Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மீண்டும் எழுந்திருக்கையில் என்ற கவிதையில் வரும் சில வரிகள் - சண்முகம் சிவலிங்கத்தின்

மீண்டும் எழுந்திருக்கையில் என்ற கவிதையில் வரும் சில வரிகள் - சண்முகம் சிவலிங்கத்தின்

  • PDF

எனது மயிர் பொசுங்கி விட்டது
எனது தோல் கருகிவிட்டது
எனது காதுச்சோணைகள் எரிந்துவிட்டன
இந்த ரணங்களோடுதான்
மீண்டும் எழுந்திருக்கிறேன்

இந்த ஊனங்களின்
தழும்புகளுடன்தான் நான் இனி வாழவேண்டும்
எனது மனவெளியோ
வெந்த மனம்போல் உள்ளது.
தீப்பிடித்துக் கருகிய புற்கற்றைகள்
இங்கொன்று அங்கொன்றாய் தெரிகிறது
இடையே சாம்பல் கலந்தமண்
அடி கருகிய புற்கற்றைகளிலிருந்து
இரண்டொரு பசும் முளைகள்
சின்னச் சின்ன பச்சைப் படர்கள்
தெரிகிறதா?