Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் என் பெயரில் ஈமெயிலை தயாரித்து, தேசம்நெற்றில் போட்டுக் காட்டி "வியூகம்" படம்

என் பெயரில் ஈமெயிலை தயாரித்து, தேசம்நெற்றில் போட்டுக் காட்டி "வியூகம்" படம்

  • PDF

இதன் மூலம் "மே 18" இயக்கத்தையே நடுச் சந்திக்கு கொண்டு வருகின்றனர். தேசம்நெற் அசோக்கின் துணையுடன், என்பெயரில் தயாரித்து எனக்கு எதிராக முன்வைத்த ஈமெயில் மூலம் "மே 18" இயக்கத்துக்கு அரசியலை செய்கின்றனர். இவர்கள் தயாரித்த ஈமெயில் உள்ள அரசியலை, இங்கு குறிப்பாக கேள்விக்குள்ளாக்குவது அவசியமாகின்றது.

”அசோக் நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப்பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.” என்கின்றது, இவர்கள் என் பெயரில் வெளியிட்ட ஈமெயில். இதை யார் எழுதியது? கடந்தகாலத்தில்; இயக்க அரசியலில், இது போன்று அரசியல் செய்தவர்கள்தான்.

 

நான் அசோக்கை அம்பலம் செய்து எழுதும் கட்டுரையில், கற்றன நசனல் வங்கிப் பணம் பற்றி பதிலளிக்கப்படும் என்று எழுதியவுடன் என் பெயரில், ஜான் மேல் இந்த அவதூறு கட்டமைக்கப்பட்டது. கடந்தகாலத்தில் இதை வைத்து எனக்கு எதிராக அரசியல் செய்யும் இந்த "மாற்றுக் கருத்து" பேர்வழிகள் விழித்துக்கொண்டனர். கற்றன் நசனல் வங்கிப் பணத்துக்கு என்ன நடந்தது என்று நன்கு தெரிந்து கொண்டவர் தான், உடனே என்பெயரில் ஜான் மீதான ஒரு குற்றச்சாட்டாக அதை மாற்றுகின்றார்.

 

இதைத்தான் தேசம்நெற் கடைவிரித்துச் சொன்னது. தீப்பொறியிடம் கற்றன் நசனல் பணம் இறுதியில் சென்றதை, தேசம்நெற்றில் வெளிவந்த பின்னோட்டத்தின் மூலம் முதன்முதலில் நான் தெரிந்து கொண்டேன். 1988க்கு முற்பகுதியில் நான் அமைப்பில் இருந்து விலகியிருந்தவன்.

 

இருந்தும் அவதூறு அரசியல் தொடர்ந்து வந்தது. அண்மையில் இதற்கு பதிலளிப்பதன் மூலம், இவர்கள் எமக்கு எதிராக கட்டமைக்கும் அரசியலை அம்பலமாக்க எண்ணினேன். மிக நீண்ட காலத்தின் பின், என்.எல்.எவ்.ரியின் நிதி பொறுப்பாளரிடம் சரி என்ன நடந்தது என்று கேட்டபோது, அதை தீப்பொறியிடம் கொடுத்ததை உறுதி செய்தார்.

 

இதையெல்லாம்  முன்பே நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு அவதூறு அரசியல் செய்து வந்த கூட்டம், இனி எதைச் சொல்லி அவதூறு அரசியலை தொடர்வது என்று மண்டையைக் குடைந்து தயாரித்தது தான் இந்த ஈமெயில். இதை தனது "ஊடக நேர்மை"யுடன் தேசம் நெற் கடைவிரித்தது.

 

இதன் மூலம் நாளை ஜான் தற்செயலாக தங்கள் விருப்பத்துக்கு மாறாக வர்க்கப் புரட்சி பேசினால், எதிர்காலத்தில் இதைவைத்து குற்றம்சாட்ட முடியும் என்பது இந்த கூட்டத்தின் அரசியல் உள்ளடக்கமாகும். இப்படி அடியெடுத்துக் கொடுக்க, அதைத்தான் தேசம்நெற் வியாபாரம் செய்தது. இப்படி செய்பவர்கள் தான் "வியூக"த்தின் தோழனாக நிற்பது இங்கு கவனத்துக்குரியது.

 

இதன் எதிர்மறையில் மற்றொரு உண்மை இங்கு மறைபொருளாக வெளிப்பட்டு உள்ளது. ஜானுடன் அரசியல் செய்யும் "தேசம்நெற்" முதல் "இனியொரு" வரை, எனக்கு எதிராக இந்த கற்றன் நசனல் பெயரில் அவதூறை பொழிந்த போது, ஜான் அதை தடுத்து நிறுத்தியிருக்கவில்லை.

 

என்.எல்.எவ்.ரி யின் சொத்து தீப்பொறிக்கு கொடுத்ததை, ஜான் நன்கு அறிவார். அந்த வகையில் அவருடன் கூடி அரசியல் செய்;கின்றவர்கள், எமக்கு எதிராக இதை குற்றம்சாட்டிக் கொண்டிருந்த போது, ஜான் இதை கண்டித்து எந்த எதிர்வினையும் ஆற்றியிருக்கவில்லை. இங்கு "மே 18" இயக்கம் உண்மைக்காக நிற்கும் என்று எப்படி நம்புவது?

 

எம்மையும், எம் அரசியலையும் தகர்க்க இது உதவினால் இலாபம் என்ற அரசியலே இங்கு கொடிகட்டிப் பறக்கின்றது. இப்படியான அரசியல் "நேர்மையுடன்" தான் "மே 18" இயக்கத்தின்  "வியூகத்தை" இவர்கள் முன்னிறுத்துகின்றனர்.

 

தேசம்நெற் "ஊடக நேர்மையுடன்" கண்டுபிடித்து குறிப்பிட்டது போல், 14ம் திகதி எமக்கு வியூகத்தின் இலத்திரனியல் வடிவம்  கிடைக்கவில்லை. 12ம் திகதியே அது கிடைத்துவிட்டது. 14 ம் திகதி மற்ற தோழர்களுக்கு என்னால் அனுப்பப்பட்டது. அது கிடைத்தவிதம் நாம் அறிவோம். அது தொடர்பான ஈமெயிலை மூன்றாம் நான்காம் நபராக உங்களுக்கு தந்தவர் பதிலளிக்கும் வரை, இது பற்றி நாம் அலட்டிக்கொள்ளவில்லை.

 

"மே 18" காரரின் "வியூகம்" சொல்லும் அரசியல், புலி அரசியல்தான். தத்துவ முலாம் பூசினால், மார்க்சிய அரசியலல்ல. அது பற்றிய விமர்சனம் வரும்போது, அது எப்படி என்று நாம் பார்க்கத்தான் உள்ளோம்.

 

"வியூகம்" இதை பலர் விமர்சிக்கக் கூடாது என்று கருதுகின்றனர். அவர்கள் அமைப்பாக செயல்படும் உரிமை இருப்பது போல், அதை விமர்சிக்கும் உரிமை எமக்கு உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தளத்தில், "மே 18" மேடையேற்ற முனைகின்றனர். கடந்தகாலத்தை மூடிமறைத்து, நடத்தும் அரசியல் நாடகங்கள் இவை.

 

கடந்த வரலாற்றையும், அதை சுற்றிய நிகழ்வுகளையும், அதில் தனிநபர்கள் பாத்திரம் பற்றிய கேள்விகளற்ற அரசியலுக்கு இடமில்லை. இதை "மே 18" இயக்கம் தெளிவுபடுத்தவில்லை. அதை முன்னிறுத்தும் ஜான் அதைப்பற்றி பதிலளிக்கவில்லை. அது தமிழீழக் கட்சியின் எதிர்ப்புரட்சிக்கும், அதன் அரசியல் நடத்தைக்கும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

 

இதைவிட்டு மூடிமறைத்து பொது சுயவிமர்சனம், இதற்கெதிரான போராட்டத்தை தெளிவாக மறுதலிக்கின்றது. இதை பின்னால் "வியூகம்" ஊடாக நாம் விரிவாக பார்ப்போம்.

 

அடுத்து இங்கு தேசம்நெற் சொல்லும் பத்திரிகை தர்மம், நடுரோட்டில் நிர்வாணமாகி கிடக்கின்றது. இதன் பின்னணியில் வியூகத்தைச் சுற்றிக் கட்டமைக்கும் விம்பமும், அதன் அரசியல் அடிப்படையும் இவர்களால் நாறடிக்கப்பட்டிருகின்றது. இப்படித்தான் "மே 18" தன் "மூடிமறைக்கப்பட்ட" தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி அரசியலை, மற்றவர்களின்  எதிர்ப்புரட்சி அரசியல் சமரசங்களுடன் தொடங்கியுள்ளது. இதற்கு தத்துவ முலாம் பூசி, விடையத்தை திசைதிருப்ப முனைகின்றனர்.

 

பி.இரயாகரன்
17.12.2009    

Last Updated on Thursday, 17 December 2009 09:26