Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் தீவகத்து ஒப்பாரி

தீவகத்து ஒப்பாரி

  • PDF

களவாட வந்தவன, கத்தியோட நின்றவன,

கையோட பிடிச்சுக்கட்டி நிலை கேட்க வந்தவரை - கள்ளர்

என கூறி  கையெழுத்து போட்டதென்ன.

 

கர்ண மகராசா என்ர, கற்றறிந்த குணராசா,

கற்றல் தலைக்கேறி - நீ

கரை தாண்டிப் போனதென்ன.

 

அடம்பன்கொடியாட்டம், திரள முயல்கையிலே

தும்பு திரிச்சு நாங்க தேரிழுக்க போகயில -   நீ

திரிச்ச கயிறுமேல தீவைக்க முயல்வதென்ன! 

 

கட்டையில போவாரால் கடல் கொண்டு போவாரால்;

கடலும் கடற்கரையும்; நாங்க கால் பதிச்ச வயல் வரப்பும்;

செம்பரப்பாகியின்று சீர்கெட்டு போனதென்ன.

சீர்கெட்ட பூமி தனை, சீரமைக்க பார்க்கும்-எம்மை

சகுனிகள் என்பதென்ன சதிகாரர் என்பதென்ன?

 

கற்றதெல்லாம் சரியானால்;

உன் சிந்தனையும் சரியானால்- நீ

சொல்வதெல்லாம் சரிதானா சொல்லு - நீ

என்  தோழா  !  
.

- தீவான்

Last Updated on Tuesday, 22 June 2010 19:54