Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

காணமல் போன ஆண்களும், விதவைகளால் நிரம்பிய தேசமும்

  • PDF

தமிழினத்தின் பொது வெட்முகம் இது. இலங்கை மக்கள் தொகையில், குறைந்தபட்சம் 5 லட்சம் ஆண்கள் காணமல் போய்யுள்ளார்கள். கிழக்கிலோ 49 ஆயிரம் விதவைகள். இதில் அரைவாசி பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 12 ஆயிரம் பேர் 3 குழந்தைகளின் தாய்.

இது ஒரு அரச புள்ளிவிபரம். போர் குற்றத்தின் முழு வெட்டுமுகத்தை இது எடுத்துக் காட்டுகின்றது. ஒரு இனத்தின் அழிவையும், சிதைவையும் தெளிவாக தோலுரித்துக் காட்டுகின்றது.

 

பேரினவாதம் ஒரு இனத்தின் உரிமையை மறுத்து, அவர்களை பிணக்காட்டாக்கியது. புலிகள் தம் பங்குக்கு அதற்கு உதவினர். அரசின் இந்த போர்க் குற்றம், இன்று குரூரமான குற்றமாக கூட இனம் காணமுடியாத வண்ணம் போய்யுள்ளது. புலிப் பாசிசத்தின் பின் அரசு தன்னைத்தான் ஓளித்து வைத்துக்கொண்டே, பாரிய இனவழிப்பை நடத்தியது. இளம் தலைமுறையை திட்டமிட்டு கொன்று குவித்தது.

 

புலிகள் என்ற பாசிச இயக்கம் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அன்னியமாகிய, குழந்தைகள் முதல் இளம் தலைமுறையினரின் சமூக அறியாமையில் தான் ஒரு மாபிய இயக்கமாக இதன் வரலாற்றில் நீடித்தது. இந்த வரலாற்றுப் பின்னனியில் திருமணம் செய்தவர்கள், இயக்கத்தில் இணைத்தல் என்பது அறவேயற்று இருந்தது.

இந்த பின்னணியில் பெண்கள் யாரால் விதவைகளாக்கப்பட்டனர் என் கேள்வியும், இந்த ஆண்கள் யார் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அரச பயகரவாதத்துக்கு எதிராகவும், புலியின் கட்டாய பயிற்சிக்கும் அதன் ஜனநாயகமற்ற அரசியலுக்கு எதிராகவும், குடும்ப வாழ்கைக்குள் இறங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள முயன்ற அப்பாவி பொதுமக்கள்.

 

அவர்கள் தமிழன் என்ற ஓரே காரணத்தினால், இந்த அரசு கொன்று குவித்துள்ளதை இந்தப் புள்ளிவிபரம் எடுத்துக் காட்டுகின்றது. இதில் ஒரு சிறிய பகுதியைத்தான், புலிகள் கொன்றனர்.

 

இனப் படுகொலைகள் மூலம் ஒரு இனத்தின் அழிவும், விதைவைகள் மூலம் இனவிருதியற்ற நிலையில், இனத்தின் சிதைவுமே இன்றைய எதார்த்தமாகும். 

 

விதவையாக்கப்பட்டவர்களின்  அவலம்

 

ஆணாதிக்க சமூகத்தில், ஆண்களற்ற பெண்ணின் விதவைக் கோலம் அவளை உயிருடன் கொன்று வருகின்றது. உளவியல் சிதைவால் மனநோய்க்குள்ளாகின்றனர்.

 

ஆண்களால் மேலாதிக்கம் செய்யப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில், ஆணின் உழைப்பில் குடும்பங்கள் தங்கியிருந்தன. ஆண்களை கொன்றதன் மூலம், பெண்கள் தங்கள் அடிப்படையான வாழ்வை இழந்தனர். அத்துடன் யுத்த ப+மியில், வாழ்வின் ஆதாரங்கள் எதுவுமற்ற நிலையில், அவை அழித்ததொழிக்கப்பட்டது. இந்த நிலையில், பெண்கள் நடுத் தெருவிற்கு விரட்டப்பட்டனர். சிறு குழந்தைகளுடன், தாய்மையின் இயலாமையுடன் அவர்கள் உணர்வுகள் சிதைக்கப்பட்டன. பெண்மை நலமடிக்கப்பட்டது. 

 

வாழ்வதற்கு தேவையான பொருளை வாங்க காசில்லை. வாழ்வின் ஆதாரப் பொருட்கள் உலக சந்தை விலையில்தான் இலங்கையில் வாங்கமுடியும். இந்த நிலையில் அந்த பெண்களின் அவல வாழ்வை, இது தன் பங்குக்கு பறித்ததுடன் அவர்களை பாதளத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது.

 

பொருளாதார சுயமற்ற இவர்களின் யுத்த வடுக்களையும், உலகமயமாக்கல் மூலம் சுரண்டும் கொள்ளைகாரர்களுக்கு மலிவாக சுரண்டு கூலிகளாக மாறியுள்ளனர். விதவைகள் மறுவாழ்வு என்று வே~ம் போட்டுக்கொண்டு, அவர்கள் உழைப்பை கொள்ளையடிக்க முண்டியடித்துக் கொண்டு முதலீடுகின்றனர்.

 

அரசு சாரத தன்னார்வ நிறுவனங்கள் பெயரில், எகாதிபத்தியம் வழங்கும் நிதியில் இயக்கும் அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும், விதவைகளின் உழைப்பை சுரண்டுவதற்கு எற்ப மாமா வேலே பார்க்கின்றனர்.

 

மறுவாழ்வின் பெயரில் அந்த விதவைகளைச் சுரண்டுவது, அதற்கு உதவுவது தான் தன்னார்வ பெண்கள் அமைப்புகளின் சுறுசுறுப்பான பணியாக உள்ளது. இதை செய்வதற்காகவே,  எகாதிபத்தியம் அவாகளுக்கு பணம் கொடுக்கின்றது. ஆண்களை கொன்று விட்டு, பெண்களை விதவையாக்கி, அவர்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச சுயத்தையும் அழித்தவர்கள், இன்று அவர்கள் உழைப்பை சுரண்டுவதையே மறுவாழ்வு என்கின்றனர். அந்த விதவைகளின், உழைப்பை திருடுவதையே, அவர்களிள்  மறுவாழ்வு என்கின்றனர்.  

 

மற்றொரு தளத்தில் இந்த பெண்கள் ஆணாதிக்க அமைப்பில் விதவைகளாக்கப்பட்டனர்.  இந்த நிலையில், அந்த பெண்கள் பாலியல் உணர்வுகள் நலமடிக்கப்படுகின்றது. மறுமணத்தை மறுத்து விதவைகளாகவே வாழ்வது தான் தமிழ் கலச்சாரம் என்று ஆணாதிக்க இந்து சமூக அமைப்பில், பெண்ணின் பாலியல் உணர்வுகள் சிதைக்கப்படுகின்றது. பெண்ணின் பாலியல் உணர்வை பெண்களை விபச்சாரம் செய்து வாழ்வது அல்லது முறைகேடான பாலியல் நடத்தைகள் மூலம் இதற்கு தீர்வு காணச் சொல்லுகின்றது ஆணாதிக்க தமிழ் கலச்சாரம். இதள் ஒரு அங்கமாக ஆணாதிக்க ஆண்களின், வைபாட்டிகளாக பெண்ணை வாழக்கோருகின்றது.

 

பெண் சார்ந்த வாழ்ந்த ஆணைக் கொன்று, அவளிள் சுயத்தை அழித்தவர்கள் பெண் மீதான   ஆணாதிக்க அத்துமீறலை செய்யும் சூழலை இன்று இலகுவாக்கியுள்ளனர். அதுவும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்த சமூகத்தில், பெண்ணின் மீதான அத்துமீறல்கள், மோசடிகள் என்;பது சமூகத்தின் பொதுத் தெரிவாகிவிடுகின்றது. விதவைப் பெண்கள் இன்று எதிர்கொள்ளும் மற்றறொரு பாரிய ஆணாதிக்க வன்முறையாகும்.   

 

குழந்தைகள் வளர்ப்பு, பெண்ணாக தன் உடல் சுயத்தைப் பாதுகாத்தல், பாலியல் தேவையை பூர்த்தி செய்ய முடியாத உணர்வு சார்ந்த கலச்சார நெருகடிகள், உழைப்பை சூறையடலை எதிர் கொள்ளல், தம் குடும்ப நினைவுகள், தம் கணவனுக்கு நடந்ததுக்கு எந்த நீதியும் விசாரனையுமற்ற விரத்தி … இந்த விதவைப் பெண்களின் பின்னுள்ள பாரிய அவலமாகும்.

 

சமூகம் இதை தீர்வு காண முடியாத வண்ணம், வக்கற்றுக் கிடக்கின்றது. மாறாக மறுவாழ்வு, இணக்க அரசியல், எதிர் அரசியல், தன்னார்வ உதவி… என்ற எல்லைக்குள், சமூகத்தை நலமடிக்கின்றனர். சமூகம் இதை தீர்வு காணும் வண்ணம் சமூக விழிபுணர்வையும், சமூகத்தின் சுயமான சமூகத் திரட்சியையும் மறுத்து, இன்று அரசியல் செய்கின்றனர். இதைத்தான் பெண்ணியத்தின் பெயரில் செய்கின்றனர். இந்த வக்கிரத்துகுள் தான் விதவைகள் மற்றும் சனத்தொகையில் காணமல் போன ஆண்கள் பற்றிய புள்ளிவிபரத் தரவுகள் மிதக்கின்றது.    

 

பி.இரயாகரன்
04.05.2010
  

Last Updated on Tuesday, 04 May 2010 07:37