Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02

  • PDF

இந்து மதத்தை வைத்துக்கொண்டு, சாதியத்தை மட்டும் ஒழித்துவிட முடியும் என்று சிலர் கருதுவது போல், சுரண்டல் அமைப்பை வைத்துக்கொண்டு பார்ப்பனியத்தை (இந்துவத்தை)  ஒழித்துவிட முடியும் என்று பலர் கருதுகின்றனர். இதனால் சமூகம் பார்ப்பனிய மயமாக்கலுக்குள் தொடர்ந்தும் வாழ்கின்றது.

பார்ப்பனியத்தை புப்ரிந்துகொண்ட விதம், இந்த மதத்தை புரிந்து கொண்ட விதம், சாதிய ஒழிப்பை புரிந்து கொண்ட விதம், சுரண்டல் சமூக அமைப்பை புரிந்து கொண்ட விதம், இப்படி எல்லாம் பார்ப்பனியமயமாக்களுக்குள் உட்பட்டு, அவை அரூபமானவையாக உள்ளது.

 

சாதியைத் துறந்து, சகல சமூக ஒடுக்கமுறைக்கும் எதிராக போராட மறுக்கின்ற அற்பத்தனங்கள் தான், இந்த இழிவான கோட்பாடுகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்கின்றது. இதுதான் சாதி ஒழிப்பில் சந்திக்கும், மிகப்பெரிய சவால். அதன் பின் தான் மற்றவைகள்.    

    

இதனால் தான் ஆரியன் யார்? பார்ப்பனன் யார்? என்ற கேள்வி எம்முன் எழும்புகின்றது. இதனால் போராட்டமும், பிளவுகளும், ஆய்வுகளும், இந்தியா மற்றும் சாதிய சமூக அமைப்பு நிலவும் சமூகங்களில் இன்று வரை நீடிக்கின்றது. இந்த ஆரிய வழிவந்த சுரண்டல் பார்ப்பனியத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமை இந்துத்துவ சமூகத்தை யாராலும் மாற்றிவிட முடியாது.

 

மனிதனை மனிதன் மதிக்கின்றதும், ஏற்றத்தாழ்வை களைகின்றதுமான போராட்டம், இயல்பில் பார்ப்பனியத்துக்கும் இந்து மதத்துக்கும் எதிரானது. இதேபோல் பார்ப்பனியத்துக்கும் இந்து மதத்துக்கும் எதிரான போராட்டம் என்பது, இயல்பில் சுரண்டல் அமைப்புக்கும் எதிரானது. பார்ப்பனியம் சமூகத்தில் எதனுடன் எப்படி சேர்ந்து இயங்குகின்றதோ, அவை அனைத்துக்கும் எதிரான போராட்டம் தான் சாதியை ஒழிக்கும்.

 

இவற்றை உள்ளடக்காத எந்தப் போராட்டமும், ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்ற நடைமுறைகளையும் கோட்பாடுகளையும், ஏதோ ஒருவிதத்தில் தம்முடன் தம்முனைப்புடன் கொண்டிருப்பது தவிர்க்க முடியாது.

 

பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டம் என்பது, ஆரிய வழி இந்து பார்ப்பனியத்துக்கு எதிரானது. இதுவோ இன்று இந்துத்துவத்திற்கு எதிரான வடிவிலும் நீடிக்கின்றது. சுரண்டல் சமூக பொருளாதார அமைப்புக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும், சாராம்சத்தில் பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டமாகவும் உள்ளது. அதாவது பார்ப்பனியம் அனைத்தையும் தழுவி இயங்குவதால், பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டம் எங்கும் எதிலும் நிறைந்ததாகவுள்ளது.

 

பார்ப்பனிய சாதிய இந்துத்துவக் கொடுமைகளும், கொடூரங்களும் தான், பார்ப்பனியத்தின் நேரடியான பிரிவாக தம்மை தக்கவைக்கும் பார்ப்பானுக்கு எதிரான ஒரு போராட்டமாக சாராம்சத்தில் உள்ளது. தம்மை பார்ப்பனன் என்று சாதிய அடையாளம் மூலம் பார்ப்பனியத்தை உயர்த்திக் காட்டுபவன், இதை கொண்டு வாழ்பவன், வெறுக்கத்தக்க ஒரு இழிவான சமூகப் பிரிவாக தம்மை அடையாளப்படுத்துகின்றான். இதே போல்தான், தன்னை உயர்ந்த சாதியாக பிரகடனப்படுத்தி வாழ்பவனும், அதே அளவுக்கு வெறுக்கத்தக்க சமூகப் பிரிவாக உள்ளான்.    

 

இப்படி எங்கும் பார்ப்பனியம் பல முகத்துடன், சாதிய வடிவில் ஒரு சாதிய இழிகுணத்துடன் தன்னை தக்கவைக்கின்றது. மற்றவனை ஒடுக்கி வாழும் சாதிய இழிகுணமோ, நாகரீகமற்றது. சமூக பண்பாடற்றது. அதுவோ காட்டுமிராண்டித்தனமானது. இது அனைத்து வகையான சமூக இழிவுகளின் மொத்த வடிவில், அது தன்னைத்தான் பிரகடனம் செய்கின்றது. இது தன்னை சுரண்டும் ஒரு வர்க்கமாக, உலகமயமாக்கலாக, தாராளமயமாக்கலாக, தனியார்மயமாக்கலாக, ஏகாதிபத்தியமாக, நிலப்பிரபுத்துவமாக, தரகுமுதலாளிகளாக, காலனித்துவமாக, ஆணாதிக்கமாக, மதவெறியாக, இனவாதமாக… என அனைத்து சமூகவிரோத வடிவிலும், பார்ப்பனியம் தன்னைத்தான் வெளிப்படுத்தியும் ஒன்றுகலந்தும் நிற்கின்றது. சாதி வன்முறையைக் கொண்டு மக்களை பிழந்தும், இழிவாடியும், சமூகத்தை சாதி மூலம் ஒடுக்குகியாளுகின்றது.

 

இப்படி மக்களைப் பிளந்தும், மக்களை ஒடுக்கியும் வாழ்கின்ற ஒன்றாகத் தான் பார்ப்பனியம் உயிர் வாழ்கின்றது. அது எப்போதும் தன்னை பார்ப்பனிய சாதியூடாக நியாயப்படுத்தி இயங்குவதால், அது எப்போதும் எங்கும் மக்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது, இருந்து வருகின்றது. இதனால் அது எப்போதும் எங்கும், மக்களுக்கு எதிரான சக்திகளுடன், மக்களை ஒடுக்குகின்ற பிரிவுகளுடன் சேர்ந்துதான், அது நிலைத்து நீடிக்க முடிந்தது, முடிகின்றது. நிலவும் சுரண்டல் சமூக பொருளாதார சமூக அமைப்புக்கு வெளியில், பார்ப்பனியம் தனித்து சுயமாக இயங்குவது கிடையாது. இதற்குள் தான், அது தன்னை தக்கவைக்கின்றது. இதன் மூலம் ஒரு பார்ப்பனிய சாதியத் தத்துவமாக, இந்துத்துவ மதமாக தன்னளவில் நீடிக்கவும், உயிர் வாழவும் முடிகின்றது.

 

இந்த சாதிய-தீண்டாமை சமூக அமைப்பான இந்துத்துவ பார்ப்பனியம் எங்கிருந்து? எப்படி? எந்த வழிகளில் உருவாகியது? எம்மிடம் நிறையவே கேள்விகள் உண்டு. இதை நாம் எப்படி எந்த வகையில் கண்டறியப்போகின்றோம்? ஆம், எம்முன்னுள்ள மனித வரலாற்றை ஊடறுத்து, அதை கவிட்டுப் போடுவது இன்று அவசியமானதாகின்றது.

 

பி.இரயாகரன்

 

தொடரும்
 

 

1.பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01

Last Updated on Thursday, 06 May 2010 10:51