தபோது, துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்தவர்களை தடுப்பதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாமென தலைமையால் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.  இதன் அடிப்படையில் இனியொரு சொல்வது போல் அங்கு புதியதிசைகளின் அழைப்பினால் அங்கு 1500 தமிழர்கள் பங்கு கொள்ளவில்லை. வேண்டுமானால் புதியதிசைகளின் அழைப்பினால் மூவர் பங்கு கொண்டனர் என எழுதுவது சரியானதாகும்.

ஆனால் அதுவல்ல இங்கு முக்கியமான விடயம். இங்கு எழும் கேள்விகள் என்னவென்றால்

1 . மார்க்சிஸ்ட் எனவும் முற்போக்குகள் எனவும் தம்மை காட்டிக்கொள்ளும் புதியதிசைகள் இனியொரு இணையத்தில் எழுதப்பட்டுள்ள செய்தியுடன் உடன்படுகின்றனரா?

2 . அப்படியாயின் புலிகளின் பினாமிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை, புதியதிசைகளும் இணைந்து நடத்தியதாக ஏன் புலிப்பினாமிகள் தமது ஊடகங்களில் அறிவிக்கவில்லை?
 
3. "அமைப்புக்கள் சார்பு நிலையின்றி தன்னிச்சையாக மக்கள் கலந்துகொண்டதை அறியக்கூடியதாக இருந்தது " என இனியொரு எழுதுகிறது. அப்படியாயின் இது ஒரு சுதந்திரமான மக்கள் எழுச்சி என  இனியொரு புனைய முனைவதை புதியதிசைகள்  ஏற்றுக்கொள்கிறதா?

அதாவது புலிகளின் பிரிட்டிஷ் தமிழ் போறும் BTF இனால் இது ஒழுங்கு செய்யப்பட்டது யாவரும் அறிந்த நிலையில் அது அப்படி அல்ல அது   "அமைப்புக்கள் சார்பு நிலையின்றி தன்னிச்சையாக மக்கள் கலந்துகொண்டனர்" என இனியொரு சொல்கிறது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா?

4 . லண்டனில் வாழும் சாதாரண ஒரு தமிழனுக்கு தெரியும் BTF யார் என்று. BTF  இன்று புலியின் அதிதீவிர ஆதரவாளர்களினாலேயே இயக்கப்படுகின்றது. முன்பு புலிகளின் பெயரால் அடாவடித்தனம் செய்தவர்களும், பாசிச நடத்தை கொண்டவர்களுமே அதில் இயங்குகின்றனர். அவ்வாறான பலரே அந்த ஆரப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். (இதை வேண்டுமானால் நான் நிருபிக்கத் தயார்). அன்று வன்முறை, பலாத்காரங்களை பாவித்து புலிகளின் பெயரால் பணம் பிடுங்கியோராலும், புலிகளின் இறப்பின் பின் லண்டனில் வாழும் பல பத்தாயிரம் தமிழர்களால்  அரசியல்ரீதியாகவும், சமுதாயரீதியாகவும் ஒதுக்கப்பட்டவர்களாலும் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என பறைசாற்றும் உங்களுக்கு அங்கு என்ன வேலை? அவர்களுடன் உங்களுக்கான உறவின் அடிப்படை என்ன ?

5 . மஹிந்த பாசிச அரசின் எடுபிடியான பீரிஸிற்கு எதிராக போராட்டம் நடத்துவது தவறல்ல. ஆனால் மஹிந்த-பாசிசத்திற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத புலிப்பினாமிகளுடன் சேர்ந்து போராட்டம்  நடத்துவது பழையபடி இந்த ஒதுக்கப்பட்ட தமிழ் குறும்தேசிய பாசிசவாதிகளுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கியதாகாதா? இதை வேறொருவிதத்தில் சொல்வதானால்,  சாதி அமைப்பிற்கு எதிரான சாதிக்கட்சி பாமாக ஆர்ப்பாட்டத்தில் மகஇக கலந்துகொண்டால் எப்படி இருக்கும்?  
 
6 . இனியொருவின் செய்தியின்படி உங்களுக்கு இந்தியாவிலிருந்து, நேபாளம் வழியாக பாலஸ்தீனம் வரை செல்வாக்குண்டு. அதேபோல் தனியாகவும் போராட்டங்கள் நடத்தும் சக்தி பெற்றவர்களாக விளங்குகின்றீர்கள். அப்படியானால் ஏன் உங்களால், உங்கள் தலைமையில் புலிகளுக்கு வெளியில் உள்ள சக்திகளை இணைத்து பீரிஸிற்கு எதிராக போராட்டம் ஒழுங்கு செய்யமுடியவில்லை? 

இந்த கேள்விகளுக்கு என்னால் பதிலை ஆதாரங்களுடன் கூற முடியும். ஆனால் புதியதிசைகள் சில நல்ல சக்திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளதென்றதன் அடிப்படையில் அவர்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.

Last Updated on Thursday, 21 October 2010 19:18