Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் கட்டாய ஓட்டுப்பதிவு உழைக்காத ……….களின் ஆலோசனைகள்

கட்டாய ஓட்டுப்பதிவு உழைக்காத ……….களின் ஆலோசனைகள்

  • PDF

ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: லாலு பிரசாத் குஜராத் சட்டசபையில் கடந்த வாரம் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்ட திருத்தம்படி, வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

// “இந்தியனாக பிறந்த எல்லோரும் ஓட்டுப்போட வேண்டும், யார் ஓட்டுப்போட விலையோ அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் பறிக்கவேண்டும் அவர்கள் நாட்டில் வாழவே தகுதியற்றவர்கள், அவர்கள் எல்லாம் பிணத்திற்கு சமமானவர்கள், அந்த நாட்டுல பார்த்தேளா வோட் போடுறத சட்டமாக்கிட்டா ஆனா இங்க ஏப்ப அது நடக்கறதோ அப்பத்தான் இந்தியா வெளங்கும் ” இவை தேர்தல்களின் போது குறைந்து வரும்  வாக்குப்பதிவினைக்கண்டு பொங்கியெழும் மாபெரும் சன நாயகம் உதிர்க்கும் வார்த்தைகள்.  இதைத்தான் பத்திரிக்கைகள் முதல் ஆளும் வர்க்கம் வரை பிரச்சாரம் செய்து வருகின்றன.

 

” இவனை எல்லாம் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்து இருக்காங்களே அவங்களத்தான் சொல்லணும் அறிவுகெட்ட ஜென்மங்க” இன்னும் சில புத்தி ஜீவிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் “யாருக்கு ஓட்டு போடணும்னு கூட தெரியாத முட்டாள்கள்” அறிவிக்கிறார்கள். அவர்கள் குறிப்பிடுவதெல்லாம் படிப்பறிவில்லாத , கிராமத்து பாமர  உழைக்கும் மக்களைத்தான். ஓட்டு போடணும் என்பார்கள் அப்புறம் இவனையெல்லாம் தேர்ந்தெடுத்து இருக்காங்களே என்கிறார்கள். இவர்களுக்கு உண்மையாலுமே அவ்வளவு பாசமா இந்தியா மீது. அவர்களின் பாசத்தை கிளறுவதற்கு முன் ஓட்டு என்ன அவ்வளவு புனிதமான ஒன்றா? அதனால் தெரிந்தெடுக்கப்படும் கலசங்கள் அவ்வளவு தூய்மையானவையா?

இப்போதிருக்கிற இந்த தேர்தல் முறைப்படி என்ன செய்ய முடியும்? கலர் டீவி வாங்கமுடியும், 1 ரூபாய் அரிசி வாங்க முடியும் அப்புறம் ஒரு நாளைக்கு ரெண்டு வேளை சாப்பிட்டுவிட்டு மூன்றாவது வேளைக்கு வயிற்றை தடவிக்கொண்டு படுக்க முடியும் அவ்வளவுதான்.  அந்த நாட்டையே அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தம், விவசாயத்தையே பாழடிக்கும் பிடிக்களின் வரவு, அரிசிவிலை பருப்புவிலை ஏற்றம், ல்விக்கட்டணக்கொள்ளை, வேலையில்லாத்திண்டாட்டம் இப்படி எல்லாவற்றையும் கேள்வி கேட்க முடியாது.

தண்ணீர்வரவில்லையென்றால் சாலையை மறித்தால் அதிகாரி வருவாரா? ரோடு சரியில்லை என்று போராட்டம் நடத்தினால் அதிகாரி வருவாரா? ஸ்கூலில அதிக பீஸ் என்றால் அதிகாரி வருவாரா? அதை விடுங்கள் கழிவறைகட்டிக்கொடு என்றால் அதிகாரி வருவாரா?  நாங்கள் ஓட்டுப்போட்ட பிரதி நிதி வரமாட்டார், எல்லாவற்றிற்கும் போலீசு தான் வரும். சரி எல்லவற்றுக்கும் போலீசு தான் வருகிறதென்றால் எதற்கு ஓட்டுப்போட வேண்டும். சரி போலீசு, அதிகாரிகளையும் தேர்ந்தெடுக்க அதிகாரம் கொடுங்கள், அதுவும் தர மாட்டார்கள். //

 

ஏனெனில் அவர்களை இயக்க சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை அவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்களாம், போலீசு தப்பு செய்தால் சட்டம் தண்டிக்கும்,பிரதி நிதி தப்பு செய்தால் சட்டம் தண்டிக்கும், சட்டம் தப்பு செய்தால்  ம் ஹ¤ம் சட்டம் தப்பு செய்யாது ஏனெனில் பிரதி நிதிகள் தான் அவற்றை உருவாக்குகிறார்கள். சுற்றிவளைத்து பார்த்தால் இந்த சட்டத்தை மாற்ற அதிகாரம் இல்லை, ஏன் எனக்கு வேலையில்லை வேலைகொடு என்று கேட்க உரிமை இல்லை, கல்விக்கட்டணத்தை குறைக்க முடியாது.

 

சரி மக்களின் பிரச்சினைகளை மாற்ற என்ன செய்யவேண்டும், ஓட்டுப்போட வேண்டும்? அப்புறம் அவர்கள் சட்டம் போடுவார்கள் நல்லது செய்வார்கள், அவர்களும் நல்லது செய்யவில்லை என்றால் 5 வருடம் பொறுத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் வேறொருவரை தேர்வு செய்ய வேண்டும், அதுதான் கொள்ளையடித்தவனுக்கு நாம் தரும் ஒரே தண்டனையாம். இவர்கள் வழியிலேயே பார்த்தால் கூடஎத்தனை அரசியல் வாதிகள், போலீசுகள், அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். சாதாரண மனிதன் இன்னொரு மனிதனை கொலைமுயற்சி செய்தால் என்ன தண்டனை? ஆனால் பிரேம்குமாருக்கு நல்லகாமன் தாக்கப்பட்ட வழக்கில் என்ன கிடைத்தது, ஒரு டி.ஐ.ஜி 14 வயது டென்னிஸ் வீராங்கனையை பாலியல் சித்திரவதை செய்திருக்கிறான் அதனால் அப்பெண் தற்கொலை செய்திருக்கிறார் அவனுக்கு 6 மாதம் தண்டனையாம் அதுவும் பல்லாண்டுகள் கழித்து, சட்டத்து முன் எல்லோரும் சமம் என்கிறார்கள்

 

ஆனால் மக்களுக்கும் பணம் படைத்த, அதிகாரிகளுக்கும் வெவ்வேறாக இயங்கும் இந்த அரசுமுறைக்கு நான் ஏன் ஓட்டுப்போட வேண்டும்.தினமும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த மக்களுக்கு> மாட்டுக்கு அல்வா கொடுத்து பல்லாயிரம் கோடிகளை அசைபோட்ட லாலு சொல்கிறார் “கட்டாய ஓட்டு முறை அவசியம்”.

 

அறுபது ஆண்டுக்குமேல் ஓட்டு போட்டாயிற்று ஏன் இங்கு பணக்காரன் பணக்காரனாகிக்கொண்டும் , ஏழை பரம ஏழையாகிக்கொண்டும் இருக்கிறான், அதை இந்த தேர்தலால் மாற்ற முடியுமா என்ன? இது என்ன கொடுமையாக இருக்கிறது சட்டத்தையும் மாற்றமுடியாது, எனக்கு வேலையும் கேட்க முடியாது, பன்னாட்டு கம்பெனிகள் விவசாயத்தையும், சிறு தொழில்களையும் அழிப்பதை தடுக்க முடியாதெனில் நான் ஏன் ஓட்டுப்போட வேண்டும்.

 

ஓட்டுப்போடாததைப்பற்றி கவலைப்படும் இந்த ……..வாய் தேசபக்தர்கள் என்றைக்காவது விவசாயம் கருகிப்போனதால் செத்துப்போன லட்சக்கணக்கான விவசாயிகளைப்பற்றீ பேசியிருக்கிறார்களா? நாட்டையே அடிமையாக்கும் மறுகாலனி, தனியார்மயம்-தாராளமயம்–உலகமயத் // தைப்பற்றி மூச்சாவது விட்டிருப்பார்களா என்ன? வாயைத்திறந்தால் “படிக்காத முண்டங்கள்” என்ற வசையத்தவிர என்ன செய்தார்கள்?

 

உழைக்கும் மக்கள் தான் இந்த சாலையைப்போட்டார்கள் காடு மலைகளை தன்னுயிரையேத்தந்து திருத்தினார்கள், அவர்களைத்தான் புத்தி ஜீவிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள்”யாருக்கு ஓட்டு போடணும்னு கூட தெரியாத முட்டாள்கள்”. பலனே இல்லையென்றாலும் ஓட்டுப்போட்டு மக்கள் சாகத்தான் வேண்டும்.அவர்களை விடுங்கள் நீங்கள் சொல்லுங்கள் யாருக்கு ஓட்டு  போடவேண்டும்? எவருக்குபோட்டால்  இந்த நாட்டை அடிமையாக்குவதிலிருந்து  மீட்பார் சொல்லுங்கள்?

 

யாரும் இல்லை மக்களை  நேரடியாக அரசியல்வாதி, அதிகாரிப்படை சுரண்டினால் இந்த புத்தி ஜீவிக்கப்பட்டவர்கள் மறைமுக  ஆதரவளிக்கிறார்கள் என்பது தான் உண்மை. எது மாற்று பதில் சொல்லமுடியுமா? பதில் அது அவர்களுக்கு பாடையாய் அமையும் என்பது தான் உண்மை. எப்போது மக்களுக்கான அரசு , மக்களின் அரசு வருகிறதோ அப்போதுதான் தேர்தல் என்பது உண்மையாக இருக்கும், முழுமையானதாகவும் இருக்கும்.

 

அந்த அரசு சட்டமன்ற,பாராளுமன்ற  சாத்தியமில்லை, மக்கள் பாதையில் கிளர்ச்சியாக, புரட்சியாக வெடிக்கும் போதுதான் அது மக்களுக்கானதாயிருக்கும். இரு நூற்றாண்டுகளாக முதலாளித்துவ நாடுகள் சாதிக்கமுடியாத வளர்ச்சியை ஸ்டாலின் தலைமையிலான சோவியத்  சாதித்துக்காட்டியது. அரசையும் அரசாங்கத்தியும் மக்களே தேர்ந்தெடுப்பார்கள், தவறு செய்தவர்கள திருப்பி அழைக்கும் அதிகாரம் பெற்றவர்கள் மக்கள், நாட்டின் சட்டத்தை திருத்துபவர்கள் மக்கள், அங்கு மக்கள் தான் தலைவர்கள், தலைவர்கள் மக்களின் தொண்டர்கள் அது மக்களின் அரசாங்கம் பாட்டாளிகளின்  அரசாங்கம் , பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசாங்கம் ,ஆம் அங்கு உழைப்பவனுக்கு அதிகாரம், உழுபவனுக்கு நிலம். உழைக்காதவனுக்கு சோறில்லை. உழைக்காத பன்றிகளின் ஆலோசனைகள் நமக்குத்தேவை இல்லை.

 


பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களிலும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கூறியுள்ளார்.

 

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடுவதை கட்டயாமாக்கும் சட்ட மசோதா குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

 

இதை வரவேற்ற ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலிலும் அனைவரும் ஓட்டு போடுவதை கட்டயாமாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

 

தேர்தல்களில் ஓட்டுப்பதிவு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வரும் நிலையில், ஜனநாயகம், பாராளுமன்ற நெறிமுறை மற்றும் நாட்டு நலன் கருதி ஓட்டு போடுவதை கட்டாயம் ஆக்க வேண்டியது அவசியமாகும் என்றும் லாலு தெரிவித்தார்

 

http://kalagam.wordpress.com/

Last Updated on Tuesday, 12 January 2010 00:07