Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் தேர்தல் ஆணையாளர் குடும்பம்?…. செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

தேர்தல் ஆணையாளர் குடும்பம்?…. செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

  • PDF

அலரிமாளிகையில் சிறைக்கைதிகளான தேர்தல் ஆணையாளர் குடும்பம்?


இலங்கை வரலாற்றில் அதிஸ்டமுள்ள ஜனாதிபதி நானே என சுதந்திரதின விழாவில் ஜனாதிபதிகூறியுள்ளார். ஆம் முற்றிலும் உண்மையே!
எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை குப்பையில் வீசி, தேர்தல் ஆணையாளரையும்,மனைவியையும் சிறைக்கைதிகளாக்கி, அவர் சுதந்திரமாக சொன்ன எல்லாவற்றையும் பொய்யாக்கி,நான் இப்போது சொல்வதே மெய்யென சொல்லவைத்த “கணனி மாயாஜால மன்னராகிய” நீங்கள்இலங்கை வரலாற்றில் ஓர் அதிஸ்டசாலியான ஜனாதிபதிதான்.


சுதந்திரதினத்திற்கு ஓர் வாரத்திற்கு முன்பாக, தோதல் ஆணையாளர் சுதந்திரமாக பலவற்றைசொன்னார். நடைபெற்ற தேர்தல் சுதந்திரதான தேர்தலல்ல. மக்கள் வாக்காளிக்காத பெட்டிகளையேஎண்ணினோம், வெற்றியாக்கினோம். இவ்வெற்றிக்கனி இலங்கை வரலாறில் யாருக்குமேகிடைக்காத அதிஸ்ட வெற்றிதான். இவ்வகையில் மகிந்தா ஓர் பாக்கியசாலியும் கூட. ஆனால் இந்தமாயாஜால வெற்றிக்குப் பின்னால், கறைபடிந்த பல துரதிஸ்டவசமான பல சம்பவங்களும் உள்ளன.


இம்முறை மகிந்தா 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளால் வெல்லவைத்தால், போதுமென்றேமகிந்த சகோதரர்கள் திட்டமிட்டார்களாம். “மாயாஜால கணனி கணக்கீட்டுச் சிக்கலால்“, அது18-லட்சத்திற்கு மேலாகியுள்ளது என தேர்தல் திணைக்கள கணனி அதிகாரிகள் நகைச்சுவையாக -சொல்கின்றார்கள்!


வாக்கு எண்ணச்சென்ற ஓர் அரச ஊழியர் ஒருவர் இப்படிச் சொன்னார், தங்களில் பத்துப்பேர்வாக்குகள் எண்ணச்சென்றபோது, உங்களின் வேலைகள் கணனிக்கூடாக (கர்ச்சிதமாக)செய்யப்படுகின்றது, நீங்கள் கடமையில் இருந்தாக கருதப்படுவீர்கள், பதிவிலும் இடப்படும்சந்தோஷமாக் போய்வாருங்கள் என மாலை 7-மணிக்கே திருப்பி அனுப்பப்பட்டார்களாம். இதுவேபெரும்பாலான இடங்களின் நிலையென்றார்.
90வீதமான மக்களுக்கு தேர்தல் முடிவுகளில் நம்பிக்கையில்வை. இதை தேர்தலை சுதந்திரமாகவும்,நேர்மையாகவும் நடாத்தும் கண்காணிப்பகத்தின் நிர்வாகி ரஜீத்கீர்த்தி தென்னக்கோன்தெரிவித்துள்ளார். நிலையவாரியான வாக்கு எண்ணிக்கை விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்காகவெளியிட வேண்டுமென இவ்வமைப்பு பலமுறை கேட்டும், தேர்தல் ஆணையம் அதைப்பொருட்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகளின் முகவர்கள் பல வாக்கு எண்ணிக்கை நிலையங்களில்இருந்து விரட்டி அடக்கப்பட்டனராம்.


பொன்சேகாவிற்கு புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் குப்பைத்தொட்டிக்குள் இருந்துஎடுக்கப்படுகின்றன. குப்பைத் தொட்டிக்குள் எதிர்க்கட்சி வாக்குகளை வீசிவிட்டு, எனது அரசியல்பலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, எச்சந்தர்ப்பத்திலும் எத்தகைய தகாதவற்றையும்மேற்கொண்டதில்லையென்கின்றார். தண்டனை – இம்சை – இராணுவ சட்டதிட்டங்கள் மூலம்நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனறு, நாட்டின் 62-வது சுதந்திரதின வைபவத்தில் மகிந்த மன்னன்வேறு மதியுரையாற்றியுள்ளார்


தோதல் முடிந்தபின், தேர்தல் ஆணையாளர் மாத்திரமல்ல, அவரது மனைவியும் பலவந்தமாகஅலரிமாளிகை;கு அழைத்து வரப்பட்டார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இம்சையை, தேர்தல்ஆணையாளர் எதிர்காலத்தில் என்னவென்று சொல்லவே மாட்டார். அலரிமாளிகையா? இராணுவமுகாமா? என அங்கலாய்ததாராம். அவர் மனைவி!


1-2-2010-ல் தேர்தல் ஆணையாளரும் மனைவியும் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டு, பதவிவிலகலை மறுபரிசீலனை செய்யும்படியும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலநடைபெற்றதாக பொது அறிக்கை விடும்படியும், கேட்டுக்கொள்ளப்பட்டதாம். சுமார் 6-மணி நேரமாகதன்முடிவிலிருந்து மாறாதிருந்த தேர்தல் ஆணையாளரை நள்ளிரவு அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டு,மனைவி அலரிமாளிகையில் இரவிரவாக சிறைக்கைதியாகவே இருந்தார். இப்பேர்ப்பட்டஇம்சைகளுக்கு ஊடாகவே, தேர்தல் ஆணையாளரால், தற்போது சொல்லப்படும், அத்தனையும்சொல்ல வைக்கப்பட்டுள்ளது.


கணவன்-மனைவியைப் பிரித்த ஜனாதிபதி, தனிமையில் இருந்த தேர்தல் ஆணையாளரிடம்என்னதான் சொல்லயிருப்பார். எதைத்தான் சொல்லி மிரட்டயிருப்பார். என் அன்பிற்குரியஉடன்பிறப்புக்கள் கணித்த 3 லட்சம் வெற்றி வாக்குகள் எப்படி 18-லட்சமாகியது. இதை யார்தான்நம்புகின்றார்கள். ஊர் உலகம் கைகொட்டிச் சிரிக்கின்றது. என்னை அவமானப்படுத்த எடுக்கப்பட்டமுடிவோ? nhபன்சேகாவிற்கு புள்ளடியிட்ட வாக்குகள் எப்படி குப்பைத்தொட்டிக்குள் போனது? யார்தந்த துணிவில் இவையெல்லாம்? 30 வருட பயங்கரப் புலியை, 3 வருடத்தில் என் மகிந்தசிநதனையால் இல்லாதாக்கிய மீசை வைத்த ஜனாதிபதி நான்! உங்களையும் மனைவியையும்(கேடுகெட்ட) இச்சிந்தனைக்கூடாகவே கைது செய்துள்ளேன். அமெரிக்க-மேற்குலகமே என்னைக்கண்டு அஞ்சுகின்றது. ஓபாமாவின் அறிக்கையை பார்க்கவில்லையோ? இப்படி இன்னும் பற்பல……..நான் உங்களைக் கேட்கின்றேன் இவர் இப்படி…. மிரட்டல் செய்ய மாட்டாரோ!?


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது –சம்பந்தன்


தேர்தல் ஆணையாளரைத்தான் வெருட்டி, மகிந்தா பலவற்றை சொல்ல வைத்தார்! இவரை யார்வெருட்டியதில், இவர் இப்படிச் சொல்கின்றார்!


சண்முகதாசனின் நினைவலைகள்……


இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் சண்முகதாசனிற்கும் ஓர் அளப்பரிய பங்குண்டுபல்கலைக்கழக படிப்பை முடித்து மாணவனாக இடதுசாரி இயக்கத்திற்கு வந்தவர். அமிர்hதலிங்கம்சிவசிதம்பரம் கூட இவர் காலத்து பட்டதாரி மாணவர்கள்தான். சிவசிதம்பரம் கூடபல்கலைக்கழகத்தில் சண்ணோடு போஸ்ரல் ஒட்டியவர்தான். அன்றைய யாழ்ப்பாண சூழலில் சண்கந்தையா கார்த்திகேசன் வைத்திலிங்கம் போன்றவர்கள் இடதுசாரி இயக்கம் நோக்கி சென்றது,வித்தியாசமான போக்குத்தான்.


தன் இளமைக்கால அரசியல் வாழ்வை தொழிறசங்க இயக்கத்திற்கு ஊடாக ஆரம்பித்த சண்,படிப்படியாக கட்சித் தலைமைக்கு வருகின்றார். 60-ல் சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தில் ஏற்பட்டபபிளவில் திரிபுவாதப் போக்கை நிராகரித்து, சரியான புரட்சிகரப் பாதையின் உடாக கம்யூனிஸ்ட்கட்சியின் தலைமையையும் செயலாளர் பொறுப்பையும் ஏற்கின்றார்.


சண் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, தன் முதல் பத்தாண்டு காலத்தில், இலங்கையில் பலபுரட்சிகர வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்தது. அது சாதி தீண்டாமைக்கெதிரானபோராட்டங்களாக, தொழிறசங்கப் போராட்டங்களாக, ஏனைய சட்ட-சட்டவிரோதப் போராட்டங்களாகபரிணாமித்தன. இவற்றிற்கு ஊடாக வடபகுதியில் பல கிராமங்களும், மலையகம் கொழும்பிலும்பலமான ஓர் தொழிற்சங்க அமைப்பு கட்சியின் தலைமையின் கீழ் அணிதிரண்டிருந்தன.


71-ஏப்ரல் கிளர்ச்சி ஏற்பட்டபோது, சண் சிறை செல்கின்றார். சிறையால் வெளியில் வரும்போது,கட்சியில் பிளவும் ஏற்படுகின்றது. பிளவு வடபகுதியில் பெரும் தளர்வை ஏற்படுத்தாத போதும்,தேசிய ரீதியில் பெரும் பாதிப்பும், பின்னடைவும் எற்பட்டது. இப்பின்னடைவை இன்று வரை நிவர்த்திசெய்யப்படவில்லை.


ஏப்பிரல் கிளர்ச்சிய அடுத்த பத்தாண்டுகள் சண் தலைமையிலான கட்சி, புரட்சிகர நடைமுறையைக்கைவிட்டு மிதவாத கட்சிகளுக்குரிய பண்புகளுடனேயே பயணம் செய்தது. அதே காலத்தில்வடபகுதியில் இளைஞர் இயக்கங்களின் தோற்றமும், தேசிய இனப்பிரச்சினையில் ஏற்பட்ட தேசியஎருச்சி போக்குகள் பற்றிய புரிதலை, சண் மார்க்சியமல்லாத கண்ணோட்டத்திலேயே அனுகினார்,சுயநிர்ணய உரிமை சமன் பிரிவினை எனக் கணித்தவர்கள் போல். தமிழர் ஓரு தேசிய இனமல்லஎன்றார். அதற்கு அவர் கூறிய காரணம் தமிழ்மக்களுக்கு ஓர் பொதுப் பொருளாதாரம்இல்லையென்றார். தமிழினதத்தை தேசிய இனமே இல்லையென்ற வாதத்தை முன்வைத்தார்.தமிழ்மக்கள் தேசிய ஓர் இனமென ஏற்கவைக்க, கட்சிக்குள் ஓர் பெரும் தத்துவப்போரே நடந்தது.


60ம் ஆண்டுகளில் திரிபுவாதத்திற்கு எதிரான தத்துவப் போரை முன்னெடுத்தவர் சண். அடுத்தபத்தாண்டுகளில் அவருக்கெதிராகவே கட்சிக்குள தத்துவப்போர் ஏற்பட்டது. தேசியஇனப்பிரச்சினையில் தெளிவற்ற போக்கு முதல் மூன்று உலகக் கோட்பாடு வரை இது நீண்டுசென்றது. இது கட்சிக்குள் மேலும் ஓர் பிளவை ஏற்படுத்தியது. இதன் பின் சண்ணாலும் அவரோடுசென்றவர்களாலும் கூட, இயலாமை, போதாமை போன்றவைகளால், ஒரு புரட்சிகர கட்சியாக மாற்றமுடியாமல் போயிற்று. இப்பிளவு நாளடைவில் சண்ணின் அரசியல் இருப்பையே இல்லாதாக்கியது.


மறுபுறத்தில் பிளவுண்ட மறுபகுதியினரே புதிய ஜனநாயக கட்சியாக உள்ளனர். இக்கட்சியின்அரசியல் தத்துவார்த்தப் புரிதல்கள், தவறுகள் பற்றிய விமர்சனங்கள் பல. சண்ணின் பிளவிற்குபின்பும் இக்கட்சியும் ஓர் மிதவாதக் கட்சியாகவே காட்சியளிக்கின்றது. அதன் வெளிப்பாடே,ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான பகிஷ்கரிப்பு அறிக்கையும், வாக்களித்தவர்கள் தங்கள் நிராகரிப்புவேண்டுகோளை ஏற்றதான கணிப்பும். இந்தக் கற்பனாவாத அரசியலும், புரட்சிகர வெகுஜனஅரசியலையும், புதிய ஜனநாயகப் புரட்சியையும் ஏற்படுத்தாது


தேர்தலில் தோற்றாலும் இராணுவ ஆட்சி!


மகிந்தா தேர்தலில் தோற்றிருந்தாலும் இராணுவத்தின் துணையுடன் ஆட்சிக்கு வந்திருப்பார் என பலஊடகங்கள் ஆச்சரியப்படுகின்றன. இதில் என்ன ஆச்சரியம்! ஏன் முடியாது மகிந்தாவால்? அவரின்கடந்தகால ஆட்சி என்ன ஜனநாயகம் பூத்த சமதர்மப் பூங்காவோ? கடந்த நான்காண்டுகளில் 400-ற்குமேற்பட்ட குடும்ப உறவினர்கள் அரச மேல்மட்டங்களில் இருக்கின்றார்கள். முக்கால் பங்கு அரச –முப்படை – நிதி – நிர்வாகம் ஜனாதிபதி கையில். எனைய கால்ப் பங்கு ஏனைய சகோதரர்கள கையில்.அத்தடன் உலகின் பாசிச –சர்வாதிகாரிகளின துனை. அவர்களின் ராணுவ ஆலோசனை. நிதிஉதவிகள். தேர்தலை உலகில் யார் மோசடிகள் மூலம் வெல்கின்றனரோ, அவர்கள் இன்று பக்கத்துணை. ஏகாதிபத்திய முரண்படுகளின் யார் உலக ஆதிக்கத்தை தேர்தல் மோசடிகன் மூலம்ஆட்டிப்படைகின்றனரோ, அவாகள் மகிந்தாவின் ஆட்சியை தக்கவைக்க உதவுகின்றனர்.போதாததற்கு டாக்டர் பட்டம்!


கடந்த நான்கு ஆண்டுகளின் ஆட்சி, சர்வாதிகார ஆட்சியே! இது பாசிச சர்வாதிகாரத்தை நோக்கிநகர்கின்றது.


அரசியல் அதிகாரம் துப்பாக்க்pக் குழலில் இருந்துதான் பிறக்கின்றது!

மகிந்தாவிற்கும் டாக்டர் பட்டமும் தான்!


கருணாவின் சகாவான இளையபாரதி சிறுவர்களை படையில் இணைக்கின்றராம்! –ஐ.நா.சபை


தலைவரிடம் கற்ற பாடத்தை எப்படி மறப்பது! எல்லாம் பழக்கதோஷம்தான்!


தமிழ் இனக்காவலரின் காவல்;துறை “தொப்புள்கொடி உறவுகளை” சாகடிக்கின்றது!

“ஓசிச்சோறு திங்கிற உங்களுக்கு என்னடா விடுதலை?, நாடு இல்லாத நாய்களுக்கு பாவம் என்றுஇடம் கொடுத்தர், விடுதலையாட வேணும்” இப்படிச் சொல்லி ஈழத்தமிழ் அகதிகளைதுரத்தியடிக்கின்றது தமிழ் இனக் காவலர் கலைஞரின் காவல்துறை.


செங்கல்பட்டு அகதிகள் முகாம் ஒன்றில் கடந்த சில வருடங்களாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தங்களைஇன்னும் மன உளைச்சலுக்கு ஆளாக்ககாமல், பொது முகாம்களுக்கு மாற்றவேண்டுமென கோரிஉண்ணாவிரதம் இருந்தார்கள்.


இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு முடியும்வரை பொது முகாம்களுக்குமாற்றமுடயாது எனவும், உண்ணவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, இப்போராட்டத்தை கைவிடும்படிபோலிஸ் தரப்பால் கேட்கப்பட்டது. ஆனால் உண்ணாவிரதம் இருந்தவர்கள் தங்களின் கோரிக்கைக்குகியூ பிரிவு போலீசாரால் உத்தரவாதம் அளிக்கும்வரை தங்கள் போராட்டம் தொடரும் எனஅறிவித்தார்கள்.


இந்தத் தகவலை அறிவித்த அன்று மாலை 6-மணியளவில் போலீஸ்துறையைச் சேர்ந்த 200 பேர்முகாமிற்குள் புகுந்து அகதிகளை “ஓசிச்சோறு திங்கிற உங்களுக்கு என்னடா விடுதலை” “நாடுஇல்லாத அகதி நாய்களுக்கு பாவம் என்று இடம் கொடுத்தால் விடுதலையா வேணும்” இப்படிச்சொல்லி உண்ணாவிரதிகளை நையப்புடைத்துள்ளார்கள். இவர்களில் 12-ற்கு மேற்பட்டவர்கள்உயிராபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள.;


செம்மொழியாம்! தமிழ்மொழியாம்! அதன் காவலனாம்!, உலகத்தமிழர்களின் காவலனாம்!என்கின்றார் கiலைஞர். இவரால் இவரின் தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ்மக்களுக்கேபாதுகாப்பில்லையென பலரும் கண்டனம்!


இதற்கு பதிலாக முரசொலியில் உடன்பிறப்புpற்கு ஓர் கடிதம். உடன்பிறப்பே, நான் காவல்துறைகூடாது என்பவன் அல்ல, அது கொடியவர்களின் கூடாரம் ஆகக்கூடாது என்கின்றேன். காவல்துறைதன் கடமையை, (உண்ணாவிரதிகளை அடித்து நொருக்கியதை) கண்ணியம் கட்டுப்பாட்டுடன்செய்யத்தவறி விட்டது. இதை மத்திய – மாநில மந்திரிகளுக்கும் சட்ட – காவல்துறைமந்திரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். உண்ணா நோண்பாளர்களின் வலியை நான் அறியாதவன்அல்ல. அவ்வலியால் கோபாலபுர இல்லத்தில் நானும் சில மணிநேர உண்ணா நோன்பாளியானேன்;.இதை உலகத் தமிழ்மக்கள் அறிவர். ஏன் எதிரிகள் அறிந்தும் அறியாதவர் போல் தூற்றுகின்றனர்.தூற்றுவோர் தூற்றட்டும். உடன்பிறப்பே! நீ என்னை என்றும் அறிவாய். என்றும் நான் தமிழர்காவலனே!


இப்படிக் கூறி தமிழினத்தை அடித்து துவைக்கின்றார்.

 

 

Last Updated on Tuesday, 09 February 2010 07:03