Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

எனது வீடு எரிக்கப்பட்டதையே திரித்து, அதைக்கொண்டு அவதூறு செய்த இனியொரு அசோக் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 17)

  • PDF

குற்றச்சாட்டு 12

"இராயாகரன் அவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள் அவர் முதலில் மக்ச்சியத்தின் அடிப்படையை கற்கவேண்டும். அதன் பின் ஈழப்போராட்டதின் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும்."

நல்லது மார்க்சியம் எமக்கு தெரியாது என்கின்றார். அதை தாழ்மையுடன் எற்றுக் கொள்கின்றோம். தொடர்நது படிக்கின்றோம். சரி உங்களிடம் இருந்து நாம் கற்றுக்கௌ;ள, நீங்கள் மார்க்சியமாக முன் வைத்தவைகள் எவை? இதை எமக்கு எடுத்துக் காட்டுங்கள். அப்படி வைத்த எவைகளையும், நீங்கள் கூறியது போல் படிக்க நாம் காணமுடியவில்லை.

 

நீங்கள் கூறுகின்றீர்கள் மார்க்சியத்தைக் கற்ற பின் "அதன் பின் ஈழப்போராட்டதின் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும்." என்கின்றீர்கள். சரி கற்ற நீங்கள் கூறும், அந்த வரலாறு தான் என்ன? நாம் கற்றுக் கொள்ள, நீங்களே சொல்லுங்களேன். புளாட்டின் உட்படுகொலைக்கு தளத்தில் தலைமை தங்கியது எப்படி என்பதையும், முழுத் தலைமையின் அனைத்த மக்கள் விரோத செயலுக்கும் எப்படி வக்காளத்து வாங்கி நியாயப்படுத்தி தலைமை தாங்கினீர்கள் என்பதையும் சொல்லுங்கள். நாங்கள் இதைக் கேட்க சித்தமாக உள்ளோம். இவ்வளவு காலமும் அந்த கொலைகாரக் கும்பலுடன் பம்மி நக்கியது எப்படி என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள். இல்லை உங்கள் கொலைகார புளாட் வரலாறும், பின் றோவின் ஈ.என்.டி.எல்.எவ் இன் உங்கள் அரசியல் பாத்திரமும், அதைத் தொடர்ந்து இன்று வரை அதை மூடிமறைத்த உங்கள் நடத்தைகள் தான், ஈழப்போராட்டத்தின் மார்க்சிய வரலாறோ! சரி எதுவென்று சொல்லுங்கள்.

 

குற்றச்சாட்டு 13
 
"வடக்கில் எத்தனையோ இடதுசாரி உணர்வு பெற்ற தோழர்களையும் சாதிய எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட தோழர்களையும் நாம் சந்தித்தோம். அவர்களோடு உறவுகளை வளர்த்தோம்.இன்றும் புலம்பெயர்ந்த சூழலில் அவ் அரசியல் இயக்க உறவுகளை தொடர்கின்றோம். இந்த தோழர்கள் ஒருவரையாவது உங்களது யாழ்ப்பாண வாழ்க்கையில் சந்தித்ததுண்டா?. அப்போதெல்லாம் உங்களின் வர்க்க குணாம்சம் என்னவாக இருந்தது.? எண்ணிப்பாருங்கள். அன்றைய உங்களுடைய அரசியல் உறவுகள்தான் என்ன?. அவ்வுறவுகளின் இன்றைய அரசியல் தொடர்ச்சி எங்கே? இராயாகரன் பகீரங்கமாக சவால் விடுகின்றேன் அக்காலங்களில் எத்தனையோ விடுதலை அமைப்புக்களும் தோழர்களும் யாழ்குடாநாடடில் இருந்தார்கள். அக் காலங்களில் உங்களைத் தெரிந்த ஒரு தோழரின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம். அந்தளவுக்கு போராட்டத்தோடு அந்நியப்பட்டு போயிருந்தீர்கள்."

 

இப்படி குற்றம்சாட்டி சவால்விடுகின்றார். வேடிக்கையாக இல்லை! போராடுவதற்கு பலரைத் தெரிந்திருக்க வேண்டும் என்கின்றார்! ஒரு அமைப்பின் உறுப்பினருக்கு பலரை தெரிந்து இருக்க வேண்டும் என்று, ஒரு அரசியல் அளவுகோல்லைக் கொண்டு போராட்டத்தின் உறுதியை, பங்களிப்பை  அளக்கின்ற இனியொருவின் "அசைவு" அரசியலின் வங்குரோத்து இதன் மூலம் அம்பலமாகின்றது.

 

"அப்போதெல்லாம் உங்களின் வர்க்க குணாம்சம் என்னவாக இருந்தது.? எண்ணிப்பாருங்கள்." என்று கேள்வி எழுப்புகின்றார் அசோக். இதனுடாக என்.எல்.எவ்.ரியின் வர்க்க அரசியலை, அதே  கொலைகார புளாட் அரசியல் மூலம் மறுக்கின்றார். நான் அந்த அமைப்பின் மத்திய குழு உறுப்பினர். இந்த அம்மைப்பினுள் இருந்த கம்யூனிஸ்கட்சி உறுப்பினர். இப்படி இருக்க புளாட் அசோக், அனைத்ததையும் புளாட் அரசியல் நின்று இன்றும் அதை மறுக்க முனைகின்றார். வேடிக்கைதான்.

 

சரி அக்காலத்தில் புளாட் உட்பட்ட இயக்கங்கள் உட்படுகொலையை செய்தும் மக்களை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்த போது, யார் போராடினார்கள்;. நீங்களா! நிச்சயமாக  இல்லை. நாங்கள் தான். புளாட்டினுள் நடந்த போராட்டத்தில் நீங்கள் எதிர்புரட்சி அரசியலை முன்னிறுத்தி கொலைகாரக் கும்பலுக்கு தலைமை தாங்கினீர்கள். இது உலகம் தழுவிய உண்மை. இதன் போது, உங்களுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஆதாரவாக, அனுசாரனையாக, உதவி செய்பவராக, தோழராக இருந்தவர்கள் நாங்கள். நாங்கள இதை எந்த வர்க்க குணம்சத்துடன் செய்தோம், என்பவதை வரலாற்றில் இருந்து யாராலும் அழிக்க முடியாது.    

 

"அக் காலங்களில் உங்களைத் தெரிந்த ஒரு தோழரின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்." யாரைச் சொல்ல வேண்டும் என் கருதுகின்றீர்கள். உங்கள் "தோழரின்" அரசியல் அளவுகோள் எமக்குத் தெரியாது. தோழர்களைக் கொன்ற கொலைகாரர்களையும் தோழரென்று தான்  அழைக்பின்றீர்கள். சரி, எதிரியை சொல்ல வேண்டும், தோழர்களைச் சொல்ல வேண்டமா? இன்றைய உங்கள் கூட்டாளி நாவலனை நன்கு தெரியும். அவரின் பாசறையைச் சேர்ந்த  முன்னணித் தோழர்களை தெரியும். தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவை நெப்போலியன் உட்பட பல முன்னணி தோழர்களைத் தெரியும். சந்திததியர் உட்பட சிவகுமார் … மே 18 ஜீவன் (நந்தன்) வரை என்குத் தெரியும்;. நாபா (குறைந்தது 10 தரமாவது சாப்பாடு வங்கித் தந்துள்ளார்) டக்களிஸ் வரை தெரியும். தீலீபன், தீபன், கிட்டு …மத்தையா, சிவரஞ்சித், சர்வே… என்று பலரைத் தெரியும். இப்படி பல தளத்தில் பலரைத் தெரியும். ஆனால் இதுவா அரசியல் அளவுகோள்? இல்லை. அமைப்பின் கடமை மற்றும் போராட்டத்தில் இவர்களை நாம் சந்திக்கின்றோம். தோழனாக, நண்பனாக, எதரியாக என்ற, பல தளத்;தில் சந்திக்கின்றோம். எங்கள் அரசியல் பத்திரம் தான், இதை உருவாக்கியது. இந்த சந்தர்ப்பம் இல்லாத நிலையில் போராடியவர்கள், வரலாற்றில் தகுதியற்றவர்களா? இப்படியான அரசியல் அளவீடுகளும், குற்றச்சாட்டுகளும் உள்ளடங்கிய அசோக்கின் "அசை"வாகின்றது. பிரமுகர்களை சார்ந்து நின்று "மார்க்சிய"த்தை கொசிப்பதாகும். 

           

குற்றச்சாட்டு 14

 

"சில காலங்களுக்முன் பிரான்சில் கறுப்பின இளைஞர்கள் மீது பொலீஸார் மேற்கொண்ட தாக்குதலினால் பெரும்போராட்டமே நடைபெற்றது. பல இடங்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டன நீங்கள் வசிக்கும் வீட்டருகில் இருந்த வாகனங்களும் எரியூட்டப்பட்டன. இதனால் ஏற்பட்ட நெருப்பு நீங்கள் குடியிருக்கும் கட்டிடத்தின் கீழ்பகுதி ஐன்னல்களை சேதப்படுத்திவிட்டது. உடனே நீங்கள் உங்கள் இணையத்தளத்தில் பிரான்சில் உங்களை புலிகள் வீடடை எரித்து கொலை செய்த முயற்ச்சித்ததாக ஒரு “பரபரப்பு” அறிக்கை ஒன்றை வெளியிடடு எம்மையெல்லாம் அதிர்ச்சி அடைய வைத்தீர்கள். இதுதான் இரயாகரன் உங்களின் பாசையில் “பம்மாத்து விபச்சார அரசியல்” என்பது." இது பொய்யானது, இரயாகரனின் இட்டுக்கட்டிய புனைவு என்கின்றார்.

 

சரி எது “பம்மாத்து விபச்சார அரசியல்" என்பதை அவரில் கூறற்றில் இருந்து பார்ப்போம். 

 

அசோக் தரித்துக் கூறியது போல், கறுப்பு மற்றும் அரபின இளைஞர்களின் நடத்திய வன்முறையின் போது, என் வீடு எரிக்கப்படவில்லை. அது நடந்தது அக்டோபர் 2005 27ம் திகதி. அது சில நாட்கள்  நீடித்தது. இது தொடர்பாக நான் எழுதிய கட்டுரையையும், எனது இந்த கட்டுரையின் முனையுடன் புதியஜனநாயகம் வெளியிட்ட கட்டுரையும் நீங்கள் பார்க்க முடியும்.

 

1.பாரிஸ் தொடரும் இன வன்முறைகளை, நிறவெறி ஆட்சியாளர்களே ஊக்குவிக்கின்றனர்.

 

2.பற்றியெரியும் பாரீஸ் நகரம்: நிறவெறி பாசிச அரசியலும் கருப்பின இளைஞர்களின் கலகமும்

 

இப்படி 2005 ம் ஆண்டு நடந்த அந்த சம்பவத்தையும், 2007ம் ஆண்டு என் வீடு எரிக்கப்பட்டதை மூடிச்சு போட்டு எழுதும் அசோகிசத்தின் அசைவுதான், அவர் எடுத்துக் கூறியது போல் “பம்மாத்து விபச்சார அரசியல்" லாகும்.  இதில் உந்த சந்தேகமே கிடையாது. அன்று நான் இது பற்றி எழுதிய கட்டுரை (எனது முழுக் குடும்பமும் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளது..)  இது. பொலிசில் எனது சந்தேகத்தை அடிப்;படையாக கொண்டு முறையிட்ட, இரண்டு முறையிட்டு ஆவணங்களையும் தரமுடியும். எனது வீடு 7.05.2007 எரிக்கப்பட, அதை 27.10.2005 ஆண்டு சம்பவத்தில் பொருத்தி அவதூறு பொலிபவர்கள் தான் உண்மை பேசுகின்றனர்? இந்தத் தொடரில் எத்தனையோ அவதூறுகளைப் பார்த்தோம். இன்னும் பார்க்கப்போகின்றோம். நாங்கள் இடையில் இந்த தொடரை எழுதாமல் விட, இந்த அவதூறுகள் உண்மை அதனால் அதைப்பற்றி பதிலளிக்கவில்லை என்று கதை பரப்பி திரிந்தனர். அதுதான் விலாவாரியாக, இவை எப்படிப்பட்ட அவதூறுகள் என்பதை எடுத்துக் காட்டுகின்றோம்.

 

உண்மையில்  07.05.2007 நடச்ததை 27.10.2005 அன்று நடந்தாக புனைகின்ற (இப்படிப் பல) அந்த அரசியல் தான், புளாட் கொலைகார அரசியல். இன்பம் செல்வன் கொலை முதல் தீப்பொறி வெளியேற்றம் பற்றி எல்லாம், எதையெல்லாம் சொல்லி புளாட் தலைமையில் அசோக் இருக்க முடிந்ததோ, தன் அரசியல் இருப்புக்காக அதை உத்தியையே இங்கு கையாளுகின்றார். சுழிபுரம் 6 புலிகளின்  ஆண் உறுப்பையே அறுத்துக் கொன்ற படுகொலையாகட்டும், இந்தியா கூலிக் குழுவான ஈ.என்.டி.எல்.எவ். இல் சேர்ந்து உமாமகேஸ்வனை கொல்லச் சென்று சுடுவாங்கிய அசோக், இவை அனைத்தையும் நியாயப்படுத்தியவர் அல்லது அதை திரித்து மறுத்து அதற்கெல்லாம் அரசியல் தலைவரானவர் தான் இந்த அசோக். இந்த வகையில் தான், எனக்கு எதிரான அவாறுகளை திரித்துப் புரட்டி பரப்புவதுடன், அதையே எழுதுகின்றார்.

 

எனது இந்த சம்பவத்தில் இரண்டு வகையில் புலிக்கு உதவுகின்றார்.

 

1.புலிகள் இது போன்ற சம்பவங்களை தமக்கு சார்பாக பயன்படுத்தமாட்டார்கள் என்ற கருதுகோள்ளை முன்வைத்து, புலியை பாதுகாக்கின்றார். 

 

2.நடத்த ஒன்றை திரித்துப் புரட்டி, அது நடக்கவில்லை அது வேறு ஒரு சம்பவம் என்று கூறி புலிக்கு உதவுகின்றார்.

 

இதன் பின் இருப்பது காழ்பும், அவதூறும், நேர்மையற்ற அரசியல் பிழைப்புத்தனமும்தான். இன்னும் அவர் எனக்கு எதிரான எழுதிய குற்றச்சாட்டுகளில் காணமுடியும்.

 

தொடரும்


பி.இரயாகனை;
30.03.2010

 

 16.நாங்கள் அவதூறு செய்தோம் என்கின்றார் அசோக், சரி எந்த அரசியலை - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 16)

15.அசோக் இனியொருவில் புனைந்த அவதூறுகள்; - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 15)

 

14.பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக அசோக், நாவலன் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் - (எதிர்புரட்சி

 

 

13.இனியொரு என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் - (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 13)

  

12.புனிதத்தை கட்டமைக்க, இனியொரு தன்னை மூடிமறைக்கின்றது. (எதிர்புரட்சி அரசியல் பாகம் 12)


11.றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)


10.நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)


9.சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)


8.கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

  

7.சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


6.பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


5.நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)


4.வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)


3தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் "நேர்மை" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)

  

2.அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)


1.எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)

Last Updated on Wednesday, 31 March 2010 07:43