Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் வங்கியின் வீட்டை என் சொந்த வீடாக திரித்துக் கூறும் "அசை"யின் அவதூறு அரசியல் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 18)

வங்கியின் வீட்டை என் சொந்த வீடாக திரித்துக் கூறும் "அசை"யின் அவதூறு அரசியல் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 18)

  • PDF

 குற்றச்சாட்டு 15

"சுமார் ஏழு வருடங்களுக்கு முன் என் நண்பர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றார். உங்களுக்கு வந்ததே கோபம். ஈழப் போராட்டம் பற்றி கதைக்கும் ஒருவர் எப்படி ஏகாதிபத்திய பிரான்ஸ் நாட்டு உரிமை பெறமுடியும்? இவனெல்லாம் ஏகாதிபத்திய கைக்கூலி. இவனுக்கெல்லாம் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தைப் பற்றி பேச என்ன அருகதை உண்டு என்று நீங்கள் உங்களது வழமையான வசைமொழி வாந்தியை நண்பர் மீது எடுத்து நண்பரை நாறடித்துவிட்டீர்கள்.

நண்பர் வெலவெலத்துப்போய் கொஞ்ச நாள் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போய்விட்டார்! இது நடந்து சுமார் இரண்டு வருடங்களின் பின் நீங்கள் காதோடு காது வைத்தமாதிரி “பிரான்ஸ் ஏகாதிபத்திய” நாட்டின் சட்டதிட்டங்களை ஏற்று இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருப்பதாக சத்தியப் பிரமானத்தோடு பிரான்ஸ் நாட்டின் “குடிமகனாகிக் “கொண்டீர்கள். இதுதான் இராயாகரன்" என்கின்றார் அசோக்.

 

வேடிக்கையான பொய்யான இட்டுக்கட்டிய புரட்டு வாதம். சரி அந்த உங்கள் நண்பர் தான் யார்!? அதுவும் "ஈழப் போராட்டம் பற்றி கதைக்கும்" ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சியாளன்!? சரி அப்படி யார் தான் உங்கள் நண்பராக உள்ளார்!?

 

7 வருடத்துக்கு முன்னதாக நடந்தாக குறிப்பிட்டு, அதற்கு இரண்டு வருடத்தின் பின் "காதோடு காது வைத்தமாதிரி" நான் பிரஞ்சு பிரஜாவுரிமை பெற்றதாக அசோக் கூறும் கூற்று இங்கு பொய்யானது, புரட்டுத்தனமானது. இந்த தொடரில் நான் அம்பலப்படுத்தியது போல், இதுவும் இட்டுக்கட்டிய அடிப்படையிலான ஒரு பொய்யாகும். அசோக் குறிப்பிட்டது போல் "காதோடு காது வைத்தமாதிரி" 5 வருடத்துக்கு முன் நான் பிராஜாவுரியை பெறவில்லை. அதே நேரம் பிரஞ்சு பிரஜாவுரிமை பெறுவது தொடர்பாக அசோக் தான் கொண்டிருக்கும் கருத்தையே, நான் சொன்னதாக கூறி இந்த பொய்யான இட்டுக்கட்டிய அவதூறை கட்டமைக்கின்றார்.

 

அவர் இதை எமக்கு எதிராகச் இட்டுக்கட்டிச் சொல்ல, 7 வருடத்துக்கு முன் பிரஜாவுரிமை பெற்ற ஒரு கற்பனை நண்பரை உருவாக்கி கதை சொல்லுகின்றார். வேடிக்கை என்னவென்றால், நான் பிரஞ்சு பிரஜாவுரிமையை பெற்றதோ 12 வருடங்களுக்கு முன்னம். அப்படிப்பட்ட நான், எப்படி 7 வருடத்துக்கு முன்னம் பெற்ற ஒருவரை திட்டியிருக்கமுடியும். சொல்லுங்கள் பார்ப்போம். இங்கு அசோக், தன் அவதூறுக் கருத்தை, எனக்கு எதிராக வாரி இறைக்கின்றார். தேசம்நெற் பின்னோட்டத்திலும் கூட, புனைபெயரில் இதை வாந்தியாக கக்கியவர்கள் இவர்கள். படுகேவலமான அரசியல் மூடிச்சுமாறிகள் என்பது, இங்கு மிகத்தெளிவாக அம்பலமாகின்றது.   

 

குற்றச்சாட்டு 16

 

"புலிகளிடமிருந்து நீங்கள் தப்பித்த வேளையில் நீங்கள் தனிப்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக சமரிலிருந்து வெளியேற்றிய தோழர் நாவலன் வெகுஜன வேலை செய்த கிராமம் ஒன்றில் தான் தஞ்சமடைந்து அவரின் பாதுகாப்பிலேயே ஒரு மாதங்கள் தலைமறைவாக இருந்ததெல்லாம் நீங்கள் சொல்ல விரும்பாத உண்மைகள்." என்கின்றார் அசோக்.  மிகப்பெரிய கண்டுபிடிப்பு.

 

"குடும்பப் பிரச்சனை காரணமாக சமரிலிருந்து வெளியேற்றிய" நாவலன், என்பது அப்பட்டமான பொய். நாம் அவரை வெளியேற்றினோம்.

 

"தோழர் நாவலன் வெகுஜன வேலை செய்த கிராமம் ஒன்றில் தான் தஞ்சமடைந்து அவரின் பாதுகாப்பிலேயே ஒரு மாதங்கள் தலைமறைவாக இருந்ததெல்லாம் நீங்கள் சொல்ல விரும்பாத உண்மைகள்" என்பது, இங்கு நான் இதை மறுக்காத நிலையில், இது இட்டுக்கட்டும் பொய்யாகும். இது பற்றி எதையும் நான் மறுத்து என்றும் எழுதவில்லையே. இந்த விடையம் பற்றி கூட எழுதியிருக்கவில்லை. அப்படியிருக்க, எப்படி "சொல்ல விரும்பாத உண்மைகள்" என்று, கற்பனை பண்ணி அதையே அவதூறாக குற்றம்சாட்டி அசோக்கால் எழுத முடிகின்றது. அதை நாம் எற்கனவே சொல்லியுள்ளது போல், நாங்கள் என்றும் இதை மறுத்தது கிடையாது. எதிர்புரட்சிக்கு எதிரான கடந்தகால போராட்டத்தில் தனிமனிதர்களின் பங்குகள், நிகழ்காலத்தைய அவர்களின் புரட்சிகரமற்ற போக்குகளினால் மறுப்புக்கு உள்ளாவதில்லை. அதை நாங்கள் என்றும் செய்வதில்லை. நாலலன் அன்றைய புரட்சிகர பாத்திரம் பற்றி நான் எழுதியது, இங்கு இதற்கு நல்ல உதாரணம்.

 

1..பி.டி.பிக்கு மனித முகம் உண்டா?!

 

2.அவதூறை லாடமாக்கி ஒட்டும் தேசம்


இப்படி வேறு குறிப்புகளும் உண்டு. நிகழ்காலத்தின் அவர்களின் அரசியலை வைத்துக்கொண்டு, கடந்த காலத்தை மறுப்பவர்கள் அல்ல நாங்கள். இந்த வகையில் நாவலனுக்கு கடந்தகாலத்தின் செயல்பாடுகள் மீது இருக்க கூடிய அங்கீகாரம் எதுவும், உங்கள் கடந்த காலத்தில் இருந்ததில்லை. நாவலனின் கடந்தகால அரசியலுக்கு எதிராகத்தான், உங்கள் அரசியல் அன்றும் இன்றும் பயணிக்கின்றது.    

 

குற்றச்சாட்டு 17

 

"..சிவராம் இந்த வருகையின்போது உமாகாந்தனின் இல்லத்தில் தங்கினார்….இதன் பின் 2005ம் ஆண்டு கொழும்பில் வைத்து சிவராம் படுகொலை செய்யப்படுவதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன் பரீசில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு சிவராம் வந்திருந்தார். … இவ் வருகையின் போது சிவராம் மாகாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொட்டலில் அவர் தங்கியிருந்தார். ….….சிவராம் என் வீட்டில் தங்குவதற்கு நான் என்ன இராயாகரன் போல் சொந்த வீடு வாங்கி “பிரான்ஸ் குடிமகனாகி” அரசின் அனைத்து சலுகைகளையும் உதவிகளையும் பெற்று புரட்சிபேசிக்கொண்டு சொகுசாகவா வாழ்கிறேன். இன்னும் இலங்கை “அரசியல் அகதியாக” வாடகை வீட்டில் சின்ன றூமில் பலநெருக்கடியில் மத்தியில் வாழ்கிறோம்." என்கின்றார்.

 

முதலில் சிவராம் இருமுறையல்ல, பலமுறை பிரான்ஸ் வந்தவர். நான் அவரை அசோக்குடன் தான் ஒவ்வொருமுறையும் சந்தித்தேன். அதுவும் நான் வேலை செய்யும் பகுதியில் வைத்து தான். அபோது அவர், அசோக்கிடம் நிற்பதாக அசோக் முன்னிலையில் சொன்னது தான். இது பற்றியல்ல எமது விவாதத்தின் கருப்பொருள். இங்கு எமது விவாதம் எப்படி அசோக்குடன் சிவராம் கூடிக்குலாவ முடிந்தது என்பதுதான். அசோக்குடன் அப்படி எல்லா எதிர்புரட்சியாளர்களும், அரசுடன் சேர்ந்து இயங்கியவர்களும்; கூட, கூடிக்குலாவுவது வெளிப்படையானது. டக்கிளஸ் முதல் அனைவரும், அசோக்கின் சந்தர்ப்பவாத அரசியலுடன் கூடி கும்மியடித்தவர்கள்தான்.

 

அசோக் சிவராம் உட்பட எவரையும் இன்று வரை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தது கிடையாது. இது தான் அசோக். "வாடகை வீட்டில் சின்ன றூமில் பலநெருக்கடியில் மத்தியில் வாழ்கிறோம்." என்ற கூறும் அசோக் வீட்டில் தான்,  சிவராம் போன்றவர்கள் அரசியல் சதிகளும் அரங்கேறின. உதராணமாக கலையரசன் அங்கு தான் யாரைச் சந்தித்தார் என்பதை தன் கட்டுரை ஒன்றில் "ஐ.என்.எஸ்.டி. என்ற புலம்பெயர்ந்த (சிங்கள-தமிழ்) இலங்கையரின் அமைப்பு இயங்கி வருவதை, முதன் முதலாக அசோக் வீட்டில் தான் தெரிந்து கொண்டேன். ஆமாம், "ஐ.என்.எஸ்.டி. பற்றியும், அதிலே கலந்து கொள்பவர்களையும் நார் நாராக கிழித்து தொங்கப் போட்ட" அதே அசோக் மூலமாக தான் ஐ.என்.எஸ்.டி. பற்றி தெரிந்து கொண்டேன். 2006 ம் ஆண்டு, அன்று பாரிசில் உள்ள அசோக் வீட்டிற்கு ஐ.என்.எஸ்.டி. உறுப்பினரான அவரது நண்பர் வந்திருந்தார். அவர் கொண்டுவந்த, ஐ.என்.எஸ்.டி. ஒன்றுகூடல் புகைப்படங்களில் இருந்த, நபர்களில் பாதிப் பேராவது அசோக்கிற்கு தெரிந்தவர்களாக இருந்தனர். (அசோக் முன்னிலையில்) அவரது நண்பர், அடுத்த ஐ.என்.எஸ்.டி. கருத்தரங்கிற்கு எனக்கு அழைப்பு விடுவதாக அறிவித்தார்." இதை விரிவாக தெரிந்து கொள்ள இங்கு பார்க்கவும். 

 

 இனியொரு சதி செய்வோம்

 

இப்படி அந்த "வாடகை வீட்டில் சின்ன றூமில்" நடந்தவைகள் தான் இவை. இப்படித்தான் சிவராமும் அசோக்குடன் அங்கு வந்து போனவன். சிவராம் தொடர்புடைய அகிலன் செல்வன் கொலை தொடங்கி தீப்பொறியின் வெளியேற்றதின் பின் புளாட்டின் அரசியல் பொறுப்பாளாராக மாறிய காலவரையும், ஏன் அதன் பின்பும் எந்தனையோ விடையங்கள் அசோக் மூடிமறைத்து செய்த அரசியல்தான், அசோக் - சிவராம் அரசியல் உறவாக நீடித்து இருந்தது, இருக்கின்றது.

 

இங்கு “பிரான்ஸ் குடிமகனாகி” என்று கூறும் அசோக் தான், பிராஜாவுரிமை பற்றிய தன் முரண்பாடான குருட்டு கருத்தை இங்கு முன்வைத்து, அதையும் என் பெயரால் அவதூறு பொழிந்தது இங்கு இதன் மூலமும் மீள அம்பலமாகின்றது.    

 

"வாடகை வீட்டில் சின்ன றூமில் பலநெருக்கடியில் மத்தியில் வாழ்கிறோம்." என்கின்றார். நாங்களும் அப்படித்தான். நாங்கள் 5 உறுப்பினர்கள் கொண்ட குடும்பம்;. பிரான்சில் உழைக்கும் வர்க்கம் அப்படித்தான் வாழ்கின்றது. அடிப்படையான வாழ்க்கைத் தேவையை பூர்த்திசெய்ய, குறைந்;தது 8 மணி நேரம் உழைக்காமல் இங்கு யாரும் வாழ முடியாது. இந்த வகையில் நீங்கள் உழைப்பில் ஈடுபட்டதில்லை. ஆனால் அது உங்கடை தனிப்பட்ட பிரச்சனை. இதைச் சொல்லி புலம்பக் கூடாது. இங்கு வாழ்கின்றவர்கள், 8 மணி நேர உழைப்பில் ஈடுபடுகின்றனர். ஏன், ஆண்-பெண் இருவரும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். இதற்கு விதிவிலக்காக வாழ்வது உங்கள் தனிப்பட்ட விடையம். மறுதளத்தில் அடிப்படை தேவைகளுக்காக உழைத்து வாழ்பவனை, ஆடம்பரமாக வாழ்வதாக கூறுவது மிகக் கேவலமானது, கொச்சைத்தனமானது. "அனைத்து சலுகைகளையும் உதவிகளையும் பெற்று புரட்சி பேசிக்கொண்டு சொகுசாகவா வாழ்கிறேன்" நான் என்பது, கற்பனையான இட்டுக்கட்டிய அவதூறு.

 

நானும் மனைவியும் 8 மணி நேரம் உழைத்து வாழ்கின்றோம். அதுவும் மிகக் குறைந்த அடிப்படைச் சம்பளத்தில்தான். உங்கள் இருவரைப் போல், நாங்களும் இருவர்தான். நாங்கள் இருவரும் உழைத்து வாழுகின்றோம். எமக்கு முன்று குழந்தைகள் வேறு உள்ளனர். அவர்களுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும். உங்களுக்கு அதற்காக உழைக்கும் தேவை கூட இல்லை.

 

அரசால் அறிவிக்கப்பட்ட மிக குறைந்த சம்பளத்தை பெற்று, ஆடம்பரமாக வாழ்வது எப்படி? சரி எதை தான், எப்படி நாம் ஆடம்பரமாக சொகுசாக வாழ்கின்றோம். சுட்டிக்காட்ட  முடியுமா? சவால் விடுகின்றேன். அடிப்படையான தேவையாக இன்று மாறியுள்ள ஒரு கைத்தொலைபேசி கூட என் குடும்பத்தில் வாங்கியது கிடையாது. கார் வாங்கியது கிடையாது. என் வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி 19 வருடங்களுக்கு முன், அதுவும் மலிவான விலையில் 150 ஈரோக்களுக்கு வங்கியது. அதை இன்று இறுக்கி தட்டினால்தான், சத்தமே வரும். இன்று குழந்தைகள் வளர்ந்து, சில தேவைகளையும் மாற்றத்தையும் கோருகின்றனர். எமக்குத் தேவையில்லாதது அவர்களுக்கு தேவைப்படுகின்றது. வீட்டில் வளர்ந்த மூன்று பெண்கள் இருந்தும், 15 பவுன் நகைகூட கிடையாது. இப்படியிருக்க, ஆடம்பரமாக, சொகுசாக எங்கே, எப்படி வாழ்கின்றோம்!? ஒரு விடையத்தைத் தன்னும் உங்களால் காட்ட முடியுமா? என் அரசியலை எதிர்கொள்ள வக்கில்லை என்றால், இப்படி புலம்பியா அவதூறு பொழிவது. எல்லாம் என் அரசியலை எதிர்கொள்ள முடியாத வங்குரோத்தில், என்னை சுற்றி அவதூறுகளை கட்டமைக்கின்றீர்கள். இதுவே உங்கள் அரசியல் பிழைப்பாகிப்போய்விட்டது.  என் அரசியலை பற்றி முடிந்தால் முதலில் பேசுங்களேன்.  

 

சரி "சலுகைகளையும் உதவிகளையும்" என்று எதை தான் சொல்லுகின்றீர்கள்? அப்படி எதையும் யாரும் இந்த நாட்டில் தருவதில்லை. மருத்துவம் உட்பட வேலையற்றவர்கள் பெறும் சமூக நிதியம் சரி, ஒய்வூதியம் போன்றவை அனைத்தும் எமது சம்பளத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தைத்தான், சமூக நிதியமாக்கி மக்களுக்கு மீள தருகின்றனர். உங்களுக்கும் இது கிடைக்கின்றது. பிரான்சில் வாழும் உரிமை பெற்ற அனைவருக்கும் அது கிடைக்கின்றது. இதுவொரு குற்றச்சாட்டா? நாங்கள் அப்படி "சலுகைகளையும் உதவிகளையும்" என்று எதைத்தான் பெற்றோம்? கூறுங்களேன் உங்கள் பொன்னான அவதூறு வாயால். 

 

சரி இதை பெற்ற நாம் "புரட்சிபேசிக்கொண்டு" இருக்கின்றோம் என்கின்றீர்கள்.

நீங்கள் அப்படியா!? எமக்கு தெரியாது. 

 

அடுத்து கூறுகின்றீர்கள் "நான் என்ன இராயாகரன்போல் சொந்த வீடு வாங்கியா" வைத்திருக்கின்றேன் என்கின்றீர்கள். இதுவும் பொய். சொந்த வீடு என்கின்றார். இவர் இந்த அவதூறை எழுதிய அதே மாதத்தில்தான், 20 வருட வங்கி கடனில் ஒரு வீட்டை பெற்றுக்கொண்டேன். இவர் எழுதிய அதே மாதம், முதலாவது தவணைப் பணத்ததைக் கூட கட்டியிருக்கவில்லை. ஆனால் அவதூறாக இது வைக்கப்படுகின்றது. அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத நிலையில், இதையும் கூட ஒரு அவதூறாக முன்வைக்கப்படுகின்றது.

 

சரி சொந்த வீடு என்கின்றார். இது எவ்வளவு பெரிய ஒரு பொய். அந்த வீடு வங்கியின் உடையது. என் ஆயுளுக்குள் அது என் சொந்த வீடாக வரும்வரை, நான் உயிருடன் வாழ்வது என்பது கேள்விக்குரியதுதான். அதுவரை அது வங்கியின் வீடுதான். அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, வங்கி வீடுகளை வங்கி மீள எடுத்து கொண்டது அனைவரும் அறிந்ததே. இப்படியிருக்க "அசை" மாக்சியம் பேசும் இனியொருவுக்கு இது மட்டும் தெரிவதில்லை. வங்கியின் வீட்டை சொந்த வீடாக சொல்லுகின்ற "அசை" அரசியல், அவதூறைத் தாண்டி இதில் எதுவுமில்லை.

 

எம்மைப் போன்ற வருமானவரி கட்டமுடியாத ஏழைகள், பிரான்சில் வாடகைக்கு வீடு எடுப்பதை விட வாங்குவது சுகம். அதுவும் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து, அரசு முதலாளிகள் கொள்ளையடிக்க வழங்கிய சலுகையை மூடி மறைக்க, பிரான்சில் வருமானவரி கட்ட முடியாதவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் ஒருதொகை பணத்தை வட்டியில்லாத வீட்டுக் கடனாக கொடுக்கின்றது. அப்படி எமக்கு முழுத்தொகையில் அண்ணளவாக 43 சதவீத பணத்துக்கு வட்டி கட்டத் தேவையில்லாத கடனாகத் தந்தது. இதை பயன்படுத்தி ஒரு சிறிய வீட்டை கடனுக்கு பெற்றதால், வாடகைக்கு பெறுவதை விட குறைவான கட்டுப்பணத்தில் வீட்டை நாம் பெறமுடிந்தது. நாம் வாழ்ந்த வாடகை வீட்டில் தொடர்ந்து வாழமுடியாத நிலையில், வீட்டை விட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கடனுக்கு வீட்டை பெறுவது மலிவானதும் இலகுவானதுமாக இருந்தது. இது குற்றமா!? புரட்சிகாரன் நடுரோட்டில் படுத்தா எழும்ப வேண்டும்.      

 

சரி அசோக்கின் அரசியல் கூட்டாளிகள் எவரும் இப்படி கடன் வீட்டை வைத்திருக்கவில்லையா!? சொந்த வீட்டை வைத்திருக்கவில்லையா!? அவர்கள் சொந்த வீட்டில் "புரட்சிபேசிக்கொண்டு சொகுசாகவா" வாழ்கின்றனர். இப்படி மட்டமான அசோக்கின் கீழ்நிலை அரசியல் தான், இப்படி என்மீது காறி உமிழ்கின்றது. இதைத்தான் புளாட் கடந்தகாலத்தில் செய்தது. சகல உட்படுகொலைகளும், எதிர்புரட்சிய அரசியலும் இப்படித்தான் அன்று அரங்கேறியது. அதை அரசியல் ரீதியாக நியாயப்படுத்தி பாதுகாத்த சூத்திரதாரிகளில், அசோக் முதன்மையானவர்தான். இன்றுவரை அதை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாது உள்ளவர், அதே அரசியலுடன் அதே வழிகளில் எம்மையும் இன்று இட்டுக்கட்டி தூற்றுகின்றார்.  

 

சரி சொந்தமாக வீடு வைத்திருந்தால் அது குற்றமா? அது புரட்சிக்கு எதிரானதா? இப்படி கூறுபவர்கள், இதை வைத்து அவதூறு பொழிபவர்கள், எவ்வளவு மோசமான அவதூறு பேர்வழிகள் என்பதை இங்கு நாம் தெளிவாக புரிந்து கொள்ளமுடியும்.

 

தொடரும்

பி.இரயாகரன்
08.04.2010

 

17.எனது வீடு எரிக்கப்பட்டதையே திரித்து, அதைக்கொண்டு அவதூறு செய்த இனியொரு அசோக் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 17)

 

16.நாங்கள் அவதூறு செய்தோம் என்கின்றார் அசோக், சரி எந்த அரசியலை - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 16)

 

15. அசோக் இனியொருவில் புனைந்த அவதூறுகள்; - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 15

 

14.பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக அசோக், நாவலன் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் - (எதிர்புரட்சி

 

13.இனியொரு என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் - (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 13)

  

12.புனிதத்தை கட்டமைக்க, இனியொரு தன்னை மூடிமறைக்கின்றது. (எதிர்புரட்சி அரசியல் பாகம் 12)


11.றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)


10.நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)


9.சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)


8.கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

  

7.சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


6.பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


5.நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)


4.வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)


3தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் "நேர்மை" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)

  

2.அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)


1.எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)

Last Updated on Friday, 09 April 2010 10:51