Thu04252024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தேசம் நெற்றின் அரசியல் யோக்கியதை

தேசம் நெற்றின் அரசியல் யோக்கியதை

  • PDF

அரசியல் செய்கின்றனராம். எப்படி? எனது பெயரில், நான் அனுப்பியதாக காட்டி, அவதூறு பேசி பித்தலாட்டம் செய்கின்றனர். பின் அதை வைத்து மொழி நாகரீகம் பற்றி குசுவுகின்றனர். இதுபோல் பலரின் கட்டுரைகளை அவர்கள் போடுவது போல் போட்டுவிட்டு, கூடி நின்று அவர்கள் காறித் துப்புகின்றனர்.

 இதன் ஆசிரியரில் ஒருவரான சேனன் தொலைபேசியில் எடுத்து கூறுகின்றார், தேசத்தையும், தேசம்நெற்றையும் சம்பந்தப்படுத்தாது கருத்துச் சொல்லட்டாம். இப்படி வேடிக்கை காட்ட விரும்புகின்றனரா!

 

நடத்துவது விபச்சார விடுதி, அதில் விபச்சாரம் செய்பவனைப் பற்றி கதை என்பது எந்த நாகரீகம். நாங்கள் விமர்சனம் செய்பவனைப் பற்றி கதைக்க வேண்டியதில்லை. அவனும், அவர்களும் ஊரறிந்த சமூக விரோதிகள். தேசியம் என்ற பெயரில் கொலைகள் முதல் மாபியாத்தனம் வரை செய்வதையே அரசியலாக கொண்ட ஒரு கும்பல். மற்றைய கும்பலோ ஜனநாயகத்தின் பெயரில் இந்திய இலங்கை அரசுகளின் கூலிக் குழுக்கள். அது கொலை, கொள்ளை, கப்பம் என்று தாலியறுக்கிற ஒரு கூட்டம். அவன் அப்படித்தான். அவனுக்கு விபச்சார விடுதி நடத்துகின்ற உங்கள் அரசியல் யோக்கியதை பற்றித் தான் நாம் பேச முடியும்.

 

நீங்கள் இந்த சமூகவிரோத பொறுக்கிகளுக்கு எல்லாம் கருத்துச் சுதந்திரம் என்பீர்கள். உங்கள் சுதந்திர உணர்வை எண்ணி, நாங்கள் மெய்சிலிர்த்துத் தான் போகின்றோம். கொலைகார அரசியலுக்கும் சுதந்திரம். வரலாற்றில் என்ன 'அற்புத"மான அற்புதம். என்ன ஜனநாயகம்?

 

மனிதனை வேட்டையாடும் அரசியலுக்கு சுதந்திரம், எப்படித்தான் அங்கு மனிதம் வாழும். அந்த கொலைகாரர்கள் பற்றி அங்கு பேசினால், அது அவதூறாம். உடன் எடிட்டிங் சர்வாதிகாரம். இதன் மூலம் கொலைகார அரசியல் கும்பல், தன்னை புனைபெயரில் மறைத்துக் கொண்டு காறி துப்புவதோ ஜனநாயகம்.

 

அன்று புலிகள் ரெலோவை உயிருடன் தெல்லிப்பழைச் சந்தியில் போட்டு கொழுத்திய போது, தமிழ்(புலி)தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவனும், பின்னால் அரச கூலிக் குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சிவமகராஜா, புலிக்கு கொக்கோகோலா கொடுத்ததைப் போன்ற அந்த நாகரீகம் போன்ற நடத்தைகள் தான், இன்றைய தேசத்தின் நடத்தைகள்.

 

இது கருத்துச் சுதந்திரமாம்! விவாதச் சுதந்திரமாம்! தேசத்தின் கண்ணோட்டத்தில் சமூக வளர்ச்சிக்கு அவசியமானதாம்! ஆரோக்கியமானதாம்! சமூகத்தையே நலமடித்து சிதைத்துவிட்டு, கொலைகாரனும் கொள்ளக்காரனும் அரசியல்வாதியாகி விட்ட தளத்தில், அவனுக்கு தேசம் பாய் விரிக்காமல் என்ன தான் செய்யும். இதுவே அவர்களின் அரசியல் நாகரீகம்.

 

சமூக விரோத பொறுக்கிகளுடன், ஒரே தளத்தில் மோத வரும்படி தேசம் கூறுகின்றது. அவர்களின் சமூகவிரோதத் தன்மை போல், அவர்களோ புனைபெயர் பேர்வழிகள். என்னத்தைத் தான் அவர்களுடன் விவாதிக்க முடியும். தலையை வெட்டித் திரிகின்ற இந்த கூட்டத்துடன், நாம் அவர்கள் போல் வெட்டி ஒட்டவா முடியும்.

 

இப்படி எந்த விவாதமும் செய்ய வக்கற்றவர்கள். எதைத் தான், எந்த அரசியலைத் தான் அவர்கள் விவாதிக்க முடியும். முடியாது. மாறாக கடிப்பது, கொசிப்பது, குசுவுவது, சேறு அடிப்பதுதான். இதெல்லாம் தேசத்துக்கு, அவர்களின் அரசியல் ஒழுக்கத்துக்கு ஏற்ற விவாதம். முதலில் தேசத்துக்கு விவாதிக்க தெரியவேண்டுமல்லவா?

 

அந்த ஆசிரியரில் ஒருவர் கூறுவதைப் பாருங்கள் 'தேசியம் பற்றி இன்று வைக்கப்படும் பெரும்பான்மையான கருத்துக்கள் ஒரு ‘அரசியல் நோக்கோடு’ வைக்கப்படுகின்றன. இந்த அரசியல் பற்றிய விவாதத்தை இங்கே தவிர்த்து (சுருக்கத்துக்காக) கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம்." என்கின்றார். என்ன போக்கிரித்தனம். கருத்து என்ன? அரசியல் என்ன? திரோஸ்கிக்கே அ, ஆ .. எழுதிக்காட்டும் அரசியல். அரசியல் வேறு கருத்து வேறு என்று புளுடா விடுகின்றனர். திரொஸ்கி தலையில் அரைக்க, அரசியல் வேண்டாம் கருத்தைப் பேசு என்கின்றது. 'அரசியல் நோக்"கற்ற தேசியம், அப்படி ஏதேனும் ஒரு சரக்கு உண்டோ? இது தான் தேசத்தின் திரோஸ்கியம். திரித்துப் புரட்டி எழுதும் திரொஸ்கியத்தைப் பாருங்கள். 'இன்று இலங்கையில் நடப்பது தேசிய விடுதலைப் போராட்டமா என்ற சந்தேகங்கள் பலர் மனதில் உண்டு. புலியிசத்தை தேசிய போராட்டம் என்கிறார்கள் என்று றயாகரன் கருத்து வைத்துள்ளார். அதேபோல் புலிகளின் ஐனநாயக மறுப்பு நடவடிக்கைகளை வன்மையாக எதிர்ப்பவர்கள் தேசிய விடுதலை போரில் இருந்து புலிகளை பிரித்துப் பார்க்கவே விரும்புகின்றனர்" இப்படி ஒரு புரட்டை விடுக்கின்றார்.

 

'புலிகளின் ஐனநாயக மறுப்பு நடவடிக்கைகளை வன்மையாக எதிர்ப்பவர்கள் தேசிய விடுதலை போரில் இருந்து புலிகளைப் பிரித்துப் பார்க்கவே விரும்புகின்றனர்" யார்? எந்த புலியெதிர்ப்பு பேர்வழி. நாங்கள் மட்டும் தான் அதைச் சொல்லுகின்றோம் 'புலியிசத்தை தேசிய போராட்டம் என்கிறார்கள் என்று றயாகரன் கருத்து வைத்துள்ளார்." யாரைக் குறித்து, அதை அவர் திட்டமிட்டு சொல்லவில்லை. சொல்ல வேண்டியதை மறுவரியில் திரிக்கின்றார். இங்கு தான் அரசியல் சூழ்ச்சி வெளிவருகின்றது. புலியெதிர்ப்பு கும்பலை அரசியல் ரீதியாக பாதுகாத்து தொடரும், திரொஸ்கியமே அம்பலமாகின்றது. புலியெதிர்ப்பு அரசியல் என்ன?

 

திரொஸ்கிய சுத்துமாத்து வரியைப் பாருங்கள் 'புலிகளின் ஐனநாயக மறுப்பு" என்பதால் அது தேசியமில்லை. தேசியம் பற்றி விளக்கமே இப்படி தான் உள்ளது. அவர்களை, அதாவது புலியெதிர்ப்பு பேர்வழிகளை உண்மையான தேசியவாதியாக காட்டி விடுகின்ற திரோஸ்கிய சுத்துமாத்து. இது தான் தேசமாகி விபச்சாரம் செய்கின்றது.

 

பி.இரயாகரன்
17.11.2007