Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் வாக்குச் "சீட்டைச் செல்லுபடியற்றதாக்க", "வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?"

வாக்குச் "சீட்டைச் செல்லுபடியற்றதாக்க", "வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?"

  • PDF

புதிய ஜனநாயகக் கட்சியின் மதியுரைஞரும் தத்துவ வழிகாட்டியுமான சிவசேகரம், ஒரு பச்சோந்திக் கவிதை மூலம் பாராளுமன்ற பன்றித் தொழுவத்துக்கு உங்களை வழிகாட்டுகின்றார். தேர்தலை நிராகரி!, புரட்சி செய்! என்று கோசத்தின் கீழ், இவர்கள் மக்களை வழிகாட்டுவது கிடையாது. அதற்காக இவர்கள் கவிதை எழுதுவதும் கிடையாது. "சீட்டைச் செல்லுபடியற்றதாக்கு" எப்படி என்ற கவலையுடன், அதை வழிகாட்டி கவிதை எழுதுகின்றார். 

இந்தத் தேர்தல் எப்படிப்பட்டது? யாருக்கு எப்படி எந்த வகையில் சேவை செய்கின்றது என்பதை, தேர்தலை நிராகரி என்று கூறி விளக்குவது கிடையாது. இவர்கள் முன்பு தேர்தலில் நின்றவர்கள்;. இதனால் அரசியல் பச்சோந்தித்தனம் தான், இவர்களின் அரசியல் உள்ளடக்கமாகி விடுகின்றது. தேர்தல் என்னால் என்ன?, அதில் வாக்கு என்றால் என்ன?,  என்பதைப் புரிந்துகொண்டு, அதை மற்றவர்களுடன் விவாதித்து, கூட்டாக தேர்தலை நிராகரிப்பது தான், புரட்சிகரமான செயல் சார்ந்த நடைமுறையாகும்.  

   

சமூக அறியாமையில் இருந்து மீள்வதும், அதற்கு உதவுவதும், மற்றவர்களுடன் அதை பகிர்வதுதான் புரட்சிகரமான செயல். தேர்தலை நிராகரி! புரட்சி செய்! இதுதானே சரியான அரசியல் கோசமாகும்.

 

இதைச் செய்யமால் "சீட்டைச் செல்லுபடியற்றதாக்கு" என்று கூறி "வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?" என்று தங்கள் பச்சோந்தித்தன அரசியலை முன்வைத்து  சிந்திப்பதும், செயல்படுவதும் புரட்சியல்ல, இது பம்மாத்து. மற்றவர்கள் பெயரால் இதை செய்யக் கோருவதும், செய்ய எண்ணுவதும் அறீவினம்.

 

"அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்தினாலும் எதுவுமே மாறாது என்று அவர்கள் எல்லாருக்கும் தெரியும். என்றாலும் அந்தக் கடதாசி பெறுமதி மிக்கது என்பதால் அதை வீணாக்கக் கூடாது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அதை எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்ல மாட்டார்கள்"

 

இப்படி எல்லோருக்கும் "அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்தினாலும் எதுவுமே மாறாது என்று" தெரிந்த ஒரு விடையத்தை "மீளச் சொல்லிக்கொண்டு, "வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?" என்று அதற்கு விளக்கம் சொல்வது அரசியல் பச்சோந்தித்தனமாகும்.

 

"அந்தக் கடதாசி பெறுமதி மிக்கது என்பதால் அதை வீணாக்கக் கூடாது என்று அவர்கள் சொல்லுகிறார்கள்." என்று "அவர்கள்" பெயரால் கூறிக்கொண்டு, அதை இப்படியும்  பயன்படுத்தலாம் என்று கூறுவது பச்சையான மோசடித்தனம். இது "சீட்டைச் செல்லுபடியற்றதாக்க" கோருகின்றது. வாக்குச் சீட்டில் நம்பிகை கொண்ட படி, அந்தச் "சீட்டைச் செல்லுபடியற்றதாக்க" கோருகின்றது.  

 

"பேராசிரியர்" "முனைவர்" சிவசேகரம், இப்படித்தான் தங்கள் அறிவுப் புலமையை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்றார். "அவர்கள் சொல்லுகிறார்கள்" என்று சொல்லி, அவர்கள்  "எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்ல மாட்டார்கள்" என்று கூறி, "வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?" மிக நுட்பமாக, நழுவுகிற மீனாக மாறி வாக்குச் சீட்டின் மகிமையையும், அதன் பயன்பாட்டையும்; கூறுகின்றார். "வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவதற்காக"க்காக வாக்களிக்க அனைவரும் செல்லுமாறு கோருகின்றார்.

 

இப்படி "சீட்டைச் செல்லுபடியற்றதாக்கி" வாக்கின் "ஜனநாயகம்" என்ற புனிதத்தை பாதுகாத்தல், தேர்தலை நிராகரிப்பதை மறுப்பதில் இருந்து தொடங்குகின்றது. ஒரு பச்சோந்திக்குரிய நிறம்மாறியாக இருந்து, விளக்கம் சொல்லி விடுகின்றார். "கீழே கிடந்த தொப்பியை" யாரும் போட்டுகொள்ளும் வகையில், தன் பேராசிரியர் புலமைத்தனத்தை வைத்து மக்களை ஏமாற்றும் தொப்பி வித்தையைக் காட்டுகின்றார்.

 

வாக்கை "எவரேன் பயன்படுத்த மாட்டார் என்று அறியும் எவரும் அதை எடுத்துப் பயன்படுத்தவும் இயலும் என்பதால் அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்துவது என்று ஆராயத் தொடங்கினேன்" என்கின்றார். இப்படி ஆராய்ந்து "வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது" எப்படி என்று கண்டுபிடிக்கின்றார். அரசியல் நகைச்சுவைதான்.

 

"எவரேன் பயன்படுத்த மாட்டார் என்று அறியும் எவரும்" என்று ஒரு சிவப்பு தொப்பியை தனக்கு அளவாக  போட்டுக் காட்டி, "அதை எடுத்துப் பயன்படுத்தவும் இயலும்" என்று கறுப்பு தொப்பியையும் போட்டுக் காட்டுகின்றார். இப்படி பச்சோந்தியாக மாறி மாறி போட்டுக் காட்டுகின்றார்.

 

"எவரேன் பயன்படுத்த மாட்டார்" என்பதால் அதை "அறியும் எவரும்" "(வாக்கை) எடுத்துப் பயன்படுத்தவும் இயலும்" என்பதால், அதை நாம் அனுமதிக் கூடாது என்கின்றார். இதையே  கூறி "மே18" என்று சுத்துமாத்துகர்காரர் களமிறங்கியுள்ளனர். இப்படி வாக்கை எப்படி பயன்படுத்துவது என்று, வாக்கின் புனிதத்தின் மேல் உள்ள நம்பிக்கை களையாது, நீங்கள் இப்படியும் பயன்படுத்தலாம் என்று சிவசேகரமும், அவரின் புதிய ஜனநாயகக் கட்சியும் "சீட்டைச் செல்லுபடியற்றதாக்க" வழிகாட்டுகின்றது. இதனால் "மே18"க் கும்பல் புள்ளடி போடக் கோருகின்றது. சிவசேகரமும், அவரின் அன் கோவான புதிய ஜனநாயக கட்சியும், வாக்கை செல்லுபடியற்றதாக்கக் கோருகின்றனர்.

 

"சீட்டைச் செல்லுபடியற்றதாக்கி" புரட்சி செய்யச் சொல்லும் புதிய ஜனநாயகக் கட்சியின்  புரட்டுதான், அதன் புரட்சி அரசியலாகும்;. மார்க்சிய லெனினிய மாவோயிசத்தை உருத்திராட்ச கொட்டையாக்கி, புரட்சி பேசும் ஒரு கட்சியின் புரட்டு அரசியல்தான் நாசூக்காக "சீட்டைச் செல்லுபடியற்றதாக்க" கோருகின்றது. அதை புரட்சி வேசம் களையாது எப்படி சொல்வது என்பதுதான், சிவசேகரத்தின் கவிதை.

 

"புனிதமான" அந்த வாக்கைப் பெற்று அதை "செல்லுபடியற்றதாக்கக்" கோருகின்றனர். அதை பேராசிரியர் சிவசேகரம் தன் புலமைசார் பிழைப்புவாதம் மூலம் வழிகாட்டுகின்றார். "தாள் சதுரமாக இருந்தால் அதை மடித்துக் காகிதக் கப்பல், பறவை, தவளை, கடகம், குதிரை என்று பலவுஞ் செய்யலாம். சற்று நீள் சதுரமாக இருந்தால் ராக்கெட் செய்து வீசி விளையாடலாம். இன்னும் நீளம் என்றால் நீளத் தோணி ஒன்று செய்து தண்ணீரில் விடலாம். தாளைக் கசக்கிப் பந்தாக்கி வீசி விளையாடலாம். கெட்டியான பற்களும் வாயில் உமிழ்நீரும் இருந்தால் வாயிற் போட்டுச் சப்பி உருண்டையாக்கி ஒரு தேர்தல் சுவரொட்டி மீது எறியலாம். தெருவிற் கிடக்கும் கோழி மலத்தையோ நாய் மலத்தையோ எடுத்து ஓரமாகப் போடப் பாவிக்கலாம். ஆனால் தேர்தல் அதிகாரிகள் அதற்கெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள். வீட்டுக்குக் கொண்டு செல்லவும் முடியாது. கிழித்துக் குப்பைத் தொட்டியில் இடலாம். கிழிக்க விடமாட்டார்களென்றால் கிழிக்காமலே இடலாம். ஆனாற் குப்பைத் தொட்டியெதுவும் அயலில் இராது. கோவில் உண்டியல் மாதிரி ஒரு பெட்டி. அதிலுள்ள நீண்ட துவாரத்தின் வழியே தான் போடலாம். நேரமிருந்தால் எல்லாச் சதுரங்களிலும் பெருக்கல் அடையாளமிடலாம். அல்லது தாளுக்குக் குறுக்காகப் பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல் அடையாளம் ஒன்றை இடலாம். ஒரு அரிவாளும் சம்மட்டியும் வரையலாம். நீளமாக ஒரு கவிதை எழுதலாம்." இப்படி நாசூக்காக வழிகாட்டுகின்றார். ஆகவே தேர்தலுக்கு முன் அரிவாளும் சுத்தியும் வரைந்து பாருங்கள். சிவவேசகரம் போல் கவிதை எழுதிப் பாருங்கள். வாக்குச் சீட்டில் அதை எழுதுவதற்காக. ஏனெனின் "வாக்குகளை எண்ணுவோர் தேநீர் பருகும்போது படிக்கும் வாய்ப்புண்டு" என்பதால் உங்கள் புனித வாக்குச் சீட்டை "செல்லுபடியற்றதாக்கும்;" போது, அதை "புரட்சியின்" பெயரில் செய்யுங்கள். தேர்தலை நிராகரி! புரட்சி செய்! என்று கூறி, நாங்கள் புரட்சி செய்ய மாட்டோம். அதுதான் வாக்குச் சீட்டில் "அரிவாளும் சம்மட்டியும் வரையலாம். நீளமாக ஒரு கவிதை எழுதலாம்" என்கின்றோம்.  

 

தேர்தல் அன்று புதிய ஜனநாயகக்கட்சி "சீட்டைச் செல்லுபடியற்றதாக்கி" விட சிவசேகரத்தின்  தலைமையில் அணிதிரண்டு, வாக்குச் சீட்டில் "அரிவாளும் சம்மட்டியும் வரைந்து" அதில் ஒரு "நீளமாக ஒரு கவிதை எழுது"வதற்கான நீண்ட வரிசையில் ஒரு வர்க்கப் புரட்சிக்காக காத்து நிற்பார்கள். "எவரேன் பயன்படுத்த மாட்டார் என்று அறியும் எவரும்" சிவசேகரத்தின் வாக்கை "எடுத்துப் பயன்படுத்த" இயலும் என்பதால், அவர் "அரிவாளும் சம்மட்டியும் வரைந்து" அதில் ஒரு சீண்ட கவிதையும் எழுதி, வாக்கை புரட்சியின் பெயரால் போடுவர் என்று நம்பலாம். 

 

இதை "வர்க்கப் போராட்டம்", "மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை" என்று சொல்ல, ஒரு கூட்டம் இல்லாமல் தான் போகுமா!? பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதமும் மூலம், இதுவும் ஒரு அரசியல் வழியாக தொடர்ந்து மக்கள் ஏமாற்றுவது தொடரும். தேர்தலை நிராகரி! புரட்சி செய்! என்ற கோசத்துடன், ஒரு புரட்சிகரமான அரசியல் போக்கு உருவாகாத வரை, இதுவும் புரட்சியின் பெயரில் தொடரும்.

 

பி;இரயாகரன்
24.01.2010      

 

Last Updated on Sunday, 24 January 2010 13:27