Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சமூக மாற்றத்தைக் கோராமல் சமூகத்தை திரிக்கும் பம்மாத்து அரசியல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 07)

சமூக மாற்றத்தைக் கோராமல் சமூகத்தை திரிக்கும் பம்மாத்து அரசியல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 07)

  • PDF

சமூக மாற்றத்தை கோராமல், சமூகத்தை திரிப்பது ஏன்? சமூகத்தில் நடந்த மாற்றங்களை, இல்லையென்று மறுப்பது ஏன்? சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுப்பது ஏன்? இதுவோ இன்று முன்நகர்த்தும் ஒரு மக்கள் விரோத அரசியல். இன்று திடீர் அரசியல், திடீர் மார்க்சியம், திடீர் புரட்சி பேசும் அனைவரும், கடந்த போராட்டத்தை மறுக்கின்றனர். கடந்த கால போராட்டத்தை மறுப்பது, திரிப்பது, அத்தியாகத்தைக் கொச்சைப்படுத்துவது என்பது, இன்றைய எதிர்ப்புரட்சி அரசியலில் மையமான வெளிப்படையான அரசியல் கூறாகும். யாரொல்லாம் கடந்தகால போராட்டத்தை அங்கீகரித்து செல்லவில்லையோ, அவர்கள் தொடர்ந்தும் மக்கள் விரோதிகள்தான்.  

இந்தவகையில் இத்தொடரின் தொடர்ச்சிக்குள், நாம் செல்ல முன் தேசம்நெற்றின் நோக்கத்தையும், அதன் அரசியலையும் புரிந்து கொள்வது அவசியம். இதன் மூலம் ஏன் இவர்கள் நாவலனுடன் சேர்ந்து, வரலாற்றை இன்று திரித்துப் புரட்டுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதுவும் 22 வருடத்துக்கு முன், இதே மாதம் (யூலை 18ம்திகதி) கொல்லபட்ட ஒரு நிலையில் தான் இந்தப் புரட்டுகள் வெளிவருகின்றது.    

"சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்" என்ற தலைப்பிட்டு இவர்கள் எழுதும் போது, ஏதோ தாங்கள் சமூகமாற்றத்தை இன்று முன்னிறுத்துவதாக காட்டும் புரட்டும் உள்ளடங்கியுள்ளது. இக் கட்டுரையின் நோக்கம், அங்கு நடந்த சமூகமாற்றத்தை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை, அரசியல் ரீதியாக மறுப்பதுதான். இதை திரித்துப் புரட்டி, அதை எதுவுமற்றதாக காட்டுவது தான். இதற்கு நாவலன் தன்னை முன்னிலைப்படுத்தி புரட்டுகளைத் துணைகொண்டு, போராட்டத்தின் அரசியல் போக்கையே சிறுமைப்படுத்துகின்றனர். என்னையும், எனது அரசியலையும் மறுக்கும் இன்றைய அரசியல் போக்கில், தேசம்நெற்றின் எதிர்ப்புரட்சி அரசியல் நாவலனுடன் கூட்டுச்சேர்ந்து வரலாற்றைத் திரிக்கின்றது.

இதேபோல் சென்ற மார்கழி மாதம் இனியொருவும் (நாவலன் உள்ளடங்கிய) தேசம்நெற்றும் எனது பெயரில் ஈமெயிலை தயாரித்து, எனக்கு மேல் திட்டமிட்ட அரசியல் அவதூறு பொழிந்தனர். இதன் போதான அவர்களின் புனைவும், அவதூறும் உள்ளடக்கிய பித்தலாட்டத்தை, இன்றுவரை  அவர்கள் தவறு என்று சொன்னது கிடையாது. அன்று நாம் அதை அம்பலமாக்கிய போது
    
1.தேசம்நெற் மூலம் கிடைத்த அதிர்ச்சி! ஆச்சரியம்!! - அவதூறுக்கு மறுப்பு


2. என் பெயரில் ஈமெயிலை தயாரித்து, தேசம்நெற்றில் போட்டுக் காட்டி "வியூகம்" படம்

இப்படி தேசம்நெற் இனியொருவுடன் சேர்ந்து எம் அரசியல் மீது அவதூறுகள் மூலம், அரசியல் செய்வது மட்டுமல்ல, கடந்தகால வரலாற்றையும் கூடத் திரிக்கின்றனர்.  தேசம்நெற் ஜெயபாலன் சமூகமாற்றத்தை முன்வைக்காத புலிகளின் "தமிழீழ மக்கள் கட்சி"யின் உறுப்பினராக இருந்தவர். இன்று புலிகளின் நீட்சியாக திடீரென அரசியல் பிரகடனம் செய்ய "மே 18" இயக்கத்தின், மூடிமறைத்த உறுப்பினர் அல்லது குறைந்தபட்சம் அதன் அரசியல் எடுபிடி.

இந்த நிலையில் "மே18" கடந்தகால போராட்டங்களை "தன்னியல்பு வாதமாக" காட்டி இதன் வர்க்க அரசியலை மூடிமறைக்கும் பம்மாத்து அரசியல் தளத்தில் நின்று தான், யாழ் பல்கலைக்கழகப் போராட்டத்தையும் "தன்னியல்;பாக" காட்டி வரலாற்றை திரித்து புரட்டுகின்றனர். இதற்கு சமூக மாற்றத்தை கொண்டிராத பல்கலைக்கழக வரலாறு மூலம், மூடிக்கட்டி முன்வைக்கின்றனர்.

பல்கலைக்கழகம் சமூக அமைப்பின் பொதுவான சமூகப் போக்கையே பிரதிபலிக்கும் என்ற வர்க்க உண்மையை மூடிமறைத்து, அங்கு நடந்த சமூக மாற்றத்துக்கான போராட்டக் கூறுகளை மறுக்கின்றனர். இதற்கு சமூகத்தின் பொதுவான சமூக ஓட்டத்தை, நெம்புகோலாக பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் உண்மையில் நாம் நடத்திய போராட்டத்தை அடுத்து, இதில் எஞ்சியவர்களும் சேர்ந்து ரஜனி திரணகமவின் தலைமையில்  நடத்திய போராட்டத்தை இருட்டடிப்பு செய்கின்றனர்.

நிலவும் சமூகத்தின் அனைத்து பிற்போக்கு கூறுகளையும் கொண்டது தான் பல்கலைக்கழகங்கள். இது உலகெங்கும் பொதுவானதும் கூட. இதை மூடிமறைத்து, சமூக மாற்றத்தை உள்ளடக்கிய போராட்டத்தை இதற்குள் புகுத்திக்காட்ட முனைகின்றனர்.

சமூகத்தின் பொதுக் கூறுகளை முன்னிறுத்தி, சமூக மாற்றத்தை மறுக்கும் அரசியல் முன்தள்ளப்படுகின்றது. உலகில் நிலவும் சமூகத்துக்கு வெளியில், எந்த பல்கலைக்கழகமும் சமூக மாற்றத்தை முன்னிறுத்தி புரட்சி செய்வது கிடையாது. யாழ் பல்கலைக்கழகம் கூட, அதற்கு விதிவிலக்கல்ல. உலகை ஆளும் வர்க்கங்கள், மக்களை அடக்கியாளும் கூறுகளைத்தான் பல்கலைக்கழகத்தின் மூலம் உற்பத்தி செய்கின்றன. இந்த அரசியல் உண்மையைப் புறக்கணித்து, அதை திரித்துக் காட்டி, பல்கலைக்கழகத்திற்கு வெளியில் இருந்து உருவாகின்ற புரட்சிகர சூழல் பல்கலைக்கழகத்தில் பிரதிபலிப்பதை திட்டமிட்டு மறுக்க முனைகின்றனர். தேசம்நெற்றைப் பொறுத்த வரை, கடந்தகால புரட்சிகர கூறுகளை மறுக்கும் "மே 18" இன் பிற்போக்கு அரசியலை, "சமூக மாற்றத்தை" முன்னிறுத்த தங்கள் அரசியல் மூலம் முன்தள்ளுவதுதான்.

இதற்கு மாணவர் அமைப்புக் குழுவின் போராட்டத்தை நாவலனின் துணையுடன் திரித்துப் புரட்டி மறுக்கின்;றனர். விஜிதரன் போராட்டத்தில் தான், மாணவர் அமைப்புக் குழு உருவானதாக முதலில் திரிக்கின்றனர். விஜிதரன் போராட்டத்தை தன்னியல்பு வாதம் என்கின்றனர். இதற்கு முன்னமே மாணவர் அமைப்புக் குழு உருவானதுடன், விஜிதரன் அந்த மாணவர் அமைப்புக் குழு உறுப்பினர் என்பதை மறுத்து அதைத் திரித்து விடுகின்றனர். மாணவர் அமைப்பு குழு உறுப்பினர் எண்ணிக்கை, ஏழும் இரண்டும் சேர்ந்து ஓன்பது என்பது கூட அப்பட்டமான பொய்யும் திரிபுமாகும்;. அத்துடன் இரண்டில் நாவலன் முதலில் இருந்ததாகவும், என்னை நாவலன் சிபார்சு செய்து சேர்த்தாக கூறுவதும் பொய்யும் திரிபுமாகும். என்னை ராக்கிங் காரணமாக மாணவர்கள் ஓதுக்கிய நிலையில், நாவலனின் சிபார்சின் பெயரில் எனது போராட்டத்தை மாணவர்கள் ஏற்றதாக கூறுவது வடிகட்டிய அசல் முட்டாள்தனமாகும். புலி அரசியல் வழிகாட்டி திருநாவுக்கரசு எம்மைக் கொல்ல உள்ளதாக இரயாகரனுக்குகூறிய தகவலை அடுத்து, நான் விமலேஸ்வரன் சுடப்பட்ட அன்று காலையே தலைமறைவானேன் என்று சொல்லும் அவதூறும் கூட அப்பட்டமான பொய்யும் திரிபுமாகும்.. மாத்தையா கற்றன் நாசனல் வங்கி பற்றிப் பேசியதாக கூறுவது, ஓலிப்பதிவு மூலத்தையே அப்பட்டமாக திட்டமிட்டு திரிக்கும் அவதூறு. இப்படிச் செய்கின்ற பின்னணியில், எனது அரசியலை மறுக்கும் பின்னணியில், ஒரு சதி அரசியல் உண்டு.

இதுதான் இதுபோன்ற கட்டுரைகளின் நோக்கம். எந்த சமூக மாற்றத்தை முன்வைத்து போராடும் நோக்கமும் கிடையாது. அதை மறுக்க, கடந்தகால போராட்டத்தையே திரித்து இதை "தன்னியல்பாக" காட்டி மறுக்கின்றனர்.

தொடரும்

பி.இரயாகரன்

11.07.2010

6. போராடினால் மரணம், இதுதான் புலியின் மொழியாக நாம் தொடர்ந்து போராடினோம்; (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 06)

5. ராக்கிங்கை அரசியல் ரீதியாக கைவிடுவதை தடுக்க, புலிகள் ஏவிய வன்முறை (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 5)

4. ராக்கிங்கை அரசியல் ரீதியாக கைவிடுவதை தடுக்க, புலிகள் ஏவிய வன்முறை (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 4)

3.  ராக்கிங் நிலைப்பாடு பல்கலைக்கழகத்தைப் பிளந்தது, புலிகளைத் தனிமைப்படுத்தியது (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 3)

2. ராக்கிங்குக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்டுவதைத் தடுக்கவே, ராக்கிங்குக்கு எதிராக புலிகள் வன்முறையை ஏவினர் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி - 2)

 1. விஜிதரனின் அரசியலை மறுப்பதன் மூலம், சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுத்தல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 1)

Last Updated on Sunday, 11 July 2010 10:40