Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

உயிர்ப்பு – 5 மீது எமது விமர்சனம் தன்னியல்பு வாதமல்ல, திரிபு வாதமேஇன்று பிரதான தடை!

  • PDF

“தன்னியல்பு வாதம் குறித்து” என்ற கட்டுரை 68 பக்கங்களை உள்ளடக்கி உள்ளது. இக்கட்டுரை ஒரே விடயத்தை மீள மீள சொல்லுவதுடன், அதன் குவிய மையம் தன்னியல்பு வாதமும், அது சார்ந்த கோட்பாட்டையும் முறியடிக்க ஒரு புரட்சிகர மாற்றைக் கோரி நிற்கின்றது.

இன்று பொதுவில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் எழுந்த பல் வேறுபட்ட சூழ்நிலையில், பல் வேறுபட்ட தனிநபர்கள், சிறு குழுக்கள் என பல வகையில தத்தம் சக்திகளுக்கு ஏற்ப ஏதோ ஒன்றைச் செய்ய முன்னைந்துள்ளனர். இது புலம் பெயர்ந்த நாடுகள், இலங்கை என எலலா இடங்களிலும் காணப்படுகிறது.


இச் சூழ்நிலைமைக் கவனத்தில் கொண்ட உயிர்ப்பு பிரச்சனையின் மையத் திசையைத் திருப்பி விடும் வகையில், தனது திரிபுவாதக் கோட்பாட்டுக்கு இதைச் சாதகமாகப் பயன்படுத்தும் வகையில் இக் கடடுரையை முனை;வைத்துள்ளனர்.இன்று தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுக்கான சூழ்நிலையில், தன்னியல்பு வாதமா ஒரு புரட்சிகர மாற்றை உருவாக்கத் தடையாக உள்ளத? உயிர்ப்பு அப்படியென அடித்துக் கூறுகிறது. நாம் அதைத் தெளிவாக மறுக்கின்றோம்.


சமுதாயத்தில் எழுகின்ற பல்வேறுபட்ட தன்னியல்பு போராட்டங்கள் என்பதுக்கும் எம்மவர்களின் இன்றைய செயற்பாட்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உண்டு.


உயிர்ப்பு தன்னியல்பு வாதமே இன்று புரட்சிகர மாற்றுக்குத் தடை எனக் கூறும் காரணமும், இன்று எம்மவர்கள் ஒன்றுசேர முடியாததற்கு புலிகளே காரணம் எனக் கூறுவதும் அடிப்படையில் ஒன்றேயாகும்.


இன்று எம்மவர்கள் மாற்றுத் தலைமையை உருவாக்க முடியாமைக்குப் புலிகள் காரணமல்ல! ஏனெனில் புலிகள் எப்பொழுதும செயல் ரீதியில் வரும் போது அதை முற்றாக அழித்து ஒழித்து விடுவது வழமை. எம்மவர்கள் ஒன்றுபட முடியாததற்கு குறிப்பிடக் கூடிய பின்வரும் காரணங்கள் உண்டு.

1. மார்க்சிசம் மீதான நம்பிக்கையீனம்

2. அவநம்பிக்கை வாதம்

3. புலிகள் பற்றிய பயத்துடன் கூடிய தம்பியோடல்

4. திரிபுவாத அடிப்படைகள்

இவைகளை விதைப்பதில், வளர்ப்பதில் கடந்த காலத்தில் உயிர்ப்பு, மனிதத்தில் சில எழுத்தாளர்கள், நிறப்பிரிகை என்பன பங்காற்றியுள்ளன. இன்று ஒரு புரட்சிகரத் தலைமையை உருவாக்க முடியாமல அதைப் பின்தள்ளியதில் உயிர்ப்பு, மனிதம், நிறப்பிரிகைக்கு கணிசமான பங்கு உண்டு.


இந்த நிலை ஏற்பட இவர்கள் பொதுவில் மார்க்சிசம் மீது பாரிய தாக்குதலை நடத்தினர். உதாரணமாக சோவியத் சீனாவில் முதலாளித்துவ மீட்ப்பை இல்லையென மறுதலித்தனர். பின்பு அதை சோசலிச சமூகமாகக் காட்டி, அதன் முதலாளித்துவ குணம்சங்களை, செயல்களை சோசலிசக் குணாம்சங்கள் எனக் கூறி மார்க்சிசம் மீது தாக்குதலைத் தொடுத்தனர். அதே நேரம் புரட்சியை நடந்தவுடன் அந்நாடுகளின் எல்லாம் மாறவிட்டதாகப் படம் காட்டி, ஆனால் அது நடக்கவிலலை என பின் மார்க்கிசத்தின் மீது சேறடித்தனர். ஒரு பிரச்சினயின் இயங்கியல் வளர்ச்சியை நிராகரித்த இந்தப் போக்கை பல சந்தர்ப்பங்களில் பல இடங்களில் கையாண்டனர். உதாரணமாக: பெண் விடுதலை புரட்சி நடந்தவுடன் முழுமை பெற்றிருக்க வேண்டும் எனக் காட்டி, பின் அதன் குணம்சரீதியான செயல்களை இனம் காட்டி மார்க்சிசத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.


இது போன்ற் எண்ணற்ற திரிபுவாதக் கருத்துக்கள் போராட்டத்தில் அன்னியப்பட்டு மார்க்சிசம் பற்றிய பிழையான அசியலுடன் புதிதாகத் தேடியவர்களை வேகமாகப் பற்றிக் கொண்டது. இது அவர்களுடைய இயலாமையுடன் சேர்ந்து அவநம்பிக்கை வாதத்திற்கு உள்ளாகி, மாக்சிசம் பற்றிய ஒரு மயக்கத்தையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதைச் செய்வதில் மனிதம் எழுத்தாளர்கள், உயிர்ப்பு, நிறப்பிரிகை மற்றும் ஒரு சில எழுத்தாளர்கள் கடந்த காலத்தில் முடிந்தவரை செய்துள்ளனர். இவைகள் எல்லாம் இணைந்த  நிலையில் புலிகள் வர்க்கமற்ற ஒரு குழுவாக இனம் காட்டி புலி எந்த வர்க்கம், நான் எந்தவர்க்கம் என்ற பிரக்ஞையை இழக்க வைத்துள்ளது. இவை மொத்தத்தில் புலி பற்றிய பயத்துடன் கூடிய ஓர் ஒடித்தப்பும் போக்கு விரவி நிற்கின்றது.

இந்நிலையில் தான் தன்னியல்பு வாதம் மற்றும் அது சார்ந்த கோட்பாடுகளையும் விவாதிக்கின்றனர். அதை ஒட்டி கோட்பாட்டை வளர்க்கக் கோருகின்றனர். முதலில் இன்று எம்முன் உள்ள பணி திரிபுவாதத்தை முறியடிப்பதாகும். மார்க்சிசத்தின் அடிப்படைகளை, பொது உண்மைகளை பாதுகாப்பதாகும். இது மட்டுமே எதிர் காலத்தில் புரட்சிகர அமைப்புக்கான ஓர் அடிப்படையாகும்.

இன்று பல்வேறு செயலில் உள்ளவர்கள் ஒரு பொதுக் கோட்பாட்டை, அதன் சரியான அடிப்படையை ஏற்றுக்கொண்டவர்கள் அல்லர். அப்படி ஏற்றுக் கொண்டவர்கள் மத்தியில் தன்னியல்பு வாதம் தான் தடையெனக் குறிப்பிடின் அது சரியானதாக இருக்கும். உதாரணமாக மார்க்சிக்கு அமெரிக்கத் தொப்பியை இட்டவரும், கேசவனும், சிவசோதியும், சிவசேகரமும், சமரும், சுவடுகளும், சுமைகளும், சஞ்சீவியும், மௌனமும், சக்தியும்.. ஒன்றிணைய முடியாமைக்குக் காரணம் தன்னியல்புவாதமா? இல்லை மாறாக மார்க்கிசம் எது என்பதே அடிப்படைப் பிரச்சினை. இன்று உயிர்ப்பும் சமரும் இணைய முடியாமைக்கான காரணத்தை உயர்ப்புத் தெளிவாக அறிந்pதிருந்தும், வாசகர்களை ஏமாற்றி திரிபைப் புகுத்திவிட, தன்னியல்பு வாதமே பிரச்சனையெனக் காட்ட முயல்வது ஒரு மோசடியாகும்.

நாம் ஒன்றிணைவை எப்பொழுதும் வலியுறுத்தி வந்தோம் அது மார்க்கிச அடிப்படை உண்மைகள் மீது மட்டுமே சாத்தியமென்றும் கூறிவந்தோம். இதை உயிர்ப்பு நிராகரிக்கும் வரை, இது தன்னியல்புவாதம் அல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், வாசகர்களை ஏமாற்றி திரிபைப் புகுத்த முயலும் உங்களின் மோசடிகளையும் வாசகர் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

உதாரணமாக.

இக் கட்டுரையில் உயிர்ப்பு “…பேரினவாத அரசிற்கும், புலிகளுக்கும் மாற்றாக மட்டுமின்றி, எமது கடந்த கால முயற்சிகளுக்கு மாற்றான ஒரு வழியைப் பேசுகின்றோம். இது தவிர்க்க முடியாமல் எமது கடந்தகால சிந்தனை முறைகளில் இருந்தும், வேலை முறைகளிலிருந்தும் முறித்துக் கொள்வதை..” எனத் தொடர்கின்றனர்.

இது கடந்த கால எமது மார்க்சிச அடிப்படை மீதான முறிவை, அதன் சிந்தனை வழி மீதான முறிவை, அதன் புரட்சிகர வேலைத் திட்டத்தின் மீதான முறிவைப் பறைசாற்றுகின்றனர். அந்தவகையில் தேசியம் என்பது எந்த வர்க்கமும் சார்ந்தது அல்ல. அதுபோல் புலியும் எந்தவர்க்கமும் சார்ந்தது அல்ல என்ற புதிய சிந்தனை. ஆதன் மீதான செயலைக் கோருகின்றனர். இதுதான் இவர்கள் தன்னியல்பு வாதம் எனக்கோரி உங்கள் முன் வைக்கும் சொகுசு வேலைத்திட்டம்.

இதை அவர்கள் வேறு ஓர் இடத்தில் இப்படிக் கோருகின்றனர்.

“… மாறாக சமூகத்திலுள்ள பலவிதமான உறவுகள் காரணமாக மக்கள்மத்தியில் பலவிதமான பிரிவுகளும், வேறுபாடுகளும் காணப்படுகின்றன. வர்க்கம் என்பது அவற்றில் ஒன்றாகும்.” முடியும் என்கின்றனர். இதிலிருந்தே புலிக்கு வர்க்கமில்லை என்கின்றனர். தலித்துக்கு வர்க்மில்லை என்றனர். தேசியத்துக்கும் வர்க்கமில்லை என்றனர். பெண்ணியம் வர்க்க கடந்தது என்றனர். அரசு வர்க்கம் சார்ந்தது அல்ல என்றனர். இதுதான் இவர்களின் தன்னியல்புவாத முறிவு. இதுதான் கடந்தகால முயற்சிக்குப் பதிலாக வைக்கும் மாற்றச் சிந்தனை: வேலை முறையாகும். வாசகர்களே! இவர்களின் கபடத்தைப் புரிந்து கொள்ள இக்கட்டுரையில் இவ்வளவுமே போதும். மேற்கூறியதைத் தான் கோட்பாட்டுப் பணி என வகுத்துக் கொள்கிறார்கள். அதாவது அடிப்படை மார்க்சிசத்தைத் திருத்தி, மார்க்சுக்குத் திருத்தம் கொடுப்பது ஒரு முதன்மையான கோட்பாட்டுப் பணி. இது தன்னியல்பு வாதமாக உங்கள் முன் காட்டி உங்கள் ஏமாற்ற முனைவதாகும்.

என்னதான் அழகான திட்டமும், கொள்கையும் என எல்லாவற்றையும் உயிர்ப்பு எதிர்காலத்தில் பிரகடனம் செய்ய முயன்றாலும், ஒன்றை அவர்கள் மறந்து விடுகின்றார்கள். அதாவது இது போன்று முதலாளித்துவ கட்சிகளும் இவற்றை வைத்திருக்க முடியும் என்பதை அழகானவை எல்லாம், அது அடிப்படை மார்க்சிசத்தை சரியாக வகுத்துக் கொண்டால் மட்டுமே, அது மக்கள் புரட்சியைச் செய்யும். இல்லாத வரை அது ஏகாதிபத்தியத்துக்கே சேவகம் செய்யும்.


அடுத்து தமிழ்நாட்டில் சிரழிந்து செல்லும் குழு ஒன்றின் புரட்சிக்கனல் பத்திரிகையில் தன்னியல்பு வாதம் தொடர்பாக அவர்களின் கருத்துக்களை உயிர்ப்பு எடுத்துக் காட்டி அவர்களின் செயல்களையும் பாராட்டி உள்ளனர். இதன் மூலம் அவர்களின் வழியில் உயிர்ப்பு சீரழிய பிரகடனம் செய்கின்றனர்.


இவர்கள் தமிழ் நாட்டு அமைப்புக் கமிட்டியாக இருந்த காலத்தில் கேடயம், மன ஓசையை வெளியிட்டவர்கள். இவர்கள் 1983 இறுதியில் வெளியிட்ட ‘இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு என்ன’ என்ற சிறு பிரசுரத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது அல்ல ஏனெனில்:


இந்தியாவில் எழும் புரட்சி உலகை மீளவும் ஒரு முறை குலுக்கும். அந்த வகையில் தான் ஏகாதிபத்தியங்கள் முதல் அதன் தொங்கு தசை ஆளும் வர்க்கங்கள் வரை, மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறிவரும் பரட்சியாளர்களையும், அதன் மக்கள் பிரிவுகளையும் ஒழித்துக் கட்டி வருகின்றன.

Last Updated on Tuesday, 22 June 2010 19:17