Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் அரசியல் தகிடுதத்தங்களும், அரசியல் வக்கிரங்களும்

அரசியல் தகிடுதத்தங்களும், அரசியல் வக்கிரங்களும்

  • PDF

இரயாகரன் அனைவருக்கும் எதிராக "அவதூறு" எழுதுகின்றார், இரயாகரன் "தனிநபர்" தாக்குதல் நடத்துகின்றார், இரயாகரன் - நாவலன் "இடையேயான" விவகாரம் இது, இரயாகரன் என்.எல்.எவ்.ரியின் கற்றன் நாசனல் வங்கிப் பணத்தை "மோசடி" செய்தவர், இரயாகரன் ஒரு "மனநோயாளி", இரயாகரன் எழுத்தை நாம் "படிப்பதில்லை" என்று எத்தனையோ திசை திருப்பும் அரசியல் தகிடுதத்தங்கள், அரசியல் வக்கிரங்கள். முதலில் இதுவே ஒரு அரசியல். உண்மைகளை குழி தோண்டிப் புதைக்கும், சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாத அரசியல். இதன் மூலம் என்னதான் இவர்கள் சொல்ல வருகின்றனர். தங்கள் அரசியல் நடத்தைகள் சரியானவை என்பது தான். இதன் மூலம் உண்மைகளை மூடிமறைத்து, மக்களை ஏய்க்கும் அரசியலை தொடர்ந்து நடத்த முனைகின்றனர்.

நாங்கள் இந்த சமூக அமைப்பை ஏற்றுக்கொள்பவர்கள் அல்ல. அந்த வகையில் இதை விமர்சிக்கின்றோம். அதை மாற்ற முனைகின்;றோம். இதற்கு வெளியில் எங்கள் எழுத்துகளுக்கு வேறு அரசியல் நோக்கங்களும்; கிடையாது.

எனவே சமூகத்துக்கு எதிரான அனைத்தையும் மறுதளிக்கின்றோம். பொது அரசியல் முதல் தனிநபர் அரசியல் வரையான அனைத்தையும் கேள்விக்குள்ளாகுகின்றோம். இன்று ஈழ அரசியல் என்பது தனிநபர்களை மையப்படுத்திய அரசியல் போக்காக இருப்பதால், அது கூர்மையான கவனம் பெற்று விமர்சனத்துக்குள்ளாகின்றது. இதை "அவதூறு" "தனிநபர் தாக்குதல்" என்ற கூறுபவர்கள், இதன் மூலம் தங்கள் மீதான விமர்சனத்தை மறுதளித்து செயல்பட முனைகின்றனர். இவற்றை "அவதூறு" "தனிநபர் தாக்குதல்" என்று கருதுபவர்கள், தங்கள் பக்கத்தில் நியாயம் இருந்தால் அதை மறுதளிக்க முடியும்;. மாறாக இதைச் செய்யாது "அவதூறு" "தனிநபர் தாக்குதல்" என்று முத்திரை குத்துவது மூலமாக தற்காப்பு பெறும் அரசியல் என்பது சாராம்சத்தில் இவர்கள் "அவதூறு" "தனிநபர் தாக்குதல்" என எதைக் கூறினரோ அதை மூடிமறைக்கவே முனைகின்றனர்.

"அவதூறு" "தனிநபர் தாக்குதல்" என்று கருதும் ஒரு விடையத்தை எடுத்து, அதை மறுப்பது கிடையாது. உதாரணமாக நான் இருந்த அமைப்பு 1984ல் நடத்திய கற்றன் நாசனல் வங்கி கொள்ளைப் பணத்தை, நான் மோசடி செய்ததாக என் அரசியலுக்கு எதிராக முன்னிறுத்துவது அரசியலாக மாறிவிட்டது. இதை நான் அவதூறு என்றேன். இது பற்றிய எனது விளக்கத்தை நான் பகிரங்கமாக, சில கட்டுரைகளில் முன்வைத்துளேன். இப்படி குற்றம் சாட்டும் எவனாவது நான் முன்வைத்ததை எடுத்து விவாதித்து இருக்கின்றார்களா? நான் வைத்த தகவல்கள்  தவறானது என்று விவாதிக்க முடிந்ததா? முடியவில்லை. என் அரசியலை மறுக்க, அவதூறு இதுதான் அவர்களின் கடைசிப் புகலிடம். இது பின்னோட்ட அரசியலில் தஞ்சமடைகின்றது.

நான் 1988 இல் அமைப்பில் இருந்து விலகிய பின்பு, அமைப்பு தொடர்ந்து இயங்கியிருக்கின்றது. 1988 இல் நான் விலகிய போது, நான் எனது பொறுப்புகள் எதையும் அமைப்பிடம் கொடுக்காமல் தான் ஒடிவந்தேனா! இல்லை. நான் அந்த அமைப்பில் தொடர்ந்து இயங்கிய மற்றொரு மத்திய குழு உறுப்பினருடன் தான், நான் நாட்டை விட்டு வெளியேறும் வரை ஒரே அறையில் தொடர்ந்து வாழ்ந்தேன். ஏன் அமைப்பின் நிதிப் பொறுப்பாளராக இருந்தவரை, நான் நாட்டை விட்டு வரும் வரை அடிக்கடி அவர் வேலை செய்த கடையில் சந்திப்பது வழக்கம். இறுதியாக அமைப்பின் கணக்கு கொப்பி உட்பட, அமைப்பின் நிதி தீப்பொறியிடம் கொடுக்கப்பட்டதாக அறிகின்றேன். நான் அமைப்பைவிட்டு வெளியேறிய போது இந்த நிதியை, மூவர் கொண்ட ஒரு குழு மூலம் முடக்கக் கோரினேன். இது அன்று இதற்கு பொறுப்பாக இருந்த ஐயரால் நிராகரிக்கப்பட்டது.

அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் இதை அவதூறாக தொடர்கின்றனர்.  இந்த அவதூறு குற்றச்சாட்டை மறுத்த பல கட்டுரைகள் உண்டு. இதை யாரும் எடுத்து, இதில் சொன்னது தவறு என்றோ அல்லது இதில் சொல்லாது எதனையும் மூடிமறைத்துவிட்டேன் என்றோ விவாதிக்க யாரும் முற்படவில்லை. ஆனால் அவதூறு மட்டும் தொடருகின்றது. இதுதான் என் அரசியலை மறுக்க, அவர்களிடம் இருக்கும் ஓரே ஆயுதம்.

இப்படி நாங்கள் சொல்வது அவதூறு என்றால் அதை மறுத்து ஏன் என்பதை விளக்குங்கள். அதைச்செய்ய வக்கில்லை. மாறாக முத்திரை குத்துவதன் மூலம் உண்மைகளை  மூடிமறைப்பது அரசியலாக  மாறிவிடுகின்றது.

அறிவு, நேர்மை, பகுத்தறிவு உள்ள எவரும், சமூகத்தை முரணற்ற வகையில் நேசிக்கின்ற எவரும், எப்போதும் உண்மையை தரிசிக்க தயாராக இருப்பார்கள். இன்று எமது பதிவு அரசியல் எல்லை என்பது, வரையறுக்கப்பட்டது. அதுவும் புலத்தில் இருந்து இயங்கும் தளத்தில், செயல்பூர்வமான சமூக இயக்கம் என்பது மட்டுப்படுத்தப்பட்டது. இதனால் இங்கு மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பும், சொந்த நடத்தைகள் மீதான சமூக கண்காணிப்பும் இங்கு கிடையாது.

இங்கு பிழைப்புவாதமும், சந்தர்ப்பவாதமும் கொண்ட அரசியல் முன்நகர்வு அரசியல் உள்ளடக்கமாக மாறுகின்றது. வார்த்தை ஜாலங்கள் மூலம், அரசியல் பிறக்கின்றது. பகட்டான அரசியல் விளம்பரங்கள் முதல், அனைவரையும் தம்முடன் இனம் காட்டுவதன் மூலம், பதிவரசியல் தன்னை நிலைநிறுத்த முனைகின்றது.

புலிகள் மே 16 சரணடைந்து அழிந்த பின்னும் முன்னும் உருவான திடீர் இடது அரசியல் அனைத்தும், தங்கள் கடந்தகாலத்தை மூடிமறைத்தது முதல் அக்கால கட்டத்தில் நடந்த எதிர் போராட்டத்தை கூட மறுதளித்துத்தான் இயங்கத் தொடங்கின. அவர்கள் உண்மையாக நேர்மையாக இருக்கத் தயாரற்ற ஒரு தொடக்கப் புள்ளியில் இருந்து தான், இடது அரசியலைத் தொடங்கினர்.

உண்மையாகவும், நேர்மையாகவும் இருத்தல் என்பது, திடீர் இடது அரசியல் தொடக்கத்தில் இருந்தே மறுதளிக்கப்பட்டது. எப்படி தாங்கள் இடதுகள் என்பதை நிறுவும் சதி அரசியலில் தான் இறங்கினர்.

கடந்தகாலத்தை மூடிமறைத்த வெளிப்பூச்சுடன்தான், குறுகிய விளம்பரங்கள் மூலம் தம்மை முன்னிறுத்துகின்றனர். பரஸ்பரம் சந்தர்ப்பவாதத்துடன் தான், அரசியல் வியாபாரத்தைச் செய்கின்றனர் பூரணமான சுயவிமர்சனமற்ற, விமர்சனமற்ற சாக்கடையில் புரளும் போது, அந்த அரசியல் நாற்றத்தை அம்பலப்படுத்தி எழுதும் போது தாவிக் குதித்து கூச்சல் போடுகின்றனர். இந்த அசிங்கத்தையே மறுபடியும் கடந்த சில நாட்களாக பதிவரசியலில் காண்கின்றோம்.

பி.இரயாகரன்
15.09.2010

Last Updated on Wednesday, 15 September 2010 13:22