Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் அசோக் இனியொருவில் புனைந்த அவதூறுகள்; - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 15)

அசோக் இனியொருவில் புனைந்த அவதூறுகள்; - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 15)

  • PDF

குற்றச்சாட்டு 7

"காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்த அறிமுகத்திற்கூடாக தோழர் விசுவானந்ததேவனை உங்களுக்கு தெரிந்திருந்தது. இதனால் என்.எல்.எப்.ரியில் உறுப்பினராகி இருந்தீர்கள். யாழ்ப்பாண கற்றன் நசனல் வங்கி என்.எல்.எப்.ரியினால் கொள்ளை இடப்பட்டபோது அதிலிருந்து பெறப்பட்ட நகைகள், பணம் என்பவற்றின் ஒரு பகுதியை மறைத்துவைப்பதற்கு தோழர் விசுவானந்ததேவன் உங்களை பயன்படுத்திக் கொண்டார். இது ஒன்றே ஈழப்போராட்ட வரலாற்றின் உங்களுடைய மாபெரும் பங்களிப்பு."

மாபெரும் அரசியல் கண்டு பிடிப்பு. அசோக்கின் "மார்க்சியம்" இதைத் தாண்டிக் கிடையாது. எங்கே எப்படி அறிமுகமானது என்பதும், என்.எல்.எவ்.ரி உறுப்பினர் என்பது கூட அரசியல் அவதூறுக்குத்தான். இப்படித்தான் இருக்கின்றது அசோக் அரசியல். அவர் மேலும் என்ன கூறுகின்றார், விசுவானந்ததேவன் "கற்றன் நசனல் வங்கி என்.எல்.எப்.ரியினால் கொள்ளை இடப்பட்டபோது அதிலிருந்து பெறப்பட்ட நகைகள், பணம் என்பவற்றின் ஒரு பகுதியை மறைத்துவைப்பதற்கு… உங்களை பயன்படுத்திக் கொண்டார்" என்று கூறுகின்றார். விசுவானந்ததேவன் பற்றி இவ்வளவு கொச்சையாக சொன்னவர் அசோக் மட்டும்தான். அடுத்த புத்தாண்டில் தமிழீழம் என்று கூறி, ஆள் திரட்டிய அமைப்புக்கு மத்திய குழு உறுப்பினர் அல்லவா அசோக். விசுவானந்ததேவனை இப்படி கொச்சையாக புரிந்து, அவரை  இழிவுபடுத்தி காட்டி, என்னை இதன் மூலம் அவதூறு செய்யவும் முனைகின்றார்.

1980 களில் மார்க்சியத்தின் உயிரோட்டமுள்ள, ஒரு அமைப்பைக் கட்டியவர் விசுவானந்ததேவன். அவர் என்னை இணைத்தாலும் சரி, மற்றவர்களை இனைத்தாலும் சரி, வர்க்க அரசியலை முன்வைத்து போராடுவதற்குதான் இணைத்தவர். அசோக் விசுவைப்பற்றி சொல்வது போல், ஆட்களைப் "பயன்படுத்திய"வரல்ல. அப்படி என்.எல்.எப்.ரி. உறுப்பினர்கள் மந்தைகள் போல் இயங்கியவர்கள் அல்ல. இப்படி அசோக் மற்றவர்களை பயன்படுத்தும் தன் சொந்த நடத்தை சார்ந்தும், அவரின் புளாட் அரசியல் நடத்தை சார்ந்தும்  இப்படித்தான் இருந்தது என்று கூறுகின்றார்.

வேடிக்கை என்னவென்றால் இப்படி விசு என்னை பயன்படுத்த, நான் பயன்பட்டது தான் எனது பங்களிப்பு என்கின்றார். "இது ஒன்றே ஈழப்போராட்ட வரலாற்றின் உங்களுடைய மாபெரும் பங்களிப்பு." என்பது, அசோக்கின் மாபெரும் ஒரு கண்டுபிடிப்பு. இதனை அசோக் கூறும் அதே நேரம் "தோழர் நாவலன், தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் விஐpதரன் போராட்டக்குழு அமைக்கப்பட்டபோது பல மாணவ தோழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாவலனின் முயற்ச்சியால் அக் குழுவில் சேர்க்கப்பட்டீர்கள்." என்கின்றார். சரி இது எதற்காக? நாவலன் என்னைப் பயன்படுத்தவா!?  நாவலன் என்ன புரோக்கர் தொழிலா அன்று செய்தவர்!?

நாங்கள் மக்களுக்காக போராடியதால், எமது தனித்துவமான பங்களிப்பு உங்களுக்கும் எதிராக இருந்தது. இதனால் அந்தக் காலத்தை வரலாற்றில் மக்கள் போராட்டம் எதுவுமற்றதாக காட்ட, என்னை எதுவுமற்றதாக காட்டுவது அசோக்குக்கு அவசியமானதாக இருக்கின்றது. அத்துடன் "அதிலிருந்து பெறப்பட்ட நகைகள், பணம் என்பவற்றின் ஒரு பகுதியை மறைத்துவைப்பதற்கு தோழர் விசுவானந்த தேவன் உங்களை பயன்படுத்திக் கொண்டார்." என்று கூறி, அதை நான் மோசடி செய்ததாக இட்டுக் கட்ட, "இது ஒன்றே ஈழப்போராட்ட வரலாற்றின் உங்களுடைய மாபெரும் பங்களிப்பு." என்று சொல்வது அவசியமாகின்றது.

எதுவுமற்றதாக கூறும் அவர், இன்று  என்னை மறுக்க வேண்டிய அவசியம் தான் என்ன? நான் அமைப்புப் பணத்தை மோசடி செய்ததாக கூறவேண்டிய அவசியம் தான் என்ன? இந்த அரசியல்தான் என்ன?

குற்றச்சாட்டு 8

"இந்தநேரத்தில் உங்களிடம் ஒரு கேள்வியை என்னால் எழுப்பமுடியும். தோழர் விசுவானந்த தேவன் ஒப்படைத்த அந்தப் பணத்திற்கும் நகைக்கும் என்ன நடந்தது?. தோழர் விசுவானந்தனின் இறப்போடு இதனையும் சேர்த்து புதைத்துவிட்டீர்கள். இதுதான் உங்களின் அரசியல் நேர்மை." என்கின்றார்.

இப்படி இருந்தால் இது அரசியல் நேர்மையீனம்தான். இப்படி நடக்கவில்லை என்றால், அது உங்கள் அரசியல் நேர்மையீனமல்லவா?

சரி குற்றம்சாட்டும் உங்களிடம் என்ன ஆதாரம் உண்டு!? அசோக்கின் வழமையான புனைபெயர் பின்னோட்டம், நேரடியான அவதூறாகிப் போனது. இவையோ ஆதாரமற்ற கற்பனையான புனைவுகள்.

இதை எதனடிப்படையில் முன்வைக்கின்றனர்? நான் பேசும் அரசியலை எதிர்கொள்ள முடியாத போது இது புனையப்படுகின்றது. அமைப்பு செய்த ஒரு நடவடிக்கையை வைத்து, எனக்கு எதிரான அவதூறை முன்வைக்கின்றனர். அமைப்பு செய்தது என்ற ஒன்றைத் தாண்டி, எதையும் அவர்கள் ஆதாரமாக முன்வைக்க முடியாது. இது ஒரு உண்மை. இது ஒருபுறம் இருக்கட்டும், என் அரசியலில் முரண்பாடு இருந்தால் அதை விமர்சிக்க முனையுங்கள். இல்லை, அது சரி என்றால் அதை அங்கீகரியுங்கள். அதைச் செய்யாது அவதூறுகளை கட்டுவதால், எமது அரசியலை மறுத்துவிட முடியாது. மாறாக எமது அரசியலை ஏற்று, அதை பின்பற்றுவது என்பது இன்றைய அரசியல் போக்காக மாறி வருகின்றது. அதை உங்கள் அவதூறுகள் தடுத்துவிடாது.

தேசம்நெற் ஜெயபாலன் கூட இதே அவதூறை எழுப்பினார். அதன் பின்னான பின்னோட்டத்தில் அசோக் நாவலன் உள்ளடங்கிய கூட்டம், தங்கள் முகத்தை மூடிக்கொண்டு குந்தியிருந்தே பேண்டது. இதை அவர்கள் செய்வதை விட, என் அரசியலை மறுக்க வேறு அரசியல் வழி அவர்களுக்கு இருக்கவில்லை.

எந்த ஆதாரமும், அடிப்படையுமின்றி புனையப்பட்டது. எந்த கேள்வியும், எந்த விளக்கமும் கூட, அவர்களுக்கு அவசியமற்றதாக இருந்தது. இந்த அவதூறு தான், என்னை எதிர்த்து அவர்கள் அரசியல் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது. வ.ஐ.ச.ஜெயபாலன் கூட, என் அரசியலை எதிர்கொள்ள முடியாத போது இதையே சுவடுகளில் எழுதினான். இப்படி எவரும் என் கருத்தை எதிர்கொண்டு விவாதிக்க திரணியற்றவராக இருந்தனர், இருக்கின்றனர். இதனால் அவதூறு தான், அவர்களின் பதிலாகின்றது.

இதன் பின்னணியில் இதனுடன் சம்பந்தப்பட்ட என்.எல்.எவ்.ரியினர் நாட்டில் தொடர்ந்தும் இருந்தனர். இரண்டாவது இந்தப் பணத்தை இறுதியாக பெற்றவர்கள் நாட்டில் இருந்தனர்.  அதே நேரம் இறுதியாக என்.எல்.எப்.ரியின் நகையைப் பெற்றவர்கள், என் மீது குற்றம்சாட்டும் அணியின் பின் ஒழித்து நிற்கின்றனர். இவை எல்லாம் உண்மையாக இருக்க, அதை தெரிந்து வைத்துக்கொண்டு அவதூறை பொழிந்தனர். அவதூறு பொழிபவனுக்கு இது அவசியமற்ற ஒன்றுதான்;. அவனுக்கு அவதூறு பொழிவதுதான் நோக்கமே ஒழிய உண்மையல்ல. அண்மையில் எனது பெயரில் தேசம்நெற்றும், இனியொருவும் புனைந்த ஈமெயிலில், இந்த விடையத்தையே பேசினர்.

இனி அசோக் சொன்ன அவதூறுக்கு வருவோம். "தோழர் விசுவானந்ததேவன் ஒப்படைத்த அந்தப் பணத்திற்கும் நகைக்கும் என்ன நடந்தது?." என்கின்றார். நல்ல கற்பனை தான் போங்கள்.

1.விசுவானந்ததேவன் 1983 பின், தளத்தில் இயங்கவில்லை. அப்படியிருக்க, அவர் எப்படி என்னிடம் பணத்தையும் நகையையும் ஒப்படைத்து இருக்க முடியும். அடுத்து அந்த சம்பவத்தில் பணம் இருக்கவில்லை. எல்லாம் உங்கள் ஊகம் தான். இவை தேசம்நெற், இனியொரு  பின்னோட்டமல்ல.

2."விசுவானந்தனின் இறப்போடு இதனையும் (பணத்திற்கும் நகைக்கும்) சேர்த்து புதைத்துவிட்டீர்கள். இதுதான் உங்களின் அரசியல் நேர்மை." என்கிறீர்கள். பாவம் அசோக் பரிதாபத்துக்குரியவராகின்றார். விசுவானந்ததேவன் என்.எல்.எப்.ரியை விட்டு வெளியேறிச் சென்று உருவாக்கிய பி.எல்.எவ்.ரி. அமைப்பில் நான் என்றும் இருக்கவில்லை. அப்படி இருக்கும் போது, ."விசுவானந்தனின் இறப்போடு"   எப்படி புதைக்க முடியும். "அரசியல் நேர்மை." பற்றிய உங்கள் ஊகங்கள், உங்கள் கற்பனையின் உங்கள் நேர்மையீனத்தை அம்பலமாக்குகின்றது. அவதூறுகளால் உங்கள் அடிப்படை நேர்மையீனம் என்பது, வெளிப்படையாகின்றது. விசுவானந்ததேவன் தந்தது என்று கூறும் உங்கள் கற்பனையான அவதூறு, எவ்வளவு பொய்யானது என்பது, ஆதாரமற்ற வம்பளப்பு அவதூறு அரசியல் என்பது இன்று வெளிப்படையான ஒரு உண்மையாகின்றது.

மறுபக்கத்தில் என்.எல்.எப்.ரி பணத்துக்கு என்ன நடந்தது? என் மீதான இந்த அவதூறுக்கு பக்கத் துணையாக நிற்கும் ரகுமான் ஜானின் தீப்பொறியிடம், இந்த நகை எப்படிச் சென்றது? சரி யார் கொடுத்தது? எப்படி அவரால் கொடுக்க முடிந்தது? நான் மோசடி செய்ததாக கூறிய அந்த நகை, எப்படி தீப்பொறிக்குச் சென்றது? அப்படியிருக்க எப்படி நான் மோசடி செய்ய முடியும். இதை ரகுமான் ஜான் மறுத்தால், அதாவது தீப்பொறியிடம் தரவில்லை என்று சொன்னால் குறைந்தபட்சம் இதைக் குற்றச்சாட்டாக வைக்க முடியும்.

இதை வாங்கியவர்களும், கொடுத்தவர்களும் கூட, உங்கள் அரசியல் தொடர்பில் தான் உள்ளனர். என்.எல்.எவ்.ரி.யின் கணக்கு வழக்கு விபரங்கள் அனைத்தும், ரகுமான் ஜானிடம் தீப்பொறியிடம் தான் சென்றது. அதில் விபரங்கள் முழுமையாக உண்டு.

இங்கு கேசவன் காட்டிக்கொடுக்கப்பட்டு பிடிபட்டது, இதற்குள் தான் சம்மந்தப்படுகின்றது. கேசவனுக்கே அஞ்சலி செலுத்தாத பின்னணியில், அவர் எப்படி காட்டிக்கொடுக்கப்பட்டு பிடிபட்டார் என்பது இன்று வரை இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. கேசவன் அரசியல் மறுக்கப்பட்டது முதல், அவர் பிடிபட்ட போது  என்.எல்.எவ்.ரி நகை உட்பட சில பொருட்கள் எப்படி அவரிடம் இருந்தது? என்று பல கேள்விகள் இன்று. அவர் தீப்பொறியைந் சேர்ந்த சிலரால்   காட்டிக்கொடுக்கப்பட்டு, அவர்களின் எந்த அஞ்சலியுமின்றி அரசியல் அனாதையாக மரணித்தார். இதன் பின் அவரின் அரசியல் மறுக்கப்பட்டு, புலி அரசியல் முன்னெடுக்கப்பட்டு இறுதியில் பிரபாகரனுக்கு பிந்தைய மே 18 இயக்கமாக மாறிய பின்னனியில், இறுதியாக அந்த என்.எல்.எவ்.ரி நகையுடன் பிடிபட்ட கேசவன் வரலாறும் சம்மந்தப்படுகின்றது. அதை மூடிமறைக்க நான் அதை மோசடி செய்ததாக இன்று புனைகின்றனர். கேவசன் அரசியலை நாம் மட்டும் உயர்த்துகின்ற இன்றைய வரலாற்று நிலையை, இங்கு இதனுடன் பொருத்திப் பார்ப்பது அவசியம்.

தொடரும்

பி.இரயாகரன்
25.03.2010

14.பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக அசோக், நாவலன் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் - (எதிர்புரட்சி

13.இனியொரு என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் - (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 13)

12.புனிதத்தை கட்டமைக்க, இனியொரு தன்னை மூடிமறைக்கின்றது. (எதிர்புரட்சி அரசியல் பாகம் 12)


11.றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)


10.நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)


9.சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)


8.கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

7.சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


6.பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


5.நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)


4.வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)


3தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் "நேர்மை" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)

2.அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)


1.எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)

PDF

Last Updated on Thursday, 25 March 2010 10:07