Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் நாங்கள் அவதூறு செய்தோம் என்கின்றார் அசோக், சரி எந்த அரசியலை - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 16)

நாங்கள் அவதூறு செய்தோம் என்கின்றார் அசோக், சரி எந்த அரசியலை - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 16)

  • PDF

குற்றச்சாட்டு 9

 

"இராயாகரனைப் பொறுத்தவரை பிரான்சில் எவர் நடத்தும் எச் சந்திப்புக்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் கூட்டங்களுக்கும் இராயாகரனை யாரும் அழைப்பதில்லை. இராயாகரனின் மொட்டைத்தனமான வதந்தி பரப்பும் சேறடிக்கும் தனிநபர் தாக்குதல்களே இதற்குக் காரணம்." என்கின்றார் அசோக்.

சரி, வெற்றிலை பாக்கு வைத்தா கூட்டத்துக்கு அழைக்கின்றீர்கள்! நாங்கள் தான், உங்களுடன் வம்பளக்க வருவதில்லை. மக்கள் அரசியலை முன்வைக்காத, மக்களை நலனை முதன்மைப்படுத்தாத எந்தக் கூட்டதுக்கும் நாம் செல்வதில்லை. இதுபற்றி நாம் எழுதிள்ளோம். இந்த வகையில் கடந்தகாலத்தில் நாங்கள் முன்வைத்த கருத்துகள், உங்களின் அரசியல் நிலைப்பாட்டடில் இருந்து முற்றிலும் வேறானது. "இராயாகரனின் மொட்டைத்தனமான வதந்தி பரப்பும் சேறடிக்கும் தனிநபர் தாக்குதல்களே இதற்குக் காரணம்." என்ற கூறும் உங்கள் வாதத்ததுக்கு, எனது ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் இருந்து, ஆதாரத்தை திரட்டி முன்வையுங்களேன் பார்ப்போம். அது எப்படிப்பட்ட அவதூறு, மொட்டைத்தனமாக வதந்தி, சேறடிப்பு, தனிநபர் தாக்குதல்கள் என்று நாமும் தான் பார்ப்போம். மொட்டையாக ஏன் குற்றம் சாட்டுகின்றீர்கள். இதன் மூலம் ஏன் வதந்தியையும், சேறப்பையும் செய்கின்றிர்கள்.

  

எந்த அவதூறு எம் கட்டுரையில் இல்லாமையால் தான், இனியொருவும் தேசம்நெற்றும் என்பெயரில் ஒரு அவதூறு ஈமெயிலைத் தயாரித்து வெளியிட்டனர். பார்க்க  தேசம்நெற் மூலம் கிடைத்த அதிர்ச்சி! ஆச்சரியம்!! - அவதூறுக்கு மறுப்பு  பின் இதை வைத்து, பார் இரயாகரனின் அவதூறை என்று காட்டமுனைந்தனர். இப்படித்தான் இருக்கின்றது, இவர்களின் அரசியல் பிழைப்பு. இது என் பெயரில் தயாரிக்கப்பட்ட அவதூறு என்பது அம்பலமானதுடன், இரண்டு கோஸ்டியும் அதற்கான பொறுப்பைக் கூட எற்கவில்லை. இப்படித்தான் இருக்கிறது, அவர்களின் சுயவிமர்சன அரசியலும், ஊடாகவியல் தர்மமும் கூட. 

 

நாம் அவதூறு செய்வதாக சும்மா உளறுவது, வாயில் வந்ததை எழுதுவதைத் தாண்டி இதில் எதுவுமில்லை. இவர்கள் பின்னோட்ட அரசியலில் அவதூறு எழுதி பிழைக்க வெளிக்கிட்டு, அதையே இன்று கட்டுரையாக வரைகின்ற அளவுக்கு இனியொருவின் "அசை"வியக்கம் உள்ளது. அவ்வளவு தான்.      

 

குற்றச்சாட்டு 10

 

"பிரான்சில் உங்களுடைய நண்பர் தோழர்கள் நட்புவட்டத்தை எண்ணிப்பாருங்கள் வெறும் பூச்சியமே. இதற்கான அடிப்படைக்காரணம் என்ன. எப்போதாவது யோசித்துப்பார்த்தீர்களா? ஏன் உங்களால் ஒரு அரசியல் சார்ந்த நட்புவட்டத்தை உருவாக்கிக்கொள்ள முடியாமல் போனது? மனித உறவுகளுக்கும் அரசியல் உறவுகளுக்கும் அடிப்படையான அறம் சார்ந்த நேர்மை என்பது கொஞ்சமேனும் உங்களிடம் இல்லாமல் போனமைதான் இதற்கான காரணம் என நான் நினைக்கிறேன்." நட்பு வட்டத்தைக் கட்டி வைத்திருக்கின்ற அசோக் சொல்லுகின்றார். நீங்கள் வைத்திருந்த அந்த சிறிய நண்பர் வட்டம் தான் எங்கே போனது? அரசு பின் சென்றவர்கள் போக, உங்களால் பயன்படுத்தப்பட்டு எமாற்றப்பட்டவர்களாக மாறி, அது சிதைந்து போனதை நீங்கள் காணவில்லையா?.

 

சரி, நங்கள் அரசியலுக்கு வெளியில் எதையும் கட்டுவது கிடையாது. நாங்கள் யாரையும்  ஆள்பிடிப்பவர்கள் அல்ல. அரசியல் ரீதியாக உணர்வு பூர்வமாக இணைந்து, ஒரு கூட்டுச் செயல்பாட்டை முன் வந்து செய்பவர்கள் தான் எங்கள் தோழர்கள். இது அரசியல் ரீதியானது. அதன் உறுதியை, பலத்தை, அரசியலே தீர்மானிக்கின்றது. சொந்த பந்தங்களை கொண்டு வந்து, அவர்களை எமாற்றி கூட்டம் நடத்துபவர்களல்ல. எமது அரசியலுடன் பிரான்சில் மட்டுமல்ல, உலகளவில் எங்கள் தோழர்கள் உள்ளனர்.

 

அது சந்தர்ப்பவாதத்துடன், சமரசங்களுடன், எந்த முகத்துக்கு இணங்கியதல்ல. அது அரசியல் ரீதியானது. அதன் உறுதியை, அரசியலே தீர்மானிக்கின்றது. முன்னணிக்கான அரசியல் திட்டமும், அதன் நோக்கமும் , இதை எற்றுக்கொண்ட இயங்குபவர்கள் தான் எங்கள் தோழர்கள்.

 

குற்றச்சாட்டு 11

 

"பிரான்சில் இந்த பத்துவருட காலத்தினுள் நாங்கள் அரசியல் சமூக அசைவுக்கான சுமார் 80 கருத்தரங்குகளை நடாத்தியிருப்போம். பல்வேறு குறும்பட நிகழ்வுகளையும் புகைப்படக் கண்காட்சிகளையும் சமூக அக்கறைசார்ந்து செய்திருக்கிறோம். இலங்கையிலிருந்து தோழர்கள் செந்திவேல் தனிகாசலம் போன்ற தோழர்களை பிரான்சுக்கு அழைத்து பல கூட்டங்களை நடாத்தியுள்ளோம். பிரான்ஸ் இடதுசாரி தோழர்களோடு சேர்ந்து பல அரசியல் செயல்பாடுகளை முன்னேடுக்கின்றோம். சமீபத்தில்கூட இலங்கை அரசையும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளையும் அரசோடு சேர்நது இயஙகும் ஆயுதக் குழுக்களையும் கண்டித்து மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கண்டன ஊர்வலத்தைச் செய்தோம். இவ்வாறான நிகழ்வுகள் எவற்றிற்கும் நீங்கள் வருவதில்லை.(இலங்கையில் இன்றும் இடதுசாரிச் சிந்தனை முறையை முன்னிறுத்தும் தோழர் செந்தில்வேல் உரையாற்றிய கூட்டம் உட்பட)." என்கின்றார்.

 

முதலில் எம்மை எவரும் "அழைப்பதில்லை" என்றவர், இதில் நாம் "வருவதில்லை" என்கின்றார். இப்படி முரணாக புலம்புவது ஒருபுறம்.

 

செந்தில்வேல் கூட்டதுக்கு அவரின் சொந்த உறவினர்களை திரட்டி வந்த கூட்டம் நடத்தும் அளவுக்கு மேல், இந்த "அசை"வியக்கம் நம்ப முடியதளவுக்கு பிரமிப்பாக உள்ளது. சரி 10 வருடத்தில் 80 கருத்தரங்கு என்கிறீர்கள். அப்படி என்றால் வருடம் 8 கூட்டம். அப்படி நடந்ததேயில்லை. இரண்டு அல்லது முன்று. அதுவும் நீங்கள் நடத்தியதல்ல.

 

சரி இப்படி நடத்தியதாக கூறும் நீங்கள், இதன் மூலம் சாதித்தது என்ன? மக்களுக்கு சொன்னது தான் என்ன? இருக்கின்ற மாவை அரைகின்றதைத் தாண்டி, அதைக் கொண்டு தோசையைக் கூட சுட்டது கிடையாது. புலியெதிர்ப்பு, அரசு சார்பு, மார்க்சிய எதிர்ப்பு கருத்துகள் மூலம், தங்கள் சொந்த பிரமைகளையே அரைத்தனர். திரும்பிப் பார்த்தால் மக்களுக்கான எதையும் வைக்கவில்லை.

 

இதற்கு மாறான எமது செயல்கள். குறிப்பாக நாம் செந்திவேல், சிவசேகரம் முதல் பலருடன், அரசியல் ரீதியான விவாதங்களை கடிதங்கள் மூலம் நடத்தியுள்ளோம். இவை ஈமெயில் முதல் மலிவு தொலைபேசிகள் வரமுன், கைப்பட எழுதிய 300 மேற்பட்ட அவர்கள் விவாதங்கள் உள்ளடங்கிய (எமதல்ல) கடிதங்கள் எம்மிடம் உண்டு.

 

அரசியலுக்கு வெளியில் கூடி வம்பளப்பது, எமது அரசியலுக்கு விரோதமானது. அரசியல் ரீதியான விவாதங்களை கடிதங்கள் மூலம் கூட நடத்தினோம். அரசியல் முன்முயற்சி எல்லாத் தளத்திலும் நடத்தினோம். எங்கெல்லாம் மக்கள் அரசியலை முன்வைக்கவில்லையோ, அதை நாம் நிராகரித்தோம், நிராகரிப்போம். இது எங்கள் தெளிவான அரசியல் நிலை.

 

தொடரும்

பி.இரயாகரன்
29.03.2010  

 

15.அசோக் இனியொருவில் புனைந்த அவதூறுகள்; - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 15)

 

14.பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக அசோக், நாவலன் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் - (எதிர்புரட்சி

 

 

13.இனியொரு என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் - (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 13)

  

12.புனிதத்தை கட்டமைக்க, இனியொரு தன்னை மூடிமறைக்கின்றது. (எதிர்புரட்சி அரசியல் பாகம் 12)


11.றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)


10.நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)


9.சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)


8.கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

  

7.சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


6.பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


5.நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)


4.வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)


3தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் "நேர்மை" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)

  

2.அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)


1.எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)

Last Updated on Monday, 29 March 2010 07:16